அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9218 topics in this forum
-
புது வெளிச்சம்// பாராளுமன்றத்தில் சுமத்திரனின் உரை // கருணாவின் கைது
-
- 0 replies
- 459 views
-
-
மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி - கே.சஞ்சயன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். இந்தமுறை எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத்தான் பார்த்து விடுவோம் என்று கேலியாகப் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களும் மாவீரர்களை நினைவுகூர முடியாது; அதற்கு இடமளிக்கப்படாது என்று எச்சரித்த அமைச்சர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுள்ளனர். இராணுவ அச்சுறுத்தல்களால் சில ஆண்டுகளாக அடங்கிக்…
-
- 0 replies
- 473 views
-
-
காவுகொள்ளப்பட்ட காணிகள் - மொஹமட் பாதுஷா நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை மையமாக வைத்தே எழுதப்பட்டிருக்கின்றது எனலாம். உண்மையில், காலனித்துவம் என்பதும் ஒரு வகையான நில உடைமைத்துவத்தின் நாகரிகமான பெயர் என்றே குறிப்பிடலாம். இஸ் ரேல் என்றொரு நாடு உருவாகுவதற்குத் தமது பெருநிலப்பரப்பில், ஓர் எல்லையில் இடமளித்த பலஸ்தீன மக்கள் படும் அவஸ்தைகளும், எண்ணெய் வளமுள்ள நிலத்துக்காக, மேற்குலகம் நடத்துகின்ற யுத்த நாடகங்களும் கூட இந்த…
-
- 0 replies
- 388 views
-
-
மைத்திரிக்கு ஸ்ரீ ல.சு.கட்சியை வெற்றி பெறச்செய்ய முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை காட்சிப் பொருளாகப் பாவித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (பொதுசன முன்னணி) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்ததை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் அதற்காக இரண்டு கட்சி அபிவிருத்திக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இரண்டும் கட்சிக்கு மேலும் அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்வதை நோக்கமாகவே நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலையில் அவர் காலியில் நடைபெற்ற கட்ச…
-
- 0 replies
- 216 views
-
-
ஃபிடல் காஸ்ட்ரோ: நாயகனா, வில்லனா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரச ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்; நிர்வாகக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடினார்; விழுமியம் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயன்றார்; அவரது மக்களில் பெரும்பான்மையானோரால் போற்றிக் கொண்டாடப்படுகிறார்; மேற்கத்தேய உலகில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் ஒருவராக இருக்கிறார்; மனித உரிமைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன; நவம்பர் 26ஆம் திகதி, வாழ்வில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது. இவையெல்லாம், நவம்பர் 26ஆம் திகதி பிறந்தநாளைக் கொண்டுள்ள, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முயன்ற, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின…
-
- 3 replies
- 772 views
-
-
ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும். தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய…
-
- 0 replies
- 334 views
-
-
மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரி…
-
- 0 replies
- 255 views
-
-
தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஏற்கோம் கடந்த காலத்தைப்போல் ஏமாறவும் மாட்டோம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய அனுசரணையுடன் பெற்றே தீருவோம். எவ்வகை சூழ்நிலையிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமாறப்போவதுமில்லை. இதேவேளை தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சமகால அரசியல் போக்கு குறித்தும் அரசியல் தீர்வின் முன்னேற்றம் குறித்தும் பொது மக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் கட்சியின் உ…
-
- 1 reply
- 320 views
-
-
மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும் – செல்வரட்னம் சிறிதரன் சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது. இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடு…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது இடைக்கால அறிக்கையுடன் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான இடம் என்ன என்பதும் தெட்டத் தெளிவாகிவிடும். கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தன் தலைமை வகித்த உப குழுவின் அறிக்கை ஏற்கனவே ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அடுத்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒற்றையாட்சி முறைமை தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது: “மாகாண சபைகளின் வினைத்திறனான செயற்பாட்டிற்க…
-
- 2 replies
- 442 views
-
-
உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் - பாலஸ்தீனம்! ஐ.நா.வின் சின்னம் நவம்பர் 29-ம் தேதியை ‘பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு தினமாக’ ஐ.நா. சபை அறிவித்து அதன்படியே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மன்னிக்கவும்; அனுசரிக்கப்படுகிறது. “சரி.. ஏதோ நடக்கப் போகிறது... ஐ.நா.வே சொல்லி விட்டது” என்று பாலஸ்தீனிய மக்களில் சிலருக்கேனும் நம்பிக்கை தோன்றியிருக்கும். பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. 1947 மே மாதம் இக்குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி, யூத நாடு - அரபு நாடு என்று இரண்டாகப் பிரித்து, தனி பாலஸ்தீனம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. …
-
- 0 replies
- 329 views
-
-
மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்- மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்த…
-
- 0 replies
- 508 views
-
-
ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதம மந்திரியும் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கும் ஐக்கியதேசிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தும் தற்போதைய…
-
- 1 reply
- 500 views
-
-
சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும் பிக்குமாரின் நடத்தைகள் இரைச்சலினால் சுற்றாடல் மாசடைவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கொன்றின் விசாரணையில் ஆஜராகுமாறு இராஜகிரியவில் உள்ள பௌத்த விகாரையின் குருவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. அவர் மன்றில் ஆஜராகத் தவறியதனால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிரதம நீதியரசர் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வினால் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவையடுத்து தேரரைக் கைது செய்த இராஜகிரிய பொலிஸார் விளக்கமறியலில் வைத்தனர். அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிறகு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிணைமனுவை பரிசீலனைக்கு எடுப்…
-
- 0 replies
- 328 views
-
-
பொதுமக்களின் காணிகளை மீளவழங்க வேண்டியதன் அவசியம் வடக்கு, கிழக்கில் படையினரின் தேவைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவேண்டுமென்று தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகப்போகின்ற நிலையில் கூட இன்னமும் பொதுமக்களின் காணிகள் படையினரின் தேவைக்கென பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல. பொதுமக்களின் காணிகள் அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாகவே தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக…
-
- 0 replies
- 251 views
-
-
தலைவர்களுக்காக முஸ்லிம் அரசியல் நலிவடைகிறது இலங்கை முஸ்லிம்கள் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மீளமைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர் . முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசியல் இலாபங்களை மாத்திரம் கணக்கில் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு இனவாதிகளினாலும், அதிகாரத்தில் உள்ளவர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்ற அதிரடி நடவடிக்கைகளையும், பிறசெயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துவதற்கு முடியாத அவலத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. எனவே, முஸ்லிம் தலைவர்கள் தங்களது அரசி…
-
- 0 replies
- 732 views
-
-
இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம் இன்று மாவீரர் நாள். ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த, தமது போராளிகளை நினைவு கூருவதற்காக விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதே, இந்த மாவீரர் நாள். பிற்காலத்தில் விடுதலைப் புலிகள், தம்முடன் இணைந்து செயற்படாமல், தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த பலரையும் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். ரெலோ அமைப்பை ஆரம்பித்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களும், ஈரோஸ் அமைப்பில் இருந்து போராடி உயிர்நீத்த போராளிகளையும் கூட விடுதலைப் புலிகள் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். 1989ஆம் ஆண்டு தொடங்கி, விடுதலைப் ப…
-
- 0 replies
- 489 views
-
-
பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையினவாதத்தை முன்னிறுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றியின் தாக்கம், இலங்கை அரசியலில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. அண்மைய நாட்களாக இலங்கையில் பெரும்பான்மையினவாதத்தை முன்னிறுத்திய கருத்துக்களும், செயற்பாடுகளும், தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காணமுடிகிறது. கண்டியில் பொது பலசேனா நடத்திய பேரணியில் எதிரொலித்த இனவாதக் கருத்துக்களிலும் சரி, கொழும்பில் முஸ்லிம்களின் இரத்தஆறு ஓடும் என்று ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கையிலும் சரி, சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகம் தான் பிரதிபலித்தத…
-
- 0 replies
- 399 views
-
-
கூட்டமைப்புடன் முட்டி மோதிக்கொள்ளும் சுவாமிநாதன் அரசியல் களத்தில், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளும், முட்டுப்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன், அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வடக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் பாரிய திட்டம் ஒன்றை முன்வைத்தார். இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்திய வம்சாவளி வர்த்தகரான லக்ஸ்மி மிட்டலின், ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து, 65 ஆயிரம் உலோக…
-
- 0 replies
- 296 views
-
-
இராணுவ ஆட்சி சாத்தியமா? கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத் தில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற் றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து. இராணுவ ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கிறதா- இல்லையா என்பதே அரசியலில் பெரும் விவாதத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, தினேஸ் குணவர்த்தன இந்த ஆபத்தான விடயத்துக்குள் காலடியை எடுத்து வைத்து விட்டார். அதனால் தான், கூட்டு எதிரணியைச் சேர்ந்த எவரும், அவரது கருத்துக்கு ஆதரவாக வாய் திறக்காமல் மெளனமாக இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீரவன்சவோ, உதய கம்மன்பிலவோ, வாசுதேவ நாணயக்…
-
- 0 replies
- 373 views
-
-
நீதி அமைச்சர் கிளப்பிய ' பீதி' நாட்டில் இனவாதிகள் மீண்டும் வீதிக்கு இறங்கி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கும் காலகட்டத்தில் நீதி அமைச்சர் இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டமை முஸ்லிம்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சலசலப்பைத் தோற்றுவித்திருந்தது. நாட்டில் சமீப காலமாக தோற்றம் பெற்றுள்ள அடிப்படைவாத, இனவாத நகர்வுகளை முன்வைத்து அவர் ஆற்றிய உரை பொதுவில் வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும் சில இடங்க ளில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களே பெரிதும் சர்ச்…
-
- 0 replies
- 487 views
-
-
மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழுபறியின் பின்னர் கூட்டு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் இன்னும் இது குறித்த அதிர்வலைகள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்வாகங்கள் கொண்டுவர முனைவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக மேலெழுந்து வருகின்றன. இத்தகைய தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றி…
-
- 0 replies
- 490 views
-
-
மெல்ல சாகிறதா பொறிமுறை ? ரொபட் அன்டனி தற்போதைய நிலையில் தென்னிலங்கையில் உருவெடுத்துள்ள அரசியல் அதிகாரப் போராட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது. நியாயமான கேள்வியாகவே இது அமைந்துள்ளது. தென்னிலங்கையில் அரசியல்வாதிகளும் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஒரு சுயலாப அரசியல் கருவியாக பயன்படுத்துவதை காண முடிகிறது. நாட்டில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், அரசியல் காய்நகர்த்தல்களை பார்க்கும் போது எங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற…
-
- 0 replies
- 306 views
-
-
புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, கிழக்குக்கு வெளியேயுள்ள மாகாணங்கள் அல்லது மாவட்டங்களில் மலையகம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் சாதகமான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மாவட்டங்களில் இனவாத தீ கொழுந்து விட்டெரியும் சூழ்நிலையொன்றை உருவாக்க இனவாதிகளும் மதவாதிகளும் மஹிந்த தரப்பினரும் தேசிய மிதவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கின்ற பேரின புத்திஜீவிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான யதார்த்தம். புதிய அரசியல் அமைப்பிற்கு பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்று நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பான்மை …
-
- 0 replies
- 357 views
-
-
இலங்கைக்கான எச்சரிக்கை கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், இரகசிய தடுப்பு முகாம்களில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டு, புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரால் கொடூரமான சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் போக்கைச் சாதகமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஏழரை ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், இனங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நல்லிணக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளைப் பெயரளவில் ம…
-
- 0 replies
- 311 views
-