நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019 அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல்,…
-
- 0 replies
- 396 views
-
-
நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்? கலாநிதி அமீர் அலி 1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ' அரசியல் ஹீரோக்கள் ' தமிழர் பிரச்சி…
-
- 0 replies
- 886 views
-
-
தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குழாயடி சண்டைகளுக்கு பெயர்போன இடங்களில் தண்ணீர் பிரச்சனையின் வீரியம் மென்மேலும் அதிகரித்துள்ளதால், சாதாரண சண்டைகள் உயிரை பறிக்கும் தாக்குதல்களாக உருமாறியுள்ளன. காய்ந்து போன அணைகளும், ஏரிகளும் வானத்தை நோக்கி காத்திருக்கின்றன. ஓரளவுக்கு கைகொடுத்து வந்த நிலத்தடி நீரும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாகவும், ஓரிரு வாரங்களில் பிரச்சனை தீர்க…
-
- 4 replies
- 2k views
-
-
ஹேலியர் சுயூங் பிபிசி செய்தியாளர் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய இரண்டு போராட்டங்களைக் ஓரு வாரத்திற்குள் ஹாங்காங் கண்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு மிகவும் வன்முறையான போராட்டம் ஆகும். இந்த போராட்டங்களை முன்னிறுத்தி செயல்படுத்தியது இளைஞர்கள். பெரும்பாலும் தங்கள் பதின்ம வயதை சமீபத்தில் தாண்டியவ…
-
- 0 replies
- 829 views
-
-
அச்சமூட்டும் கட்டுக் கதைகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:10 மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் செயற்பாடுகளில், சிங்களப் பேரினவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உணவு, உடை போன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியவர்கள்…
-
- 0 replies
- 615 views
-
-
புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் என்ற ரீதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஆனால், இந்த முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய விடயம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முக்கியத்துவப்படுத் தும் முகமாக சம்பிரதாயபூர்வமாக மரக்கன்று ஒன்று இந்தியப் பிரதமரால் ஜனாதிபதி மாளிகையில் நாட்டி வைக்கப்பட்டது. அந்த மரக்கன்றின் பெயர் மற்றும் அது…
-
- 0 replies
- 635 views
-
-
ஒரேயொரு வைத்தியரும் பல்லாயிரம் கர்ப்பிணிகளும் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:29 Comments - 0 குருணாகலைச் சேர்ந்த வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனங்களுக்கும் விசாரணைகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளமை ஒருபுறமிருக்க, மறுபுறுத்தில், மருத்துவத் தொழில் மீதான வேறுபல விமர்சனங்களும் புதுவகையான நம்பிக்கையீனங்களும் தோன்றியுள்ளதைக் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. உலகெங்கும் வாழும் மனிதர்கள், கண்கண்ட தெய்வங்களாக மருத்துவர்களைப் பார்க்கின்றனர். தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டதாக மேற்கொள்ளப்படும் சேவையாக, மருத்துவத…
-
- 0 replies
- 734 views
-
-
கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …
-
- 1 reply
- 471 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Contributor இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பிபிசி செய்தியாளர் களத்திற்கு சென்றபோது, கொச்சினில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வுத் துறையின…
-
- 0 replies
- 293 views
-
-
இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே Editorial / 2019 ஜூன் 13 வியாழக்கிழமை, மு.ப. 03:26 Comments - 0 அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது. கடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சு…
-
- 0 replies
- 762 views
-
-
கண்ணால் காண்பதே மெய் -கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் A.P.Mathan / 2019 ஜூன் 12 புதன்கிழமை, பி.ப. 04:54 Comments - 0 எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை, நேரடியாகச் சென்று தெளிவுபடுத்தும் நோக்கில், திங்கட்கிழமை காலையில், அமைச்சர் திருகோணமலைக்குச் சென்றிருந்தார…
-
- 0 replies
- 1.4k views
-
-
கோடி அற்புதர் அந்தோனியாரின் கோலாகலமற்ற திருவிழா இன்றைய திருவிழா திருப்பலி காலை 10 மணிக்கு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் ஜூன் மாதம் 13ஆம் திகதி என்றாலே கொழும்பு கொச்சிக்கடைவாழ் மக்களின் மனதில் குதூகலம் குடிகொண்டு விடும். ஆம், அன்றுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியாருக்குத் திருவிழா எடுக்கும் நாள்; கோலாகலம் நிறைந்த நாள். கொச்சிக்கடைவாழ் மக்கள் மட்டும்தானா...? இல்லை... நாடு முழுவதுமுள்ள புனிதரின் பக்தர்கள் ஆலயத்துக்கு ஓரணியாகத் திரண்டுவந்து கொண்டாடும் திருவிழா இது. புனித அந்தோனியார்...! அவரை நினைத்தாலே போதும், மனதில் கவலைகள், துன்பதுயரங்கள், கஷ்டநஷ…
-
- 0 replies
- 765 views
-
-
காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ? (ஆர்.யசி) அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்…
-
- 0 replies
- 288 views
-
-
அசாத் சாலி சாட்சியத்தின்போது தெரிவித்தது என்ன?: முழு விபரம் இதோ..! - பகுதி 01 (ஆர்.யசி) காத்தான்குடியில் சஹாரான் ஆட்சியே இடம்பெற்றது. ஐ.எஸ் அமைப்பின் கோடியை ஏந்திக்கொண்டு வன்முறை ரீதியிலான அடிப்படைவாத கொள்கையையே அவர்கள் கையாண்டனர். ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிலருடன் அரசியல் உடன்படிக்கைகளும் செய்து கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் எனவும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தவ்ஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மட் அசாத் சாலி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கினார். அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளார். இவர் வெளியில் இருக்கும் வரையில் பயங்கரவாத அ…
-
- 0 replies
- 556 views
-
-
‘காவி’ அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:07Comments - 0 முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும். ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும் சில செயற்பாடுகள் கோமாளித்தனமானவையாக உள்ளன. முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, இனவாதிகளுக்கு இருந்து வந்த ஆத்திரத்தை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தீர்க்க நினைக்கின்றமை, மிகப்பெரும் அயோக்கியத்தனமாகும். ரிஷாட் பதியுதீன…
-
- 0 replies
- 360 views
-
-
இலங்கையில் வெற்றிகரமாக செயற்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக பூகோளப் பங்காளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை ஜெனீவாவில் பிரதானமன்றத்துடனும் பக்க நிகழ்வுகளுடனும் நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. பிரதானமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பத்தில் 1302 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்…
-
- 0 replies
- 540 views
-
-
அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து. சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை …
-
- 4 replies
- 631 views
-
-
நாம் நம்பிய தலைமைகள் தரங்கெட்டவர்களாக மாறுவது தமிழர்களின் தலைவிதி தேர்தல் என்று வந்தால் உங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள் என்று. அப்போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்டமாற்றாகக் கோரியே கொடைகள் தரப்பட்டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே! அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014இல், 2015இல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது அரசியல…
-
- 0 replies
- 758 views
-
-
எமக்கு வேறு வழி இருக்கவில்லை ; முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவு அரசியலில் பாரிய திருப்பம் என்கிறார் ஹக்கீம் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் இராஜினாமா என்பதே தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை நாட்டில் தற்போது காணப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அண்மையில் எடுத்த அரசியல் தீர்மானம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவின் பாரதுரத்தன்மை அதன் விளைவுகள் எதிர்கால நகர்வுகள் குறி…
-
- 0 replies
- 622 views
-
-
சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. பயங்கரவாதி குண்டு வெடிக்க வைத்த தற்காக சாதாரண முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது எவ்விதத்தில் நியாயமாகும். முஸ்லிம் மக்களை தாக்கி அவர்களது சொத்துக்களை அழித்தவர்களை கைது செய்து உடனடியாக விடுவித்துள்ள போது அரசாங்கத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும். எனவே சமூகத்தை பாதுகாப்பதற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் செவிசாய்க்கா விடின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு செயற்படுவோம் என கிழக்கு மாகாண ம…
-
- 0 replies
- 286 views
-
-
“கணவனை மீட்கவே கொலை செய்தேன்” ! June 9, 2019 மயூரப்பிரியன் – சிறையில் உள்ள கணவனை மீட்டெடுக்கவே வயோதிப பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி , கொலை செய்து , அவருடைய நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டேன் என பிரதான சந்தேக நபரான குடும்ப பெண் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். தெல்லிப்பளை பகுதியில் கடந்த மாதம் 06ஆம் திகதி , சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது 70) எனும் பெண் கொலையுண்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் வீட்டில் இருந்த 12 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. விசாரணைகள் ஆரம்பம். குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரே…
-
- 1 reply
- 611 views
-
-
முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அல்லது அமைச்சர்கள் இராஜினாமா என்பதே தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினராலும் பேசப்பட்டு வரும் விடயமாக உள்ளது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை நாட்டில் தற்போது காணப்படுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் அண்மையில் எடுத்த அரசியல் தீர்மானம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவின் பாரதுரத்தன்மை அதன் விளைவுகள் எதிர்கால நகர்வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கேசரி சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம். அதன…
-
- 4 replies
- 463 views
-
-
முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும் - கலாநிதி அமீர் அலி இரு முஸ்லிம் ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூண்டோடு பதவிவிலகியமை இலங்கை ஜனநாயகத்தினதும் முஸ்லிம் அரசியலினதும் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.சில செய்திகள் கூறுவதைப்போன்று, அவர்கள் இன்னமும் தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் கைவிடவில்லையானால், பதவிவிலகல் நேர்மையான ஒரு நடவடிக்கை என்பதை நிரூபிப்பதற்காக அவற்றை உடனடியாக துறந்துவிடவேண்டும்.இரு முஸ்லிம் மாகாண ஆளுநர்களும் ஒரு அமைச்சரும் பதவிநீக்கப்பவேண்டுமென்ற கோரிக்கையை முனவைத்து ஒரு பிக்கு தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமும் இன்னொரு பிக்கு…
-
- 0 replies
- 646 views
-
-
வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:44 Comments - 0 இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது. அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது. ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள்…
-
- 0 replies
- 382 views
-
-
பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செல்வாக்கிற்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர் கடும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை - த இந்து நாசகாரத்தனமான ஒரு உள்நாட்டுப் போரிலிருந்து விடுபட்ட இலங்கை, இனங்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் புதியதொரு ஒப்புரவான சமூக ஒழுங்கை உருவாக்குவதிலும் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "த இந்து", ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நிலைவரத்தின் மீது சில பௌத்த பிக்குமார், அவர்களது அளவுக்கு ஒவ்வாத முறையில் செல்வாக்குச் செலுத்துவதற்கு எதிராகக் கடுமைய…
-
- 0 replies
- 169 views
-