அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா? தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோபம் பொங்க, அண்மையில் தெரிவித்து உள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியைத் தொடர்ந்தே, இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கூற்று, கோபத்தின் பேச்சா, ஏமாற்றத்தின் வெளிப்பாடா, கள யதார்த…
-
- 0 replies
- 368 views
-
-
பகுத்தறிவும் பட்டறிவும் இன்றேல் கெட்டறிவுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் செயற்பாட்டாலேயே தமிழீழம் கிடைக்கலாம் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றத் தவறான பிரசாரங்களைச் செய்வதாகவும் சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் மூலம் யாப்பு இயற்றப்பட்டு தமிழீழம் வழங்கப்படவிருப்பதாகவும் அதற்கு இத் தேர்தல் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பாக நடத்தப்படுவதாகவும் மஹிந்த கூறியது தவறு. தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எங்குமே பிரிவினைக்குரிய வார்த்தை இல்லை என்பதை சம்பந்தன் சுட்டிக்காட்டினார். இவர் உயர் நீதிமன்…
-
- 1 reply
- 511 views
-
-
கலப்பு தேர்தல் முறை காலை வாரியுள்ளதா? நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இலங்கையின் அரசியல் நெருக்கீடுகளுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது தேசிய ரீதியில் பாரியளவு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்ததென்றால் அது இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலே ஆகும் என்பதனை சகலரும் ஏற்றுக் கொள்வர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற அரசியல் அதிர்வலைகள் இன்னும் முற்றாக ஓய்ந்துவிடவில்லை. எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற நிலையே இருந்துகொண்டிருக்கின்றது. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறையில் இ…
-
- 0 replies
- 1.9k views
-
-
சிரியாவின் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும் 2011ஆம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்துகொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை, ஜபத் அல் நஷ்ரா, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சி கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு, மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப் புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இஸ்லாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னண…
-
- 0 replies
- 513 views
-
-
தமிழ் மக்களின் நம்பிக்கையிழப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றும் விடயங்களில், அரசாங்கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையிழக்கத் தொடங்கி விட்டது. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்து வருகின்ற, வலியுறுத்தி வருகின்ற கருத்துக்களே இதனை உணர்த்தியிருக்கின்றன. கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான, ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னெர் கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அப்போது சம்பந்தன் இரண்…
-
- 0 replies
- 458 views
-
-
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதால் அவிழ்க்க வேண்டிய முடிச்சுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அங்கத்துவ நாடொன்று விலகுவதற்கான சட்ட அரசியல் ஏற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பிரிவு 50 இல் கூறப்பட்டுள்ளது. அங்கத்துவ நாடொன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உரிமை உள்ளது. பிரிவு 50 இன் ஏற்பாடுகளுக்கமையவும் அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமையவும் விரும்பினால் விலகமுடியும். என பிரிவு 50 கூறுகிறது. விலக தீர்மானித்த திகதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள் விலகல் தொடர்பான சட்ட அரசியல் தொடர் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தலும் விலகியதன் பின்னர் உடனடிக்காலமான் இடைமாறு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பிரிவு 50 …
-
- 0 replies
- 768 views
-
-
அரசியல்களம்... திரு வரதராஜபெருமாள் அவர்களுடனான செவ்வி
-
- 0 replies
- 501 views
-
-
தோல்வியில் முடிந்த ஒபரேசன் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜயந்தவும், வெளியிட்ட கூட்டு அரசாங்கம் இன்னமும் தொடர்கிறது என்ற அறிவிப்புடன், ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒப்பரேசன் முடிவுக்கு வந்திருக்கிறது. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்டப்பட்ட திட்டங்களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னரான ஒரு வாரகாலத்தில் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பிலு…
-
- 0 replies
- 491 views
-
-
மஹிந்தவை நம்பவில்லையா சீனா? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் தீர்க்கமான பங்கை வகித்திருந்த சர்வதேச சமூகம், தற்போதைய கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்ட பெரும் பின்னடைவு, இலங்கையின் அரசியல் தலைவிதியையே மாற்றி விடக் கூடிய நிலை ஒன்றுக்கு இட்டுச் சென்றிருந்தது. உள்ளூராட்சித் தேர்தல் என்ன, குப்பைகளை அகற்றுவதற்கும் வீதிகளைச் செப்பனிடுவதற்கும் தானே என்ற ஏளனமான கருத்…
-
- 0 replies
- 393 views
-
-
தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும் யதீந்திரா நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்…
-
- 0 replies
- 284 views
-
-
ரணில் ஒரு வலிய சீவன்? நிலாந்தன்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு ரணிலை ஒரு காரணமாகக் காட்டுவோரும் உண்டு. அப்படிக் காட்டுவோர் பாலசிங்கம் கூறிய ‘ரணில் ஒரு நரி’ என்ற வாசகத்தையை மேற்கோள் காட்டுவதுண்டு. 2005ல் ரணில் பதவிக்கு வருவததை புலிகள் தடுத்து நிறுத்திய பொழுதும் மேற்படி வாசகம் மேற்கோள் காட்டப்பட்டது. நோர்வே செய்த சமாதானத்தை ஒரு தர்மர் ப…
-
- 0 replies
- 415 views
-
-
தென்னிலங்கை அரசியலை உலுக்கிய சுனாமி ரொபட் அன்டனி கடந்த இரு வாரங்களாக நாட்டில் தேசிய மட்டத்தில் அடித்துக்கொண்டிருந்த அரசியல் சுனாமி தற்போது ஓரளவு ஓய்ந்துள்ளது . எனினும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதே இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது பொதுவாக அனைவரும் கூறும் விடயமாகும். ஆனால் அதுவே சில சமயங்களில் பொதுமக்களுக்கு விசித்திரமானதாக அமைந்துவிடுவதுண்டு. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியதை தொடர்ந்து தென்னிலங்கையில் அரசியல் சுனாமியே ஏற்பட்டது. தெ…
-
- 0 replies
- 232 views
-
-
B639/15 எனும் மிக்-27 விசாரணைகள் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப்பகுதியில், அந்த தேர்தல்கள் விடயங்களுக்கு சமாந்தரமாக பேசப்பட்ட ஒரு விடயமே, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க டுபாயில் கைது செய்யப்பட்ட விவகாரம். எனினும் அந்த விடயம் ஒரு வாரத்துக்குள்ளேயே புஷ்வாணமாகிப் போனது. காரணம் கைதான அவரை ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் விடுதலை செய்தமையும், அவரை இலங்கைக்கு அழைத்துவர எம் நாட்டு அதிகாரிகளால் முடியாமல் போனமையுமாகும். இந்த இயலாமை இலங்கையைப் பொறுத்தவரை மிகப் பெரிய பின்னடைவாக கருதப்பட்ட நிலையில், அந்த பின்னடைவினை மிகப் பலமாக எதிர்கொண்டு இலங்கையின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் அத…
-
- 0 replies
- 221 views
-
-
நினைத்ததும் நடந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் மாற்றுத் தலைமைக்கே இந்தத் தேர்தலில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும் வடக்கு–கிழக்குப் பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் தமிழ் அரசியலின் செல்நெறியில் எழுந்துள்ள பாதகமான ஒரு நிலைமை குறித்து இந்தத் தேர்தல் அபாய அறிவிப்பை அமைதியாகச் செய்திருக்கின்றது. இந்த அறிவித்தல் குறித்து தமிழ் அரசியல் தளத்தில் பொறுப்புள்ளவர்கள் உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ள நிலைமையையே காண முடிகின்றது. தென்பகுதிகளில் உள்ள மக்கள…
-
- 0 replies
- 394 views
-
-
தொண்டையில் சிக்கிய முள் ‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. தேசிய அளவில், ஆட்சி மாற்றமொன்றை, ஏற்படுத்தி விடுமளவுக்கான கொதி நிலையை, இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கி விட்டிருக்கின்றன. மூன்று வருடங்க…
-
- 0 replies
- 437 views
-
-
காணாமல் ஆக்கப்படுமா...? ‘காணாமல் போனோர்’ விவகாரம் காணாமல் போனோரை தேடும் தமிழ் உறவுகள் விரக்தியின் விளிம்பில் நிற்பதை நான் நேரில் பார்த்தேன். அவர்களை பொறுத்தவரை தங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவதற்கு கூட எவரும் இல்லாத நிலை. இதில் ஒரு உண்மையை உணர வேண்டும். இலங்கை அரசியல்வாதிகளின் சிங்களவர் உட்பட எவருடைய பிள்ளையும் இவ்வாறு காணாமல் ஆக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் அதன் வேதனையை ஓரளவாவது புரிந்து இருப்பார்கள். தமிழ் அரசியல்வாதிகள் முக்கியமாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் இந்த விடயம் தொடர்பாக எவ்வித கரிசனையையும் காட்டவில்லை என்பது தெளிவாகின்றது. தமிழ் அரசியல்வாதிகளை நம்பினோம், ஜ…
-
- 0 replies
- 332 views
-
-
யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின. ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்ச…
-
- 0 replies
- 339 views
-
-
மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது. இலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந…
-
- 0 replies
- 246 views
-
-
விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பல பாடங்களை கற்பித்திருக்கின்றன. தேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதோடு ஆட்சியாளர்கள் மீளவும் தமது சேவைகளை திரும்பிப் பார்ப்பதற்கும் தேர்தல் முடிவுகள் வழிவகுத்திருக்கின்றன. மேலும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வழங்குகின்ற வாக்குறுதிகளை உரியவாறு நிறைவேற்ற வேண்டும். மக்களை ஏமாற்ற முனைபவர்களை மக்களே தூக்கியெறிவர் என்கிற சிந்தனையையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்ற…
-
- 0 replies
- 265 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது. தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் ப…
-
- 0 replies
- 228 views
-
-
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே! இயற்கையின் நியதியால் தாமரை மொட்டு மலர்கிறது. ‘ஈஸ்ட்’ என்ற நொதியம் அப்பத்துக்கான மாவைப் பொங்க வைக்கிறது.’’ கடந்த சில நாள்களாக சமூக இணையளத்தங்களில் வெளியான விமர்சனத் துணுக்குகளில் மேற்குறித்த துணுக்கு பலரது இரசனைக்குப் பாத்திரமாயிற்று. மாறிவரும் உலகில் மாறாதிருக்குமொரு விடயம் ‘மாற்றமடைதல்’ என்பதே என முதுமொழி யொன்…
-
- 2 replies
- 573 views
-
-
கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள். தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள். அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்க…
-
- 1 reply
- 551 views
-
-
வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 427 views
-
-
அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிடம் மைத்திரி – ரணில் அரசு படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து அரசு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தினால்தான் ஸ்திரப்பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ கூறுகிறாரே? உள்ளூராட்சித் தேர்தலில் மக்களாணை ஆட்சி மாற்றத்துக்காகவா வழங்கப்பட்டது? மற்ற கட்சியிடம் பல சபைகள் இருப்பது பாராளுமன்ற ஸ்திரப்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்துமா? அரசிடம் குறைந்த அளவு உள்ளூராட்சி சபைகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானதல்ல, அது ஆட்சி மாற்றத்துக்கும் காரணமல்ல. கட்சி ரீதியிலும், தேசிய அரசியல் க…
-
- 0 replies
- 482 views
-
-
‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன. இதன் தாக்கத்தால், கொழும்பு தொடர்ந்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ஒரு செய்தி, மதியம் வேறு ஒரு செய்தி, மாலையில் பிறிதொரு செய்தி என செய்திகள் சிறகடிக்கின்றது. …
-
- 0 replies
- 341 views
-