அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தலைவிதியை தீர்மானிக்கப்போகும் புதன்கிழமை கடந்த 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் நேரம் மாலை 3 மணியிருக்கும். அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்திக்க அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புஷ்ஷின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை சந்திப்பதற்கு ஐந்து நிமிடம் வரை இருக்கும்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு தகவல் கிடைக்கிறது. அதாவது இலங்கையில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் பாதுகாப்பு …
-
- 0 replies
- 616 views
-
-
கூட்டமைப்பின் முடிவில் தங்கியுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தேசிய அரசாங்கம் என்ற மகுடத்தின்கீழ் அல்லது கூட்டு அரசாங்கமென்ற இணைப்புடன் இதற்கு முதல் இலங்கையில் பல கட்சிகளின் கூட்டுடன் அல்லது ஆதரவுடன் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டாலும் அவை தமது முழுமையான காலப்பகுதியை முடிக்க முடியாமல் குலைந்துபோன, கலைந்து போன சந்தர்ப்பங்கள்தான் இலங்கை அரசியல் வரலாறாக இருந்துள்ளது. அதேபோன்றதொரு நிலைதான் இன்றைய தேசிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதுடன் பிரதமரின் நாற்காலியும் ஆட்டநிலை கண்டுள்ளது. என்னதான் தேசிய அரசாங்கம் என்று சிலர் பெருமைப்பட்டாலும் எதிரும் புதிருமாக பல பாராளுமன்றங்களில் இர…
-
- 0 replies
- 440 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையின் அவசியம் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பூதாகரமாக எழுந்திருக்கின்றது. நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரும் அவருடைய விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் சமூகத்தின் பல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவரை மனிதாபிமான முறையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரனின் குடும்ப நிலைமையைக் கவனத்திற் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என் பது இந்தக் கோரிக்கையின் அடிப்படை நிலைப்பாடாகும். ஆனந்த சுதாகரனுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தை க…
-
- 0 replies
- 389 views
-
-
புதிய சட்டங்கள் தேவையானவை தானா? கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான நேரடியான கவனம் குறைவடையத் தொடங்கியிருக்கிறது. வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி, இப்போது கவனம் எழத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில், இப்பிரச்சினை முழுமையாக மறக்க, மறைக்கப்படலாம். இது, கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு மாத்திரம் தனியான ஒன்று கிடையாது. கடந்தாண்டில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும், தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. கண்டியைப் போல, குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்குள் நடத்தப்படாமல், தொடர்ச்சியாகச் சில வாரங்களுக்கு, ஆங்காங்கே நடத்தப்பட்டன. உடனடியான கோபம் காணப்பட்டது. ஆனால், பின்னர் அவை மறக்கப்பட்டன. …
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கை தொடர்பான ஐநா மீளாய்வு அறிக்கையும், பொறுப்புக்கூறலுக்கான சாத்தியப்பாடுகளும்..!!!
-
- 0 replies
- 235 views
-
-
திருவுளச்சீட்டு இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், அதற்குப் பின்னரான ஆட்சியமைப்பும் ஒரு புதுமையான அனுபவத்தைத் தந்திருக்கின்றது. ‘வென்று விட்டோம்’ என்று பட்டாசு கொழுத்தியவர்கள், ஆட்சியமைப்பதில் தோற்றுவிடுகின்ற நிலையையும் வட்டாரங்களின் அடிப்படையில் தோல்வி கண்டதாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆட்சியை நிறுவுகின்ற விநோதத்தையும் இந்தப் புதிய தேர்தல் முறைமையின் ஊடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். பல பிரதேசங்களில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை. கூட்டாக ஆட்சியமைக்கும் பேச்சுவார்த்தைகளும் வெற்…
-
- 0 replies
- 355 views
-
-
போட்டி களமாக மாறும் இலங்கை!! தமிழ் தரப்புகளின் நிலை என்னவாகும்??
-
- 0 replies
- 331 views
-
-
முள் படுக்கையில் கூட்டமைப்பு வடக்கில் அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆனாலும், இது கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. யாழ்ப்பாண மாநகர சபையில் தொடங்கியது இந்தப் பலப்பரீட்சை. இங்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரை முன்மொழிய, பதிலுக்கு ஈ.பி.டி.பியும் ரெமீடியசின் பெயரை முன்மொழிந்ததால் திருப்பம் ஏற்பட்டது. மும்முனைப் போட்டி எதிர்பார்க்கப்படாத நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு…
-
- 0 replies
- 444 views
-
-
எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் எங்கே போகிறது வடக்கு அரசியலும் அரச சேவையும் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொடருந்துப் பாதையின் இரு தண்ட வாளங்கள் போன்றவர்கள். ஒன்றைவிட்டு ஒன்று விலகவோ, ஒன்றை ஒன்று நெருங்கவோ கூடாது. சமாந்தரமாகச் சென்றால்தான், மக்கள் பயன்பெற முடியும். அதனால் அரச அதிகாரிகள் தத்தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றவெனச் சட்டங்கள் ஆக்கப்…
-
- 0 replies
- 433 views
-
-
ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில்,…
-
- 1 reply
- 743 views
-
-
அமைச்சர்கள் மீதான விசாரணையும் நீதி தவறிய நீதியரசரும் இலங்கை வரலாற்றில் முதலாவது வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வாரியத்தை சட்டத்திற்கு முரணாக கூண்டோடு நீக்கி வடக்கு அரசியலில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறிலங்காவிலும் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள். 2017ம் ஆண்டின் அவரது சாதனையாக இதனை கருதமுடியும். 2009 இறுதி யுத்தத்தில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்களை புறந்தள்ளி இனப்படுகொலையை முன்னெடுத்த இராசபக்சவின் தலைமையிலான சிறிலங்கா அரசு 2009 வைகாசி திங்கள் 19ம் நாளுடன்; தனது வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழர்களின் தாயக பிரதேசத்தை தனது இராணுவ வல்லாதிக்கத்திற்குள் கொண்டு வந்…
-
- 0 replies
- 347 views
-
-
மாற்றத்துக்கான ஆண்டா 2020? மாற்றத்துக்கான ஆண்டா 2020? மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளதாக இந்தியாவிலிருந்து வௌிவரும் பிரபலமான செய்திப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. பின்னடைவைச்சந்தித்தும் நம்பிக்கையுடன் செயற்பட்டார் மகிந்த கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் தோல்வியைத் தழுவிய மகிந்த, அட…
-
- 1 reply
- 397 views
-
-
என்ன செய்யப் போகின்றார்கள்? பி.மாணிக்கவாசகம்… ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது அமர்வு இலங்கையைப் பொறுத்தமட்டில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, சம்பந்தப்பட்ட பல தரப்பினரும் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், போர்க்காலச் செயற்பாடுகள் – போர்க்குற்றம் சார்ந்த சம்பவங்கள் பற்றிய பொறுப்பு கூறும் கடப்பாட்டில் இலங்கை அரசாங்கம் காட்டியுள்ள முன்னேற்றம் என்பவற்றை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அமர்வில் இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டிருந்ததன் நோக்கமும் அதுவே. பொறுப்பு கூறுவதில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தீர்மானம் எடுப்பதல்ல. இந்த நிலையில் நட…
-
- 0 replies
- 458 views
-
-
கூட்டமைப்பின் பிடி; முன்னணியின் சறுக்கல் அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது. யாழ். மாநகர சபையில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தது. இவ்வாறான நிலையில், யாழ். மாநகர சபையில் மாத…
-
- 0 replies
- 438 views
-
-
பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. பங்களாத…
-
- 0 replies
- 661 views
-
-
வல்லரசு நாடுகளிடையே வான் மேலாதிக்கப் போட்டி வேல் தர்மா ரஷ்யா தனது மிக நவீன ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான SU-57ஐ முதற்தடவையாக சிரியாவில் பறக்கவிட்டுள்ளது. இன்னும் போதிய அளவு பரீட்சார்த்தப் பறப்புக்களை மேற்கொள்ளாத SU-57 ஐ ஒரு போர்முனையில் இறக்கியது மிகவும் துணிச்சலான நடவடிக்கை எனப்பல போரியல் நிபுணர்கள் வியந்தனர். SU-57 இரு இயந்திரங்களும் ஒற்றை இருக்கையும் கொண்ட ஐந்தாம் தலைமுறைப் புலப்படாப் போர் விமானமாகும். ஏற்கனவே அமெரிக்காவின் F-22 போர்விமானங்கள் சிரியாவில் செயற்படுகின்றன. அமெரிக்காவின் வான் மேலாதிக்கம்-2030 அமெரிக்காவின் வானாதிக்கத்துக்கு முன்பு எப்போது…
-
- 0 replies
- 535 views
-
-
அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது? அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். “எங்கள் வீடு, பண்டாரிக்குளம் வவுனியாவில் அமைந்து உள்ளது. எங்கள் வீடு அழகானது. எங்கள் வீட்டுக்கு வருவோரை நாங்கள் அன்புடன் வரவேற்போம். எங்கள் வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனது வீட்டை நான் விரும்புகின்றேன்” என்றவாறாக இருந்தன. இவ்வாறான உய…
-
- 0 replies
- 438 views
-
-
அரசியல் தீர்வின் முக்கியத்துவம் நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான உடனடி அவசியம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற சூழலில் அதனை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டுவதாக தெரியவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வரலாறு முழுவதுமே தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இழுத்தடிப்புக்களையே செய்து வருகிறது. தமிழ் பேசும் மக்கள் வாழ்நாள் முழுவதும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஏமாற்றப்பட்டு வருகின்றனரே தவிர அந்த விடயத்தை எவரும் ஆர்வத்துடன் அணுகுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதேவேளை…
-
- 0 replies
- 342 views
-
-
பொறுப்புக் கூறலுக்கு நம்பகத்தன்மை வேண்டும் தற்போது ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் 37ஆவது கூட்டத்தொடர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வழமையாகவே பயங்கரவாதிகளுடனான தார்மீக யுத்தம் எனக் கூறிவந்த அரசு இப்போது அவ்விதம் கூறமுடியாத நிலையில் இருக்கிறது. காரணம் அகிம்சையோடு நிராயுதபாணிகளாக அண்டி, ஒன்றாகக்கலந்து வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகக் கணிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிந்தவின் ஆட்சிக்கால இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச்செய்கை, மைத்திரி ஆட்சிக்கு வந்தது முதல் இற்றைவரை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எந்த பாதுகாப்பும் இல்லை. போர்க்குற்றத்தை ஏற்றுக்க…
-
- 0 replies
- 356 views
-
-
கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ . நா . வினைவு கல்லறை சுவடுகள் கொரிய தீபகற்பத்தில் காணப்படுகின்ற போர் மேகங்கள் மற்றுமொரு பாரிய உலக அழிவை நோக்கியதா என்ற அச்சம் அமைதியை விரும்பும் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் நிலையான அமைதி உருவாக வேண்டும் என்பதே கொரிய மக்களின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது. எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் சுயநல நாடுகள் மீண்டும் கொரிய மண்ணை பயன்படுத்தினால் அங்கு வாழ் மக்கள் மாத்திரம் அல்ல உலகில் ஏனைய நாடுகளில் வாழும் மக்களுக்கும் அதன் தாக்கம் காணப்படும். எவ்வாறாயினும் போர் குறித்த அனுபவம் இலங்கையில் வாழும் எமக்கும் உள்ளது. மூன்று தசாப்தகால …
-
- 0 replies
- 297 views
-
-
சமூக ஊடகங்கள் மீதான தடை முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியதா? எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் முஸ்லிம்களது வீடுகளை உடைத்தார்கள். பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்தார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தார்கள். புனித குர்ஆன் பிரதிகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள். முடிந்தவரையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சூறையாடி காலி செய்த பின்பே அவற்றுக்கு தீ வைத்தார்கள். ஜனாதிபதியும், பிரதமரும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் …
-
- 0 replies
- 377 views
-
-
வரலாற்றில் இடம்பிடிப்பாரா மைத்திரி? சத்ரியன் “தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வாராக இருந்தால் சர்வதேச சமூகம் அவரை உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்த்த தலைவர் என்று அங்கீகரிக்கும்.” யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்பாக- வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மேடையில் அமர்ந்திருக…
-
- 1 reply
- 359 views
-
-
பிரதமர் ரணில் தப்பிப் பிழைத்துவிடுவார்? நாட்டில் திடீர் திடீரென அரசியல் பூகம்பங்கள் ஏற்படுவதும் பின்னர் அவை புஸ்வானமாகப் போய்விடுவதும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். அந்தவகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று, நாளை என்று ஆரம்பித்து ஒருவாறு எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கருஜயசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கையளித்துள்ளார். எனினும் குறித்த பிரேரணையில் மஹிந்த ராஜபக் ஷ கையொப்பம…
-
- 0 replies
- 339 views
-
-
மாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’? ஏ.எல்.நிப்றாஸ் சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மைத் தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவாக்க, யாப்பு ரீதியான அநியாயங்கள், கொள்கை வகுத்தல்கள், மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்பது போல எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 557 views
-
-
ஜெனீவா – ஏமாற்றமா? சுபத்ரா மீண்டும் ஒருமுறை இலங்கை பற்றிய விவாதங்கள், ஜெனீவாவில் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த வாரத்துடன் நிறைவடைந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், 37 ஆவது கூட்டத்தொடரில், கடந்த 19ஆம் திகதியும், 21ஆம் திகதியும் இலங்கை பற்றிய இரண்டு விவாதங்கள் இடம்பெற்றன. மார்ச் 19ஆம் திகதி நடந்தது, பூகோள கால மீளாய்வு அறிக்கை தொடர்பானது. அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றது. ஆனால், மார்ச் 21ஆம் நாள் நடந்த விவாதம் அப்படிப்பட்டதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர்கள் சரத் அமுனுகம, பைசர் முஸ்தபா என்று …
-
- 0 replies
- 319 views
-