அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
அரசமைப்பு அரசியல் Ahilan Kadirgamar அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி? அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்…
-
- 0 replies
- 745 views
-
-
தேசிய அரசாங்கமும் தமிழர் தரப்பும் லக்ஸ்மன் உட்கட்சி முரண்பாடுகளோடு கொள்கைப்பிடிப்போடும் கட்சிகளை நடத்திச் செல்வதென்பது மிகவும் சிக்கலான விடயமே. இதில் உட்கட்சி ஜனநாயகம் பெரும் குழப்பமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய நாடும் அகப்பட்டே இருக்கிறது. இப்படியிருக்கையில் நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமை காரணமாக ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைத்து அதனை ஸ்திரப்படுத்திவிடவேண்டும் என்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் அது இதுவரை கைகூடவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால் அம் முயற்சியைக் கைவிட்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகள் ஆரம்பமாகவு…
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா? ச.பா. நிர்மானுசன் படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நிலவிய மென்போக்கு அ…
-
- 0 replies
- 677 views
-
-
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன…
-
- 0 replies
- 279 views
-
-
புரட்சியால் பதவிக்கு வந்து அதே புரட்சியை நசுக்கிய ரணிலும் சிசியும் 2011 ஆம் ஆண்டு எகிப்தில் அரபு வசந்தம் வெடித்த போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு சதிகாரர்கள் இலங்கையில் அப்படி ஒரு கிளர்ச்சியை உருவாக்கினால் அது வெற்றியடையாது என்று கூறினார். ஆனால் அரபு வசந்த அலை 2022 இல் இலங்கைக்கு வந்தது. இன்று மகிந்த மட்டுமல்ல, ராஜபக்ச குடும்பமும் அந்த அலையில் சிக்கி அழிந்துவிட்டது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்கிவிட்டு ராஜபக்சக்கள் வெளியேறினர். அரபு வசந்தம் இலங்கையில் அரகலய என்று அழைக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் விளைவாக ஜனாதிபதியான ரணில் எகிப்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்…
-
- 0 replies
- 374 views
-
-
மேலும் ஒரு கோவிலுக்கு ஆபத்து? நிலாந்தன். April 16, 2023 கடந்த திங்கட்கிழமை பங்குனித் திங்களன்று நெடுங்கேணியில் உள்ள நொச்சிக்குளம் அம்மன் கோவிலை வழிபடச் சென்ற பக்தர்களைத் தொல்லியல் திணைக்களம் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளியாகின. பக்தர்களைப் பொறுத்தவரை அது கோவில். தொல்லியல் திணைக்களமோ அதை ஒரு தொல்லியல் அமைவிடமாக கருதுகிறது. நாட்டின் தொல்லியல் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் இறுக்கமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். ஒரு மக்கள் கூட்டத்தால் தொடர்ச்சியாக வழிபடப்படும் ஒரிடத்தை தொல்லியல் திணைக்களம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்றால் முதலில் அந்த வழிபாட்டிடத்தை நிர்வகிக்கும் தனிநபர் அல்லது நிர்வாக …
-
- 0 replies
- 761 views
-
-
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்கள…
-
- 0 replies
- 339 views
-
-
ஏன் தோற்றார்? ஏன் வென்றார்? அரசியலின் மர்ம முடிச்சு!
-
- 0 replies
- 486 views
-
-
கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன் சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன. சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பத…
-
- 0 replies
- 318 views
-
-
ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும் வீ.தனபாலசிங்கம் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ஒரு ' மருட்சியை ' ஏற்…
-
- 0 replies
- 414 views
-
-
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் மொஹமட் பாதுஷா / 2020 ஜனவரி 03 , மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும். ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழ…
-
- 0 replies
- 521 views
-
-
ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது. கடந்த வருடம், இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அந்த இணை அனுசரணையை இம்முறை வாபஸ் பெற்றுக் கொண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 2012, 2013, 2014 ஆகிய …
-
- 0 replies
- 440 views
-
-
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி Courtesy: தீபச்செல்வன் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது. இலங்கையின் வானொலிப் பாரம்பரியம் தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளி…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
-
வடகிழக்கில் அரசின் 100 விகாரைகள்! தமிழர் கலாசார மரபுரிமை அழிப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் நல்லிணக்கம் என்ற சொல் இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் அறிமுகமானது. ஈழத் தமிழ் மக்கள்மீது மிகக் கொடிய இனப்படுகொலை போரை நடாத்திவிட்டு அந்தப் போரரையே நல்லிணக்கத்திற்காக நடத்தியதாக கூறியவர் மகிந்த ராஜபக்ச. அத்துடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களையும் சிங்களக் குடியேற்றங்களையும் தமிழர் கலாசார உரிமை மீறல்களையும் தீவிரவாக முன்னெடுத்தபோது அதற்கு நல்லிணக்க நடவடிக்கை என்றே பெயர் சூட்டினார் மகிந்த ராஜபக்ச. உலகில் மனிதாபிமானத்திற்காக, இனப்படுகொலை போர்…
-
- 0 replies
- 709 views
-
-
தடுமாற்றமான அணுகுமுறைகளினால் வாய்ப்புக்களைத் தவறவிடும் அரசாங்கம் இலங்கையில் இதுகாலவரையில் பதவியில் இருந்த அரசாங்கங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தைப் போன்று வேறு எந்தவொரு அரசாங்கமுமே படுமோசமான ஊழல் மோசடிகள், எதேச்சாதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி சீர் குலைவு, குடும்ப அரசியல் ஆதிக்கம் மற்றும் உரிமை மீறல்களுடன் கூடுதலான அளவுக்கு அடையாளப்படுத்தப்பட்டதில்லை. அந்தக் கெடுதிகள் எல்லாவற்றையும் இல்லாதொழித்து ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை அறிமுகம் செய்து நல்லாட்சியை ஏற்படுத்தப் போவதாக நாட்டு மக்களுக்கு வா…
-
- 0 replies
- 470 views
-
-
ஜெய்ஷங்கரின் உரை மிரட்டலா? -எம்.எஸ்.எம். ஐயூப் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயம், தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் எதிர்பார்ப்பை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வௌியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், கடந்த ஆறாம் திகதி கொழும்பில் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாக, மீண்டும் வலியுறுத்தியமையே அதற்குக் காரணமாகும். இந்தியத் தலைவர்களின் இந்த வலியுறுத்தல், ஏதும் புதிய விடயமல்ல; இலங்கைத் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தாலோ, இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தாலோ, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும் …
-
- 0 replies
- 687 views
-
-
ஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை இலங்கைத் தீவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே The debrief என்ற யூடியூப் சனலில் ரோயல் ரெய்மெண்ட்டிற்கு மிக நீண்ட நேர்காணலை வழங்கியிருந்தார்.நேர்காணலில் அவர் பல விடயங்களைப் பற்றியும் கதைக்கிறார். அதில் ஓரிடத்தில் அவர் கூறுகிறார்….”இலங்கை ஒரு சிறிய நாடு அதன் பொருளாதாரமும் சிறியது ஆனால் அதன் அமைவிடம் காரணமாக அதற்குள்ள கேந்திர முக்கியத்துவத்தை கருதிக்கூறின் அது ஒரு பெரிய நாடு”என்று. அதுதான் உண்மை. இந்துமகா சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் அமைவிடம்தான் அதன் பலம். அதேசமயம் அதுதான் அதன் துயரமும். இது சிங்கள மக்களுக்கும் பொருந்தும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும். கடந்த பல தசாப்தங்களாக தமிழ் …
-
- 0 replies
- 549 views
-
-
சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன் October 18, 2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மட்டுமன்றி, பிரதான கட்சியாக இருக்கின்ற தமிழரசுக் கட்சிக்குள்ளும் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரன் கொழும்பில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, “கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு தான் தகுதியானவர்” என சுமந்…
-
- 0 replies
- 439 views
-
-
யுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம் மனுக்குலம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே அந்தந்த கால கட்டத்துக்கு ஏற்றாற் போன்று மனித கலாசாரமும் தொற்றிக்கொண்டு மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகொண்டது. ‘மனித நாகரிகம்’ என்றதான வார்த்தை ஒன்று அறிமுகமாவதற்கு முன்பாக மனிதனால் அவ்வப்போது அறியப்பட்ட கலாசாரங்களே அன்று அவரவரது கல்வியாகவும் இருந்து வந்தது எனலாம். மனித நாகரிகம் வெளிப்பட்டதன் பின்னால் கலாசாரம், கல்வித்துறை, தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என்ற அனைத்து வகையான அம்சங்களும் சருகாய் ஆகிப்போயின என்பதுதான் உண்மை. மொழி உரிமை என்ற பெறுமதி மிக்கதான சொற்பதமானது கலாசாரம் என்ற பதத்துக…
-
- 0 replies
- 549 views
-
-
பெளத்த மேலாதிக்கத்தில் தீர்வு சாத்தியமாகுமா? இன்றைய சூழலில் தமிழ் மக்கள் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்துக்கும் அரசியல் மயப்பட்ட தீர்வொன்று காணப்பட வேண்டுமென்ற உண்மைநிலை அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டிருக்கின்றபோதும் அவற்றுக்கான சவால் எங்கிருந்து பிறந்து வருகிறதென்றால் மத பீடங்களிலிருந்து பிறந்து வருவதே ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாக காணப்படுகிறது. பௌத்த மதமென்பது இலங்கையில் ஒரு மதமாக மாத்திரம் பேணப்படுவதற்கு அப்பால் அரசியலை வழிநடத்தும் சூத்திரமாகவும் சிங்கள மொழியை காக்கும் காப்பாகவும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆதாரந்தான் இவ்வாரம் இடம்பெற்ற முக்கிய…
-
- 0 replies
- 577 views
-
-
வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்ஷர்கள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது. ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது. ‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - …
-
- 0 replies
- 584 views
-
-
ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஈராக்கின் வடபகுதியில் அமைந்திருக்கும் குர்திஸ்தான் மாகாணத்தில் தொன்றுதொட்டு ஒரு தேசிய இனமாக வாழ்ந்த குர்தீஸ் இனமக்கள் ஓட்டமான் அரசாட்சிக்குப் பின்னர் தமக்குத் தனிநாடு வேண்டும் என்கின்ற அபிலாஷைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய தனிநாட்டு முஸ்தீபுகள் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு முன்னரும், சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்திலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. சதாமின் காலத்தில் குர்தீஸ் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு சதாமின் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள…
-
- 0 replies
- 650 views
-
-
தமிழர்கள் பேசுவது இனவாதம் என்றால் சிங்களவர்கள் பேசுவது இனவெறியாகும் யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் கூறிய விடயங்களே இவ்வாறானதொரு கட்டுரையை எழுதத் தூண்டியது. அவர் தன்னை ஒரு ஓய்வு பெற்ற இராஜதந்திரியாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்த யாழ்ப்பாணத்தான் இப்படித்தான். சும்மா இனவாதம் பேசிக் கொண்டிருப்பான். தமிழ் அரசியல் எண்றாலே இனவாதம்தானே! எங்கட ஆக்களிட்ட வேறு என்ன இருக்குது? இப்படியான நபர்களை எதிர்கொள்ளும் போது, அவர்களுக்கான ஆகச் சிறந்த பதில் மௌனம் மட்டுமே! ஆனால் தமிழர்கள் மத்தியில் இப்படியான ஒரு தரப்பும் உண்டு. தமிழ்ச் சூழலில் இடதுசாரிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோரில் சிலரும் இப்படிப் பேசுவதுண்டு. …
-
- 0 replies
- 1.4k views
-
-
பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி? - யதீந்திரா இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்…
-
- 0 replies
- 623 views
-