நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜனவரி 2011 04:38 .நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறையில் அவதானித்து உள்ளது. தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆராயப்பட்டு இருக்கின்றன. அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதியில் வெளியிட்டு உள்ளது. இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. பட இணைப்பு http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17701:2011-01-29-23-35-57&catid=121:2010-02-24-14-26-50&Itemid=657
-
- 0 replies
- 1.1k views
-
-
மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள் thamizil manithan.com
-
- 2 replies
- 6k views
-
-
தமிழக மீனவர்களின் துயரம் கடந்த சில நாள்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தளத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எப்போதும்போல தந்தி அடிப்பதோடு விட்டுவிடாமல், மத்திய அரசின் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளார் போலிருக்கிறது. முதல்முறையாக பிரணாப் முகர்ஜி, ‘இப்படியெல்லாம் செய்யக்கூடாது, ஆமாம்!’ என்று சொல்லியிருக்கிறார். இலங்கை அரசுத் தரப்பில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொண்டார்கள் என்றுகூடச் சொல்லிவிடுவார்கள் அடுத்து. கரையோர மா…
-
- 0 replies
- 600 views
-
-
இனிய தோழன் முத்துக்குமாரின் இரண்டாம் வருட நினைவை முன்னிட்டு.. அறிவும் உணர்வும் எப்போதுமே ரயில் தண்டவாளம் மாதிரி. இரண்டும் இணையவே இணையாது. உலகளாவிய இந்த விதியை மாற்றிக்காட்டிய மாவீரன், கருப்பு நெருப்பு முத்துக்குமார். அவனுடைய மரண சாசனம் அறிவுப்பூர்வமான ஓர் ஆவணம். அந்த அளவுக்கு ஒரு சாசனத்தை எழுதிவைத்து விட்டு, அதற்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு தீக்குளிப்பதென்பது வேறெவருக்கு சாத்தியம்? அறிவும் இருக்கவேண்டும், அதற்கு இணையான உணர்வும் இருக்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தான் அந்த வீரத்தமிழ் மகன். தமிழக வரலாற்றிலேயே, மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகப் பிரதிகள் அச்சிடப்பட்டது, முத்துக்குமாரின் மரணசாசனமாகத்தான் இருக்கவேண்டும். தனி நபர்கள் மட்டுமின்…
-
- 0 replies
- 597 views
-
-
அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை! வியாழன், 27 ஜனவரி 2011( 17:19 IST ) உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030 ஆம் ஆண்டுவாக்கில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானார்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில்,அடுத்த இருபது ஆண்டுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவிகிதம் அதிகரித்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
கருப்புப் பணம் இப்போது தலைப்புச் செய்திகளை ஆக்ரமித்திருக்கும் ஒரு புது விவகாரம். பழசுதான்; ஆனால் இப்பப் புதுசு. கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பலரும் பல லிஸ்டுகளைப் போட்டாயிற்று. அது, தெருவெங்கும் மலசலகூடம் கட்டுவதில் ஆரம்பித்து, இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பதற்குச் சென்று, நாட்டின் 45 கோடி ஏழை மக்களுக்கு ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிப்பதுவரையில் நீள்கிறது. இந்தக் கருப்புப் பணம் ஏதோ அந்நிய நாட்டில் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் பணம், ஒரு பேச்சுக்கு அமெரிக்க டாலராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் இந்திய ரூபாய்களாக மாற்றினால்தான் இந்தியாவில் மலசலகூடம் கட்டமுடியும்; ஒவ்வோர் ஏழைக்கும்…
-
- 2 replies
- 2.3k views
-
-
காஷ்மீரத்தின் உடன்பாடின்மையின் பழங்கள் - அருந்ததி ராய் செவ்வாய், 11 ஜனவரி 2011 15:41 காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் குறித்த பிரச்சினைக்கு (1947-ஆம் வருடம் முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 3 போர்களுக்கு இதுதான் காரணமாக இருந்தது) தீர்வு காண்பதும் தனது தலையாய பணிகளில் ஒன்றாக இருக்கும் என, 2008-ஆம் வருடம் அமெரிக்க குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இந்தியாவில் வியப்புடன் கூடிய கவலையுடன் எதிர்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் காஷ்மீர் குறித்து எதுவும் கூறவில்லை. ஆனால், கடந்த நவம்பர் 8-ஆந் தேதி இந்தியா வந்திருந்த அவர், காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா த…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பரிமாறப்பட்ட தகவல் குறிப்புகள் சில அண்மையில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று- வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வாங்க முற்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு ஆயுதங்களை வாங்கினால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் என்று அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை உள்ளடக்கியிருந்தது. இன்னொன்று- ஈரானிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவில்லை என்று இலங்கை தெரிவித்த மறுப்பையும் அதுபற்றிய அமெரிக்கத் தூதுவரின் கருத்தையும் உள்ளடக்கியிருந்தது. அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒருவித இராஜ…
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=TIi74iiUJlw&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=9yluEmCBAkg&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4&feature=player_embedded இதை மீண்டும் இணைத்ததன் காரணம். மிருகங்களிடம் இல்லாததை கொண்டுள்ள தமிழா! ஒன்றுபடு இப்போதும் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. மீண்டும் கூட்டமாக வீதியில் இறங்க வேண்டி வந்துவிட்டது. உறவுகளே தயக்கம் வேண்டாம்
-
- 0 replies
- 1.7k views
-
-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்பது முடிந்த முடிவு! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல தை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று தமிழக அரசு முடிவு செய்து 1.2.2008 அன்று அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது. ஆனால் அதற்குப் பின்னரும் சித்திரை முதல்நாளே தமிழரின் புத்தாண்டு என்று ஒரு விரல் விட்டு எண்ணக் கூடிய இந்து்த்துவ வாதிகள் மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தாராளமாக சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடலாம். யாரும் வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டல்ல. சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் …
-
- 2 replies
- 2.5k views
-
-
இலங்கையின் இன நெருக்கடி தீவிரமடைந்து தமிழ் இளைஞர் அமைப்புக்கள் தமது பாதுகாப்புக்காக தென்னிந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்தேம தமிழகத்தில் ஆயுதப் பயிற்சிக்கான முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி தீவிர தமிழ்ப் பற்றாளர்கள் சிலரும் இந்த முயற்சிகளுக்குப் பெருமளவு உதவிகளை வழங்கிவந்துள்ளார்கள். சிலர் தமது காணிகளையே இதற்காகக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் எந்தளவுக்கு போராளி அமைப்புக்களின் மீது பற்றுதலைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இது தொடர்பில் தமிழ்க முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உளவுப் பிரிவினரின் தகவல்கள் கிடைத்துக்கொண்டிரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டி வருகிறது. ஆனால், இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மை தானா என்று கேள்வியை எழுப்ப வைக்கிறது. பயங்கரவாதம் என்கிற போது அரசாங்கம் வெறுமனே புலிகளைத் தான் சுட்டிக் காட்டியது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, பொதுமக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கின்ற அவர்களை பீதியில் உறைய வைக்கின்ற செயல்கள் அனைத்தும் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும். அந்தவகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் நான்கு படுகொலைகள் இடம்பெற்றன. …
-
- 0 replies
- 1.2k views
-
-
எம் தேசம், இன்று இடிவிழுந்ததுபோன்றாகிவிட்டது. என்ன செய்குவேன் இறையே! கட்டி எழுப்பிய தேசம், கலாச்சாரத்தைப் பின்னி நின்ற எம் மக்கள். எம்மதம், எம்குலம் என்று வாழ்ந்த எம் தேச மக்களிடையே இன்று சுதந்திர தாகம் குன்றியது என்னவோ? விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு, இல்லையில்லை, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இன்று ஆயுதத்தை மௌனித்திருக்கின்றார்கள் என்றால் அது புலம்பெயர் சமுதாயத்திடையே கொடுக்கப்பட்ட பொறுப்பென்றெண்ணாது, நமக்குள் மாறிமாறித் துரோகிப் பட்டம், 4 பேர் சேர்ந்தவுடன் ஒரு அமைப்பு, அறிக்கை... இவை எல்லாம் பார்க்கும்போது முள்ளிவாய்க்காலில் பட்டுப்போன எம் உறவுகளின் குருதியிலே ஓவியம் வரைவது போன்றுள்ளது. தமிழனே! நீ இவ்வுலகில் வாழ, உனக்கென்றொரு சமுதாயம் இருந்தது என வருங்காலச…
-
- 6 replies
- 1.8k views
-
-
ராகுல்காந்தி அப்பாவியா? அரசியல்வாதியா? போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் கடந்த வாரம் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி. சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா விடுதியில் சுமார் 120பல்வேறு துறைசார் வல்லுனர்களை சந்தித்தபோது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்காதது கவலையளிப்பதாக உள்ளது. இது தொடர்பாகப் பிரதமரிடம் பேசி, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமி…
-
- 1 reply
- 870 views
-
-
“இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட இந்திய அரசு முயன்று வருகிறது. இது தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிட்ட உதவுவேன்” என்று தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ஈழத் தமிழர்களை அழித்தொழித்த ராஜபக்ச அரசிற்கு முழு ஆதரவையும் தந்து, போரை நடத்து முழுவதுமாக உதவி, ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கத் துணை நின்றதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது ‘ஆலோசனை’யில் இயங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும்தான் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிதிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் ராகுல் பேசியிருக்க மாட்டார் என்று நிச்சயமாக நம்பலாம். அந்த அளவிற்கு…
-
- 0 replies
- 736 views
-
-
உன் உம்மா உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்! சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் - இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை! சரி... இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்! அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது மு.காங…
-
- 0 replies
- 802 views
-
-
ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், 04.12.2010 ஆம் திகதி வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. யூ.கே. ரைம்ஸ் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஹாடிங், பென் மஸின்ரயர் ஆகியோர் 2010 டிசெம்பர் 01 ஆம் திகதி, லண்டனில் உள்ள டோசெஸ்ட்ரா ஹோட்டலைவிட்டுச் செல்ல ஆயத்தமானபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உதவியாளர் ஒருவர் கீழ் மண்டபத்துக்கு அவசரமாக வந்து அவர்களுடன் பேசினார். ஜனாதிபதி ராஜபக்ஷ உங்களை அவசரமாக பார்க்க விரும்புகிறார். தயவுசெய்து உங்களால் வரமுடியுமா? என ஜனாதிபதியின் தூதுவர் கேட்டார். இரண்டு பத்திரிகையாளர்களுமே அப்போதுதான் ஜனாதிபதியுடனான ஒரு மணிநேர நேர்முகத்தை முடிந்துவி…
-
- 0 replies
- 610 views
-
-
இன்றைய தமிழர் நிலை ! உலகெங்கும் வாழுந்தமிழர்கள் சிந்தித்துச் செயல் படவேண்டிய முக்கிய தருணம் இது.ஈழத்தில் நாம் அடைந்த வேதனையும்,வெட்கமும் உணர்வுள்ளத் தமிழர்களை மென்று,தின்று ,அரைத்துக் கொண்டுள்ளது.உலகிலே நமக்கென்று உள்ள சில நல்ல உள்ளங்கள் நம்மை எதிர்த்தவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்போது ஒரு சிலர் உண்மையைப் புரிந்து கொண்டு நம் பக்கத்து நியாயத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.இன்னும் நமது முயற்சிகள் பல்வேறு வழிகளில் பலரை அடைய வேண்டியுள்ளது.உலக மக்களுக்கு நமது நிலைமையும்,உரிமையும் நன்றாக எடுத்துச் சொல்லப் பட வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் எங்குமே ஆட்சி,அதிகாரத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் டில்லி ஆதிக்கத்தை எதிர்…
-
- 0 replies
- 3.6k views
-
-
பொதுப்படத் தேர்தல் சார்ந்த நடைமுறைகளையே பலரும் அரசியல் என்று கருதுகின்றனர். ஆனால் அது மட்டுமே அரசியல் இல்லை. அரசுகளின் இயங்குமுறை மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களையும் அரசியல் என்றே குறிப்பிடுகிறோம். வகுப்பு(வர்க்க)ப் போராட்ட எழுச்சியை வகுப்பு (வர்க்க) அரசியல் என்றும், புரட்சி நோக்கிய செயற்பாடுகளைப் புரட்சிமய அரசியல் என்றும், தேசம் தழுவிய முயற்சிகளைத் தேசிய அரசியல் என்றுமாகவெல்லாம் குறிப்பிடுகிறோம். போர் என்பது குருதி சிந்தும் அரசியல் என்றும், அரசியல் என்பது குருதி சிந்தாப் போர் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் பின்புலமாக அச் செயலுக்குரிய வகுப்பு (வர்க்க) அரசியல் இருக்கிறது என்று சொல்லப்படுவதைச் சரியாக விளங்க…
-
- 2 replies
- 766 views
-
-
காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும். 1.விடாமுயற்சி 2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை 3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும். மனவலிமையும் படைவலிமையும் இடவலிமையும் பெற்றிருந்தும், காலத்தின் வலிமையைக் கருத்தில் கொள்ளாத ஒரே காரணத்தால் நெப்போலியனும் கிட்லரும் உலகை வெல்லும…
-
- 0 replies
- 942 views
-
-
விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிகாரில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? என எல்லா கட்சிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில், இந்த வெற்றியை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்திப் பார்க்கின்றன. ஆனால் எல்லோருக்குமே படிப்பினையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ÷நிதீஷ்குமார் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என திமுக…
-
- 7 replies
- 1k views
-
-
‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல சிந்தனையாளரும், ஆற்றல் மிக்க எழுத்தாளருமான அருந்ததிராய் வெளியிட்ட கருத்தில், எந்தக் குற்றமும் இல்லை என்பதே நமது உறுதியான கருத்து. அருந்ததிராய் மீது தேச துரோகக் குற்றச்சாட்டை ‘தேச பக்தர்கள்’ வீசுகிறார்கள். வழக்குத் தொடருவதற்கு இந்திய ஆட்சி ஆலோசித்து வருவதாக செய்திகள் வருகின்றன. அருந்ததிராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், பார்ப்பன ஏடுகள் கூக்குரலிடுகின்றன. காஷ்மீர் மக்கள் மீது ராணுவ ஆட்சியைத் திணித்து, அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை துப்பாக்கி முனையில் பறித்து வைப்பதற்குப் பெயர்தான் தேச பக்தியா என்று கேட்க விரும்புகிறோம். தேச பக்தர்களுக்கு சில கேள்விகளை முன் …
-
- 0 replies
- 794 views
-
-
கடந்த வாரங்களில் ஆசியாவில் அமெரிக்காவின் தீவிர இராஜதந்திரப் பிரசாரமானது அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான ஹிலாரி கிளின்டனின் வார்த்தைகளில் சொல்வதானால் சீனாவுக்கு எதிரான முழு மைதானத் தடுப்பு என்கிற மட்டத்திற்குச் சென்றுள்ளது. வருங்காலப் போருக்கான சாத்தியமான களங்களாய் மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணங்களும் மற்றும் வியட்நாம், கம்போடியா, மலேசியா, பபுவா நியூகினி, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஹிலாரி கிளின்டன் மேற்கொண்ட பயணங்களும் அமெரிக்காவின் தலைமையில் சீனாவை மூலோபாய ரீதியாய் சுற்றி வளைப்பதற்கு இருக்கும் கூட்டணிகளைப் பலப்படுத்துவதற்கோ…
-
- 2 replies
- 1.1k views
-
-
"கொழும்பை பற்றிக் கொள்ளும் பரபரப்பு" இலங்கை அரசியலில் கடந்தவாரம் தோன்றிய பரப்பரப்பு அடங்குவதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் செல்லப் போகிறது. கடந்த வருடம் மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், நவம்பர் மாத இறுதியில் இதுபோன்றதொரு பரபரப்புத் தொற்றிக் கொள்வது வழக்கம். புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர்நாள் உரை தான் அந்தப் பரபரப்புக்கான காரணமாக இருப்பதுண்டு. புலிகள் இயக்கம் ஒரு தவிர்க்கப்பட முடியாத சக்தியாக விளங்கிய காலத்தில்இ பிரபாகரனின் மாவீரர் நாள் உரையை அவதானித்து, அதுபற்றி ஆராய்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்கள் கூட உன்னிப்பாக இருக்கும். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. அதனால் ஏற்படும் வழக்கமான பரப…
-
- 1 reply
- 1k views
-