அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9223 topics in this forum
-
சாதனையும் வேதனையும் நல்லாட்சி அரசாங்கம் தனது பெயருக்கு ஏற்ற வகையில் நல்லாட்சியைப் புரிகின்றதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அமைச்சர்கள் இராஜினாமா செய்வதிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதிலும், அது சாதனைகள் புரிந்திருப்பதாகவே கருதப்படுகின்றது. ஆனால் இந்த சாதனைகள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வழிவகுப்பதாகத் தெரியவில்லை. மத்திய வங்கி விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல்களில் சம்பந்தப்பட்டார் என அரசாங்கத் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வெளிவிவகார அமைச்சசர் ரவி கருணாநாயக்க தனது …
-
- 0 replies
- 385 views
-
-
தமிழர் அரசியலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய யதார்த்தங்கள் - க. அகரன் தமிழர் அரசியல் தளம், இன்றைய நிலையில் பல சுவாரஸ்ய களங்களைக் கொண்டதாக அமைந்து வருகின்றது. ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாகத் தமது நகர்வுகள் உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் தலைமைகள், அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எழுந்துள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கான ஏதுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பது தொடர்ந்தும் கேள்விக் குறிகளாகவே காணப்படுகின்றன. வட மாகாண சபையின் செயற்பாடுகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நகர்வுகளும் மக்களின் எதிர்கால நலன்கள் என்ற வகையில், எதை ஆக்கபூர்வமாக முன்வைக்கின்றன? குறிப்பாக, வரவுள்ள புதிய அ…
-
- 0 replies
- 416 views
-
-
சிக்கல்களுக்குள் சிக்கும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தலைமையிலான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் வாரியம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னமும், சுமார் ஒரு வருடம் வரையே இருக்கின்ற நிலையில், மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இந்த மாற்றம், பல்வேறு இழுபறிகளின் பின்னர்தான் நடந்தேறியிருக்கிறது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இப்போது, விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சை, சிவநேசனிடம் கையளித்திருக்கிறார். சுகாதார அமைச்சர் பதவி, மருத்துவர் குணசீலனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்துக்கு என தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களான, அனந்தி சசிதரனும், சர்வேஸ்வரனும…
-
- 1 reply
- 543 views
-
-
வடமாகாண சபையில் தொடரும் இழுபறிநிலை http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-23#page-18
-
- 1 reply
- 503 views
-
-
அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல் ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல. கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொ…
-
- 0 replies
- 712 views
-
-
‘போட்டுத் தள்ளும்’ மனநிலையை வளர்ப்பது எது? “...போராட்ட காலத்தில், குறிப்பாக போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைவும் ஒருவர் மீதான மற்றவரின் நம்பிக்கையும் அபரிமிதமானது; மெச்சத்தக்கது. தமிழ்ச் சூழலில், அவ்வாறான நிலை அதற்கு முன்னர் இருந்திருக்கவும் இல்லை. எனினும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களிடையே நம்பிக்கையீனமும் முரண்பாடுகளும் எதிர்பார்க்கப்பட்ட அளவையும் தாண்டி அதிகரித்திருக்கின்றது. ஒருவரிடத்திலோ, சமூகத்திடமோ நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், கடந்த காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பின் சிறுபகுதி கூட, தற்போது காட்டப்படுவதில்லை. இது சமூகத்தின் தோல்வி நிலைகளில் முக்கியமானது.…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழ் மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம் ‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிளவை, முரண்நிலையை, பகையை, மிக நுட்பமாக உருவாக்கி, அதை வலுவாக்கியிருக்கிறது சிங்களத்தரப்பு. இனி எப்போதுமே இணைந்து கொள்ள முடியாது என்ற அளவுக்கு இன்று த…
-
- 0 replies
- 513 views
-
-
விக்னேஸ்வரன் வரமா, சாபமா? வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களைத் தொடர்ந்து அமைச்சர் டெனீஸ்வரனைக் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்குத் தற்காலிகமாக நீக்கியிருக்கிறது ரெலொ அமைப்பு. அதன் மூலம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஊடாக கட்சிக்குள் உடைவு அல்லது குழப்பம் ஏற்பட்ட மூன்றாவது அமைப்பாகி இருக்கிறது ரெலோ. முதலமைச்சராகப் பதவியேற்றதில் இருந்தே சி.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் ஏதோவொரு விதத்தில் கட்சிகள் அனைத்தையும் பாதித்துள்ளன. கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான உறவுகளை மட்டு…
-
- 2 replies
- 736 views
-
-
-
பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா? பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண், மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்படுவதோடு, இ…
-
- 0 replies
- 363 views
-
-
வாளேந்திய இளைஞர்கள்…? ஒரு முகநூல் வாசிப்பும் சில கேள்விகளும் - நிலாந்தன் Nillanthan குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களோடு தொடர்புடைய சில இளைஞர்களின் முகநூல்க் கணக்குகளை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். ஒரு கணக்கிலிருந்து தொடங்கி அதோடு தொடர்புடைய அதன் நட்பு வட்டத்திற்குள் வரும் ஏனைய பல முகநூல் கணக்குகளையும் தொடர்ச்சியாக வாசித்தேன். தமிழ் முகநூல்ப் பக்கங்கள் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் வாழ்வை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதனை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. எனினும் ஒரு நபரின் முகநூல் பதிவிற்கூடாக அவருடைய உளவியலை ஓரளவிற்கு நுட்பமாகக் கண்டுபிடிக்கலாம் என்று சில மேற்கத்தேய ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மேற்படி முகநூல் வாசிப்பிற்கூடாகப் பெற்ற தொகுக்கப்பட…
-
- 0 replies
- 564 views
-
-
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும் “ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. 2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந…
-
- 0 replies
- 368 views
-
-
நம்பியிருக்கும் மலையகம்; கண்டுகொள்ளுமா தாயகம்? இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை பற்றி தமிழகத்திலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் பேசப்பட்ட அளவுக்கு இந்திய வம்சாவளியினரான இலங்கைப் பெருந்தோட்டச் சமூகத்தின் அவலம் பற்றி ஒரு விவாதம் கூட தமிழகத்திலோ, இந்தியாவிலோ நடத்தப்படவில்லை. இந்திய ஊடகங்கள் கூட அதுபற்றிப் பேச முன்வரவில்லை. இந்தியாவும், வேறு பகுதி மக்களுக்கே உதவிகளை அள்ளி வழங்குவதாக மலையகத் தமிழர் எண்ணுகின்றனர். இலங்கையில், இந்தியத் தமிழர் என்றொரு சமூகம் இருப்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியவில்லையா என்பது அவர்களது கேள்வியாகும். தமது தாயகமாகக் கருதும் இந்தியா தம்மைக் கைவிட்டு …
-
- 0 replies
- 573 views
-
-
மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடு ப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில…
-
- 1 reply
- 516 views
-
-
சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள் தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்க…
-
- 3 replies
- 831 views
-
-
குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையும் கூட நிறைவு செய்யாத இருவருட ஆட்சி http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-20#page-11
-
- 0 replies
- 192 views
-
-
சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி என் மீதும், எனது மனச்சாட்சியின் மீதும் நம்பிக்கை வையுங்கள் என வேண்டிக் கொள்கிறேன். நான் பிரபுக்கள், கோடீஸ்வரர்கள் குடும்பத்தவனல்ல, விரிவுரை யாளரோ, பேராசியரோ அல்ல. இந்த நாட்டின் விவசாயி ஒருவரது மகன். நான் நீண்ட காலமாக அரசியலரங்கில் செயற்பட்டு வரும் ஒருவன். நான் எனது குடும்ப உறுப்பினர்கள் ஐந்துபேரினது உயிர்களைப் பணயம் வைத்தே அரசிலிருந்து வெளியேறியுள்ளேன். இந்த அரச தலைவருக்கான தேர்தலில் பல சவால்களை எதிர்நோக்க நேரும் என்பதை நான் நன்கறிவேன். பொது வேட் பாளராகத் தெரிவாகி 12 மணித்தியாலங்கள் கழியுமுன் எனக்கான பாதுகாப்பு நீக்கப்…
-
- 0 replies
- 474 views
-
-
இரட்டை சவால்களை வெற்றி கொள்வாரா? ட்ரம்ப் இன்று உலகின் ஏகவல்லரசாக ஆதிக்கம் செய்வதென்பது எவ்வளவு கடினமானது என்பதை உலகில் அரசியல், பொருளாதார, இராணுவ, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளில் முதன்மையாகப் பவனிவரும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான ட்ரம்ப் புரிந்து கொள்வதற்கான தருணம் வந்துவிட்டது. ஜனநாயக விழுமியங்களுக்கும், சமஷ்டி அமைப்பு முறைக்கும் வலுவேறாக்கத்திற்கும் உலகிலேயே பெருமை மிக்க அமெரிக்கா, வெளிநாட்டுக் கொள்கை விடயங்களில் மிகவும் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகி வருவது யாவரும் அறிந்த விடயமாகும். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் நாசிச ஜே…
-
- 0 replies
- 566 views
-
-
20 ஆவது திருத்தம் சாத்தியமாகுமா? 18 ஆவது திருத்தமொன்றைக் கொண்டுவந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக் ஷ தனது மூன்றாவது பருவகால ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய வீழ்ச்சியை சந்தித்தாரென்பது உலகறிந்த விடயம். அதைப்போன்றதொரு அரசியல் மற்றும் ஆட்சி நெருக்கடியை உருவாக்கும் விவகாரமாகவே 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர நினைக்கும் நல்லாட்சி அரசாங்கமானது பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடுமென்ற நிலையே இன்றைய அரசியல் களமாக மாறியுள்ளது. ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஏமாற்றப்படும் கூட்டமைப்பு! இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டிருந்த நம்பிக்கை அற்றுப் போயிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த அரசின்…
-
- 0 replies
- 397 views
-
-
‘வெள்ளை யானையை’ கண்டு தடுமாறும் அரசாங்கம் இலங்கையில் மத்தியிலும் மாநிலத்திலும் அரசியல் அதிகாரங்களும் பதவிகளும் இருந்தும் கூட, தமது அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதில் எண்ணிலடங்கா களச் சிக்கல்களை, சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்நோக்கியிருக்கின்றன. தற்போது கொண்டுவரப்படவுள்ள உத்தேச 20ஆவது திருத்தத்தின் ஊடாகவும், மாகாண சபைகள் சட்டத் திருத்தத்தின் ஊடாகவும் ஜனநாயக உரிமை சார்ந்த, மேலும் பல சவால்களைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. நாட்டிலுள்ள மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தலை, ஒரே நாளில் நடாத்த வேண்டும் என்பதற்காக, ஆட்சிக்காலம் முடிவடைந்த பிற்பாடும், பல மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் காலத்தைப் பிற்போடுவதற்கு, அரசாங்கம் எடுத…
-
- 1 reply
- 480 views
-
-
முதலமைச்சர் விக்கிக்கு வந்துள்ள சோதனை வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், பெரியதொரு சிக்கலாக மாறியிருக்கிறார். மன்னார் மாவட்டத்தில் இருந்து டெலோ சார்பில் வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட டெனிஸ்வரன், அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக, தமது அமைச்சர் பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. ஏனென்றால், அவ்வாறு பதவி விலகினாலும், டெனிஸ்வரனுக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைக்கப் போவதில்லை. விந்தன் கனகரட்ணத்தையோ, சிவாஜிலிங்கத்தையோ அல்லது மருத்து…
-
- 2 replies
- 524 views
-
-
‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா? இனவாதம் தொடர்பாகவும் மதவாதம் தொடர்பாகவும் பாகுபாடுகள் தொடர்பாகவும், உலகுக்கெல்லாம் பாடமெடுக்கும் ஐக்கிய அமெரிக்கா, அண்மைக்காலத்தில் சிறிது அடக்கி வாசிப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த நாட்டில், அண்மைக்காலத்தில் பகிரங்கமாகவே ஆரம்பித்திருக்கும் இனவாதங்களும் மதவாதங்களும் பாகுபாடுகளும் தான், இதற்கான காரணங்களாக இருக்கின்றன. அதற்காக, போர்க்குற்றம் தொடர்பாகவும் பாகுபாடு தொடர்பாகவும், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஐ.அமெரிக்கா பாடமெடுத்த போது, அது தேனும் பாலும் ஓடும் நாடாகக் காணப்பட்டதா என்றால், இல்லை. ஈராக் போர் என்ற மிக மோசமான, கொடூரமான முடிவை எடுத்து, அதன் ம…
-
- 0 replies
- 497 views
-
-
உலகின் தலையீடு நடக்கக்கூடியதா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. சிங்கள அரசுகள் தாமாகத் தீர்வைத் தரப்போவதில்லை என்பதால் உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்ற உலக அமைப்புகள் தலையிட்டு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடுநிலை வகிக்கவேண்டும் என்பதே அந்த ஆயுதம். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு கூட்டு இணக்கத்தை ஏற்படுத்தினார். அரச தலைவருக்கான தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்பத…
-
- 0 replies
- 383 views
-
-
அபிமானமும் மனிதாபிமானமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-16#page-22
-
- 0 replies
- 267 views
-