அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
யாருடைய குற்றம்? வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் ஒவ்வொன்றையும், பிரச்சினைக்குரிய விவகாரமாக மாற்றுவது தென்னிலங்கை அரசியலில் வழக்கமான ஒரு விடயமாகவே மாறியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் மாத்திரமன்றி, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் கூட வடக்கு மாகாணசபையை குட்டி முந்திக் கொள்வதிலும், குறை சொல் வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கமான உறவும், புரிந்துணர்வும் இருந்தாலும், கூட்டமைப்பின் ஆளுகை யின் கீழ் உள்ள வடக்கு மாகாணசபைக் கும் அரசாங்கத்துக்கும் இ…
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான். பொதுவாக அரசியல் தலைவர்களை அவர்களது மரணத்திற்கு பின்னர் புகழ்ந்து பேசுவது ஒரு நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரை அவரது மரணத்திற்குப் பின்னர் இகழ்ந்து பேசுவது தவறுதான். ஆனால், ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் அரசியலை கணிப்பிடும் போது அதில் நிதானமும் தெளிவும் அவசியம். சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தொடர்…
-
- 0 replies
- 434 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய நிலை ஜனநாயக பாதுகாப்பு அரண்கள் கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்த ஜனநாயக சீர்திருத்தத் சக்திகளுக்கும் அவற்றின் ஆதரவு வாக்காளர்களுக்கும் இருக்கக் கூடிய தெரிவுகள் எவை? இந்தக் கேள்விக்கான முதல் பதில் மிகவும் எளிதானது. இப்போது அதன் இருண்ட பக்கத்தை மாத்திரமே காட்டக்கூடியதாக இருக்கின்ற அரசாங்கமொன்று குறித்து நேர்மறையான எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதில் அர்த்தமேதும் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கும் காரியங்களுக்காகவும் செய்யாதிருக்கும் காரியங்களுக்காகவும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடை…
-
- 0 replies
- 799 views
-
-
எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? இலங்கை தேசியத் தலைமைகள் ஒரு நிரந்தரமான முடிவைக் காணவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் அவர்கள் முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது தேசியப் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் பொறிமுறை எவ்வாறு அமையப் போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டிய கால நெருக்கடியொன்று உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றமுறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நாம் ஒன்று நினைக்க அரசாங்கம் ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறதே என்ற சொற் போரிலேயே இன்று அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் சாசனம் தமிழ் மக்களு…
-
- 0 replies
- 316 views
-
-
அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்னைய ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வன்செயல்களில் ஈடுபட்டிருந்த பௌத்தவாத கடும்போக்காளர்களின் மதவாதச் செயற்பாடுகளை இந்த அரசாங்கமும் ஊக்குவிக்கின்றதோ என்று சந்தேகப்படும் அளவில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அமைப்பைப் பின்பற்றி வேறு சுமணரத்ன தேரர் போன்ற சில பௌத்த மதகுருமார்களும் மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது முஸ்லிம் மக்களை அதிருப்தியடையவும், ஆத்திரமடையவும் செய்திருக்கின்றது. இதனால் முஸ்லிம் மக்களும் இந்த அரசாங்கத்தைச் சந்தேகத்தோடு நோக்…
-
- 0 replies
- 308 views
-
-
மஹிந்தவின் அரசியல் மையமாக மாறும் ஹம்பாந்தோட்டை - கே.சஞ்சயன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எப்படி மாறியிருந்ததோ, இப்போதும் அதுபோன்றதொரு நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இப்போதைய அரசாங்கத்தை ஆட்டம் காண வைப்பதற்கான ஒரு கருவியாக ஹம்பாந்தோட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது கூட்டு எதிரணி. ஹம்பாந்தோட்டை விவகாரம்தான் எதிர்கால அரசியலில் கொதிக்கும் விவகாரமாக மாற்றப்படும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமது பூர்வீக இடமான ஹம்பாந்தோட்டையைப் பொருளாதார, அரசியல் கேந்திரம்மிக்க இடமாக மாற்றியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். ஏற்கெனவே, ஜனாதிப…
-
- 0 replies
- 238 views
-
-
-
- 0 replies
- 279 views
-
-
தஜிகிஸ்தான்: சமாதானத்திலிருந்து சர்வாதிகாரத்துக்கு - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக் கூறுகளைத் தன்னுள் மறைத்துள்ளது. போரின் போது போர்ச் செய்திகளே கவனம் பெறுவதால், சர்வாதிகாரச் செயற்பாடுகள் கவனம் பெறுவதில்லை. அமைதி என்பது யாருக்கானது என்ற கேள்வி எழும் போது, சர்வாதிகாரம் பற்றிய கேள்வியும் கூட எழும். சமாதானம் போரினும் கொடியதாகலாம் என வரலாறு எமக்குப் பன்முறை உணர்த்தி…
-
- 0 replies
- 272 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத முறையில் ஜனாதிபதி சிறிசேன செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு படாதபாடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியுமென்ற நினைப்பில் அவர் கானல்நீரின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தனிப்பட்ட அகங்காரம், நிர்வாகத் திறமையின்மை, ஆட்சி முறையின் முக்கியமான பிரச்சினைகளை அற்பமாகக் கருதுகின்ற சிறுபிள…
-
- 0 replies
- 467 views
-
-
நல்லிணக்கம் கதைக்கும் நாக்குகள் - காரை துர்க்கா “நல்லிணக்கம் தெற்கில் இருந்து மாத்திரம் ஏற்படாது, வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்துக்கான பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதனைத் தடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டு வருகின்றார். மேலும், தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் முதலமைச்சர் கூடிய கவனம் எடுக்க வேண்டும், கருத்தின் தாக்கம் பற்றி அறிந்து தெரிவிக்க வேண்டும்” எனவும் அண்மையில் கொழும்பு, ராஐகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் மத்தியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். நல்லிணக்கம் என்ற சொல், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அ…
-
- 0 replies
- 380 views
-
-
போதுமானதா பிரதமரின் மன்னிப்புக் கோரல்? முதலாவதும் கடைசியுமான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான இறுதிப் பிரசார வேலைகள் நடைபெறும் நிலையில், அவ்வருடம் மே மாதம் 31 ஆம் திகதி, ஆசியாவிலேயே மிகச் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம் தீ வைத்து அழிக்கப்பட்டது. 35 வருடங்களுக்குப் பின்னர் அப்போது நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனா…
-
- 0 replies
- 284 views
-
-
கூட்டமைப்பின் திரிசங்கு நிலை - புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘திரிசங்கு’ நிலையைச் சந்தித்து நிற்கின்ற தருணம் இது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குப் புதிய அரசியலமைப்பினூடாகச் சொல்லிக் கொள்ளும் படியான தீர்வினைப் பெற்றுவிடலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றார்கள். அவர்கள் கூறி வந்த விடயங்கள் தொடர்பில், தமிழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டம் தற்போது வந்திருக்கின்றது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கம் மூலமான அரசிய…
-
- 0 replies
- 268 views
-
-
சம்பந்தருக்கு ஜெயலலிதா சொன்ன செய்தி என்ன? - தெய்வீகன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாத வண்ணம் ஜெயலலிதாவின் மரணம், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், விளக்கேற்றி வணக்கம் செலுத்தியது முதல், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்தப்படும் புலம்பெயர்ந்த நாட்டு நிகழ்வுகள் வரை, பல செய்திகள் ஊடகங்…
-
- 0 replies
- 456 views
-
-
முத்தரப்புக்கும் நிர்ப்பந்தம் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கை அரசியல் களத்தில் மூன்று சக்திகள் மும்முனையில் மோதல்களில் ஈடுபடுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த மோதல்கள் மென்போக்கிலா அல்லது கடும் போக்கிலா அமைந்திருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியவில்லை. ஆயினும் மூன்று சக்திகளும் தனித்துவம் மிக்க நிலையான அரசியல் இருப்பு, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம், திணிக்கப்பட்ட பொறுப்புணர்வு ஆகிய மூன்று தளங்களில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகி வருகின்றன. இந்தச் சந்திப்பில் ஏதாவது ஒரு சக்திதான் வெற்றிபெறப் போகின்றதா, இரண்டு சக்திகள் இணைந்து வெற்றிபெறப் போகின்றனவா அல்லது மூன்று சக்திகளுமே இணைந்து ஐக்கி…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கையின் சாபக்கேடு இனவாதமா? இலங்கையில் இனவாதம் என்பது தொடர்கதையாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னராயினும் சரி அல்லது சுதந்திரத்திற்கு பின்னராயினும் சரி நாட்டில் இனவாதம் என்பது தாராளமாகவே தலைவிரித்தாடுகின்றது. இனவாத முன்னெடுப்புகளால் இலங்கை மாதாவின் தேகத்தில் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மாறவில்லை. எனினும் இனவாதமும் இன்னும் ஓயவில்லை. இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கு வாழும் அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்களாவர். எனவே இலங்கையர் என்ற பொது வரையறைக்குள் இவர்கள் நோக்கப்படுதல் வேண்டும். இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களும் வலுப்ப…
-
- 0 replies
- 385 views
-
-
தமிழக அரசியல் நமக்கு தேவையற்றது என ஒதுங்கமுடியாது. ஈழத்தமிழரின் விதியை தீர்மானிப்பதாக அதுவே இருக்கிறது. இருந்திருக்கிறது. அங்குள்ள தலைவர்கள் ஈழத்தமிழ்த்தலைவர்கள் தம்மைவிட வளர்ந்து விடக்கூடாது தமிழர்களுக்கு அவர்கள் தலைமை தாங்கக்கூடாது என்பதன் பயன் தான் புலிகள் அழிப்புக்கும் மற்றும் முள்ளிவாய்க்காலுக்கும் அவர்கள் எல்லோரது மறைமுக ஆதரவு என்பதை உலகத்தமிழினம் (தமிழகம் உட்பட) உணர்ந்தே இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவும் அதற்கு முன்னரும் இறப்புக்கு பின்னருமான நடைமுறைகள் மிகமிக ஆபத்தானவை. ஒரு மாநிலத்தின் முதல்வரை அந்த நாட்டின் பிரதமரோ நாட்டின் அமைச்சர்களோ அதிமுக்கிய மத்திய அதிகாரிகளோ கூட பார்வையிடச்சென்று பார்வையிடாது திரும்பி போயிருக்கிறார்கள் என்றால் அங்கே…
-
- 3 replies
- 502 views
-
-
ஜெயலலிதா: நிரப்ப முடியாத வெற்றிடம் - கே.சஞ்சயன் இந்தியாவில் அசைக்க முடியாத இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்த, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள ஒரு வெற்றிடத்தைப் போலவே, இலங்கைத் தமிழர் அரசியலிலும் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படுகிறது. இந்தளவுக்கும், ஜெயலலிதா ஒன்றும் தீவிரத் தமிழ்த் தேசியப் பற்றாளரோ, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தீவிரமான ஆதரவை அளித்து வந்தவரோ இல்லை. 1980 களின் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தீவிரம் பெற்ற போது, தமிழ்நாடு தான், அதன் பின்தளமாக விளங்கியது. போராட்டத்துக்கான வளங்களும் அங்கிருந்தே கிடைத்தன. பயிற்சிகளும் அங்கேயே அளிக்கப்பட்டன. அகதிகளாக இடம்பெயர்ந்த ம…
-
- 0 replies
- 463 views
-
-
பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன, இல்லையா? ஆனால், 1980களில், அதே நிலைமையில் காணப்பட்ட ஒரு பெண், ஆட்சியைப் பிடித்தார் என்றால், அவரது திறமைகளையும் துணிச்சலையும் பாராட்டத் தோன்றுகின்றது தானே? ஜெயலலிதா ஜெயராம் என்ற, …
-
- 0 replies
- 324 views
-
-
களச்சவால்கள் - மொஹமட் பாதுஷா ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள் இன்னும் ‘தேநீர்க்கடை அரசியலை’த்தான் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேநீர் குடித்து முடிக்கும் வரை பேசுகின்றார்கள், பின்னர் மறந்து விடுகின்றார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதை அலசுவது, அதைப் பற்றி விவாதிப்பது; பிறகு இன்னுமொரு பிரச்சினை வந்தால் பழையதை மறந்து விட்டுப் புதிய பிரச்சினையை தலையில் …
-
- 0 replies
- 356 views
-
-
ஏமாற்றத்தை எதிர்பார்த்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில விடயங்கள் நடந்தேறக் கூடியவையல்ல என்று தெரியும்; நடந்தால் நல்லது என்றும் தெரியும். ஆனால், நடப்பதையும், நடவாததையும் தீர்மானிக்கும் வல்லமை பல சமயங்களில் நம்மிடமில்லை. இருந்தாலும் ஏமாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலை என்றொன்று உண்டு. அது கையறுநிலையின் வெளிப்பாடா அல்லது மூட நம்பிக்கையா என்று சொல்லவியலாது. உலக அரசியல் அரங்கை நம்பிக்கையீனம் ஆட்கொண்டுள்ளது. எதையும் நம்பியிருக்க இயலாதவாறு அலுவல்கள் அரங்கேறுகின்றன. இதனால் ஏமாற்றத்தை எதிர்பார்ப்பதும் களிப்பூட்டுகிறது. ஞாயிற்றுக் கிழமை இத்தாலியில் நடந்த மக்கள் வாக்கெடுப்பின் மு…
-
- 0 replies
- 322 views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
முஸ்லிம்களுக்கு ஆபத்தான சட்டம் இலங்கையில் 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. யாரையும் கேள்வியின்றி கைது செய்யவும், தடுத்து வைக்கவும் இச்சட்டத்தில் ஏற்பாடுகளுண்டு. இதனால், இச்சட்டத்தை பயன்படுத்தி பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்றும் இச்சட்டத்தின் மூலமாக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு அவசரகால சட்டமும் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமும், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் தனிநபர்களை கைது செய்ய…
-
- 0 replies
- 428 views
-
-
படை குவிப்புக்கு புதிய நியாயம் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடந்தவாரம் நடந்த குழுநிலை விவாதத்தின் போது, பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத சூழலிலும், முப்படைகளையும் பலப்படுத்தும் திட்டத்தில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவந்திருக்கி றது. அடுத்த ஆண்டு பாதுகாப்புக்கு, 284 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய போர் விமானங்களின் கொள்வனவு, ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு, இராணுவத்தை மறுசீரமைக்கும் திட…
-
- 0 replies
- 511 views
-
-
நவம்பர் மாதம் இலங்கையில் மூவருக்கு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை நாம் கவனித்திருக்க மாட்டோம். கெப்பட்டிபொல, சங்கர், விஜேவீர ஆகியோரின் நினைவு நாட்கள் நவம்பர் மாதம் வந்து சேர்ந்தது தற்செயல் தான். இவர்கள் மூவருக்கும் உள்ள பொதுமை விடுதலைப் போரில் கொல்லப்பட்டவர்கள் என்பது தான். கெப்பட்டிபொல சிங்கள தேசியத்துக்காவும், சங்கர் தமிழ் தேசியத்துக்காகவும், விஜேவீர “சர்வதேசியத்துக்காகவும் கொல்லப்பட்டவர்களாக மேலோட்டமாக கூறலாம். நவம்பர் மாதம் 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாள் வருடாவருடம் நினைவு கூறப்படுகிறது. சென்ற 2015ஆம் ஆண்டு இந்த தினத்தில் ஜனாதிபதி…
-
- 4 replies
- 6.2k views
-
-
இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ? நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர். எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்ம…
-
- 0 replies
- 367 views
-