Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் அடையாளங்கள்...

Featured Replies

தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழீழத்தின் தேசிய சின்னங்கள்

இதை எழுதியவர்: Eelam

Sunday, 25 November 2007

தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல் ஊடகங்களில் முன்னரே கசிந்தாலும், மாவீரர் நாளன்றுதான் விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக இத்தேசியச் சின்னங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

தேசியச்சின்னங்களின் பிரகடனத்துடன் தேசிய கீதம் உருவாக்கப்படுவதற்கான வேண்டுகைகளும் விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்டுள்ளன. இந்த தேசியச்சின்னங்களின் பிரகடனமானது தனியரசுப் பிரகடனத்துக்கான விடுதலைப் புலிகளின் ஒரு முன்னோடிச் செயற்பாடாகும்.

தமிழீழ தேசத்தின்

- தேசியப்பூவாக கார்த்திகைப்பூவும்,

- தேசிய மரமாக வாகை மரமும்,

- தேசிய விலங்காக சிறுத்தையும்,

- தேசியப்பறவையாக செண்பகமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அவை பற்றிய முழுiமான விபரங்களை பார்க்கலாம்.

தமிழீழத் தேசியப் பூ: கார்த்திகைப்பூ.

காந்தள் என அழைக்கப்படும் இப்பூ கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும். இம்மலர்க்; கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமனா ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் ~அக்கினிசலம்| எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் ~இலாங்கிலி| எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும். அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரி காலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் ~தோன்றி| என்றும் அழைக்கப்படும். சுதேச வைத்தியத்திலே இதiனை ~வெண்தோண்டி| எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பல பெயர்களால் அழைக்கப்படும்.

கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். இதனாலேயே இச்செடிக்கு மிக மேலான மாட்சிமை பொருந்தியது எனும் பொருளில் புடழசழைளய ளுரிநசடிய என்ற பெயரில் அழைப்பர்.

இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக்கொண்டு 10-20 அடி உயரம் கிளை விட்டுப் படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். செப்ரெம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களின் நிறமானது முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet), அதன்பின் நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.

பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள்;, செங்காந்தள்; என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு வைத்திய முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வித்தியாசப்படுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறிதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.

கார்த்திகைப் பூவின் ஏனைய மொழிப் பெயர்கள் வருமாறு: சிங்களம்: நியன்கல, சமஸ்கிருதம்: லன்கலி, இந்தி: கரியாரி, மராட்டி: மெத்தொன்னி

தாவரவியற் பெயர்: லல்லி ஆசியே குளோறி லில்லி (Liliaceae Glory lily)

தேசத்தின் பூவாம் கார்த்திகைப் பூவினை இனிவரும் காலங்களில் தேசிய நிகழ்வுகள் அனைத்திலும் அணிந்து தேசிய மாண்பினை வெளிப்படுத்துவோம். இல்லங்கள், பொதுக் கூடங்கள், வாணிப மையங்கள், கல்விச்சாலைகள் என எல்லாவிடங்களிலும் கார்த்திகைச் செடி வளர்த்துப் பேணி கார்த்திகைப் பூவால் தமிழர் தேசமதை நிறைத்திடுவோம்.

தமிழீழத்தின் தேசிய மரம்: வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச் சொத்தாக விளங்கி வரும் மரங்களில் வாகை தொன்மையானது. போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலரால் கட்டப்பட்ட மாலைகள் சூட்டப்படுதல் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புண்டு. வெற்றி பெறுதலை வாகை சூடுதல் என்று அழைக்கும் மரபு இந்த வாகை மலர் சூடுதலின் மூலமே வந்திருக்கிறது. சங்க கால இலக்கியங்கள் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்வீகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.

வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகின்றது.

லத்தினில் வாகை 'மமோசா பிளெக்சூஸா" (Mimosa Flexuosa) என்று அழைக்கப்படுகின்றது. அல்பிஸியா என்றும் இது அழைக்கப்படுகின்றது.

இதன் தாவரவியல் பெயர் albizzia odoratissima. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது.

Leguminosae (Mimosoideae) குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக்கூடியது 25 மீற்றர்கள் உயரத்;துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும்.

தென் ஆசியப்பிராந்தியம் தான் வாகையின் பூர்வீகமாகும். இது உலர் வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும், இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழ்விடமாகிவிட்டது. வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.

தமிழீழத்தின் தேசிய விலங்கு: சிறுத்தை

உலகத்திலே மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தை. நமது தாயகத்திலும் மிகவும் வேகமாக ஓடும் விலங்கு இதுதான். சிறுத்தை உயரம் குறைந்த வரண்ட காடுகளில் தான் வாழும். இலங்கையில் சிறுத்தைகள் அதிகம் இருப்பது தமிழர் தாயகத்தின்; வன்னி மன்னார் காடுகளில் தான்.

சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அனுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களிலும் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று 1990-களின் கடைசியில் இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை என அறிவித்தது. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்கவேண்டும் எனவும் கூறிச்சென்றது. இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தைகள் அதிகம் உண்டு. இச்சிறுத்தைகள் சிறியமான், குரங்கு, மயில், காட்டுக் கோழி, முள்ளம்பன்றி, முயல் என்பனற்றை வேட்டையாடிச் சாப்பிடும்.

சிறுத்தைக்குரிய உயிரியல் பெயர் பாந்ரா பார்டஸ்கொட்டியா (panthera pardus kotiya). புலிக்குரிய சிங்களப் பெயர் தான் கொட்டியா. இலங்கை சிறுத்தைக்குரிய உயிரியல் பெயரிடலில் சிங்கள அறிஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் கொட்டியா என்பது இறுதியில் வந்துவிட்டது.

புலி, சிங்கம் பதுங்கிப் பாய்ந்துதான் பிராணிகளை வேட்டையாடும் ஆனால் சிறுத்தை என்ன செய்யுமென்றால் அது பிராணிகளை வேகமாகத் துரத்திச் சென்று வேட்டையாடும். வேட்டைத்தந்திரம் சிறுத்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது என்றும் சிறுத்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சிறுத்தை 25 முதல் 30 கிலோ கொண்ட பிராணிகளை வேட்டையாடி அதை இழுத்துத் தூக்கிக் கொண்டு 8 அடி உயர பாறையிலும் ஏறும் வல்லமை கொண்டது. சிறுத்தைக்கு ஒடுங்கிய அல்லது மெல்லிய நீண்ட உடல் இருப்பதால் வேகமாகச் சுழன்று திரும்புதல், பாய்தல், ஓடி வேட்டையாடுவதல் என்பது அதன் சிறப்புத் திறனாகும். தமிழர் தாயக காட்டுக்கதாநாயகன் தான் சிறுத்தை. இதற்குக்குத் துல்லியமான கேட்டல் திறமை, கூர்மையான பார்வைப்புலன் உண்டு. சிறுத்தையின் வண்ணம் மஞ்சள் கறுப்பு காரணமாக இங்குள்ள வரண்ட காடுகள் அதற்கு நல்ல உருமறைப்பாக உள்ளன. அதனால் சிறுத்தையைக் காடுகளில் இலேசாகத் தனித்துப் பார்க்கமுடியாது. அதோடு சிறுத்தை அதிகம் கர்ச்சிக்காது. மிக அரிதாக அடித்தொண்டையால் உறுமும் அவ்வளவு தான். இங்கு வன்னியில்; 'சருகுபுலி" என்று சிறிய காட்டுப்ப+னையைக் காட்டுவார்கள். ஆனால சருகுபுலி என்று சிறுத்தைதான் குறிப்பிடப்படுகின்றது. தமிழர் தாயகத்திலோ சிங்கள தேசத்திலோ காட்டுப்புலி இல்லை. அது இந்தியாவில் தான் இருக்கிறது. புலி இந்தியாவின் தேசிய விலங்கு. சிறுத்தை 'பெலிடே" என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங்கு இருக்கின்ற நமது தேசியத்தன்மை வாய்ந்த தனித்துவ விலங்கு சிறுத்தை தான். சிறுத்தையை ஆங்கிலத்தில் 'லெப்பேட்" என்று அழைப்பார்கள்.

சிறுத்தையின் வேறு இனங்கள் உலகத்தின் வேறு நாடுகளில் வாழ்கின்றன. பாந்தர், சீற்றா என்ற இனங்களில் எல்லாம் உலகத்தில் சிறுத்தைகள் இருக்கின்றன. அவற்றைவிட இங்குள்ள காட்டு சிறுத்தைகள் தனித்துவமானவை. உலகத்தில் மிக அருகி வரும் விலங்கு சிறுத்தை. தமிழர் தாயக தேசிய விலங்காக இருக்கின்ற பாந்ரா பார்டஸ் கொட்டியா இன சிறுத்தையும் உலகின் முழுதாக அழியும் தறுவாயில் இருக்கின்ற மிக அரிதான விலங்கு. இதனை வேட்டையாடாமல் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். வேட்டைக்காரர்கள் பல்லுக்காகவும் தோலுக்காகவும் சிறுத்தையை வேட்டையாடுவார்கள். உணவுச்சங்கிலியில் முதலாவதாக சிறுத்தையே உள்ளது. சிறுத்தையை அழித்தால் இங்குள்ள உணவுச்சங்கிலியில் மோசமான பாதிப்பு வரும். இந்த சிறுத்தை தமிழரின் தொன்மையான சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்படுகின்றது. அதுவே தமிழீழத்தின் தேசிய விலங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியப்பறவை: செண்பகம்

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீகத்தன்மை கிடையாது. அவை காலத்துக்கு காலம் தமக்கு ஏற்ற கால நிலைக்காக புலம்பெயர்ந்து கொண்டேயிருக்கும். சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒருதடவை புலம்பெயரும். சில குறுகிய காலத்தில் புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப்பெயர்வுக்குட்படுவதில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.