Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    122
  • Joined

  • Last visited

Everything posted by தமிழ்நிலா

  1. மிக்க நன்றிகள் 🙏 உண்மை தான்...மிக்க நன்றிகள்🙏
  2. புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான் புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான் புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான் மர்மம் உடைக்கவே ஆறறிவில் சிந்திக்கிறான் தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான் வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்! தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான் வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான் ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான் வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல் வாழ்வை வாழ்ந்தோமென வாழ்த்துச் சொல்கிறான் யார் யாரோ நடத்திய வழியில் எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்! வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான் உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான் பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான் தனிமை மட்டுமே உறவாய் கொள்கிறான் எத்துணையும் இன்றி கண்ணீர் வடிக்கிறான் கண்ணீரை மட்டுமே தன்துணை ஆக்கிறான் முன்னோர் வழி பார்த்து கடமை முடிக்கிறான் கடமை முடிந்தால் வாழ்வு முடிந்ததாகக் கொள்கிறான் இவை எல்லாமே புதிரான மனிதன் கொண்டாடும் வாழ்க்கை வழிப்பாதை புதிரான மனதை ஆட் கொள்ளும் எவரோ விதைத்த விளையாட்டுப்பாதை பயந்தவன் அதனை இறை என்கிறான் வியந்தவன் அதனின் மர்ம முடிச்சை அவிழ்க்க நினைக்கின்றான் அவிழ்க்கும் முன்னே அழிந்தும் விடுகின்றான்! -தமிழ்நிலா.
  3. மிக்க நன்றிகள் சகோதரன்🙏 மிக்க நன்றிகள் அண்ணா 🙏
  4. மிக்க நன்றிகள் 🙏 மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா 🙏
  5. தேவைகளுக்கு என்றும் இல்லை முற்றுப்புள்ளி தேடல்கள் அதிகமாகும் போது தேவைகள் அதிகமாகுகின்றன தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று பிணமாகக் கிடக்கின்றான் நேற்று சுகத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று சுமையாகக் கிடக்கின்றான் நிம்மதிக்கான தேவையே இங்கு தேவைப்படுகின்றது ஆனால் நிம்மதி மட்டும் நிற்காமல் செல்கின்றது...! எதற்காக இந்தத் தேவை...? எவருக்காக இந்தத் தேவை...? புரியாத இந்தத் தேவை முடியாதோ இந்தத் தேவை...? முடிந்து விடும் ஒரு நாளில்... மனிதனைத் தேடும் அந்த மண்ணறையின் தேவை ஒரு நாள் தீர்ந்து விடும் போது..! -தமிழ்நிலா.
  6. மெய்யுடல் தனை மென்மையாகத் தழுவிச் செல்லும் இளந்தென்றலின் அழகான ஒரு தீண்டலில் கலந்திருக்கின்றது கரைப்பதற்கும் கரைந்து கொள்ள இசைவதற்குமான முடிவு! அழகுடல் தனையுடைய அணங்கவளின் ஆரவாரமான நகைப்பொலியினைப் போல சலசலத்து ஓடும் நதியின் ஓட்டத்தில் சிக்குண்டு ஓரிடத்தில் நிலையாமல் தடுமாறி தன்னுரு மாறும் கல்லின் முடிவற்ற தீர்வில் அமைந்திருக்கின்றது நகர்ந்து செல்வதற்கும் நகராமல் நிலை கொண்டு எதிர்த்து நிற்பதற்குமான தெளிவு! பொய்யுடல் தனைப் பொலிவுடன் அலங்கரிக்கும் பூமாலை தனிலிருந்து நுதல் தழுவி முகம் வருடி உடல் தீண்டி காலடியில் கழன்று விழும் பூவிதழின் நிலையற்ற நிலையாமையில் மறைந்திருக்கின்றது பயன்பெறுவதற்கும் பயன்மட்டும் பெறுவதற்குமுண்டான வேறுபாடு! -தமிழ்நிலா.
  7. பொருள் விசையும் போலத்தான் மனிதரும் காதலும்❤❤❤ இரு பொருட்களாகிய ஆணும் பெண்ணும் ஒரு நேர்கோட்டில் சீரான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது விசையாகிய காதல் பொருட்களாகிய ஆணையும் பெண்ணையும் அவர்களது சீரான வாழ்க்கை முறையிலிருந்து மாற்ற முயற்சிக்கும் தள்ளும்,இழுக்கும்,வீழ்த்தும் அதுவே காதல்🤣 எந்த ஒரு விசையாகிய காதலுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உண்டானாலே அது வெற்றியளிக்கும் ஆணாகிய பொருளுக்கும் பெண்ணாகிய பொருளுக்கும் சமமான எதிர் விசையாகிய காதல் உருவாகினாலே அது நிலைக்கும் இல்லையெனின் ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு பொருளை விசை எனும் காதல் ஒருதலைக் காதல் எனும் கவலைக் கிடங்கில் இழுத்து வீழ்த்தும்,தள்ளும்🙄 நிறைகளை மட்டுமே கண்டு ஈர்ப்படைந்து காதல் உருவாகி பின் குறைகளைக் கண்டு மறைவாகும் காதலான ஈர்ப்பியல் விசையாகிய காதல் மிகவும் வலிமை குன்றிய காதல்...நிலைக்காது...🙄 திடீரென்று கண்டவுடன் மின்னல் மாதிரி வந்து காந்தம் மாதிரி ஒட்டிக் கொள்ளும் காதலான மின்காந்த விசையாகிய காதல் இலகுவில் பிரியாது கடுமையாக இழுத்துப் பிரித்தால் தான் விலகும் ஈர்ப்பியல் விசையாகிய காதலை விட இது கொஞ்சம் வலிமை கூடிய காதல்...ஓரளவுக்கு நிலைக்கும்...😊 இரண்டு வலிமை மிக்க விசைகளாகிய காதலினை உடைய இதயங்களைக் கொண்ட பொருட்களான ஆணும் பெண்ணும் இணைந்து கொண்ட மிகப் புரிதலுடன் கூடிய விசையாகிய காதலாகிய வலிமை மிக்க அணுக்கருவிசைக் காதலானது சாதி மத நிற பண அழகு பேதமற்று இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் எழுதி வைத்தான் அன்று என வரும் காதல்...என்றும் அழியாது...இறப்பிலும் தொடரும்...💪 ஆரம்பத்தில் உறுதியாக உருவாகி பின்பு நீண்ட காலம் இழுபட்டு பின்பு போதிய புரிதல் இல்லாமையினால் சிதைவடைந்து பிரிவடையும் காதல்... வலிமை குன்றிய அணுக்கருவிசைக் காதல்... ஈர்ப்புவிசையாகிய காதலளவுக்கு வலிமை குன்றிய காதல் அல்ல...😐 ஆனால் சில விதிவிலக்கான மனிதர்களாகிய பொருட்கள் மட்டும் எந்த வித புறவிசையாகிய காதலும் இல்லாமல் தன்னிச்சையாக தானே நிலையை மாற்றிக் கொள்ளாமல் மாட்டுப்படாமல் நிலைமமாக இருப்பார்கள்...இவர்கள் சுயநலவாதிகளா?பொறுப்பற்றவர்களா? பற்றற்றவர்களா?🤔🤔🤔 -தமிழ்நிலா.
  8. பிறத்தல் என்பது புண்ணியமானதே வாழ்தல் என்பது பாவமானதே இறத்தல் என்பது தவமானதே பாவத்தில் இருந்து விடுபடும் தவமாய் இறப்பினைப் பார்த்தால் இறப்பும் இங்கு மகிழ்வானதே! துன்பத்தில் துவள்வதும் துளிர்ப்பதற்காகுமே தோல்வியால் வீழ்வதும் எழுவதற்காகுமே துவள்வதும் வீழ்வதும் வாழ்வதற்காகுமே என எண்ணித் துணிந்தால் தோல்வியும் இங்கு அழகானதே! துணை வந்த உறவும் தொலைந்து போனாலும் தோள் கொடுத்த தோழமையும் விட்டு விலகிப் போனாலும் நடந்த நினைவுகளோடு கடந்து செல்ல பழகிக்கொண்டால் தனிமையும் இங்கு துணையானதே! துன்பம் என்று ஒன்றும் இல்லையே இங்கு துவண்டு போக தேவை இல்லையே நிஜம் என்று ஏதும் இல்லையே இங்கு உன் நிழலும் கூட உனக்குச் சொந்தமில்லையே! பார்வை இல்லாமல் நல்லதைப் பார்ப்பவனும் உண்டு கண் பார்வை கொண்டு கெட்டதில் வீழ்ப்பவனும் உண்டு யாவும் இங்கே உன் எண்ணத்தின் நிகழ்ச்சியாகுமே கஷ்டமும் இஷ்டமும் உன் மனதின் புரட்சியாகுமே! மரணத்தை நோக்கியே உன் பயணம் தொடருமே இடையில் ஏன் தான் இத்தனை மயக்கமே எல்லாம் இங்கு மாயையாகுமே இதை உணர்ந்து கொண்டால் எல்லாம் இங்கு இன்பமாகுமே! -தமிழ்நிலா.
  9. மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர் மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆 -தமிழ்நிலா.
  10. வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம் வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார் தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே! காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும் சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும் கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே! பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும் வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும் ஆய்ந்திடின் உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும். ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்! ஆட்பலம் பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால் வனைகலன் பலம் கொண்டே மக்கள் வாய்தனை அடைத்த போதும் நாட்பல சென்ற பின்னே நாட்டினில் வாய்மை ஒன்றே நாட்டுமே தன் பலத்தை நாமிதை அறிதல் நன்றே! -தமிழ்நிலா.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.