அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
‘அதையும் தாண்டிப் புனிதமானது’ கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட…
-
- 0 replies
- 490 views
-
-
கூட்டமைப்பு செய்த தவறு என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பலரும் கண்ணை மூடிக் கொண்டு, யதார்த்தத்தையும், உண்மையையும் உணராமல் அள்ளித் தெளிக்கும் குற்றச்சாட்டுக்களில், ‘போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை’ ‘இலங்கையில் நடைபெற்றது ‘இனப்படுகொலை’ என்று சொல்லத் தயங்குகின்றது’போன்றன முக்கியமானவை. ஒரு பொய்யைத் திரும்பச் திரும்பச் சொல்வதன் மூலம் உண்மையென்று நம்பவைக்கும் மலிவான தந்திரத்தைக் கையில் எடுத்த சிலர், கூட்டமைப்பின் மீது இவ்வாறான அவதூறுகளை, தமக்குக் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் முழங்கித் தள்ள, மக்களில் ஒரு பகுதியினரும் அதை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டனர் போல் தெரிகிறது. இது போதாதென்று அரைகுறை ஊடகங்கள் சிலவும், சுய நல அரசியலை முன்னெடுக்கும் ஊடகவ…
-
- 0 replies
- 771 views
-
-
அமெரிக்காவின் முடிவு தமிழர்களுக்கு பாதகமா? அமெரிக்கா பேரவையில் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி- இலங்கையைப் பொறுத்தவரை ஜெனீவா என்பது இனிமேல் அழுத்தங்களைக் கொடுக்கும் களமாக நீடிக்குமா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா வெளியேறியுள்ளது இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. அது, அமெரிக்கா ஏற்கனவே அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கூறப்பட்ட அனுமானமே தவிர, இருதரப்பு உறவுகளையும் முன்னிறுத்தி பார்க்கப்பட்ட விடயமன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள…
-
- 1 reply
- 508 views
-
-
பின்னடைவுகள் முடிவுகளல்ல.. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் தள்ளிவிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் தாம் பூரண ஆதரவை வழங்கியதாகவும், அரசோடு இணக்க அரசியல் நடத்தியதாகவும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக தாம் செயற்பட்டதாகவும் கூறியதுடன் ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும், ஆகையால் இந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கான நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும்…
-
- 0 replies
- 476 views
-
-
ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும். Nillanthan24/06/2018 ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் மிருகவதைக் குற…
-
- 0 replies
- 616 views
-
-
வெனிசுவேலா: ஜனநாயகம் குறித்த புதிய கேள்விகள் ஜனநாயகம் என்றால் என்னவென்ற கேள்வி, மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. அக்கேள்வியை யார் எழுப்புகிறார்கள், ஏன் எழுப்புகிறார்கள் என்பது முக்கியமானது. அக்கேள்விக்கான பதிலை, யார் வழங்குகிறார்கள் என்பது அதைவிட முக்கியமானது. உலக வரலாற்றில், ஜனநாயகம் குறித்த பல விளக்கங்கள் இருந்துள்ளன. அவையும் ஒருமனதானதாக இருந்ததில்லை. இன்று ஜனநாயகம் பற்றி எழுப்பப்படும் கேள்விகள், வெறுமனே ஜனநாயகத்தை மட்டும் விளக்குவனவல்ல. நாம் வாழும் சூழலையும் அதன் அரசியல் போக்கையும் நோக்கையும் கூட விளக்குகின்றன. இதனால், ஜனநாயகம் குறித்த வினாக்களும் விடைகளும், நாம் வாழும் உலகின் குறுக்குவெட்டு முகத் தோற்றத்தை விளங்க உதவும்…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழர்களா! சிங்களவர்களா! என்பது முக்கியம் இல்லை....அங்கஜன் ராமநாதன்
-
- 0 replies
- 414 views
-
-
இன்னொரு ஹிட்லரை அனுமதிக்குமா உலகம்? கோத்தாபய ராஜபக் ஷ இராணுவ ஆட்சியை – கடும்போக்கு ஆட்சியை விரும்புபவர். அதனையே தனது அடையாளமாக நிரூபிக்கவும் எத்தனிப்பவர். இது அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான், அவரது அந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, அவரை மேல் மட்டத்துக்குக் கொண்டு வர முனைகிறார்கள். ஆனால், அரசியல் என்பது வேறு. அதற்கும் இராணுவ ஆட்சிக்கும் ஒருபோதும் ஒத்துப்போகாது. ஜனநாயகப் பாரம்பரியங்களை மதிக்கின்ற வகையிலான, பண்புகளைக் கொண்டவர் களுக்குத்தான் அரசியல் பொருத்தமுடையது ஹிட்லராக மாறி, இராணுவ ஆட்ச…
-
- 0 replies
- 456 views
-
-
தொடர்கதையாகும் அமெரிக்காவின் விலகல்கள் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்து நேரடியாக உச்சிமாநாடு நடத்தி உலகையே அதிரவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஒரு மெகா வர்த்தக பிரமுகர் - அரசியலிலும் இராஜதந்திரத்திலும் மெகா வர்த்தக செழிப்புக்குக் காரணமான தந்திரோபாயங்களை கடைப்பிடித்து வெற்றி பெறலாம்", என்பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டி வருகிறார் என்ற புகழுக்கு உரித்தாளியாவார். இப் பயணத்தில் மேலும் ஒரு குண்டை வெடிக்க விட்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 19 ஆம் திகதியன்று அமெரிக்க தூதுவர் ஐ.நா.சபை மனித உரிமைப் பேரவையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையைக் கண்டித்து உரையாற்றியதுடன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐ.…
-
- 0 replies
- 379 views
-
-
முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முறையாக தலைமை தாங்கவில்லை - கேசவன் சயந்தன்|
-
- 0 replies
- 578 views
-
-
× முரண்படும் தமிழ் தலைமைகள்! மாகாண சபை தேர்தலை இலக்குவைத்து மாற்று அணியொன்றை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவொன்று இரகசிய நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக ஆச்சரியப்படும் தகவலொன்று கசிந்துள்ளது. வட,கிழக்கின் அரசியல்போக்கு பற்றி அக்கறைகொள்கின்றவர்கள் கவனம் செலுத்தும் விவகாரங்களில் இவ்வாரம் முக்கியம் பெற்ற செய்தியாகக் காணப்படுகின்றது. வடக்கு முதலமைச்சர் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றாரா? இல்லையா? இச்செய்தியில் உண்மையுள்ளதா? இல்லையா என்பது பற்றி கர…
-
- 0 replies
- 718 views
-
-
அமெரிக்காவின் வெளிநடப்பும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியும் ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமையிலிருந்து விலகிக்கொள்வதாக அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளமை பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்டு தற்போது நீதியை எதிர்பார்த்திருக்கின்ற மக்கள் மத்தியில் ஒருவிதமான ஏமாற்றத்தை அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறலாம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மீது கடுமையான குற்றச்சாட்டுக்…
-
- 0 replies
- 317 views
-
-
அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா? இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் இந்த வாரம் சர்வதேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்திருப்பதையடுத்தே சர்வதேச அளவிலான இந்த சோர்வு நிலைமை உருவாகியிருக்கின்றது. இது அரசுக்கு சாதகமானது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்க…
-
- 0 replies
- 465 views
-
-
இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…? நரேன்- சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் …
-
- 0 replies
- 409 views
-
-
ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம் சில விநாடிகள் நீடித்த கை குலுக்கல், தசாப்த கால வரலாற்றை மாற்றியெழுதும் ஆற்றல் கொண்டதென எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். இந்தக் கைகுலுக்கல் 14 செக்கன்கள் நீடித்தது. கைலாகு கொடுத்தவரில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். மற்றவர் வடகொரியத் தலைவர் கிம் யொங் உன். கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோஸா தீவிலுள்ள கபெல்லா ஹோட்டலில் நிகழ்ந்த தருணம். அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான ஆறரை தசாப்த கால வரலாற்றை மாற்றியெழுதியது. இவ்விரு நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் என்…
-
- 1 reply
- 411 views
-
-
தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டுமென்று இதில் உடன்பாடு காணப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இனப்பிரச்சினைக…
-
- 0 replies
- 788 views
-
-
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது அதற்கு உயிர்ப்பிப்பதற்கு பல்லின மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியதும், அவர்களுக்கான உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதும் அடிப்படையில் அவசியம். அவ்வாறு உரிமைகள் மதிக்கப்படாவிட்டால், அந்த உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட முடியாது. ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கவும் முடியாது. இந்த வகையில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தோல்வியைத் தழுவியிருப்பதாகவே கருத வேண்டி இருக்கின்றது. ஊழல்கள் மலிந்த, சர்வாதிகாரப் போக்கில் சென்ற சி…
-
- 0 replies
- 560 views
-
-
‘பழைய குருடி கதவைத் திறவடி’ நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து, மீண்டும் பழைய வழியை நோக்கித் திரும்புதலை, ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று சொல்லலாம். இவ்வாறான மீளத் திரும்புகைகள், அரசியலிலும் எப்போதாவது நடக்கின்றன. அந்த அடிப்படையிலேயே, அரசாங்கம் மீண்டும் பழைய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்த முனைகின்றது. புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை,…
-
- 0 replies
- 933 views
-
-
மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து நகரும் அரசியல்….! நரேன்- கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் காலம் முடிவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருட முற்பகுதியில மகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற நிலையே உள்ளது. இந்த தேர்தலுக்கான நகர்வுகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. இதனையே அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளும் தமது வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கு நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாகவும், யாழில் அமைச்சர…
-
- 0 replies
- 399 views
-
-
உலகை திரும்பிப்பார்க்க வைத்த அரசியல் சந்திப்பு இந்த 2018ஆம் ஆண்டின் தலையாய அரசியல் நிகழ்வு என்றால் ஜுன் மாதம் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற உச்சி மாநாடு என்பது எவரும் எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். உலகின் அரசியல், பொருளாதார ஆற்றல்களில் மிகப்பலமான அமெரிக்க நாட்டின் பதவியிலிருக்கும் ஜனாதிபதியும்,கம்யூனிச ஆட்சி நடைபெறும் நாட்டின் வெளியுலகில் பெருமளவில் பயணிக்காத தலைவரும் சந்தித்தனர். உச்சிமாநாடு நடத்தினர் என்பது உலக சமாதானத்தை நேசிக்கும் எவரும் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். ஜூன் 12ஆம் திகதி உச…
-
- 0 replies
- 483 views
-
-
இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு பாராளுமன்றத்தில், மாகாண சபையில், உள்ளூராட்சி சபைகளில் முக்கியமானது. அந்த விடயங்களை மறந்து விட்டு. அரசியல்வாதிகள் வேண்டாம் , நாங்களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்போதைய நிலையில், ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல. அரசியல் என்பது சமூகத்தினதும், அன்றாட வாழ்வியலினதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான், அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை கிளப்பி விடுகின்றனர். ஒரு பக்கத்தில், அரசியல்வாதிகளை ஓரம்கட்ட வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கிளம்பியிருக்கும் ந…
-
- 0 replies
- 387 views
-
-
உலக ஒழுங்கு: தீர்மானிப்பவர்கள் யார்? உலக அலுவல்கள் இயல்பாக நடப்பது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால், அனைத்தும் இயல்பாக நடப்பதில்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், உலகின் முக்கிய மாற்றங்கள் எவையும் இயற்கையானவையும் இயல்பானவையுமல்ல. உலக அலுவல்களைத் தீர்மானிப்போர் உளர். அவர்களின், செல்வாக்கு எல்லைகள் குறித்த, தெளிவான முடிவுகள் எவையும் கிடையாது. ஆனால் போர்கள், தேர்தல்கள், முக்கிய நிகழ்வுகள் என அனைத்திலும் செல்வாக்குச் செலுத்துவோர் இத்தரணியில் உண்டு. அவர்கள் பற்றி, நாம் அறிந்திருப்பது இல்லை. நாம் எல்லாம் இயற்கையாகவே நடக்கின்றன என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம், அவ்வளவே. கடந்த வாரம், இரண்டு நிகழ்வுகள் பலரது கவனத்தைப் ப…
-
- 0 replies
- 917 views
-
-
மாகாணசபைத் தேர்தல்: புதிய அரசியல் தடத்தைப் பதியுமா? -க. அகரன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தாக்கத்தில் இருந்து, மீள்வதற்குள்ளாகவே மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்குள் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாகத் தம்மைக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பின்னடைவைச் சந்தித்தமையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களைத் தேடிய அலைச்சலை, முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பில் நடைபெற்று முடிந்த, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசாரமான வாதப்பி…
-
- 0 replies
- 477 views
-
-
மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…
-
- 0 replies
- 380 views
-
-
தவறிழைத்தது யார்? பி.மாணிக்கவாசகம்…. June 20, 2018 தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை சம்பவம் பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான இராணுவ கட்டளைத் தளபதி கேணல் ரத்னபிரியவுக்கே இந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர் கடந்த நான்கரை வருடங்களாக அந்தப் பதவியில் பணியாற்றி வந்துள்ளார். புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப…
-
- 0 replies
- 448 views
-