Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கொக்கெய்ன் மயக்கங்கள் கொழும்பு புறநகர் பகுதியில், பெருமளவிலான கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமை, கடந்த சில நாட்களாக நாட்டின் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகி இருக்கின்றது. ‘போதையற்ற இலங்கை’யை உருவாக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில், நாடு பயணித்துக் கொண்டிருக்கும் போது, 218 கிலோகிராம் கொக்கெய்ன், அரச நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு வரப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை, கணக்கெடுக்காமல் விடக் கூடிய ஒரு விடயமல்ல. இது தொடர்பாக விசாரித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. ஆனாலும், கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அத…

    • 1 reply
    • 571 views
  2. இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-5

  3. நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது மாநிலங்களுக்கு உள்ளதை விட குறைவான அதிகாரப் பரவலாக்கத்தையும்.. ஒன்றுபட்ட இலங்கை என்பதையும் வழியுறுத்தி.. ஏலவே தமிழகத்தில் இருந்து வந்த பிரிவினைவாதம் மீண்டும் வலுப்பெறாத வகைக்கு தான் நடந்து கொள்ளும் என்பதை எம்மவர்கள் சரிவர கணிக்கத்தவறி.. ஹிந்தியாவை தாறுமாறாக நம்பி செய்த நகர்வுகள் தான் பன்னாட்டுச் சமூகமும் ஹிந்தியாவை தாண்டி வந்து உதவக் கூடிய சூழலை உருவாக்கி இருக்கவில்லை. இதனை சொறீலங்கா சிங்களம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஆனால்.. இன்று சூழல் சற்று மாறுபாடானது. இன்று விடுதலைப்புலிகளும் இல்லை.. தமிழர்களிடன் ஆயுதப்…

  4. சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு கடந்துவிட்ட மூன்று தசாப்தங்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-11

  5. தேர்தலைக் கண்டு ஓடும் கூட்டு அரசு ஐ.தே.க. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு அர­சாங்­கத்தின் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் நாளுக்குள் நாள் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. இந்தக் கூட்டு அர­சாங்கம் நிலைத்­தி­ருக்க வேண்டும். அப்­போது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட மிக முக்­கி­ ய­மான விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்வு காண முடி யும் என்ற நம்­பிக்கை பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட இந்தக் கருத்­தையே அண்­மையில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார். ஆனால், இந்தக் கூட்டு அர­சாங்கம் இனி ­மேலும் நீடிக்கக் கூடாது, நீடித்தால் நாட்­டுக்கு ஆபத்து என்ற கருத்தை கூட்டு…

  6. இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை இன­வா­த­மும், மதச் செருக்­கும் இந்த நாட்­டின் சமூக பொரு­ளா­தார முன்­னேற்றத்துக்கு இரட்­டித்த சாபக்­கே­டாய் இருந்து வந்­து­ள்ளன. நாட்­டின் கடந்த நூற்­றாண்டு கால வர­லாற்றை நோக்­கு­வோ­மா­யின், இந்த நிலை­மை­யா­னது ஆரம்ப கட்­டத்­தி­லேயே தோற்­றம் பெற்று, வெவ்­வேறு வடி­வங்­க­ளில் இற்­றை­வரை நிலவி வரு­கி­றது, 1948ஆம் ஆண்டு நாடு சுதந்­தி­ர­ம­ டைந்­ததை அடுத்து, குறிப்­பாக கொரியா நாட்­டில் நடை­பெற்ற போர் மற்­றும் சீனா­வு­டன் செய்து கொண்ட இறப்­பர்- – அரசி ஒப்­பந்­தம் போன்ற நிலை­மை­கள் வாயி­லாக, பொரு­ளா­தார வளர்ச்சி அறி­கு­றி­கள் தென்­பட்­டன. எனி­னும், பின்பு சிங்­கள மேலா­திக்­கச் சிந்…

  7. அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா 7 ஆயி­ரத்து 37 வீடுகள் வெடிப்­பு­க­ளுடன் சேதம். 3 ஆயி­ரத்து 112 கிண­றுகள் வற்­றி­யுள்­ளன. 400 க்கும் அதி­க­மான நீர் நிலைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. விவ­சாய நிலங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. உயி­ரி­னங்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றன. நிலம் தாழி­றக்கம், மண் சரி­வுகள் ஏற்­பட்டு அபாயம். ஒரு நாட்டின் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அந்த நாடு அடுத்­த­கட்ட நீண்­ட­கால பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்ல ஊன்­றுகோலாக அமை­ய­வேண்டும். ஒரு பரம்­பரை மட்டும் அல்­ல…

  8. துதிபாடும் அரசியல் ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடக்கி ஆள்­வ­தற்கு முற்­ப­டுதல் கூடாது. அவ்­வாறு அடக்­கி­யாள முற்­ப­டு­மி­டத்து பிரச்­சி­னை­களும் முரண்­பா­டு­களும் ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும். உலக வர­லா­றுகள் இதனை நிரூ­பித்­தி­ருக்­கின்­றன. என்­னதான் வர­லா­றுகள் காணப்­பட்­டாலும், படிப்­பி­னைகள் இருந்­தாலும் அடக்­கி­யாளும் வர­லாறு என்­பது இன்னும் தொடர்ந்து கொண்­டேதான் இருக்­கின்­றது. உல­க­ளா­விய ரீதியில் சிறு­பான்மை சமூ­கங்கள் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றன. இலங்கைச் சிறு­பான்­மை­யி­னரும் இதற்கு விதி­வி­லக்­காகி விட­வில்லை. இங்­குள்ள சிறு­பான்­மை­யினர் நாளுக்கு நாள் புதுப்­புது வகை­யி­ல­மைந்த பிரச்­சி­னை­க­ளுக்கும் ம…

  9. யூலைக் கலவரமும் தீர்வின்றி தொடரும் தமிழ் மக்கள் கோரிக்கையும்! இற்றைக்கு 34 வருடங்களுக்கு முன்னர் தீவிரம் பெற்ற தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டமும், அதன் கோரிக்கைகளும் இன்றும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் புதிய குடியேற்றங்களின் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் முன்பை விடவும் மோசமான நிலைக்கு சென்றிருக்கின்றது. பிரித்­தா­னிய ஏகா­தி­பத்­தி­யத்­திடம் இருந்து இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்­பி­ருந்தே தமிழ் தேசிய இனம் தனது உரி­மைக்­காக குரல் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. பிரித்­தா­னியர் ஆட்சிக் காலத்தில் 1920 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட மனிங் அர­சியல் யாப்பு சீர்­தி­ருத்தம் ச…

  10. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதியை தருமா? ரொபட் அன்­டனி சீயாரா­லியோன் என்ற நாட்டில் இவ்­வா­றா­ன­தொரு பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு ஏழு வரு­டங்­க­ளாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. 200 மில்­லியன் டொலர் செல­வ­ழிக்­கப்­பட்டு 24 பேரே பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­க­ளாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதே­போன்று கம்­போ­டி­யா­விலும் இது­போன்­ற­தொரு பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட்டு பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு 200 மில்­லியன் டொலர் செல­வ­ழித்து ஐந்­து­பேரை மட்­டுமே பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­க­ளாக கண்­டு­பி­டித்­தனர் - கலா­நிதி ஜெகான் பெரேரா ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து இந்த காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­…

  11. இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமா? செல்­வ­ரட்னம் சிறி­தரன் பிராந்திய பாதுகாப்பு, அரசியல் இராணுவ, பொருளாதார ரீதியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இலங்கையின் அரசியல் நிலைமை ஸ்திரமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அதேவேளை, மேற்கத்தேய நாடுகளும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளும் கால் பதிக்கத்தக்க நிலைமைகளை உருவாக்க வல்ல இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய நிலைமையில், இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிப்பு செய்து ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன் வர வேண்டும் இலங்­கையில் தமி­ழர்கள் மீது ஓர் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்­…

  12. ‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …

  13. ஐரோப்பா: தேசியவாதங்களின் மோதல் தேசியவாதம், வரலாற்றின் வலிய சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. அதன் வேறுபட்ட வடிவங்கள், வேறுபட்ட வியாக்கியானங்கள், ஜனநாயகம் முதல் சர்வாதிகாரம் வரையான பல்வேறுபட்ட ஆட்சிகளை வரலாறெங்கிலும் உருவாக்கியிருக்கின்றன. கடந்த இரு தசாப்த கால உலக அரசியலின் திசைவழியை, திறந்த பொருளாதாரமும் கட்டற்ற சந்தையும் நிதி மூலதனத்தின் முதன்மையான நிலையும் தேசியவாதத்தைப் பின்தள்ளி, அதைக் காலாவதியாக்கிவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால், தேசியவாதம் அனைத்தையும் பின்தள்ளி, இப்போது முன்னிலைக்கு வந்துள்ளது. கொதிநிலையில் உள்ள ஐரோப்பாவின் தற்போதைய நிலைமைகள், தேசியவாதங்களுக்கிடையிலான மோதலைத் தவிர…

  14. பல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-26#page-22

  15. காணி விடுவிப்பு; பொருத்து வீடு; காடழிப்பு முல்லைத்தீவு, கேப்பாபுலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பொதுமக்களின் 613 ஏக்கர் காணிகளையும் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த திங்கட்கிழமை கடிதம் எழுதியிருக்கின்றார். இந்தக் காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதற்கான இணக்கம் ஜனாதிபதி, இராணுவத் தளபதி(கள்), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில் கடந்த மே மாதத்தில் காணப்பட்டிருந்தது. அதில், ஒரு சில பகுதிகளைக் கூட இதுவரை விடுவிக்காத நிலையில், மக்களின் போராட்டம் இன்று 143 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. …

  16. அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என்பது உண்மையா, மிரட்டலா? அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களில் 18 பேர், அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செல்ல இருப்பதாகக் கூட்டு எதிரணி எனப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர் அண்மையில் கூறியிருந்தனர். அவ்வாறு, அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள், தம்மோடு இணையவிருப்பதாகவும் கூட்டு எதிரணியினர் கூறி வருகின்றனர். அதேவேளை, இரண்டு வாரங்களில் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கப் போவதாக, முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா…

  17. ஆடிகள் (34) கடந்தும் ஆட்டம் ஆடும் இனப்பிணக்கும் சந்தேக சகதிக்குள் சிக்குண்ட கூட்டமைப்பும் இலங்கையில் தமிழர் வரலாற்றில் ஜூலை, என்றுமே ஒரு கறை படிந்த மாதம் எனலாம். 34 (1983) வருடங்களுக்கு முன்பாக, இதே ஜூலை மாதத்தில் தெற்கு மற்றும் மலையகம் எங்கும் இனவாதத் தீ, பெருமெடுப்பில், ஆட்சியாளர்களால், நன்கு திட்டமிட்டு மூட்டப்பட்டது. அந்தத்தீ எங்கும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்பாவித் தமிழ் மக்கள், ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர்; உயிருடன் நெருப்பில் போடப்பட்டனர்; பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் அதன் பின்னர், மே 2009 வரை இடம்பெற்…

  18. ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில் வெற்றிகளும் இல்லாமலில்லை இலங்­கைத் தீவில் ஆட்சி அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­கள் மாற­லாம். கட்­சி­கள் காலத்­துக்கு ஏற்­ற­வாறு கொள்கை நிலைப்­பாட்டை மாற்­றிக் கொள்­ள­லாம். சிங்­கள அர­சுகள் தமி­ழி­னத்­துக்­கான தீர்வை வழங்­கு­வ­தற்குப் பின்­ன­டிக்­க­லாம். ஆனா­லும் ஐக்­கி­ய­தே­சி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பவை மாறி­மாறி நாட்டை 70 ஆண்­டு­க­ளாக ஆண்டு கொண்­டி­ருந்த காலப்­ப­கு­தி­க­ளில் தமி­ழி­னத்­துக்­கெ­தி­ராக இடம்பெற்ற படு­கொ­லை­கள், அரா­ஜ­கங்­கள், இன வன்­மு­றை­கள் பெரும்­பா­லும் ஜூலை மாதங்­க­ளி­லேயே நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. ஆயு­தப் போராட்­டம் இடம்­பெற்ற கால­கட்­டத்­தில் உல­…

  19. மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை விக்கி நாடாதது ஏன்? திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது. கேள்வி 1:- பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை? பதில்:- உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த ந…

    • 0 replies
    • 516 views
  20. உரக்கப் பேசும் ‘உலகநாயகன்’; அரசியல் கனவு நனவாகுமா? ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் திடீர் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. “அ.தி.மு.க ஆட்சியில் ஊழல்” என்று அவர் வீசிய ‘பிரம்மாஸ்திரம்’ அ.தி.மு.க அமைச்சர்களைக் ‘கலகலக்க’ வைத்து விட்டது. அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கமல்ஹாசன் மீது, வார்த்தைப் போர் நடத்தினார்கள். சட்ட அமைச்சர், “கமல்ஹாசன் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று ஆவேசப் பேட்டியளித்தார். இன்னோர் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கமல் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் பிள்ளைக்கு நல்ல தந்தையாகவும் முதலில் இரு…

  21. ஆபத்தான பாதையில் கால் பதிக்கும் அரசு தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐ. நாவுடன் இப்போது பகிரங்கமாக முரண்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, அடிப்படை நாகரிகம் தெரியாதவர், திறமையற்றவர், இராஜதந்திர நெறிமுறைகளை அறியாதவர் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பகிரங்கமாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கும் இடையிலான சந்திப்பின்போது கூட, காரசாரமான வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்குப் பின்னர்தான், அவரை “ஓர் இராஜதந்…

  22. சுயம் இழந்த ‘முஸ்லிம்’ அரசியல் உலக அரசியலில் பெரும் அனுபவங்களைக் கொண்டிருக்கின்ற அதேநேரத்தில், இலங்கையின் அரசியலில் நெடுங்காலமாகச் செல்வாக்குடன் இருந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத கையறுநிலையிலேயே முஸ்லிம் சார்பு அரசியல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தனித்துவ அரசியலைச் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகளில் ‘நக்குண்டு நாவிழந்து’ போயிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் நேரடியாகச் சங்கமமாகி இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்தின் குரலாக அன்றி, அந்தந்தக் கட்சிகளின் அழுக்குகளைக் கழுவிக் கொடுக்கும் வேலையைத்தான்…

    • 1 reply
    • 769 views
  23. வடமாகாண முஸ்லிம்களும் தமிழ்மக்களின் கடமையும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-23#page-8

    • 1 reply
    • 418 views
  24. குலையுமா கூட்டு அரசாங்கம்? கூட்டு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக் கும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் சிலர், இப்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக் குத் தலை­வ­லியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளனர். வரும் செப்­டெம்பர் மாதம், பிரதி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் 18 பேர் வரை, அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி தனிக் குழு­வாகச் செயற்­படப் போவ­தாகக் கூறி வரு­கின்­றனர். உட­ன­டி­யாக உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்த வேண்டும், பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்­கை­களை முன்­னி­றுத்­தியே, இந்தக் குழு­வினர், அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறத் திட்­ட­மிட்­டி­ருக…

  25. யாப்புருவாக்கம் பிழைத்தால் – கடவுளிடமா கேட்பது? நிலாந்தன்:- கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய ‘கடவுளிடம் கேளுங்கள்’ என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் உரை கவனிக்கப்படவில்லை. அந்த உரையில் அவர் கூறியவை புதியவை அல்ல. கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?’ கருத்தரங்கில் அவர் தெரிவித்தவற்றின் விரிவாக்கமே அந்த உரை. குறிப்பாக நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்ட பின்னிருந்து அதிலும் குறிப்பாக யாப்புருவாக்கப் பணிகளில் கூட்டமைப்பு ஒரு பங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.