Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …

  2. சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா? உத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது. …

  3. கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்…

  4. பந்தாடப்படும் கேப்பாப்புலவு முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். …

  5.  பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்? - கருணாகரன் “கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள், இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால், அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு. …

  6. கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு - கே.சஞ்சயன் மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 2015 ஆம் ஆ…

  7. ஜெனீவா கால அவகாசம் ஜெனீவாவில் அடுத்­த­வாரம் கூட­வி­ருக் கும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொ­டரில், ‘கால­அ­வ­காசம்’ கோரு­வ­தற்­கான முயற்­சி­களில் அர­ சாங்கம் இறங்­கி­யி­ருக்­கின்­றது. கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கே, அர­சாங்கம் மேலும் கால­அ­வ­காசம் கோர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­ கள சம­ர­வீர கூறி­யி­ருந்தார். எனினும், எவ்­வ­ளவு கால­அ­வ­கா­சத்தை அர­சாங்கம் கோர­வுள்­ளது என்ற தக­வலை அவர் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை. ஆனால், 18 மாத கால­அ­வ­காசம் கோரு­வ­தற்கு வாய்ப்­புகள் இருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­…

  8. அரசியலமைப்பு பதற்றங்களும் தடுமாற்றமான செய்திகளும் – ராஜன் பிலிப்ஸ் – சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புகள் ஆபத்து நிறைந்­தவை அத்­துடன் எவ்­வாறு அமை­யக்­கூ­டி­யவை என்று முன்­ன­றிந்து கூறவும் முடி­யா­தவை. ஏனென்றால் எந்­த­வொரு வாக்­கா­ளரும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரத்­துக்­காக அல்­லாமல் தன்னால் எதிர்­நோக்­கப்­ப­டு­கின்ற அல்­லது தனது சிந்­த­னையில் இருக்­கின்ற வேறு எந்­த­வொரு விவ­கா­ரத்­துக்­கா­கவும் வாக்­க­ளிக்­கக்­கூடும். குறிப்­பிட்ட ஒரு பிரச்­சி­னையை முன்­னி­றுத்தி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் போது அந்த வாக்­கெ­டுப்பைக் கோரு­கின்ற அர­சாங்­கத்­துக்கு அல்­லது தலை­வ­ருக்கு எதி­ராக மக்கள் வாக்­க­ளிக்கும் போக்கை அடிக்­கடி அ…

  9. மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம் ரொபட் அன்டனி யுத்­தக்­குற்ற நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து இப்­போ­தைய கால­கட்­டத்தில் பேசு­வ­தற்கு ஆரம்­பித்தால் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சாத்­தி­ய­மில்­லாமல் போய்­விடும். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இருந்­ததை விடவும் சவால்கள் தற்­போது அதிகம் "நாட்டில் ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட் டால் ஆர்ப்­பாட்­டங்கள் நடப்­பது இயல்­பா­கி­விடும். அதுதான் தற்­போது நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. முன்னாள் பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் வரு­டத்தில் 365 நாட்­களில் 362 நாட்கள் ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­தன. அந்­த­வ­கையில் கடந்த 9 வரு­டங்­க­ளாக ஆர்ப்­பாட்டம் செய…

  10. அரசாங்கத்தின் தந்திரோபாயம் செல்­வ­ரட்னம் சிறி­தரன் பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் கோருகின்ற கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­திலும், போர்க்­காலச் செயற்­பா­டு­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­திலும் நல்­லாட்சி அர­சாங்கம் உறு­தி­யா­கவு…

  11. போராட்டத்தின் தாற்பரியத்தை புரிந்துகொள்ளுங்கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் கேப்­பாப்­பு­லவு மக்கள் அப­க­ரிக்கப்­பட்ட தமது காணி­களை மீளப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யுறுத்தி போராட்­டங்­களை நடத்திவரு­கின்­ற­ போ­திலும் அர­சாங்கம் அது தொடர்பில் அக்­கறை கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. குறிப்­பாக இந்த மக்கள் தமது நிலங்­களை மீட்­டுத்­த­ரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற ­போதும் அது தொடர்பில் அரசாங்கம் பாரிய கவ­னத்தை செலுத்­து­வதைக் காண­மு­டி­ய­வில்லை. மக்கள் தொடர்ச்­சி­யாக இரவு – பகல் பாராது வெயி­லிலும் பனி­யிலும் தவித்­துக்­கொண்டு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போ­திலும் பிரச்­சி­னையைத் தீர்க்­க­வேண்­டிய அர­சாங்கம் அதனைக் கவ­ன…

  12.  இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பி…

  13. இலங்கையின் காணிச்சட்டங்கள் 01.நிலம் என்றால் என்ன ? நிலம் அல்லது காணி என்பதை வெறும் பொருளாதார பெறுமதியை மட்டுமே கொண்ட ஓர் இடப்பரப்பு என மட்டுப்படுத்தி விட முடியாது. அது எம்நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்த ஓர் சமூக கலாச்சார காரணியாவதோடு பொருளியல் ரீதியில் அதிகரிப்பிற் சாத்தியமற்ற உற்பத்தி வளம் என்பதால் தொடர்ச்சியான அதிகரித்த கேள்விக்கும் பிரச்சினைகட்கும் உள்ளாகும் விடயப்பரப்பாகும். 02.காணி தொடர்பில் இப்போது இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் என்ன ? நடைமுறையில் பிரதானமாக ஆவண பதிவுக்கட்டளை சட்டம் ( Registration of Documents Ordinance No 23 of 1927) , மற்றும் உரித்துப்பதிவு சட்டம் ( Registration of T…

    • 0 replies
    • 4.1k views
  14.  ஈராக்: மக்கள் எழுச்சிக்கான ஒத்திகை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சிதைக்கப்பட்ட தேசங்களின் கதை கொடுமையானது. அவ்வாறு சிதைக்கப்பட்ட தேசங்களின் மீளுகை, இலகுவில் நடந்துவிடக் கூடியதல்ல. ஒருபுறம் ஒரு தேசத்தைச் சிதைத்ததன் பின்னணியில் செயற்பட்ட சக்திகள், சிதைத்ததற்கான காரணங்களையும் தாண்டிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. மறுபக்கமாக, சிதைக்கப்பட்டதன் விளைவால் புதிய சக்திகள் அரங்காடிகளாகவும் ஆதிக்க சக்திகளாகவும் தோற்றம் பெறுகின்றன. இவற்றுக்கிடையிலான அதிகாரப் போட்டியும் அதிகாரத்துக்கான அவாவும் அத்தேசத்தின் எதிர்காலத்தை எதுவித ஜயத்துக்கும் இடமின்றிக் கேள்விக்குறியாக்கின்றன. …

  15. தடுமாற்றத்துடன் ஆரம்பித்துள்ள ட்ரம்ப் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரசியல் அனுபவமற்றவரான டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது, அவர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஏறத்தாழ மூன்று வாரங்களின் பின்னர் அந்த எதிர்பார்ப்பு, பெருமளவுக்கு இல்லாமல் செய்யப்பட்டு, ஒருவகையான அச்ச நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஐ.அமெரிக்காவின் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு எதிராகக் காணப்பட்டிருந்த கோபம்; இஸ்லாமிய ஆயுததாரிகள் விடயத்தில், அப்போது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவும் அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு; நடப்பு அரசி…

  16. கூட்டமைப்புகள் சந்திக்ககூடிய அரசியல் சார்ந்த சவால்கள்

  17. இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை - காரை துர்க்கா ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர். மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், பெற்றோர்கள் மூத்த பிள்ளையாகிய சிங்களவர் மீது அன்பையும் அரவணைப்பையும் செலுத்திக் கொண்டு ஏனைய பிள்ளைகளாகிய தமிழர் முஸ்லிம் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினர். அதுவே, நாளடைவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையில் - சகோதரங்களுக்கிடையில் சண்டைகளையும் சந்தேகங்களையும் குரோத மனப்பான்மைகளையும் வளர்த்தன. இதுவே, இ…

  18. போராடுவது என்றால் என்ன ? கிரிஷாந்த் (இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. அடுத்தடுத்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஜெனரேட் செய்யப்பட்டோ அல்லது தன்னெழுச்சியாகவோ உருவாகி நீண்ட நாட்களிற்குப் பின்னர் சமூக உரையாடல் ஒன்றை வயது வேறுபாடின்றி மெய் வாழ்க்கையிலும் சைபர் வெளியிலும் உருவாக்கி விட்டிருக்கிறது. எனது கடந்த ஏழு வருட அவதானிப்பில் இவ்வளவு வைரலாக இந்த விடயங்கள் உரையாடப்பட்டதில்லை, புதிய தலைமுறையின் நேர்மையையும் சமூக அக்கறையையும் சீண்டியதில்லை. இது ஒரு தொடக்கம். இதனை நாம் விளங்கிக் கொள்வது அல்லது ஏற்று…

  19. பிலவுக்குடியிருப்பு:கொதிக்கும் நிலம் - கருணாகரன் சொந்த வீட்டுக்குத் திரும்பும் வரைட, வீதியில்தான் எங்கள் வாழ்க்கை” என்று பத்து நாட்களாக வீதியிலேயே படுத்து எழும்பிப்போராடிக் கொண்டிருக்கிறார்கள், முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள். “வீடு திரும்பும் வரையில் வீதியை விட்டுச் செல்ல மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என கிராமத்திலுள்ள அனைவரும் வீதிக்கு வந்து விட்டனர். போராட்டக்களமாகியிருக்கிறது, வீதி. “மைத்திரி - ரணில் நல்லாட்சியில், இப்படி ஒரு வார்த்தையா? இப்படியொரு போராட்டமா?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், கண் முன்னால் மெய்யாகவே இப்படித்தான் அந்த மக்…

  20. ஜெனிவா: நீறு பூத்த நெருப்பு - கே. சஞ்சயன் இம்மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது. பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், கடந்த 2015 செப்டெம்பர் - ஒக்ரோபர் மாதங்களில் நடந்தபோது, இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ள கூட்டம் இது. அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இந்த மீளாய்வு நடக்கவுள்ளது. 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே இந்த மீளாய்வின…

  21. மீறப்படும் வாக்குறுதி காரணம் யார்? ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் இன்னும் இரண்டு வாரங்­களில் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள நிலையில், போர்க்­குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணைக்கு மேலும் கால­அ­வ­காசம் தேவைப்­ப­டு­வ­தாக இலங்கை அர­சாங்கம் கோரிக்கை விடுக்­க­வுள்­ளது.கடந்­த­வாரம் கொழும்பில் வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் சங்­கத்தைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுடன் நடத்­திய சந்­திப்பின் போது, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதனைத் தெரி­வித்­தி­ருக்­கிறார். கடந்த 2015 செப்­டெம்பர், ஒக்­டோபர் மாதங்­களில் நடந்த ஐ.நா. மனித உரி­மை கள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில், இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் கீ…

  22. அதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் போராட்டத்தில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறிய…

  23. இலங்கை முன்னிருக்கும் வரலாற்று வாய்ப்பு! ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்து, இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனாவையும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கேயும் இலங்கை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது தேசியக் கூட்டணி அரசு. பத்தாண்டு காலமாக, கடும் கண்காணிப்பு, அச்சுறுத்தல்கள், ஊடகத்தின் மீதான அடக்குமுறை, ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துதல் என்று மகிந்த ராஜபக்ச நடத்திய சர்வாதிகார ஆட்சி, 2015 ஜனவரி 9-ல் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில், வளர்ச்சித் திட்டங்களை விடவும் ஊழல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் போன்றவைதான் பிரதானமாக இருந்தன. போர் வெற்றி மூலம், இலங்கையின் பெரு…

  24. உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மோதலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கவனமும் அமெரிக்க - ரஷ்ய மோதலினை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.