Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை அரசின் மீது மட்டுமல்ல கூட்டமைப்பின் மீதும் விரல் சுட்டுகின்றதா? யதீந்திரா படம் | AP Photo/Eranga Jayawardena, NEWSOBSERVER முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், அவர் பல்வேறு விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார். போர் முடிவுற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, போரில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பான உண்மைநிலை இன்னும் வெளிக்கொணரப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன், மக்களின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான உண்மையான – நம்பகமான விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டமையானது, தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்திய…

  2. விக்னேஸ்வரனின் விலகல் உறுதி கே. சஞ்சயன் / தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார். அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; …

  3. விக்னேஸ்வரனின் வெறுங்கால் ஓட்டம் -விரான்ஸ்கி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அண்மையில் தமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படம், ஈழத்து இணைய வெளிகளிலும் செய்தித் தளங்கள், ‘வட்ஸ் - அப்’ குழுமங்களிலும் ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு இணையான பரபரப்புடன் பலராலும் பகிரப்பட்டது. படத்தைப் பார்த்து, “இருபெரும் ஆளுமைகள்” என்று விக்னேஸ்வரனின் விசுவாசிகள் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். “ஆன்மீக அரசியல் பேசுகிறார்கள்” என்று, சில நக்கலான விமர்சனங்களை இன்னும் சிலர் சொல்லிக் கொண்டார…

  4. விக்னேஸ்வரனின் வெற்றி சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையின் தோல்வி : சபா நாவலன் வடமாகாண தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் படு தோல்வியடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்திருக்கிறது. சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படுகின்ற உலகின் அதி பயங்கர அதிகார வர்க்கத்தின் கூட்டு எதை விரும்புகிறதோ அதை இலங்கையில் செயற்படுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அடிமைகள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழரசுக் கட்சியால் தலைமை தாங்கப்படும் அதன் அரசியலும் என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் மேட்டுக்குடி ஏகாதிபத்தியங்கள் சார்ந்த அரசியலுக்கும் இலங்கை அரசின் அரசியலுக்கும் அடிப்படையில் எந்த முரண்பாடும் கிடையாது. ‘சிங்களவனின் தோலில் செருப்புத…

  5. விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்? தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது. அந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தமிழரசுக் கட்சியில் அதிர…

  6. விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:23Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கா…

  7. விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். முதலாவது சந்தர்ப்பம், 2013- 2014 காலப்பகுதியில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக இருந்த விஜயலட்சுமி ரமேஷின் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு. இரண்டாவது சந்தர்ப்பம், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரான பா.டெனீஸ்வரன், தன்னுடைய பதவி நீக்கத்துக்கு எதிராக, கடந்த வருடம் தொடுத்த வழக்கு. இந்த இரண்டு வழக்குகளும் மாகாண சபையினதும், முதலமைச்சரினதும் அதிகார எல்லை…

  8. விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்? 07/04/2018 இனியொரு... தமிழ் நாட்டில் தமது மண்ணின் மீதும் அது சார்ந்த மக்கள் மீதும் பற்றுக்கொண்ட மக்கள் வேதாந்தா – ஸ்ரெலைட் ஆலைக்கு எதிராகப் வீரம் செறிந்த்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். 13 நிராயுத பாணியான பொது மக்களும் போராளிகளும் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கு நடைபெறும் கைதுகளும் ஆள் கடத்தல்களும், இலங்கை வட கிழக்கின் 80 களை நினைவிற்குக் கொண்டுவருகிறது. தெருக்களில் திரிவதற்குக் கூட சமூகப்பற்றும், மக்கள் பற்றும் உள்ள இளைய சமூகம் அச்சப்பட்ட காலம். சாட்சியின்றி போலீஸ் படை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தது. கைதான பலர் மீது வழக்குத் தாக்கல் கூடச் ச…

  9. விக்னேஸ்வரனும் தீர்ப்பும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், அண்மையில் அரசமைப்பு ரீதியாகவும் தமிழர் அரசியல் தொடர்பிலும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்பு மிக்கதுமானதொரு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குள் பொதிந்துள்ள அரசமைப்பு முக்கியத்துவம், வௌிப்பார்வைக்குப் பலருக்குப் புலப்படாது போயிருக்கலாம். அது, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை, தனிநபர்களின் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கும், அணுகும் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவற்றைத் தாண்டி, இந்தத் தீர்ப்பு, இந்த நாட்டின் அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பையும் அரசியலையும் குறிப்பாக, இனப்பிரச…

  10. விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன் October 28, 2018 2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ‘விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன?’ என்று. நான் சொன்னேன் ‘அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின் ஆள். விட்டுக்கொடுப்பற்ற தமிழ்த்தேசிய சக்திகளை கூட்டமைப்பிற்குள் தக்க வைத்திருப்பதற்காக சம்பந்தரால் இறக்கப்பட்டவர் என்பது. இரண்டாவது அதே நோக்கத்திற்காக அமெரிக்காவால் இறக்கப்பட்டவர் என்பது. மூன்றாவது அதே நோக்கத்திற்காக இந்தியாவால் இறக்கப்பட்டவரென்பது. நாலாவது மேற்சொன்ன சூழ்ச்சிக் கோட்பாடுகள் எதுவும் சரியல்ல. மாறாக அவர் ஒரு நேர்மையான அறநெறியாளன். வாக்…

  11. விக்னேஸ்வரனும் மாற்று தலைமைக்கான வெளியும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 05 சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பி ரீம்’ (B Team) போல செயற்படுவதாக, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கட்சி, தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாகக் கூட்டமைப்பு எடுத்த முடிவை எதிர்த்து, டெலோவில் இருந்து பிரிந்து சென்ற சிறிகாந்தாவும் என்.கே.சிவாஜிலிங்கமும் புதிய கட்சியை ஆரம்பித்து, விக்னேஸ்வரனோடு இணக்கமாக இருந்தனர். கூட்டமைப்புக்கு எதிரான மாற…

  12. விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன் கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள். விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர் ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார் ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இ…

  13. விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் – நிலாந்தன்… யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத்…

  14. விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுகள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புகள் நம்பிக்கையோடு காத்திருந்தன. ஆனால், இரா.சம்பந்தனின் தலையீட்டை அடுத்து, விடயங்கள் விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விக்னேஸ்வரனை முன்வைத்து, புதிய கூட்டுகளுக்கான நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், ஏமாற்றத்தின் வழியில் நின்று புலம்பல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இன்னும் சிலரோ, தங்களது கதவுகளை மீண்டும் பூட்டிக்கொண்டு, அமைதியாகி விட்டார்கள். ‘தேசியத்தலைவர்’ …

  15. விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு புருஜோத்தமன் தங்கமயில் / இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது. எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது. ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, சி.வி. விக்னேஸ்வரன் முன்னெடுத்த நடவடிக்கைகள், சம்பந்தனை அதிகளவு கோவப்படுத்தியது. அத…

  16. விக்னேஸ்வரன் - மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன. இது தொடர்பாக இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்தச் சந்திப்புகளைப் பற்றித் தமிழ்த்தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தாராளமாகப் பல ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் இந்த அலை ஓயவில்லை. தமிழ் ஊடக…

  17. விக்னேஸ்வரன் அணி சாதிக்குமா ? | C. V. விக்னேஸ்வரன் ( தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி )

    • 0 replies
    • 567 views
  18. விக்னேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின் பதில் என்ன?- யதீந்திரா தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி. ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதேவேளை, தான் தற்போது வகித்துவரும் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவிநிலையையும், முதலமைச்சர் விரும்பும் ஒருவருக்கு வழங்குவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்திருக்கின்…

  19. விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா? October 4, 2018 பரசுராம் இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது. ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால்…

  20. விக்னேஸ்வரன் இப்பொழுதும் தளம்புகிறாரா? -மக்கள் உணர்த்தும் செய்தி என்ன? விக்னேஸ்வரனின் நூல் வெளியீடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சம்பந்தனும் விக்கியும் ஒன்றாகத் தோன்றும் மேடை என்பதால் அது தொடர்பில் ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகையின் துவக்க விழாவில் இருவரும் ஒரே மேடையில் காட்சியளித்தனர். அந்த மேடையில் மாவைக்கு எரிச்சலூட்டும் கருத்துக்களை விக்கி தெரிவித்திருந்தார். அதன் பின் வேறு சில மேடைகளில் சம்பந்தரும் விக்கியும் ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் காலைக்கதிர் மேடையைப் போல விக்கியின் நூல் வெளியீட்டிலும் சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசப்படக் கூடும் என்ற ஆர்வம் கலந்த ஊகங்கள் பரவலாகக் காணப்பட்டன. …

  21. விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்? முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மேடையும் அப்போது, அதி முக்கியத்துவத்துடன் நோக்கப்பட்டது. ஏனெனில், முரண்பாடுகள் முற்றிய நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி தூக்கிய போர்க்கொடியை, நேரடியாகத் தலையிட்டு, அப்போதுதான்…

  22. விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்? சி.அ.யோதிலிங்கம் மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்னேஸ்வரன் கொடுத்த அதிர்ச்சி வ…

  23. விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்…

  24. விக்னேஸ்வரன் என்ற ஒரு நீதிபதி ஒரு தலைவராக மாறுவாரா? யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மன்னாரிலும், மாந்தையிலும் ஏனைய கட்சிகளும் அதே உத்தியைக் கையாண்டுதான் பிரதேச சபைகளைக் கைப்பற்றின. தாம் அப்படி எந்தவோர் உத்தியையும் கையாளவில்லையென்று கூட்டமைப்பு கூறுகின்றது. ஆனால் அது தொடர்பில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தங்களோடு உரையாடியதாக ஈ.பி.டி.பி கூறுகிறது. கிளிநொச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.