அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? நிலாந்தன் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப…
-
- 0 replies
- 234 views
-
-
ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி? வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு. கடந்தவாரம், “எங்களுக்குச் சொந்தமான நிலப்…
-
- 0 replies
- 329 views
-
-
மும்முனைப் போட்டிக் களம் என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தெற்கின் அரசியல் என்பது, கட்சி அரசியலாகச் சுருங்கி, நீண்ட நாட்களாகின்றன. எப்போதாவது, ஆட்சிகளுக்கு எதிரான பொதுமனநிலை எழுச்சி கொண்டு, தேர்தல்களில் பிரதிபலிப்பதுண்டு. கட்சி அரசியலைப் பலப்படுத்துவதனூடு அல்லது கட்சி அரசியலில் பலம் பெறுவதனூடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே, தெற்கின் அரசியல் அடிப்படை. …
-
- 0 replies
- 313 views
-
-
சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். தேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும், மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. கட்சிகளுக்குள்ளும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில், குறித்த மதத்தவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு கோரும், மதவாத/ மதத்துவேச பிரசா…
-
- 0 replies
- 264 views
-
-
இந்திய, சீன உறவுகளை சிறிலங்கா எப்படிச் சமநிலைப்படுத்தப் போகிறது? ‘ஆசிய விவகாரங்களைக் கையாள்வதும், ஆசிய விவகாரங்களைத் தீர்ப்பதும் அதன் பாதுகாப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் ஆசிய மக்களாவர்’ என 2014ல் இடம்பெற்ற ஆசியாவில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை கட்டுமான அளவீடுகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் ஆசியாவில் துரித கதியில் வளர்ந்து வரும் இரண்டு நாடுகள் தமக்குள் ஒத்துழைப்பு மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றைக் கட்டியெழுப்பி தத்தமது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆசியாவின் விவகாரங்களைக் கையாளுவதற்கான ஆளுமையைக் கொண்டுள்ளார்களா? பல ஆண்டுகளாக, சீனா ப…
-
- 0 replies
- 343 views
-
-
தேசியப் பட்டியலும் கதைகளும் ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதிசயமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான், தாம் கவனிக்கத் தவறிய அதிசயங்களை நினைத்துப் பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த அதிசயங்கள் போல், நமது அரசியலரங்கில் நடந்திருக்கிறது. அது - அட்டாளைச்சேனைக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, முஸ்லிம் காங்க…
-
- 0 replies
- 458 views
-
-
ஜனாதிபதி, இரண்டு வருடங்களில் திருடர்களை ‘நரகத்துக்கு’ அனுப்புவாரா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மைக் காலமாக அடிக்கடி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அக்கருத்துகளில் சில, தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி அரசாங்கம் என்றும் பலரால், பல்வேறு நோக்கங்களுடன் அழைக்கப்பட்டு வரும், தற்போதைய அரசாங்கத்தின் இருப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு, பாரதூரமானவையாக இருக்கின்றன. ஏனெனில், அரசாங்கத்தில் ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளியாகச் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்ச…
-
- 0 replies
- 278 views
-
-
வெறும் விழலுக்கு இறைத்த நீர் முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் கிராமத்தில், தற்காலிக கொட்டிலில், அடிப்படை வசதிகள் அற்ற நிலையில், வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு, சிறிலங்கா பொலிஸார் வீடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். அந்த வீட்டைப் பொலிஸ் மா அதிபர், நாடாவை வெட்டித் திறந்து வைத்து, வீட்டின் திறப்பையும் குடும்பத்தினரிடம் கையளித்தார். யாழ்ப்பாணத்தில் படைத்தளபதியின் ஏற்பாட்டில், இரண்டு நிறுவனங்கள் இணைந்து, வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட ஐம்பது மாணவர்களுக்கு, வருடாந்தம் ஐயாயிரம் ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்குப் புலமைப்பரிசில் வழங்க உள்ளது. படைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாக்களிப்பில் இருந்து விலகி வாக்காளர் தவறு இழைத்து விடக்கூடாது!! வாக்களிப்பில் இருந்து விலகி வாக்காளர் தவறு இழைத்து விடக்கூடாது!! சோமாலிய நாட்டில் தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. கடனாக கைமாற்றாக இந்தியாவில் இருந்து ‘வோட்டர் இயந்திரத்தை’ (Voter machine) வாங்கி கணினி முறையில் இலகுவாக வாக்குப்பதிவு செய்யவும் வாக்குகளை எண்ணவும், அதிக செலவில்லாமல் தேர்தலை நடத்தவும் சோமாலிய நாட்டு அரசு ஏகமனதாக முடிவு செய்தது. வாக்குப் பதிவு குற…
-
- 0 replies
- 461 views
-
-
தேர்தலுக்குப் பின்னர் அரசின் நிலை என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியல் களம் எப்படியான மாற்றத்தைச் சந்திக்கும் என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதே முதற் கேள்வியாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் உடன்பாடு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. அதனை இரண்டு கட்சிகளும் புதுப்பிக்கவில்லை. உடன்பாட்டை நீடிப்பது தொடர்பான ஆவணம் ஏதும் தனக்கு அனுப்பப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜய …
-
- 0 replies
- 332 views
-
-
இடைக்கால அறிக்கை இடைத்தங்கல் ஆகுமா? சர்வதேச ரீதியில் ஐ.நா. வில் இலங்கை போர்க்குற்றத்தையும் ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூறலையும் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. போருக்கான காரணம் பேரின யாப்பே எனக் கருதித்தான் பல்லின வடிவம் சர்வதேசத்தால் வலியுறுத்தப்படுகிறது. இம்மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை ஐ.நா. வில் இலங்கைக்கு மேலும் நெருக்குதல் காத்திருக்கிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்திலும் கூட சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் வடிவம் முன்வைக்கப்படாவிட்டால் அதிக சாதகம் தமிழ் தரப்புக்கே என சம்பந்தன் கருதுகிறார்போல் தெரிகிறது. தமிழ் ஆயுதப் போராளிகளின் காலத…
-
- 0 replies
- 381 views
-
-
இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?தமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது? Written by:Nillanthan கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு விடயத்தை அழுத்திச் சொல்லியிருக்கிறார். இத் தேர்தல் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு அல்ல என்பதே அது. உள்ளூர் அதிகாரங்களைப் பிரயோகித்து ஊர்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்தலே இதுவென்று அவர் சுட்டிப்பாகப் பேசியிருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரையிலும் இத்தேர்தலை இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப…
-
- 0 replies
- 248 views
-
-
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முதலமைச்சர் மண்டியிட வைத்த விவகாரம் : நியாயம் பெற்றுக்கொடுக்க முடியாத விசாரணைகள் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்தமை, மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்கு மூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தேசிய மட்டத்தில் அவதானத்தை பெற்றுள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் அந்த விடயங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகளும், ஊவா ஆளுநரின் செயலாளரின் கீழும் பிரத்தியேகமான இரு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் பாராளுமன்றத்திலும் 9 பேர் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. …
-
- 0 replies
- 213 views
-
-
மீண்டும் மறக்கப்படுகின்றதா? அரசியல் தீர்வு? நல்லாட்சி தேசிய அரசாங்கம் அரசியலில் கடும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் முறுகல் நிலையானது தொடர்ந்து வலுவடைந்து வருகின்ற நிலையில் தேசிய அரசாங்கத்தின் இருப்பானது சந்தேகத்துக்கிடமாகவே நீடித்து வருகின்றது. தற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள சூழலில் இரண்டு கட்சிகளுக்குமிடையிலான போட்டி கடுமையாக…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழர் அடையாளத்தை அழிக்கும் முயற்சி திருகோணமலைப் பிரதேசத்தில் தமிழ் மக்களுடைய அடையாளங்களையும் இந்து பூர்வீகங்களையும் அழிப்பதிலும் இல்லாமல் ஆக்குவதிலும் தொல்பொருள் திணைக்களமும் பௌத்த விஹாராதிபதிகளும் காட்டிவருகின்ற அட்டூழியங்களின் ஒருவெளிப்பாடுதான் அண்மையில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சூடைக்குடா (மத்தளமலை) திருக்குமரன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவமாகும். போர் மற்றும் சுனாமி காரணமாக சூடைக்குடா கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள் மீள் குடியேறிய நிலையில் தங்கள் வரலாற்றுப்புகழ் கொண்ட ஆலயத்தை புனரமைக்கவும் அருகில் குடிநீர்கி கிண றொன்றை நிர்மாணிக்கவும் ஆலய பரி…
-
- 0 replies
- 549 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் வடக்கு தெற்கின் நிலையும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கின்ற தேர்தல் பிரசாரங்களுடன், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் தங்களுக்குள் பிணை முறி விவகாரத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையே ஏற்பட்டுள்ள குற்றம் சுமத்துகின்ற சொற்போரானது நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பு குறித்து அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. …
-
- 0 replies
- 496 views
-
-
அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவது முக்கியமானதாகும். இன்னொரு முக்க…
-
- 0 replies
- 309 views
-
-
வடக்கு, கிழக்கில் முதலீடுகளின் அவசியத்தை வலியுறுத்திய சம்பந்தன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் யுத்தத்தினால் முற்றுமுழுதாக அழிவடைந்த வடக்கு, கிழக்கில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் ப…
-
- 0 replies
- 256 views
-
-
கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும் நரேன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் கிராம, பிரதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தமது அதிகார வரம்பெல்லைக்குள் காலத்தின் தேவைக்கேற்ப நூதன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தகைய அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம் என்பது குறித்தும் பேசுவதற்கு பதிலாக, தேசிய அரசியலும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை எந்தவொரு கட்சியும் அபிவிருத்தி குறித்தும் அதற்காக வைத்திருக்கும் திட்டங்கள…
-
- 0 replies
- 458 views
-
-
அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் “இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை. வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், …
-
- 0 replies
- 331 views
-
-
பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை – பி.மாணிக்கவாசகம் உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், தேர்தல் கால வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் போன்றவற்றிற்குக் குறைவிருப்பதில்லை. குறிப்பாக விகிதாசாரத் தேர்தலில், விருப்பு வாக்கு முறைமை தேர்தல் வன்முறைகளுக்கு அதிக வாய்ப்பளித்திருந்தமை வரலாற்று அனுபவமாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தொகுதி முறை, விகிதாசார முறை என்ற இரண்டும் கலந்த ஒரு தேர்தலாக அமைந்துள்ள 2018 ஆம் ஆண்டின் உள்ளுராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குக்கான வன…
-
- 1 reply
- 1.2k views
-
-
எந்த முரண்பாடு இருந்தாலும் ஜனாதிபதியும் ஐ.தே.கவும் பிரிந்து வாழ முடியாது தமக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வெளியிடும் கருத்துகளைப் பற்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் மிகவும் உணர்ச்சிகரமான உரையொன்றை ஆற்றிவிட்டு, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் எனச் செய்திகள் கூறின. அது, அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முறுகல் நிலையின், மிகவும் பாரதூரமான வெளிப்பாடாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜனாதிபதியைப் பற்றி, ஐ.தே.க அமைச்சர்களும் நாடாளுமன்ற உ…
-
- 0 replies
- 250 views
-
-
ஆர்ஜென்டீனா: அம்மம்மாக்களின் உறுதி மரணம் என்பது கொடுமையானது. காணாமல் போவதென்பது மிகவும் கொடுமையானது. அது நிச்சயமின்மைகளையும் எதிர்பார்ப்பையும் ஒருங்கே கிளறிவிடும் அபத்தத்தை எளிமையாகச் செய்துவிடும். காணாமல் போதல்கள் உலகெங்கும் தொடர்ந்து நடக்கின்றன. அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் துயரமும் அவலமும் சொல்லி மாளாது. அண்மையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகள், இக்கட்டுரையை எழுதத் தூண்டின. முதலாவது, ஆர்ஜென்டீனாவில் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம், குற்றவாளிகளுக்கு விடுப்பு அளித்தமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இளவயது மற்றும் வயதுமுதிர்ந்த பெண்கள் வீதிகளில…
-
- 0 replies
- 378 views
-
-
யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள் கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு! பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன்’ (க.வி.விக்னேஸ்வரன்) என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று, பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன். தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத வடிவில் முனைப்புப் பெற்றிருந்த காலத்திலும், அந்தச் சூழலுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தினால் மரியாதையோடு கொண்டாடப்பட்ட ஒரு சிலரில் தாங்களும் ஒருவர். அது, தங்களை 2013ஆம் ஆண்டு ஜுலை நடு…
-
- 1 reply
- 577 views
-
-
அடுத்து என்ன செய்யப் போகிறார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன? பகிர்க படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கடுமையான விமர்சனங்கள் குறித்து கோபமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளிடையே கூர்மையடைந்து வருகின்ற முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. அமைச்சரவைக்கு தலைமை தாங்குகிற ஜனாதிபதி வெளியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களை ஆட்சேபித்து கூட்டத்தில் இ…
-
- 0 replies
- 332 views
-