Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மாறத்தொடங்கியுள்ள காட்சிகள் அர­சி­யலில் எப்­போதும் எதிர்­பா­ராத விட­யங்கள், எதிர்­பார்க்­காத சந்­தர்ப்­பங்களில் இடம்­பெறும் என்­பதே யதார்த்­த­ம். அப்­ப­டித்தான் வர­லாறு முழு­வதும் நடந்­துள்­ளது. தற்­போ­தைய அர­சியல் சூழ­லிலும் அவ்­வா­றான எதிர்­பார்க்­காத விட­யங்கள், எதிர்­பாரா­த­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அந்­த­வ­கையில் தற்­போ­தைய சூழலில் ஜனா­தி­பதி தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற பின்­ன­ணியில் அர­சி­யலில் ஆங்­காங்கே காட்­சிகள் மாற ஆரம்­பித்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. ஜனா­தி­பதி தேர்­தலை நோக்­கிய ரா­ஜ­தந்­திர நகர்­வு­களும் காய்­ந­கர்த்­தல்­களும் ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே இவ்­வாறு காட்­சிகள் மாற ஆரம்­பித்­துள்­ளதை அவதானிக்க முட…

  2. மென்வலு யுத்தம்! - பி.மாணிக்கவாசகம் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை. அது மறு­வ­டி­வத்தில் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தையே உணர முடி­கின்­றது. ஆனால், இது ஆயு­த­மேந்­திய யுத்­த­மல்ல. பதி­லாக மென்­வலு சார்ந்த யுத்தம். ரத்தம் சிந்­தா­தது. எனினும் மோச­மா­னது. இன அழிப்பை அப்­பட்­ட­மான நோக்­க­மாகக் கொண்­டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்­கவும், தமிழ்மக்­களின் தாயக மண்ணைக் கப­ளீ­கரம் செய்­வ­தற்­கா­கவும் இந்த மென்­வலு யுத்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. …

  3. கன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்? நிலாந்தன்.. July 21, 2019 கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக தேவாரங்களைப் பாடிக்கொண்டு கன்னியாப் பிரதேசத்திற்குச் செல்வது இத்திரட்சியின் நோக்கமாகும். முகநூலில் விடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் கைபேசிச் செயலிகளின் வலையமைப்பு போன்றவற்றிற்கூடாக மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கே க…

  4. யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது? on July 15, 2019 பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை ஊட்டுபவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால், இந்த அச்சத்தைப் பரப்பி வருபவர்கள் அந்தக் குழுக்களை இஸ்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசும் கணத்தில், அவர்கள் மிகவும் அழிவுகரமான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரில்…

  5. ஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்! July 20, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் …

  6. பலமடையுமா, பிளவுபடுமா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:44 Comments - 0 ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன, தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வந்து விட்ட நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த மஹிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்து விட்டார். அதற்குப் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயும், ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், மஹிந்த ராஜபக்‌ஷ எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இந்த எதிர்ப்புகளால் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியில் நிறுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது…

  7. நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0 சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் …

  8. கன்னியா: அடிபணியவைத்து அபகரிக்கப்படுகிறதா? Editorial / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 06:29 Comments - 0 -இலட்சுமணன் திருகோணமலை, கன்னியாவில் பிள்ளையார் கோவிலை ஆக்கிரமிக்க முற்படும் பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழர்கள் பெருந்திரளாக நேற்று முன்தினம் (16) அணிதிரண்டிருந்தனர். பாதுகாப்புத் தொகுதியினரின் பல்வேறு கெடுபிடிகள், சூழ்ச்சிகள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுக்கு மத்தியில், இனமத வேறுபாடுகள் கடந்து, தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டிருந்தமை புறமொதுக்கி விடக்கூடிய செய்தி அல்ல! இலங்கையின் பிரபல சுற்றுலாத் தலமாகக் காணப்படும் கன்னியா வெந்நீரூற்றுத் தலம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருப்பதுடன், பட்டினமும் சூழலும் நகர சபையே…

  9. பிரதமரின் கூற்று சாத்தியமா? எட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும் என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம். ஏழு தசாப்­தங்­க­ளாகப் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் நாடு எண்­ணற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தாரம், மக்­களின் சீரான வாழ்­வியல், பல்­லின மக்­க­ளி­டை­யே­யான நல்­லி­ணக்கம், நல்­லு­றவு, சுக­வாழ்வு, ஐக்­கியம் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைக்கு மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். தீர்க்­கப்­ப­டாத இனப்­பி…

  10. மதிப்புக்குரிய கஜேந்திரகுமார் அவர்களே, தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தம் உரிமைகளை துரித கதியில் மீட்டெடுக்க வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தந்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பேரம்பேசும் சக்தியாக தமிழ் மக்களால் பெரிதும் நம்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அதன் சில உறுப்பினர்களும் தமது சுயலாப நோக்கங்களிற்காக அரசுக்கும் மேற்கத்தைய சக்திகளிற்கும் துணைபோகின்ற அபாயத்தை நாம் கண்டு வருகின்றோம். இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்களால் இன்றளவும் மாற்றுத் தலைமையாக பெரிதும் நம்பப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை எழுந்திருக்கின்றது. கடந்த உள்ளுராட்சி சபை…

    • 2 replies
    • 880 views
  11. பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் விடயத்தில் குற்றம் காணல் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:36 Comments - 0 நாடு முழுவதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்ட நிலையில், அந்த நிலைமையைத் தனிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி, கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் மீண்டும் தத்தமது பதவிகளை ஏற்பது பற்றிய சர்ச்சையொன்று தற்போது கிளப்பப்பட்டுள்ளது. பதவிகளை இராஜினாமாச் செய்தவர்கள், மீண்டும் பதவியேற்க முடிவு செய்ததாக, அவர்களின் கூட்டமொன்றை அடுத்து, முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்ததன் பின்னரே, இந்தச் சர்ச்சை உருவாகியிர…

  12. கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0 தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். அரசியல் என்பது, நண்பர்களைக் காட…

  13. முக்கியத் தருணத்தில் முரண்டு பிடிக்கின்றதா முன்னணி? காரை துர்க்கா / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:32 Comments - 0 வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் ஒன்றினைக்கும் முயற்சி கைநழுவிப் போயுள்ளது. புலிகளது காலப்பகுதியில், தமிழ் மக்களது உரிமை மீட்சிக்கும் பாதுகாப்பு உறுதிப்பாட்டுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களும் அவர்களையே நிறைவாக நம்பி இருந்தனர். ஆனால் புலிகளது மௌனத்துக்குப் (2009) பின்னர், கூட்டமைப்புக்கு அந்த வகிபாகம் வலியச் சென்றது. ஆனாலும், கூட்டமைப்பின…

  14. கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம் Editorial / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:22 Comments - 0 -தீர்த்தன் நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அரசியலின் நிலைமை. தேசிய அரசியலிலும் தேர்தலுக்கான ‘சருகு புலி விளையாட்டுகள்’ தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதனூடான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்து நடைபெற்று வரு…

  15. KANNIYA OR UNITED SRI LANGLKA? BALL IS IN SINHALESE COURT. கன்னியாவா ஐக்கிய இலங்கையா- பந்து சிங்களவர்களின் ஆடுகளத்தில்’ - வ.ஐச.ஜெயபாலன் கவிஞன். . கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. சம்பந்தன் ஐயா உறுதியாகவும் உரத்தும் உடனடியாகவும் குரல்கொடுக்க வேண்டும். . தமிழரையும் முஸ்லிம்களையும் பிழவுப்படுத்திக் கிழக்கை கைபற்ற முனையும் சிங்கள புத்த இனவாதிகள் ஒருபோதும் வெல்லப்போவதில்லை. இலங்கையின் இறைஆண்மையை அழிக்கும் ஒரு போராட்டத்திலேயே பெளத்த பிக்குகள் ஈடுபட்டிருக்கிறார்கள். சிங்கள பவுத்த இனவாதிகள் தொடர்ந்து இரண்டுதடவை அதிஸ்ட்ட வெற்றிவாய்ப்…

    • 0 replies
    • 458 views
  16. கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:10 Comments - 0 மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்…

  17. ‘அரசியல் ஆசை’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:18 Comments - 0 உலகில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இனத்துவ நகர்வுகளுக்குப் பின்னால், ஓர் அரசியல் ஆசையும் பதவி மோகமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. உலக அரசியலின் விளையாட்டுப் பொருள்களாகவே மக்கள் சமூகத்தைக் கருத வேண்டியிருக்கிறது. எனவே, அரசியல், மக்களுக்கு (நல்லது) எதையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் அரசியலுக்காக ‘அவர்கள்’ எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் புரிதல் இன்றி, உலக அரசியலையோ, இலங்கைச் சம்பவங்களையோ திறனாய்வு செய்ய முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். உலகில் நாமறிந்த நிதர்சனங்களின் அடிப்படையில் நோக்கினால், உரிமைகளுக்காக, இறையாண்…

  18. மஹிந்த ராஜபக்‌ஷவுக்குப் புரிந்ததா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:06 Comments - 0 சுகவீனமடைந்திருந்த பிள்ளையைப் பார்க்கச் சென்ற தந்தையை, சுட்டுக் கொல்வது தான், இராணுவம் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் முறையா?” என்று சில நாள்களுக்கு முன்னர், ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார் மஹிந்த ராஜபக்‌ஷ. ‘அக்மீமன உபானந்த வித்தியாலய’ என்ற பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், உதய பிரதீப்குமார என்பவர் பலியானதை அடுத்தே, மஹிந்த ராஜபக்‌ஷ இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். முன்னாள் கடற்படை சிப்பாயான பிரதீப்குமாரவின் பிள்ளை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். அந்தப் பிள்ளைக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகப் பாடசாலையில் இருந்து கிடைத்த தொலை…

  19. ஆரம்பிக்கும் தோல்விக்கான தேர்தல் பயம்! Editorial / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:38 Comments - 0 -இலட்சுமணன் தான் போகவே வழியில்லையாம் தவில்போல மத்தாப்புக் கேட்கிதாம் என்ற பழமொழி போல, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘நானும் ஜெயிலுக்குப் போறேன். நானும் ரவுடிதான் , நானும் ரவுடிதான்” என்ற தமிழ்த் திரைப்பட வசனம் அடிக்கடி ஞாபகத்துக்கு வருகின்ற சம்பவங்கள் போன்று தான் இலங்கையின் தமிழ் அரசியல் நிலைமையும் இருக்கிறது. ஐயோ என்று தலையில் கையைவைத்துக் குந்திக் கொள்ள வேண்டியும் ஏற்படுகிறது. கிழக்கில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலுமே அரசியல் போட்டி மிகப்பெரியதொரு போராட்டமாகவே மாறி வருகிறது. ஆனால், வழமைக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அ…

  20. மாற்று அணி எனப்படுவது புதிதாகச் சிந்திப்பது – நிலாந்தன். July 14, 2019 புதிதாக சிந்திக்காத எந்த ஓர் ஊடகமும், தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்துமா? கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புது விதி பத்திரிகை அதன் பதிப்பை நிறுத்தியது. இதற்கும் கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையும் அதன் பாதிப்பை நிறுத்தியது.அதேசமயம் அது தொடர்ந்தும் ஒரு மின் இதழாக வெளிவருகிறது. அது நிறுத்தப்பட்ட அதே காலப்பகுதியில் ஒரு புதிய இணைய இதழ் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் தேவராஜா. முன்பு வீரகேசரி வார இதழின் ஆசிரியராக இருந்தவர். இப்படியாக இரண்டு பத்திர…

  21. புறக்கணிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் காணாமல்போன எமது அன்புக்குரிய வர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எங்களுக்கு ஏன் இந்த வேதனை எமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும்? எங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? சர்வதேசத்தின் பங்கேற்புடன்தான் எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் -_ இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம்; காண்கின்றோம். அடிக்கடி இடம்பெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் வினாக்களாக இவை உள்ளன. கடந்த 10 வருடங்களாகவே பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இவ்வாறு தமது மனக்குமுறல்களை வெளியிட்டு வருகின்ற போதி…

  22. பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­பட்­டி­ருந்­தன. உலக பயங்­க­ர­வா­தத்தின் பிடிக்குள் இலங்கை சிக்­கி­யி­ருக்­கின்­றது என்ற அதிர்ச்சி மிக்க அபா­ய­க­ர­மான உண்மை வெளிப்­பட்­டி­ருந்­தது என்­பது முத­லா­வது. இஸ்­லா­மிய ஜிஹாத் அடிப்­ப­டை­வாதம் இலங்­கைக்குள் வேரூன்றி இருக்­கின்­றது என்­பது இரண்­டா­வது விட­ய­ம். இந்த பயங்­க­ர­வா­தத்தில் இருந்தும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தில் இருந்தும் எவ்­வாறு நாடு மீளப் போகின்­றது என்ற கவ­லை­யான நிலை­மையில் இருந்து விடு­ப­டு­வ­தற்­காக நாடு போராடிக் கொண்­டி­ருக்­கின்­றது. சமூ­கங்­களும் வெவ்வேறு வழி­களில் இதனால் போராட வேண்­டிய …

  23. நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை Maatram Translation on July 11, 2019 படங்கள், Ian Treherne திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அது இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் துணிச்சல் காரணமாக இந்தச் சம்பவம் பிரபல்யமடைந்தது. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை டாக…

    • 1 reply
    • 1k views
  24. இந்திய எதிர்ப்பும் தமிழரசு கட்சியின் தீர்மானமும் Jul 09, 20190 யதீந்திரா அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாடு இடம்பெற்றது. இதன் போது ‘இந்தியாவை நாங்கள் நம்புகிறோம்’ என்னும் அடிப்படையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு சம்பவம் முன்னர் எப்போதும் இடம்பெற்றதில்லை. இது தர்க்க ரீதியில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழரசு கட்சி என்பது இந்தியாவிற்கு சார்பான கட்சி என்பதுதான் பொதுவான பார்வை. தமிழரசு கட்சி மட்டுமல்ல வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்வாறான புரிதலுக்குள் அடங்கும். இதில் விதிவிலக்கான ஒரு கட்சி என்றால், அது கஜேந்திரகுமார…

  25. ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:42 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தத் தருணங்களில் எல்லாம் அமைதி காத்த மங்கள, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கடந்த வாரமே வாய் திறந்திருக்கிறார். அதுவும், ‘சஜித் ஒரு வெற்றி வேட்பாளர்’ என்பதை, ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார். இது, ஐ.தே.கவின் தொண்டர்களிடமும் சஜித் ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஆர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.