Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்னல்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by மின்னல்

  1. 27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
  2. 27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர். தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
  3. 25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  4. 24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும் அதே நாள் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின்மீது அழுத்தவும்
  5. 23.09.1990 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் குயில் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
  6. 22.09.1998 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் அருணா(அருணன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், 22.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் புத்தொளி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்ம மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் ஒளிப்படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
  7. 19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்(19.09.2010) கீழேயுள்ள படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
  8. சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வளங்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையே இவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரர்களின் ஒளிப்படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
  9. அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திய இவர்கள் எதிர்பாராத விதமாக கிளைமோர் வெடித்ததினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
  10. 20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 6ம் ஆண்டு நினைவு.
  11. இப்போது இதுவே வாடிக்கையாகி விட்டது. பிழையைச் சுட்டிக்காட்டினால் நீ வந்து நடத்திப்பார் எண்டு வாயை அடைக்க முயல்வது ஏற்புடையதல்ல. நிதர்சன் பத்திரிகையில் விளம்பரம் போடுவது என்ன குற்றமா? விளம்பரத்தால் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் இலவசப் பத்திரிகைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இலவசப் பத்திரிகைகளுக்குத் தான் தமது விளம்பரத்தைக் கொடுக்க விளம்பர தாரர்கள் தயாராக இருப்பார்கள். பரபரப்பு போன்ற பத்திரிகைகளிற்கல்ல (அதனாலேயோ என்னவோ பரபரப்பில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை). உம்மைப்போன்றும், என்னைப்போன்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களிற்கு மாத்திரம் பத்திரிகைகள் இல்லை. அனைத்துத் தரப்பினருக்கும் செய்திகள் தெரிய வேண்டும். எனவே இணையச் செய்திகளை பத்திரிகையில் பிரசுரிப்பது தவறல்ல. எழுத்துப்பிழையில்லாமல் வந்தால் பத்திரிகை தரமான பத்திரிகையா? அமெரிக்க இராணுவத்தின் படங்களைப் போட்டு கவர்ச்சி கரமாக முன்பகத்தை வடிவமைத்தால் அது தரமான பத்திரிகையா? ஒன்று தெரியுமா? ஈழத்தமிழ் பத்திரிகைளிடம் இருக்கும் தரமான எழுத்து பரபரப்பிடம் இல்லை. பேச்சு நடையில் கட்டுரை எழுதப்படுவது பரபரப்பில் மாத்திரம்தான். நிதர்சன் இதுவெல்லாம் தேவையில்லாத விடயங்கள். பரபரப்பின் தவறைச் சுட்டிக்காட்டினால் அதற்கு வக்காளத்து வாங்க மற்றப்பத்திரிகைகளில் வரும் தவறுகளை சொல்லி பரபரப்பை நியாப்படுத்தாதீர்கள்.
  12. நானும் உம்முடன் எதிர்வாதம் செய்யவோ அல்லது பரபரப்பு மீதோ வீண்பழி சுமத்த வரவில்லை நிதர்சன். பரபரப்பு போன்ற ஊடகங்களை நியாப்படுத்த புலிகளின் அறிவிப்பிலேயே பிழை கண்டு பிடிக்கிற உங்களின் தவறை சுட்டிக்காட்டவே எனது பதில் ஆரம்பித்தது. நீங்கள் புலிகளின் பிழையற்ற அறிவிப்பை தவறென்று சொல்லலாம் ஆனால் நாங்கள் பரபரப்பின் தவறை தவறென்றால் அது வீண்பழி என்கிறீர் இது என்ன நியாயம்.? நான் நினைப்பது சரி, நினைப்பது நடந்திருக்கலாமெண்டு எப்ப நிதர்சன் சொன்னேன்? எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய ஊடகங்கள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதே எமது ஆதங்கம். ஒரு சிறிய விடயத்தை ஊதிப் பெருப்பித்து மக்களை முட்டாளாக்கி வருவதையே விமர்சிக்கிறோம். அதுவே அவற்றின் மீதான விமர்சனம். இது தனியே பரபரப்பின் மீது மாத்திரமல்ல. என்பதைப் புரிந்து கொள்ளும். நான் கனடாவில் இருந்தால், அதே நாட்டில் இருந்து வெளியாகும் பரபரப்பில் வருகிறவற்றையெல்லாம், நம்ப வேண்டு என்று சொல்கிறீரா? அல்லது பரபரப்பில் வருபபையை நம்புங்கள் என்று இங்கே யாரும் பரப்புரை செய்தார்களா? சரி நான் அறியாத அந்த சில விடயங்களை நீரே சொல்லும் இங்கே உள்ள கள உறவுகளும் அறிந்து கொள்ளட்டும். நிதர்சன் பரபரப்பு மிக்-வன்னியில் தரையிறக்கப்பட்டது, விமானி புலிகளின் ஆள் என்று எழுதியதெல்லாம் பரபரப்புக்காரர் தமது கற்பனைக் குதிரையை வன்னிக்கு மேலே பறக்க விட்டே எழுதியுள்ளனர். இதனை தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கிறார்கள் எண்டு நீர் நினைக்கிறதை நான் என்னென்டு சொல்ல? நிதர்சன். பரபரப்பில் வருபவையெல்லாம் தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கப்படுகின்றன என்று நினைத்து கொண்டா அதன்மீது இப்படி கரிசனை காட்டுறீர்? தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு செய்தியை வெளியில் சொல்ல வேண்டுமென்றால் பரபரப்பின் வாசர்களிற்கு மட்டும் சொல்ல மாட்டார்கள். உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத விடயமும் வெளியே வரவேண்டுமென்றால் அதனை செய்வதற்கு மக்களை இலகுவில் சென்றடையும் பல பிரபலமான ஊடகங்கள் இருக்கின்றன. நிதர்சன் பரபரப்பு பத்திரிகையை மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சிறு விடயத்தையும் ஊதிப்பெருக்கி வெளியிடுகிறார்கள். இவர்கள் எமது போராட்டத்திலும் பார்க்க தமது பத்திரிகையின் விற்பனையையே பிரதானமாக நினைக்கின்றனர். சண் டிவி குழுமத்தின் சொத்தின் மதிப்பு 17000 கோடி. இவ்வளவு பெரும் சொத்தைக் கொண்டுள்ளவர்கள் தமது பத்திரிகைகளை விற்க அவர்கள் செய்யும் நரித்தனங்கள் எத்தனை. ஏன் இதனைச் சொல்கிறேன் தெரியுமா? வேறு வழியில் அதிக வருமானம் கிடைத்தாலும் பத்திரிகை விற்பனையிலும் கவனம் செலுத்துவார்கள் என்பதற்கு உதாரணம்
  13. நிதர்சன் பரபரப்பு சொன்ன மாதிரியே புலிகள் மிக் விமானத்தை வன்னியில் தரையிறக்கிறது உண்மையென்று வைத்துக் கொண்டால், அதனை வெளியே தெரியாது விடவேண்டுமென்பதற்காகவே சுட்டுவிழ்த்தப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு. புலிகள் மறைக்க முயன்ற விடயத்தை (போராட்ட ரகசியத்தை) கிணற்றுத் தவளை அல்லாதோரால் நடத்தப்படும் பரபரப்பு பரகசியப் படுத்துவது எதற்கு? போராட்டத்தின் நலனிலும் விட தமது பத்திரிகையின் விற்பனையிலேயே அவர்கள் கரிசனை காட்டுகிறார்கள்; என்பது உங்களிற்கு விளங்கவில்லையா? இப்படி எழுதுபவர்களை ஊடகவிபச்சாரிகள் என்று சொல்வதில் தப்பில்லை. நிதர்சன் இதே மிக் சுடப்பட்டது தொடர்பாக புலிகளின் இராணுவ அதிகாரிகள் சொன்னதாக தமிழ்நெட்டில் வெளியிட்பட்ட செய்தி Military officials of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Ira'naimadu area இதில் கிபிர் எண்ட சொல் பயன்படுத்தப்படவில்லை. பரபரப்பு மீதான விமர்சனத்தை வேண்டாத விமர்சனமாக கருதும் நீர் நீர் புலிகளின் (தவறில்லாத) அறிவிப்பை தவறு எண்டு சொல்கிறீரே?
  14. நிதர்சன் பரபரப்புக்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக நீர் கதையளக்காதையும். கிபிரைச் சுட்டது என்று புலிகள் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை. கிபிர் இரணைமடுவில் வைத்து சுடப்பட்டதாகவும், அது புகையைக் கக்கியவாறு தென்பகுதி நோக்கிச் சென்றதைப் பொது மக்கள் பார்த்ததாகவும் தமிழ்நெட் இணையமே செய்தி வெளியிட்டது. அச்செய்தி வந்து சில மணி நேரத்தின் பின்னர் புலிகளின் படைத்துறைப் போச்சாளர் இளந்திரையன் மிக் விமானம் சுட்டுவிழ்த்தப்பட்ட ஊடகங்களிற்கு உறுதிப்படுத்தினார். இளந்திரையனோ அல்லது புலிகளின் வேறு எந்த பிரமுகரோ கிபிர் சுட்டு விழுத்தப்பட்டதாகத் தெரிவிக்க வில்லை. எனவே ஊடக விபச்சாரிகளிற்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக இங்கை வந்து கதையளக்காதையும்.
  15. காசு கொடுத்து பேப்பர் வாங்கிற ஆக்கள் இப்படியான பேப்பருக்குக்; கொடுக்கிற காசை வேறு ஒரு பேப்பருக்கு(கனடாவிலை) கொடுத்தால் கொஞ்சமாவது நன்மையாக இருக்கும்.
  16. வேலவன் நெடுக்காலை போனவன் புலிகளின் தீவிர ஆதரவாளரோ இல்லையோ ஆனால் அவர் ஒரு விதண்டாவாதி என்பது இங்கு அனைகருக்குத் தெரியும்.
  17. டங்கிளாஸ் இந்த சந்தோச நேரத்தில்லை அதுகளையெல்லாம் பற்றிக் கதைப்பான் Be happy. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ சிங்கள வான்படையின் மிக்-வானூர்தியை சுட்டு வீழ்த்திய ராதா வான்காப்புப் படையினருக்கு நன்றிகள்.
  18. பிரபாகரன் அவர்கள் உணர்ச்சிகளிற்கு இடம்கொடுக்காது எல்லாவற்றையும் தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப வெற்றிகரமாக செயற்படுத்துபவர் என்பது இன்றைய மிக் விமானம் மீதான தாக்குதலும் சொல்கிறது. வான்படை வானூர்தி எதிர்ப்புப் படை என்பன தலைவரின் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப இறுதிப் போரிற்கான தமது செயற்பாட்டைத் தொடங்கி விட்டன. விரைவில் தமிழரின் தரைப்படைகளும் தமது செயற்பாட்டை தொடங்குமென எதிர்பார்க்கலாம். இனி சிங்களத்திற்கு அழிவு காலம்தான்.
  19. ஏற்கனவே காலி துறைமுகத் தாக்குதல் நடைபெற்ற போது நீர்கொழும்பு வாவியில் வீழ்ந்த கிபிரும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்கா அரசின் விசாரணையின்போது தெரிய வந்ததாம். அனால் அந்த தாக்குதல் தரையிறங்க விமானம் பதிந்து வந்தபோது நடந்தது. ஆனால் இன்றைய கிளிநொச்சித் தாக்குதல் வழமையான கிபிரின் பறப்பு உயரத்தில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இனி கிபிர்களிற்கு தொடர்ந்து சங்கு ஊதப்படப்போகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.