அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
வடக்கு - கிழக்கு துண்டாடப்பட்ட துயரம்: - மு.திருநாவுக்கரசு [Sunday 2017-07-09 18:00] தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து எதனையும் பெறவில்லை மாறாக சேர்ந்து அனைத்தையும் கொடுக்கின்றனர். மு. திருநாவுக்கரசு ஒரு தேசிய இனம், ஓர் அரசு என்பன அவற்றிற்குரிய தாயக நிலப்பரப்பினாற்தான் நிர்ணயம் பெறுகிறது. ஒரு தேசிய இனத்திற்கு இருக்கக்கூடிய பல்வேறு அடையாளங்களுள் முதலாவது அதற்குரிய பொதுவான நிலப்பரப்பாகும். ஆங்கில மொழி பேசும் பிரித்தானியர், அமெரிக்கர், கனேடியர், அவுஸ்திரேலியர் என பலர் ஒரு மொழியைப் பேசினாலும் அவை வொவ்வொன்றும் தனித் தனித் தேசங்களாகவும், வேறு வேறு அரசுகளாகவும் அடையாளம் காணப்படுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் ஒரு தே…
-
- 0 replies
- 674 views
-
-
கூட்டமைப்பு தலைமையின் புதிய நகர்வு எதற்காக? புதிய அரசியல் யாப்பா...? அல்லது யாப்பில் திருத்தமா...? என்ற பட்டிமன்றத்திற்கு புத்த பிக்குகளின் எதிர்ப்பானது தேர்தல் என்னும் சிறிய விளம்பர இடைவேளையை வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டில் நிலுவையில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. அதன்படி ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை நீக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் மற்றும் இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைத்திருக்க கூடிய தீர்வை வழங்குதல் என்னும் மூன்று அடிப்படைக…
-
- 0 replies
- 473 views
-
-
வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருப்பது அச்சம் தருமெனில் இலங்கைக்குள் தமிழர்கள் சிறுபான்மையாக எப்படி இருப்பது? இலங்கைத் தீவில் நடைபெற்ற இன ஒடுக்குமுறைச் செயல்கள் மற்றும் இன அழிப்புக்கு அடிப்படையான பிரச்சினைகளை தீர்ப்பதில் இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் மெய்யான அக்கறையைக் காட்டவில்லை என்பதை புதிய அரசியலமைப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் உணர்த்துகின்றன. இலங்கையில் நடந்த நிகழ்வுகளுக்கு தீர்வொன்றை முன் வைக்கும் முகமாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் தமிழ் தலைமைகள் மட்டத்திலும் வாக்குறுதி அளித்து வந்தது. காலம் காலமாக இலங்கையின் சிங்கள அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ள நிலைய…
-
- 0 replies
- 250 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் புதிய அரசியலமைப்பு வரப்போகின்றதா? அல்லது அரசியலமைப்பு திருத்தம் வரப்போகின்றதா? என்று தெரியாமல் நாட்டுமக்கள் குழப்பத்திலேயே இருக்கின்றனர். அரசியல்வாதிகளும் மக்களை குழப்பும் செயற்பாடுகளிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஒருநேரத்தில் முழுமையான அரசி…
-
- 0 replies
- 736 views
-
-
அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்:- 1945-1946 கிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து வந்த பாதையில் பயணிக்கப் போகின்றதா? புதிய பாதையில் போகப்போகின்றதா என்பன போன்ற பல வினாக்களுக்கு விடை தேடவேண்டிய காலம் இது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி வலுவான நிலையில் அப்பொழுது இருந்தது.இலங்கைத் தீவை விட்டு வெள்ளையர்கள் வெளியேறும் நிலையில் ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் திறம்படக் கையாளவில்லை என்றும் கூறப்படுகின்றது. இலங்கைத் தீவுக்குப் புதிய அரசியல் யாப்பு எழதப்பட்ட அந்த நேரத்தில் தமிழினம் தான் ஒரு தேசிய இ…
-
- 0 replies
- 481 views
-
-
ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல் குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை. கடந்த வாரம், ஜேர…
-
- 1 reply
- 409 views
-
-
இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னிறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்…
-
- 0 replies
- 332 views
-
-
அபிவிருத்தியின் அரசியலை புரிந்து கொள்ளல் இலங்கையில் கடந்த நான்கு தசாப்தகாலம் யுத்தமும் அதனுடன் இணைந்த விடயங்களுடனும் கடந்து போய்விட்டது. இரத்தத்துடன் ஊறியிருக்கிற சந்தேகம், வெப்புசாரம், கோபம் போன்ற பலவற்றையும் வெளியேற்றுவது என்பது சாதாரணமாக நடைபெறக்கூடிய விடயமல்ல. இந்த இடத்தில்தான், அபிவிருத்திகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதன் பயன்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குமான மனோநிலை நம்மவர்கள் மத்தியில் உருவாகவில்லை. அதுவும் வடக்குக் கிழக்கில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் அதன் முன்னேற்றமுமே தேவை என்கிற வகையிலான வாதங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அபிவிருத்தி என்றால் ஒரு நாட்ட…
-
- 0 replies
- 448 views
-
-
லீ குவானும் மதசார்பின்மையும் அபிவிருத்தியும் நாட்டின் முக்கியமான அரசியல் விடயங்களில், மதங்களினதும் மதத் தலைவர்களினதும் தலையீடு என்பது, இலங்கையைப் பொறுத்தவரை வழக்கமானதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கு மத்தியிலும், அண்மையில் இந்தத் தலையீடுகள் அதிகரித்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைக்கு, புதிய அரசமைப்புத் தேவையில்லை என, அஸ்கிரிய பீட மகாநாயக்கர் தெரிவிக்க, அதன் பின்னர் மறுநாள் ஒன்றுகூடிய அனைத்து மகாநாயக்கர்களும் ஏனைய முக்கிய பௌத்த மதத் தலைவர்களும், புதிய அரசமைப்போ அல்லது அரசமைப்புத் திருத்தமோ இலங்கைக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இந்த முடிவு, சிறுபான்மை இனத்தவர்களைப்…
-
- 0 replies
- 361 views
-
-
புதிய அரசமைப்புக்கான முயற்சியை அரசாங்கம் கைவிடுமா? புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தாம் பதவிக்கு வந்த நாள் முதல், அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்று சந்தேகம் கொள்ளக் கூடிய நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் இலங்கையில் முக்கிய மூன்று பௌத்த பிரிவுகளின் தலைமைப் பிக்குகள், அதாவது மகாநாயக்க தேரர்கள் கூட்டாக எடுத்த முடிவின் காரணமாகவே அந்தச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் கூடிய இலங்கை பௌத்தர்களின் மூன்று முக்கிய நிகாயாக்கள் என்றழைக்கப்படும் ‘சியம் நிக்காய’, ‘ராமஞ்ஞ நிக்காய’ மற்றும் ‘அமரபுர நிக்காய’ ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் நாட்டுக்குப் புதிய அர…
-
- 1 reply
- 399 views
-
-
அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல. இலங்கை என்பது அதைவிட விசாலமானது. அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே போன்ற ஏராளமான இனத்துவ மக்கள் வாழ்கிறார்கள். பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவம் போன்ற ஏராளமான மதத்தைப் பின்பற்றுவோரும் வாழ்கிறார்கள். ஆகவே, இலங்கை சனத்தொகையைப் பொறுத்தவரை அஸ்கிரிய, நிக்காயக்கள், தலைமைத் தேரர்கள் ஒரு சிறு பிரிவினரேயாகும். அஸ்கிரிய விகாரை மற்றும் நிக்காயகளுக்குட்பட்ட விகாரைகள் தவிர, இவ்வாறான தலைமைத் தேரர்களின் அதிகார ஆ…
-
- 0 replies
- 534 views
-
-
கண்களை இழந்து ஓவியமா? ஆசியாக் கண்டத்தில் இலங்கை ஒரு சிறிய நாடு; அழகான நாடு. பல இயற்கை வளங்களையும் தன் அகத்தே கொண்ட நாடு. இவ்வாறு இருந்த போதிலும் பல ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த நாட்டு மக்கள் வாழ்கின்றனர். பொதுவாக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் பல, இனப்பிரச்சினையின் தொடர்ச்சியான அறுவடைகளே. அதாவது பல தசாப்தமாகத் தொடரும் நீண்ட கால இனப்பிரச்சினையால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதிரிகளாக ஏற்பட்ட பிரச்சினைகள் எனலாம். சிங்கள மக்களை நோக்கின் அவர்கள் நாளாந்தம் பலவாறான சமூக பொருளாதார பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். இவற்றில் சில இனப்பிரச்சினையுடன் சம்பந்தம் இல்லாதவையாக இருக்கலாம். …
-
- 0 replies
- 649 views
-
-
புதிய அரசியல் தலைமை சாத்தியமாகுமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-12#page-26
-
- 2 replies
- 535 views
-
-
‘பிக் பொஸ்’ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல் பலத்தைக் கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகம் இழந்து விட்டது. அஷ்ரப்பின் காலகட்டத்தில், அவர் தலைமை வகித்த முஸ்லிம் காங்கிரஸில் இருந்த பலரும், அவரின் மரணத்தின் பிறகு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்துமெல்ல மெல்லப் பிரிந்து, தனித்தனியான அரசியல் செயற்பாட்டுக்குள் நுழை…
-
- 0 replies
- 536 views
-
-
குருதிக் கொடை உயிர் காக்கும் நோக்கத்துக்காக மட்டும் அமையட்டும் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதனால்தான் இனவாதத்தின் ஊடாக மக்களை இரண்டுபடவைத்துக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள், இன,மத வாதிகளான அரசியல்வாதிகளும் சில பௌத்த போலித்துறவிகளும். இந்த நாட்டு மக்களிடையே நிரந்தர பகைமையை ஏற்படுத்தி வைத்தி டவே இவர்கள் விரும்புகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தென்பகுதியில் இருந்து யாழ்நகருக்கு வந்த 16 பௌத்த பிக்குமார் யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக் கொடை வழங்கியுள்ளனர். இதனைப் பௌத்த பிக்குமார் தாங்களாகவே முன்வந்து செய்திருந்தால் அது…
-
- 0 replies
- 402 views
-
-
அமைதியான அரசியல் களம் புயலுக்குத் தயாராகிறதா? அரசியல் களம், தமிழகத்தைப் பொறுத்தவரை திடீரென்று அமைதியாகி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்த மூன்று அணிகளில் முதல் அணியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி இருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும், டி.டி.வி. தினகரன் அணியும் இப்போதைக்கு மௌன விரதம் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தினகரன் தலைமை வகிக்க வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் “அதெல்லாம் முடியாது” என்று கூறி, தன் தலைமையில் அந்த விழாவை மதுரையில் நடத்தி …
-
- 0 replies
- 431 views
-
-
நேர்மையற்ற அரசியல்வாதிகளும் ஏமாந்து போகும் தமிழர்களும் மக்களின் பிரச்சினை களை மறந்தவர்களாக வடபகுதி அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் ஒருவரை யொருவர் விமர்சித்து அறிக்கைவிடுவதிலும், சவால் விடு வதிலும் செலவழிக்கின்ற நேரத்தைத் தமது பிரச்சினை களைத் தீர்ப்பதற்குச் செலவிட்டால் என்ன? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அண்மைய நாள்களாக வடக்கு மாகாணசபையை மையப்படுத்திய குழப்பநிலை உருவாகியுள்ளது. முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் செயலிழக்க வைக்கப்பட்டுவிட்ட போதிலும், அதன் தாக்கம் இன்னமும் உணரப்படுகின்றது. முதலம…
-
- 3 replies
- 530 views
-
-
‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை? இந்தியத் தொலைக்காட்சிகளில் இது ‘பிக் பொஸ்’ (BiggBoss)காலம். தமிழில் ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். தெலுங்குப் பக்கம் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் 11வது தடவையாக சல்மான் கானும் தொகுத்து வழங்கப் போகிறார்கள். வெளித்தொடர்புகள் ஏதுமற்ற ஒரு வீட்டுக்குள் பல தளங்களிலும் இயங்கும் பத்துக்கு மேற்பட்டவர்களை வசிக்கவிட்டு, அவர்களுக்கிடையிலேயே நிகழும் ஊடாடல்கள் மற்றும் போட்டிகளை மையப்படுத்தி 100 நாட்களுக்கு நீட்டி நிகழ்ச்சியை முடிப்பார்கள். குறித்த நிகழ்ச்சி, தெளிவான திரைக்கதையோடு வடிவமைக்கப்பட்டாலும், அதன் ஒளிபரப்பின் போது, தோற்றுவிக்கப்படும்…
-
- 0 replies
- 509 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்பு: நிலைமாற கூடாத நிலைப்பாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இழுபறியாகிக் கொண்டிருக்கின்ற ஓர் அரசியல் பின்புலத்தில், அதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்ளும் முயற்சியும் பாரிய சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. ஆகையால், அதனோடு தொடர்புடைய மற்றைய விடயமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு இன்னும் சாத்திமற்றதாகத் தெரிகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் உத்தேச முஸ்லிம் கூட்டணியின் முக்கியஸ்தருமான எம்.ரி.ஹசன் அலி, இணைந்த வடகிழக்கே முஸ்லிம் கூட்டணியின் இலக்கு எனக் குறிப்பிட்டதாக வெளியான செய்தியும…
-
- 0 replies
- 550 views
-
-
கழுதைப்புலி அரசியல் – கிரிஷாந் June 15, 2017 ஓர் ஆளுமை சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மாற்றத்தையே அவரை அளவிடுவதற்கான அளவுகோலாகக் கொள்ளமுடியும். மதிப்பீடுகளற்றுப் போன ஒரு சமூகமாக மாறியிருக்கும் நாம் எல்லாவற்றையும் வாய் பார்த்துவிட்டு நகர்ந்துகொண்டிருக்கிறோம். அரசியல்வாதியாக ஒருவர் வருவதற்கு முன் ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த வாழ்க்கையில் அவர் என்னவாக இருந்தார், எப்படி நடந்து கொண்டார், எவற்றை உருவாக்கினார் என்பது பிற்கால அவரது அரசியல் பயணத்தில் செல்வாக்குச் செலுத்தும். இந்தப் பத்தியை அமைச்சர் ஐங்கரநேசனின் ஆளுமை தொடர்பிலும் அவர் தொடர்பான விமர்சனங்களை நாம் எவ்வாறு உரையாடப்போகிறோம் என்பது தொடர்பிலும் ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்ளவும் தொகுக்கிறேன். ஐங்கரநேசன்…
-
- 3 replies
- 1.2k views
-
-
அபத்தமான அரசியல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-6
-
- 0 replies
- 426 views
-
-
பாலியல் குற்றவாளிக்கு பட்டாடை போர்த்திய பத்திரிகையாளர்கள் தமிழர் வரலாற்றுவெளியில் படைப்பாளிகளின் வகிபாகம் என்பது சங்ககாலம் தொடக்கம் இற்றைகாலம் வரை ஆட்சியிலுள்ளோரின் அல்லது அதன் அடிவருடிகளை சந்தோசப்படுத்தும் அல்லது சமாளிக்கும் போக்குடனே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பாக ஈழத்தமிழரின் படைப்புக்களம் என்பது சற்று வித்தியாசப்பட்டு மக்கள் மயப்பட்ட படைப்புகளிற்கு அதிலும் களத்தில் வெளிவந்த படைப்புகளுக்கு அதிக கவனிப்பை பெற்றவையாக இருந்தது. ஆனால் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அந்த இடைவெளியில் நல்லவற்றை தளுவிக்கொள்வதற்கு பதிலாக வல்லனவற்றை தக்கவைத்துக்கொள்ள இந்த படைப்பாளிகள் வட்டத்தின் ஒரு பிரிவினர் துடிக்கின்றார்கள். அதாவது, …
-
- 2 replies
- 614 views
-
-
கைநழுவுமா வரலாற்று வாய்ப்பு? புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பில் நியாயமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது சாத்தியமானதா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் மேலோங்கத் தொடங்கியுள்ளது. புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்றை, அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழு வெளியிடத் தயாராகவுள்ள நிலையில் தான், இந்தக் கேள்வியும் எழுந்திருக்கிறது. அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், உறுதியான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். அதேவேளை, அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், தமிழ் …
-
- 0 replies
- 410 views
-
-
பௌத்த பீடங்களின் நெஞ்சழுத்தம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-5
-
- 0 replies
- 409 views
-
-
ஐ. எஸ் அச்சுறுத்தல் பின்னணி என்ன? இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எச்சரித்திருப்பதாக ஒரு செய்தி அண்மையில் ஊடகங்களில் உலாவியது. இதுகுறித்து விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் குழுவொன்று கொழும்பு வந்திருப்பதாகவும், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூட அந்தச் செய்திகளில் கூறப்பட்டிருந்தது விடுதலைப் புலிகளின் காலத்தில் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வருவது வழக்கமானது. புலிகள…
-
- 0 replies
- 355 views
-