விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
பவர் பிளேவில் 113 ஓட்டங்கள் விளாசி அவுஸ்திரேலியா புதிய சாதனை சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில், பவர் பிளே ஓவர்களில் 113 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலிய அணி புதிய சாதனை படைத்துள்ளது. ஸ்கொட்லாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி, எடின்பர்க்கில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய அவுஸ்திரேலிய அணியில் ஜேக் ஃபிராஸர் டக் அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டு, ருத்ர தாண்டவமாடினார். பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்…
-
- 1 reply
- 449 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தத…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ஓட்டங்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்க முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் இலங்கை தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களும் இலங்கை 263 ஓட்டங்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 156 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில், 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை விரட்டி இலங்கை வெற்றி பெற்றது. இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்க ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்கள் சேர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8…
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 SEP, 2024 | 09:55 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். நியூயோர்க் சிட்டி ப்ளஷிங் மெடோவ்ஸ் ஆர்த்ர் அஷே அரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரினா சபலென்கா சம்பியனானார். ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு செட் முன்னிலையிலிருந்த சபலென்கா 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் கோக்கோ கோவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தார். இந்த வருடம் நடுநிலையாளராக போட்டியிட்ட 2ஆம் நி…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடரின் முதல…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
வட மாகாண மெய்வல்லுநர் போட்டியில் வவுனியா மாணவி சாதனை Published By: VISHNU 06 SEP, 2024 | 06:27 PM வட மாகாண மெய்வல்லுநர் 2024 போட்டிகளில் வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி சாதனை படைத்துள்ளார். வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குபற்றிய வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த சரனியா சந்திரகாசன் 9.41மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் வர்ணச்சான்றிதழைப் பெற்றார்.…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 SEP, 2024 | 08:37 PM (நெவில் அன்தனி) நியூயோர்க் சிட்டியில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் முறையே சம்பியன்களான காலோஸ் அல்காரெஸ் மற்றும் நோவாக் ஜோக்கோவிச் ஆகிய இருவரும் இந்த வருடம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் அதிர்ச்சி தோல்விகளைத் தழுவி நொக் அவுட் செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆம் சுற்றுப் போட்டியில் நிரல்படுத்தலில் இடம்பெறாத நெதர்லாந்து வீரர் பொட்டிக் வென் டி ஸாண்ட்ஸ்கல்பிடம் 3 நேர் செட்களில் 2023 சம்பியன் காலோஸ…
-
- 1 reply
- 428 views
- 1 follower
-
-
சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார். 24 சதங்கள் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும…
-
- 3 replies
- 389 views
- 1 follower
-
-
22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் …
-
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் கிதுஷன் 17 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணியில் இவ்வாறு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளார். பல வீரர்களை தேசிய அணிக்கு மன்னாரிலிருந்து அனுப்பிய புனித சவேரியார் தேசிய பாடசாலை மீண்டும் ஒரு வீரரை 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு அனுப்பியுள்ளது. . மன்னார் புனித. சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இணைக்கப் பட்டுள்ள நிலையில், இந்த பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.l…
-
-
- 4 replies
- 395 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 AUG, 2024 | 06:45 PM (நெவில் அன்தனி) அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நடைபெற்றுவரும் முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதை நெருங்கும் பருவமங்கை விஷ்மி குணரட்ன, கன்னிச் சதம் குவித்து வரலாறு படைத்தார். இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்தவுக்குப் பின்னர் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை விஷ்மி குணரட்ன பெற்றுக்கொண்டார். எதிர்வரும் வியாழக்கிழமை 22ஆம் திகதி தனது 19ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள விஷ்மி குணரட்ன, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் நேரஞ்செல்ல செல்ல திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதத்…
-
-
- 13 replies
- 772 views
- 1 follower
-
-
28 தொடர்சியான முடிவுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த தென் ஆபிரிக்க - மே. தீவுகள் டெஸ்ட் Published By: VISHNU 12 AUG, 2024 | 08:21 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ட்ரினிடாட், போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்யின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மழை காரணமாக கிட்டத்தட்ட 160 ஓவர்கள் வீசப்படவில்லை. 2023 ஜூலை மாதத்திலிருந்து இந்த வருடம் ஜுலை மாதம் வரை விளையாடப்பட்ட 28 டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிட்டிய நிலையில் இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. …
-
-
- 3 replies
- 363 views
- 1 follower
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சச்சின் டெண்டுல்காரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பர் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள அவரின் தற்போதைய சராசராசரியில் ஆட்டத்தை தொடர்ந்தால் இலகுவாக இந்த சாதனையை முறியடிப்பர் என கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 15,921 ஓட்டங்கள் ''டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ஓட்டங்களை குவித்துள்ளார். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ஓட்டங்களை எடுத்தால் டெண்டுல்கரின் சா…
-
-
- 5 replies
- 692 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 ஆகஸ்ட் 2024, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தியக் குழு கூடுதல் …
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் : வியாழனன்று அறிமுகமாகிறது 05 FEB, 2024 | 10:26 AM (ஆர்.சேதுராமன்) பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான மற்றொரு தொகுதி ரிக்கெற் விற்பனையும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது. 32 வகையான விளையாட்டுகளில் 329 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் எதிர்வரும் 8 ஆம் திகத…
-
-
- 70 replies
- 5.7k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,"இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் ஸ்ரீஜேஷ் 34 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர். ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்…
-
- 1 reply
- 542 views
- 1 follower
-
-
முதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 1
-
-
- 119 replies
- 7.5k views
- 2 followers
-
-
இமானே கெலிஃப்: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாலின தகுதிச் சோதனை - சர்ச்சை ஏன்? அறிவியல் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இமானே வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான அல்ஜீரிய ரசிகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமானே கெலிஃப், ஓராண்டு கழித்து தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையை கடந்து, அல்ஜீரிய வ…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி! இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை வந்தடைந்தனர். இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்வும் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் . இதேவேளை குறித்த டி20 தொடரில் இருந்து கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393182
-
-
- 58 replies
- 3.5k views
- 1 follower
-
-
மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது வெற்றியை சுவைத்தது நேபாளம் Published By: VISHNU 19 JUL, 2024 | 08:45 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். 2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விக…
-
-
- 28 replies
- 1.7k views
- 1 follower
-
-
கௌதம் கம்பீர்: தோனியின் 'நிழலில்' 2 உலகக் கோப்பைகளை வெல்ல பங்களித்தவர் பயிற்சியாளராக சாதிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 10 ஜூலை 2024, 03:26 GMT “கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. தனிப்பட்ட முறையில் நீங்கள் புகழ்பெற விரும்பினால், தனியாக ஆடும் விளையாட்டில்தான் விளையாட வேண்டும்” கிரிக்கெட் விளையாட்டுக்கு கெளதம் கம்பீர் அளித்த விளக்கம் இது. சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் என ஏராளமான ஜாம்பவான்களுடன் சேர்ந்து தனது முத்திரையை பதித்து, தாக்கத்தை ஏற்படுத்தியவர் கம்பீர். 2008 முதல் 2011ம் ஆண்டுவரை கிரிக்கெட்டின் 3 விதமான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமை பெற்ற கிரிக்கெட்…
-
-
- 4 replies
- 457 views
- 1 follower
-
-
T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது! மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியைய…
-
-
- 121 replies
- 8.6k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 17 JUL, 2024 | 12:08 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் ப்ளோரிடா, ஹார்ட் ரொக் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கொலம்பியாவை மேலதிக நேர கோலின் உதவியுடன் 1 - 0 என வெற்றிகொண்ட ஆர்ஜன்டீனா சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியின் மேலதிக நேரத்தின் 112 ஆவது நிமிடத்தில் லவ்டாரோ மாட்டினெஸ் போட்ட கோலே ஆர்ஜன்டீனாவை சம்பயினாக்கியது. விளையாட்டரங்குக்கு வெளியே இரசிகர்கள் குழப்பங்கள் விளைவித்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதித்தே இறுதிப் போட்டி ஆரம்பமானது. மிகவும் விறுவிறு…
-
-
- 3 replies
- 395 views
- 1 follower
-