Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தமும் வருத்தமும் மொஹமட் பாதுஷா முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையி…

  2. படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …

  3. வெறுப்பை நியமமாக்குதல் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்த…

  4. மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…

  5. மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் கனவு நன­வாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்­நாட்டு யுத்­தத்தில் பங்­கேற்ற ஆயு­தப்­ப­டை­யினர் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை தோற்­க­டித்து ஈட்­டிய வெற்­றியின் கார­ண­மாக ‘யுத்த கதா­நா­ய­கர்கள்’ (War heroes) என்­ற­ழைக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­களை எச்­சந்­தர்ப்­பத்­திலும் பாது­காப்­ப­தற்கு தான் உறு­தி­பூண்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன கூறி­வ­ரு­வ­தை­ யாரும் அறிவர். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் மற்றும் முன்னாள் 3 கடற்­படைத் தள­ப­தி­க­ளுக்­கெ­தி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் வழக்கு தொட­ரப்­பட்­டது தவறு என்ற தோர­ணையில் ஜனா­தி­பதி மைத்­திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…

  6. ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் மு…

  7. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்…

  8. ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…

  9. வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த வாரம் தமிழ் அரசியல்வாதிகளைச் சீண்டும் வகையில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றியிருக்கிறார். அவர் கூறுவது நடுநிலையானது அல்ல; என்ற போதிலும் முற்றிலும் பிழையானதும் அல்ல. கடந்த சனிக்கிழமை ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அவரது உரையின்படி, வடபகுதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பாவித்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். அவர் மேலும் கூறியிருப்பதாவது, “வடக்கில் பெரும்பான்மையாக வாழும் சாதார…

  10. தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசி…

  11. அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையில் இடம்­பெறும் நகர்­வுகள் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையைக் கொடுப்­ப­ன­வாக அமை­ய­வில்லை சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர் மலே­ஷி­யாவின் முன்னாள் பிர­தமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்­த­முள்ள கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார். - “யாரு­டைய கரங்­களில் கப்பல் படை இருந்­ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்­றாண்டில் சக்­தி­வாய்ந்­த­வர்­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரு­டைய கைகளில் பல­மான விமானப் படை இருந்­ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்­றாண்டின் பல­சா­லி­க­ளாகத் திகழ்ந்­தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்­கின்­றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்­றாண்டின் சக்­தி­யாகத் திகழ்­வார்கள்” என்றார். அதா­வது இன்­றைய பல­மா­னது பேனாவைச் சென்­ற­டைந்­துள்­ளது என்­ப­தைய…

  12. தமிழர்கள் மீது உளவியல் யுத்தம்: தப்புவது எப்படி?

  13. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள் தமிழ் மக்­களின் இயல்பு வாழ்க்­கையில், சட்டம் ஒழுங்­கிற்கு அப்பால் இரா­ணுவ ரீதியி­லான நடத்­தைகள் பார­தூ­ர­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்ற ஓர் உண்மை தற்­போது வெளிப்­பட்­டுள்­ளது. ஆவா குழு பற்­றிய விவா­தங்­க­ளுக்கிடையில் இக் குழுக்­களின் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்தா­பாய ராஜ­பக் ஷ இருப்­ப­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ண தெரி­வித்­துள்ளார். போருக்குப் பின்­பாக அரச இயந்­திரம் தேசிய பாது­காப்பு என்று கூறிக்­கொண்டு மக்கள் மீது பல்­வே­று­பட்ட நெருக் ­க­டிகளை ஏற்­ப­டுத்­தியே வந்­துள்­ளது என்­பது அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரின் தெரி­விப்­புக்­களிலிருந்து ஏற்­றுக்­கொள்­…

  14. GSP+ சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சுப் போடும் ஐரோப்பிய யூனியன் இஸ்­லா­மிய ஷரீஆ சட்டம் பற்றி அர­சாங்­கத்­துக்கு எதுவும் தெரி­யாததோர் நிலை காணப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்ள ஒரு குழுவை அரசு நிய­மித்­துள்­ளது. அமைச்­ச­ரவை இணை பேச்­சாளர் அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­துள்­ளதன் பிர­காரம் ‘முஸ்லிம் திரு­மணச் சட்­டத்தில் ஆகக்­கு­றைந்த திரு­மண வய­தெல்லை உட்­பட சில பிரி­வுகள் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தாக இல்லை. இந்த சர்­வ­தேச உடன்­பா­டு­களில் இலங்­கையும் அங்­கத்­துவம் வகிக்­கின்­றது. எனவே, இந்த சட்­டங்­களில் மாற்றம் செய்ய வேண்­டிய தேவை இலங்­கைக்கும் ஏற்­பட்­டுள்­ளது’ எ…

  15. பறிபோகும் நம்பிக்கை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லா…

  16. அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்­படத் தொடங்­கி­யுள்­ளதோ இல்­லையோ தெற்கில் அதனை வைத்து தாரா­ள­மா­கவே அர­சியல் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பொலி­ஸாரால் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, சுன்­னா­கத்தில் தேசிய புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கினர். அந்தச் சம்­ப­வத்­துக்கு பொறுப்­பேற்று ஆவா குழு வெளி­யிட்ட துண்டுப் பிர­சு­ரங்கள் தான், இப்­போது தென்­னி­லங்கை அர­சி­யலில் பர­ப­ரப்­பாக பேசப்­படும் ஆகப் பிந்­திய விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஆரம்­பிக்கும் புதிய கட்சி தொடர்…

  17. நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:- யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் …

  18. ஜெயிக்கப் போவது யார்? எதிர்­வரும் 4 வருட காலத்­திற்கு அமெ­ரிக்­காவின் தலை­வி­தி­யை மட்­டு­மல்­லாது உலகின் தலை­வி­தி­யையே தீர்­மா­னிக்கப் போகும் முக்­கி­யத்­துவம் மிக்க தேர்­தலில் வாக்­க­ளிக்க அமெ­ரிக்க வாக்­கா­ளர்கள் தயா­ரா­கி­யுள்­ளனர். அமெ­ரிக்­காவின் 58 ஆவது ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­ன்றது. அமெ­ரிக்­கா­வி­னதும் உல­கி­னதும் தலை­விதி வாக்­கா­ளர்­களின் தோளில் முள் முனையில் நிற்­பது போன்று ஊச­லாடிக் கொண்­டி­ருக்­கி­றது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்தி­ருந்த கருத்து நிதர்­ச­ன­மா­னது என்­பது கண்­கூடு. நேரத்­துக்கு நேரம் தனது கருத்­து­களை மாற்றி சல­ச­லப்பை ஏற்­ப­…

  19. எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …

  20. முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம்: அவசியம்தான்; ஆனால்...! பைஸ் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­னதைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­களும் சந்­தே­கங்­களும் சர்ச்­சை­களும் தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. இதுவே இன்று முஸ்­லிம்கள் மத்­தியில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­பட்­டது. ''முஸ்லிம் சட்­டத்தின் கீழ் திரு­மணம் முடிப்­ப­தற்­கான…

  21. மாணிக்கமடு சிலை விவகாரம் பெளத்த மயமாக்கலின் ஆரம்பமா? எம்.சி.நஜி­முதீன் – அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெளத்த மதத்­திற்கு உயர்ந்த இடம் வழங்­கப்­பட்­டுள்­ள­போதும் அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஏனைய சம­யத்­த­வரை நெருக்­க­டிக்­குள்­ளாக்கும் ஏற்­பா­டு­கள் அதில் இல்லை. பெளத்­தர்­க­ளைப்போல் ஏனைய சமூ­கத்­தினர் தமது சமயக் கலா­சா­ரங்­களைப் பின்­பற்­று­வ­தற்­கான உரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இருந்­த­போ­திலும் பெளத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­­னு­ரி­மைக்கு சிலர் தவ­றான புரி­தல்­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஏனைய சம­யத்­தி­னரை வஞ்­சிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கின்­றனர். மேலும் கடந்த ஆட்­சியில் சிறு­பான்­…

  22. ஆவா குழுவும் இராணுவமும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக…

  23. கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை வடக்கு மாகா­ணத்­துடன் இணை­யா­விடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்­ச­ரிக்­கையை பகி­ரங்­க­மாக விடுத்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் அவர்கள் அதா­வது வடக்கும் கிழக்கும் இணை­யாது பிரிந்து செயற்­ப­டு­மாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறி­போய்­விடும். கிழக்கு மாகா­ண­மா­னது தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு உரிமை இல்­லாத நிலை ஏற்­பட்­டு­விடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்­தை­யாக இருக்­கக்­கூ­டாது. எனவே இரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது. அவ­ச­ர­மான தேவை­யுங்­கூட. இந்த நிலைப்­பாட்­டி­லேயே த.தே.கூட்­ட­மைப்பு உள்­ளது என்ற ய…

  24. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் கனவு மொஹமட் பாதுஷா சொந்த மண்ணில் வாழக் கிடைப்பது என்பது ஒரு வரமும் கொடுப்பினையுமாகும். ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது’ என்பார்கள். அதுபோலவே,இலங்கையில் பிறந்த யாராவது அமெரிக்காவிலோ, லண்டனிலோ அல்லது கனடாவிலோ மிகவும் சந்தோசமாக, பணம் படைத்தவராக, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவரது மனதில் தனது தாய்மண் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டேயிருக்கும். வாழ்வின் நிர்ப்பந்தங்களாலும் காலத்தின் கட்டாயத்தின் பெயரிலும் உள்நாட்டுக்குள்ளும், நாடுகடந்தும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம், தமது சொந்த இடத்துக்குத் திரும்புதல் பற்றிய கனவொன்று இருக்கவே செய்யும். யாழ்ப்பாணத்தில் இருந்து இ…

  25. குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் படுகொலைச் சம்பவத்தைக் காரணம் காட்டி, கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவின் பெயரைப் பயன்படுத்தி, மாணவர்கள் கொலைக்குப் பதிலடியாகச் சுன்னாகத்தில் இரண்டு பொலிஸாரைத் தாமே வெட்டிக் காயப்படுத்தியதாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் உரிமை கோரப்பட்டிருந்தது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், தமிழ்ப் பொலிஸாரே மாணவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.