விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இலங்கை - அவுஸ்திரேலிய தொடரின் போது மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய - இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட் மையம் இலங்கை கிரிக்கெட் ச…
-
- 0 replies
- 328 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம் Published By: DIGITAL DESK 2 28 JAN, 2025 | 02:53 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. தனஞ்ஜய டி சில்வா தலைமையில் களமிறங்குகின்ற இலங்கை அணியில் புதுமுக வீரரான ஷொனால் தினூஷ 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஓஷத பெர்னாண்டோவுக்கும் மீள அழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறந்…
-
-
- 19 replies
- 843 views
- 1 follower
-
-
இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகளும் காலியில் நடைபெறும் (நெவில் அன்தனி) இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கைக்கு ராசியான மைதானம் என நம்பப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்த பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்க…
-
- 1 reply
- 469 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 FEB, 2024 | 06:51 PM (நெவில் அன்தனி) ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட…
-
- 8 replies
- 694 views
- 1 follower
-
-
இலங்கை - இங்கிலாந்து தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வகையான கிரிக்கெட் போட்டிகளைக்கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 டெஸ்ட் போட்டிகளும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியும் இடம்பெறவுள்ளது. போட்ட…
-
- 0 replies
- 277 views
-
-
பலம் பொருந்திய இங்கிலாந்துடனான முதல் டி-20 ஆட்டம் இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்துடன் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந் நிலையிலேயே முதலில் ஆரம்பமாகியுள்ள டி-20 தொடரின் முதல் போட்டி கார்டிஃப், சோபியா கார்டீன்ஸ் மைதனாத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் அந் நாட்டு நிலைமைகளின் கீழ் விளையாடுவது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங…
-
- 1 reply
- 566 views
-
-
இலங்கை - இந்தியத் தொடர் அலசல்: இளம் அணியின் சாதனைகளும் சிக்கல்களும் விராட் கோலி | படம்: ராய்ட்டர்ஸ் இலங்கையில் வெற்றிகரமாகத் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுத் திரும்பியிருக்கும் இந்திய அணி அடுத்த மாதத்திலி ருந்து தொடங்கவிருக்கும் நீண்ட பயணத்துக்காகக் காத்துக்கொண் டிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரே லியா முதலான அணிகளின் சவாலை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி, அதற்கான மன வலிமையை இந்தத் தொடரிலிருந்து பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இந்தியா வென்றிருக்கிறது. 3-0 என்றுகூட இந்த முடிவு இருந்திருக்கலாம் என்னும் அளவுக்குத் தோற்ற போட்டியிலும் சிறப்பாகவே ஆடியது. ஒரே ஒரு கட்டத்தில் ஆடிய மோசமான ஆட்டத்தால் அந்தப் போட…
-
- 0 replies
- 193 views
-
-
இலங்கை - சிம்பாப்வே - மே.தீவுகள்: பொலார்ட், ராம்டின் நீக்கம் இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகள் பங்குகொள்ளவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து, சிரேஷ்ட வீரர்களான கெரான் பொலார்ட், டினேஷ் ராம்டின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை, மேற்கிந்தியத் தீவுகளின் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் கோர்ட்னி ப்ரௌண், மின்னஞ்சல் மூலமாக விடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் குழாம், இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், இவர்களி…
-
- 0 replies
- 200 views
-
-
இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கடையிலான டெஸ்ட் ஆரம்பம் ; நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே துடுப்பெடுத்தாடத் தீர்மானம் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–2 என வெற்றி கொண்டு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் இந்தத் தொடரில் தோற்றதன் எதிரொலியாக இலங்கை அணியில் பல அதிரடி மாற்றங்…
-
- 14 replies
- 727 views
-
-
இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட்: ரசிகர்களை அச்சுறுத்தும் யானைக் கூட்டம் ஹம்பன்தோடாவில் நடைபெற இருக்கும் இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டிக்கு யானைக்கூட்டம் அச்சுறுத்தலாக இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலேயில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளதால் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகள் ஹம்பன்தோடாவில் நடக்கிறது. 3-வது போட்டி 6-ந்தேதியும், 4-வது போட்டி…
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம் : தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க துடுப்பெடுத்தாடுகின்றது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில் இன்று இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியது. ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என வெற்றி கொண்டிருந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொ…
-
- 17 replies
- 744 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொ…
-
- 5 replies
- 1k views
-
-
நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக் 18 SEP, 2024 | 12:34 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்…
-
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை - பங்களாதேஷ் - இந்தியா அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகள் மோதும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வருடம் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதத்திரக்கிண்ணம் “ என்ற பெயரில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை கிரிக்கெட்த் தொடர் இடம்பெறவுள்ளது. பி.சரவணமுத்து ஓவல் மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் மற்றும் இ…
-
- 0 replies
- 325 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கி…
-
- 33 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கை - பங்களாதேஷ் முதலாவது இருபதுக்கு-20 போட்டி ; ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை ; ரசல் எடுத்த அதிரடி முடிவு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு திருமண கோரிக்கை விடுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆர்னோல்டுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது பெண்ணொருவர் தன்னை திருமண செய்யுமாறு பதாதை ஏந்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் ஏந்திய பதாதையை கண்ணுற்ற ரசல் ஆர்னோல்ட் போட்டியின் போது எதுவும் தெரிவிக்காது மௌனம் காத்துவிட்டு, போட்டி முடிவடைந்த பின் …
-
- 0 replies
- 347 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று 19 வயதிற்குட்பட்டோருக் கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14598
-
- 5 replies
- 1.1k views
-
-
முதலாவது டெஸ்டில் இலங்கையை 4 விக்கெட்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான் Published By: VISHNU 20 JUL, 2023 | 01:09 PM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 சுழற்சிக்கான தனது முதலாவது வெற்றிப் புள்ளிகளைப் பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக ஆரம்பிப்போம் என இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன போட்டிக்கு முன்னர் குறிப்பிட்டிருந்த போதிலு…
-
- 5 replies
- 465 views
- 1 follower
-
-
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு…
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கை – அவுஸ்ரேலிய டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் நிறைவு சுற்றுலா இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் – கெப்பா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணித்தலைவர் சந்திமல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன், திமுத் கருணரத்ன 24 ஓட்டங்களிலும், குசல் …
-
- 0 replies
- 309 views
-
-
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் November 14, 2018 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அதில் ஏற்கனவே முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை வ…
-
- 7 replies
- 937 views
-
-
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று October 17, 2018 1 Min Read இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகலயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு, இரண்டாவது போட்டியில் டக் வேர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றியீட்டிருந்தது. இந்தநிலையில் தொடரைக் கைப்பற்ற வேண்டுமாயின் இன்றைய போட்டி உட்பட மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/99583/
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மைதான மாற்றம் By Mohamed Azarudeen - மார்ச் மாதம் இலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மார்ச் 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்ததது. எனினும், குறித்த காலப்பகுதியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் சில திருத்த வேலைகள் இருப்பதால் இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கொழு…
-
- 0 replies
- 375 views
-
-
இலங்கை – இந்தியா ரி-20 பெப்ரவரியில் January 21, 2016 இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடர் தொடர்பான அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ளது. முதலாவது ஆட்டம் புனேயில் பெப்ரவரி 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது ரி-20 ஆட்டம் டெல்லியில் பெப்ரவரி 12ஆம் திகதியும், மூன்றாவது மற்றும் கடைசி ரி-20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. http://www.onlineuthayan.com/sports/?p=8186
-
- 0 replies
- 380 views
-
-
இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகின்றது. இவ்விரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெறுகின்றன. மீதமுள்ள மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிம்பாப்வே அணியுடன் மோதவுள்ள இலங்கை அணி நேற்றுமுன்தினம் அறிவிக்க…
-
- 4 replies
- 525 views
-