அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9223 topics in this forum
-
சர்வதேச அழுத்தத்தை தமிழ் தலைமை பயன்படுத்துமா...? இலங்கை தற்பொழுது இராஜதந்திரிகளின் வருகையால் திக்குமுக்காடிப் போயிருக்கின்றது. ஐ.நா. மனிதவுரிமை ஆணையகத்தின் விசேட அறிக்கையாளர், ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர், அவுஸ்திரேலிய நாட்டின் வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் என்ற பட்டியலில் சுவிஸ் நாட்டின் தூதுவரும் இணைந்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை அல்லது ரணில் –மைத்திரி கூட்டரசாங்கத்தை உருவாக்குவதில் இவர்களுடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததென்பதை அனைவரும் அறிவோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனிவுரிமைகள் கூட்டத்தொ…
-
- 0 replies
- 466 views
-
-
நல்லிணக்க செயன்முறைகளின் போக்கு; சர்வதேச சமூகத்தின் விசனம் கலாநிதி ஜெஹான் பெரேரா ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சனின் அண்மைய இலங்கை விஜயமும் அதன் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்கள் மாநாட்டில் அவர் வெளியிட்ட கருத்துக்களும் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுகின்ற விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு குறித்து சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு கடுமையடைந்து வருவதை வெளிக்காட்டியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின்போது மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திர…
-
- 0 replies
- 461 views
-
-
யுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம் மனுக்குலம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்றாற் போன்று மனித கலாசாரமும் தொற்றிக்கொண்டு மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகொண்டது. ‘மனித நாகரிகம்’ என்றதான வார்த்தை ஒன்று அறிமுகமாவதற்கு முன்பாக மனிதனால் அவ்வப்போது அறியப்பட்ட கலாசாரங்களே அன்று அவரவரது கல்வியாகவும் இருந்து வந்தது எனலாம். மனித நாகரிகம் வெளிப்பட்டதன் பின்னால் கலாசாரம், கல்வித்துறை, தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என்ற அனைத்து வகையான அம்சங்களும் சருகாய் ஆகிப்போயின என்பதுதான் உண்மை. மொழி உரிமை என்ற பெறுமதி மிக்கதான சொற்பதமானது கலாசாரம் என்ற பதத்துக…
-
- 0 replies
- 544 views
-
-
அதிர்ச்சி வைத்தியம் அளித்த எமர்சன் இலங்கை வந்த ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சனின் அறிக்கை நாட்டில் பாரியதொரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாட்டில் அலட்சியப் போக்கையும் இழுத்தடிக்கும் விதமான அணுகுமுறையையும் முன்னெடுத்து வந்த அரசாங்கம் சற்று ஆடிப்போய்விட்டது என்றே கூறலாம். சர்வதேசம் விழிப்புடன் தான் இருக்கின்றது என்பதை எமர்சனின் அறிக்கை ஊடாக புரிந்துகொண்ட அரசாங்கம் சற்று விழித்துக்கொண்டது என்றே கூறலாம் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் கலந்த ஒரு அறிவிப்பை கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் வெளியிட்டிருந்தார். இதனால…
-
- 0 replies
- 413 views
-
-
காணிவிடுவிப்பு விவகாரத்தில் கண்துடைப்பு நடவடிக்கை இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் கையாளப்படுகின்ற அணுகுமுறை, பொறுப்பு மிக்க ஓர் அரசாங்கத்தின் செயற்பாடாகத் தோற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாகக் கூறி கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே இராணுவத்தினரும் அரசாங்கமும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பது கேப்பாப்புலவு காணி விடுவிப்புச் செயற்பாட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடாத்தாக பொதுமக்களின் காணிகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தமது தேவைக்குரிய காலம் முடிவடைந்த பின்னரும். அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு உடன்படா…
-
- 0 replies
- 322 views
-
-
தலை நிமிர்வோம்! யாழ்ப்பாணம் வந்திருந்த சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தவர்களே மறந்திருந்த அவர்களின் பெருமைகள் பலவற்றை மீட்டுப் பார்த்திருக்கிறார். அத்தோடு ஈழத் தமிழர்களுக்கு உறைக்கும் விதத்தில், நீங்கள் இந்த உலகத்தின் மற்றைய பாகங்களுக்கெல்லாம் உழைத்துக் கொடுத்தது போதும், இனியாவது உங்களுக்காக உழைக்கப் பாருங்கள் என்று குத்திக்காட்டிவிட்டும் போயிருக்கிறார். இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு சொற்றொடர், ‘‘ஒரு காலத்தில் இலங்கையைப் போன்று வளரவேண்டும் என்று சொல்லிக் கொண் டிருந்தது …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஐ.நா. அறிக்கையின் படி 40,000 பேர், இறந்திருந்தால் 2 இலட்சம் பேர், காயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி 2 இலட்சம் பேர் காயப்பட்டவில்லை என்றால் 40,000 பேர் இறந்தனர் என்று சொல்வது பொய்யானது” என்று லங்கா சம சமாஜ கட்சித் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஒருவர் கொல்லப்பட்டால் ஐவர் காயப்படுவர் என்ற பேராசிரியரின் கதை வாய்ப்பாடு சரியானது. ஆனால் கணிதத்தோடு சேர்ந்து சார்பியல் என்னும் கோட்பாட்டையும் இணைத்துக் கணக்குப் பார்க்க வேண்டும் என்பதை பேராசிரியர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார். வெடி குண்டுத் தாக்குதல்களின் போது ஒருவர் மரணமடைந்தால் நான்கு அல்லது ஐந்து பேர் காயமடைந்திருப்பர் என்பது ஒரு பொதுவான கணக்கு. விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறிய சார்பியல் கோட்பாட்ட…
-
- 0 replies
- 381 views
-
-
கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது. ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்…
-
- 0 replies
- 590 views
-
-
47 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 47 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர…
-
- 0 replies
- 418 views
-
-
மஹிந்தவின் மீள்வருகையை தடுக்க மைத்திரி எடுக்கும் முயற்சி தேசிய அரசாங்கம் என்ற பெயரில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கான ஒப்பந்தம் காலாவதியாகும் நாள், நெருங்கி வரும் நிலையில், இந்த அரசாங்கம் நிலைத்திருக்குமா என்ற சந்தேகத்தைப் பலர் எழுப்புகின்றனர். ஒப்பந்தம் காலாவதியாகிய உடன், தாம் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக ஸ்ரீ ல.சு.க எம்.பிக்கள் சிலர் அண்மையில் கூறியிருந்தனர். டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய…
-
- 1 reply
- 348 views
-
-
ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினையைக் கையாள்கின்ற பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. யுத்தத்திற்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா நகரசபைக்கும் யாழ். மாநகரசபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. முகாமில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாகவும் ஒட்டுமொத்த யுத்தம் தொடர்பாகவும் வன்னி மக்களும் யாழ்ப்பாண மக்களும் எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக இலங்…
-
- 1 reply
- 398 views
-
-
புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா? எதிர்க்கட்சி என்றால் தினமும் அரசுக்கு எதிராக ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்க வேண் டும், எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அரசு கொண்டு வரும் சகல வேலைத் திட்டங் களையும் எதிர்க்க வேண்டும், அவற்றில் இருக்கும் குறைகளை மாத்திரம் தேடிப் பிடித்து விமர்சிக்க வேண்டும். இதுதான் எதிர்க் கட்சிக்கான எழுதப்படாத விதி.அவ்வாறு இருந்தால்தான் எதிர்க்கட்சி என்று ஒன்று இருப்பதை மக்கள் உணர்வர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் அந்த எதிர்ப்பு நடவடிக்கைதான் உதவும். மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் இவ்வாறுதான். மகிந்தவுக்கு எதிராகப் பேசிப் பேசி…
-
- 0 replies
- 592 views
-
-
மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்? கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்? அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும…
-
- 1 reply
- 371 views
-
-
அதிர்ச்சியளிக்கும் அரசாங்கத்தின் வன்போக்கு – செல்வரட்னம் சிறிதரன்:- நல்லாட்சி அரசாங்கத்திலும், நீதியையும் சட்டத்தையும் மதித்துச் செயற்படுகின்ற போக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நிலைமையையே காண முடிகின்றது. சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பாதுகாப்புத் துறையினரைச் சார்ந்திருக்கின்றது. சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பு நீதி அமைச்சைச் சார்ந்திருக்கின்றது. எனவே, சட்டத்தையும் நீதியையும் நியாயமான முறையில் நிலைநாட்டுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகக் கருதப்படுகின்றது. ஆனால் மனித உரிமை நிலைமைகளையும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பயன்பாடுபற்றியும் நேரில் கண்டறிந்த ஐநாவின் விசேட அறிக்கையாள…
-
- 0 replies
- 509 views
-
-
மாற்றுத்தலைமை மீதான மோகம் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி, தன்னை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டு காரியங்களை முன்னெடுப்பதே மாற்றுத் தலைமை குறித்த சிந்தனைக்கு அடிப்படை காரணமாகும். கூட்டமைப்பைப் பதிவு செய்தால், தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழரசுக் கட்சியினர் பதிவு விடயத்தில் முரண்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? - இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது. …
-
- 1 reply
- 699 views
-
-
கதாநாயகர்களின் கதை ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நட்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும். நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம், சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் சொன்னது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான, இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்…
-
- 0 replies
- 453 views
-
-
வேலையில்லா பட்டதாரி வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும் அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம் தானாகவே உருவாகும்.... வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது.. இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையக…
-
- 0 replies
- 906 views
-
-
சாதியைப் பிரித்துக் காட்டும் சுடலைகள் சிவப்பு குறிப்புகள் சாதி ஆதிக்க சமூகங்களில் ஆதிக்க சாதியினர், பிறப்பினூடாக சிறப்புச் சலுகைகளை கோருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த சாதி மோதல்கள், மரணம் கூட சாதியிலிருந்து தப்பிக் கொள்ள அனுமதிக்காது என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளன. மேலும், இறந்தவரை எரிக்கும் இடங்கள் கூட, சாதி ஒடுக்கு முறைக்கான இடமாகியுள்ளதையும் இது காட்டியுள்ளது. கடந்த வருட இறுதியிலிருந்து, ஒடுக்கப்பட்ட சாதி கிராமங்களினுள் அமைந்த உயர் சாதியினரின் சுடலைகளுக்கு எதிரான கிளர்வுகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன. யுத்தக் காலத்தில், தசாப்தங்களாக என்று கூற முடியாவிடினும், பல வருடங்களாக, இவ்வாறான சுடலைகள் பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 535 views
-
-
பின்னோக்கித் திரும்பும் வரலாறு நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிங்கள பௌத்த மேலாண்மைத்தனம் பகிரங்கமாக மேலெழத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் மிக வெளிப்படையாகவே பிக்குகள் முஸ்லிம்களின் மீதும் தமிழர்களின் மீதும் தங்களுடைய சண்டித்தனத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த அமைப்புகளும் சிங்கள இனவாதிகளும் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினரும் ஏனைய இனங்களை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்து வருவது அதிகரித்துள்ளது. பலரும் குறிப்பிட்டு வருவதைப்போல, யுத்த வெற்றியானது சிங்கள பௌத்த மனோநிலையை இவ்வாறு ஆக்கியுள்ளது என்றே படுகிறது. இதனால், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பதற்றமடையத் தொட…
-
- 0 replies
- 508 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலம் போருக்குப் பின்னரான இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தல் பற்றியெல்லாம் பேசப்பட்டு வருகின்றது. சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமித்தது. இனங்களுக்கு இடையில் உறவைப் பலப்படுத்தும் விதத்தில் அமைச்சுளை உருவாக்கியது; அதிகாரிகளை நியமித்தது. இருப்பினும் நல்லிணக்கம் என்பது எதிர்பார்த்த அளவு ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக, நாட்டில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சீர்குலைந்துள்ள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இவ்வி…
-
- 0 replies
- 861 views
-
-
கடப்பாட்டுக்கா, நிலைப்பாட்டுக்கா இந்தியாவின் முன்னுரிமை? பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அண்மையில் இலங்கை வந்திருந்தார். தனிப்பட்ட பயணமாக வந்திருந்தாலும் அவர் வெளிவிவகார அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரையும் அவர் சந்தித்திருந்தார். ஆனாலும், அவர்களையெல்லாம் தானாகத் திட்டமிட்டுச் சந்திக்கவில்லை என்றும், தம்மைச் சந்திக்க விரும்பியவர்களையே சந்தித்தேன் என்ற பாணியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார். யாழ். சென்றிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், அங்கு வடக்கு மாகாண முதலமைச்…
-
- 0 replies
- 397 views
-
-
பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா? எம்.காசிநாதன் தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. “ஏட்டிக்குப் போட்டி” விவாதங்கள், “பரபரப்பான காட்சிகள்” என்று செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள மூன்று அணிகளும், “இரகசியக் கூட்டணி” வைத்துக் கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கான சூழல், தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. “எலியும் பூனையும் போல்” இருக்கும் தி.மு.க- அ.தி.…
-
- 0 replies
- 426 views
-
-
அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை? தேசிய அரசாங்கத்தின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக அமைந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் மீள்கட்டமைப்பு ஆகியவையாகும். இவ்விடயம் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி கற்ற சிங்களச் சமூகமும் வரவேற்கக்கூடிய நிலைப்பாட்டை அடைந்ததற்கு காரணம் மோசடி மிகுதியாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்துவேஷம், பாகுபாடு போன்ற காரணங்களாலும் நாடு சின்னாபின்னமாகி இருந்தமையாகும். ராஜபக் ஷக்களின் அதிகார மையம் தேசிய அரசின் கைக்கு வந்தவுடன் தமிழ் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். வடகிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிந…
-
- 0 replies
- 564 views
-
-
முஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-16#page-9
-
- 0 replies
- 404 views
-
-
வரலாற்றுப் பழியை சுமக்குமா கூட்டமைப்பு? பௌத்த பீடங்கள் மற்றும் சங்க சபாக்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிரான முடிவு எடுக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றையாட்சி புராணத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். அஸ்கிரியவில் நடந்த மேற்படி கூட்டத்தை அடுத்து, கண்டியில் ஜனாதிபதி மாளிகையில் பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கோ, பௌத்த மதத்துக்கான முன…
-
- 0 replies
- 399 views
-