Everything posted by மின்னல்
-
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள்
- ரிவிகிரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் - 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் இதேநாள் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய 2ம் லெப்டினன்ட் புகழ்மதி (பாலசிங்கம் கலைவாணி - வவுனியா) அம்பாறை 13ம் கொலணியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் சுரேஸ்குமார் (ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன் - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் பானுகன் (கைலாயப்பிள்ளை சபாரத்தினம் - மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் விபரங்கள். அரியாலைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி - மட்டக்களப்பு) மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா - யாழ்ப்பாணம்) மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா - வவுனியா) மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி - யாழ்ப்பாணம்) மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி - யாழ்ப்பாணம்) கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா - மட்டக்களப்பு) கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி - மட்டக்களப்பு) கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி - யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி - யாழ்ப்பாணம்) கப்டன் தமிழினி (நடராசா ரஞ்சிதமலர் - யாழ்ப்பாணம்) கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் - முல்லைத்தீவு) கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி - வவுனியா) லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா - மட்டக்களப்பு) லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து - மட்டக்களப்பு) லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி - திருகோணமலை) லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி - கிளிநொச்சி) லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா - கிளிநொச்சி) வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி - கண்டி) வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா - முல்லைத்தீவு) வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து - திருகோணமலை) வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் - திருகோணமலை) வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி - வவுனியா) வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் - முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் - மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் - முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் - முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் - முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் - முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் - யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் - கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் - கிளிநொச்சி) கல்வயல் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி - முல்லைத்தீவு) கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி - முல்லைத்தீவு) லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா - வவுனியா) 2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா - கிளிநொச்சி) வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி - கிளிநொச்சி) வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி - மட்டக்களப்பு) கனகம்புளியடியிலிருந்து முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் - யாழ்ப்பாணம்) கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் - யாழ்ப்பாணம்) கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் - மன்னார்) கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் - மன்னார்) வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் - முல்லைத்தீவு) வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் - கிளிநொச்சி) கொழும்புத்துறைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் - கண்டி) வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி - திருகோணமலை) வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் - யாழ்ப்பாணம்) சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் - மன்னார்) லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி - வவுனியா) 2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி - அனுராதபுரம்) 2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவழநாயகி - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி - மன்னார்) வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி - முல்லைத்தீவு) வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ - கிளிநொச்சி) வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி - யாழ்ப்பாணம்) நாவற்குழிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் - யாழ்ப்பாணம்) கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி - முல்லைத்தீவு) வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் - கிளிநொச்சி) மட்டுவில் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் - யாழ்ப்பாணம்) கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் - கிளிநொச்சி) லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் - யாழ்ப்பாணம்) வண்ணாத்திப்பாலம் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் - கிளிநொச்சி) கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் - யாழ்ப்பாணம்) கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் - யாழ்ப்பாணம்)- கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் - மேஜர் நகுலன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காவியமான இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.09.1995 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாஸ் - காரைநகர், யாழ்ப்பாணம்) கப்டன் பூவேந்தன் (வாரித்தம்பி ஜெயக்குமார் - தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் செங்கண்ணன் (சிவஞானம் சிவநேசன் - கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் மட்டக்களப்பு மாவட்டம் திருக்கணாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரவேங்கை ஜீவகுமார் (சித்திரவேல் உதயகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு) குடும்பிமலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கப்டன் சிறிதாசன் (புவனேசசிங்கம் வேதாரணியம் - கொக்கட்டிச்சேலை, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்- கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் 11ம் ஆண்டு நினைவு நாள்
பருத்தித்துறைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலி மேஜர் குமரவேல் மற்றும் பளையில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தணிகைமதி ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 01.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீரூந்து விசைப்படகு ஒன்றினைத் தாக்கியழிக்கும் முயற்சியின் போது கடற்கரும்புலி மேஜர் குமரவேல் (மதி) (கிருஸ்ணபிள்ளை சிவகுமார் - காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தேசத்துரோகி ஒருவரின் காட்டிக்கொடுப்பினால் தாக்குதல் திட்டத்தினை ஊகித்துக் கொண்ட சிறிலங்கா கடற்படையினர் அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களை தமது படகில் ஏற்றியிருப்பதை தெரிந்து கொண்ட கடற்கரும்புலி மேஜர் குமாரவேல் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் கடற்படைப் படகிற்கு தொலைவாக வைத்து தனது படகினை தகர்த்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இந்த மாவீரரினதும் இதேநாள் பளைப்பகுதியில் இடம்பெற்ற ஊர்தி விபத்தில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை தணிகைமதி (முத்துவேல் திருச்செல்வம் - புதுமுறிப்பு, கிளிநொச்சி) என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் தாக்குதல் முயற்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் http://www.youtube.com/watch?v=QqzCAdb3X0Q- கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் - கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு
பருத்தித்துறைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் - கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேபீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) (சுப்பிரமணியம் நாதகீதன் - அரியாலை - யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் மணியரன் (வேதநாயம் ராஜரூபன் - குடத்தனை, மணற்காடு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரத்தமிழிச்சி” செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரத்தமிழிச்சி செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன்இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 10 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு
அம்பாறையில் காவியமான அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் ரஞ்சன் உட்பட்ட 8 மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய இரு மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய அம்பாறை மாவட்டத் தளபதி லெப்.கேணல் மாருதியன் (ரஞ்சன்) (செல்லத்துரை பிரபாகரன் - தம்புலுவில், அம்பாறை) கப்டன் கமால் (கந்தையா செல்வராசா - அம்பாறை) கப்டன் மதனமோகன் (கிறிஸ்ரி) (செல்லத்துரை நாகேந்திரன் - கோமாரி, அம்பாறை) லெப்டினன்ட் நவரங்கன் (நிசாந்தன்) (கிருஸ்ணபிள்ளை ராஜமோகன் - தம்புலுவில், அம்பாறை) 2ம் லெப்டினன்ட் அறிவொளி (பீதாம்பாரம் ரவிச்சந்திரன் - கன்னங்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை இந்திரன் (செல்லையா ராஜீ - பொத்துவில், அம்பாறை) வீரவேங்கை லிங்கேஸ்வரன் (தில்லையன் சிவராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும், அம்பாறை மாவட்டத்தில் சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (காதர்) (நாகப்பன் விஸ்வநாதன் - குருக்கள்மடம், மட்டக்களப்பு) என்ற மாவீரரினதும் யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் அக்காச்சி (அப்துல்லா) (செல்வரத்தினம் குமரசீலன் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தில்லைநாதன் (நல்லதம்பி நகுலேஸ்வரன் - கொடிகாமம், யாழ்ப்பாணம்) ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் ராஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு
மாதகலில் காவியமான மேலாளர்கள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் உட்பட்ட ஒன்பது மாவீர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 27.08.1992 அன்று யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம் பெற்ற மோதலில் மேலாளர்கள்(அதிகாரிகள்) பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்) (சோமசுந்தரம் சற்குணம் - மாதகல், யாழ்ப்பாணம்) கப்டன் கணேசன் (கணேஸ்) (புண்ணியமூர்த்தி ரகு - கந்தளாய், திருகோணமலை) கப்டன் வன்னியன் (கணபதிப்பிள்ளை கணநாதன் - துணுக்காய், முல்லைத்தீவு) லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்) (சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் - யோகபுரம், முல்லைத்தீவு) லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்) (சாமித்தம்பி மகிந்தன் - புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா) (பாஸ்கரன் பிரபாகரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்) (இரமயநாதன் புனிதராசன் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை மதியழகன் (நடராசா பூவிலிங்கம் - புலோப்பளை, யாழ்ப்பாணம்) வீரவேங்கை அறிவழகன் (நாகலிங்கம் சிவகுமார் - கும்பிழான், யாழ்ப்பாணம்.) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். லெப்.கேணல் ராஜன் அவர்கள் பற்றிய குறிப்பு: http://www.veeravengaikal.com/index.php/commanders/108-lt-col-rajan-satkunam-somasundram-mathagal- கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன் - கப்டன் மதன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு நாள்
26.08.1993 அன்று கிளாலி நிரேரியூடாக போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத் தாக்கவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை நடாத்தி கடற்படையின் இரு நீருந்து விசைப்படகுகளைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலிகள் இருவர் உட்பட ஐந்து போராளிக்ள வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்) (கந்தசாமி இராமசந்திரன் - கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் மதன் (சீனிவாசகம் சிவகுமார் - மட்டக்களப்பு) கடற்புலி கப்டன் சிவா (முத்துலிங்கம் கருணாநாதன் - குச்சவெளி, திருகோணமலை) கடற்புலி லெப்டினன்ட் பூபாலன் (சுந்தரராஜ் பாஸ்கரன் - நாகர்கோவில், யாழ்ப்பாணம்) கடற்புலி 2ம் லெப்டினன்ட் சுரேந்திரன் (சபாரத்தினம் சிவாகரன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கேணல் ராயூ அவர்களின் 10ம் ஆண்டு நினைவு
சுகவீனம் காரணமாக சாவடைந்த கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். கேணல் ராயு அவர்கள் தொடர்பான குறிப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அண்ணை புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது. “முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார். ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார். ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும். விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று. விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது. இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார். பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார். தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன. 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும். அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது. சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது. சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின. அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது. 1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார். ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள். 1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை. ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம். பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது. 1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார். ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார். எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும். ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது. அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார். தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை. வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது. இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”. ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.- மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
மட்டக்களப்பு அம்பிலாந்துறை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படை முகாம் மீதான தாக்குதலின்போது காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படைமுகாம் மீது 24.08.1995 அன்று விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு படைத் தரப்பிற்கு பலத்த அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தாக்குதலின்போது 27 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: மேஜர் கதிரேசன் (ஜோன்சன்) (காசிபதி கமலநாதன் - சல்லிதீவு, அம்பாறை) லெப்டினன்ட் சுரேந்தர் (செல்வராசா சங்கர் - கரடியனாறு, மட்டக்களப்பு) லெப்டினன்ட் முகுந்தராஜ் (கருவல்தம்பி காங்கேயன் - செங்கலடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஜெயமறவன் (மாறன்) (கந்தசாமி அருளானந்தம் - கன்னங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் தமிழன் (பிரபா) (செல்லத்துரை ஆனந்தன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மணிராஜ் (நல்லதம்பி கிருபைராகா - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் சந்திரன் (மதன்) (மகாலிங்கம் சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மருதன் (விகீதன்) (சண்முகம் ரவிச்சந்திரராஜா - தாழங்குடா, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இளந்தளிர் (இளந்திரையன்) (சுப்பிரமணியம் நிமலன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ரமணாகரன் (நளினன்) (சுந்தரலிங்கம் ஜீவா - வந்தாறுமூலை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் உருத்திரராஜன் (உருத்தி) (நாகலிங்கம் காசிநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் திருச்செல்வம் (கிருஸ்ணபிள்ளை பரமதேவன் - துறைநீலாவணை, அம்பாறை) 2ம் லெப்டினன்ட் றீகாம்பரம் (கணபதிப்பிளை சந்திரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சந்திரநேசன் (அழகையா கமலநாதன் - குருக்கள்மடம், மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ராஜேஸ்குமார் (சந்திரன்) (சௌந்தரராஜன் சிறீஸ்கந்தராசா - வீச்சுக்கல்முனை, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சிந்துபாலன் (பாக்கியராசா சுவிகரன் - பெரியபேராதீவு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் தவபாலன் (கணபதிப்பிள்ளை கிருஸ்ணபிள்ளை - சந்திவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை ஈழமணி (நல்லதம்பி குணசீலன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) வீரவேங்கை நேசதுரை (முகிலன்) (இராஜதுரை இராஜேஸ்வரன் - கிரான், மட்டக்களப்பு) வீரவேங்கை தவராஜ் (சாமித்தம்பி ஜெகநாதன் - தம்புலுவில், அம்பாறை) வீரவேங்கை பாலக்குமார் (செம்பாப்போடி திருகுலசிங்கம் - முதலைக்குடா, மட்டக்களப்பு) வீரவேங்கை துலாதரன் (வாசகன்) (ஜோசப் அரியதாசன் - மட்டக்களப்பு) வீரவேங்கை கஜிந்தன் (வசிகரன்) (சிதம்பரப்பிள்ளை சம்பந்தமூர்த்தி - சித்தாண்டி, மட்டக்களப்பு) வீரவேங்கை சிவபாலன் (செல்வராஜா சிங்காரவேல் - வாழைச்சோனை, மட்டக்களப்பு) வீரவேங்கை கிளி (கிருஸ்ணபிள்ளை இராமநாதன் - செங்கலடி, மட்டக்களப்பு) வீரவேங்கை துசரூபன் (கந்தையா ரட்ணகுமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) வீரவேங்கை சுக்கிரீபன் (பிள்ளையான் குணரெத்தினம் - சித்தாண்டி, மட்டக்களப்பு) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களினதும் காங்கேசன்துறையில் காவியமான வீரவேங்கை மயூரனினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 25.08.1990 அன்று யாழ். மண்டைதீவுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் லெப்டினன்ட் இன்பன் (கணபதிப்பிள்ளை குமரரூபன் - முல்லைத்தீவு) லெப்டினன்ட் ஜிம்கெலி (கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் - முல்லைத்தீவு) வீரவேங்கை முரளி (பெனடிக் குணபாலா - மட்டக்களப்பு) வீரவேங்கை குணா (காத்தமுத்து நாதன் - மட்டக்களப்பு) வீரவேங்கை கபில் (இராமலிங்கம் ரவி - மட்டக்களப்பு) வீரவேங்கை ராஜேஸ் (முத்துக்குமார் சோமநாதன் - மட்டக்களப்பு) வீரவேங்கை சதீஸ் (றஜீன்) (கணபதிப்பிள்ளை இரத்தினம் - மட்டக்களப்பு) வீரவேங்கை நிலக்சன் (நாரயணப்பிள்ளை தயாளன் - மட்டக்களப்பு) வீரவேங்கை றகுபரன் (நாகப்பன் பேரின்பராசா - மட்டக்களப்பு) வீரவேங்கை ராம்கி (நவரட்ணராஜா உமாசங்கர் - திருகோணமலை) வீரவேங்கை மகிந்தன் (சின்னத்தம்பி அருட்பிரகாசம் - திருகோணமலை) வீரவேங்கை சண்முகம் (அன்பு) (காந்தசிவம் அன்பரசன் - திருகோணமலை) வீரவேங்கை றெஜினோல்ட் (இளையதம்பி குணசேகரம் - திருகோணமலை) வீரவேங்கை பரணி (ம.சந்திரராஸ் - மன்னார்) வீரவேங்கை ஜொனி (பீற்றர்சிங்கம் பிலிப்பையர் - வவுனியா) வீரவேங்கை பிரதீப் (ஜோர்ஜ் வன்னியசிங்கம் - மட்டக்களப்பு) வீரவேங்கை கருணா (சேது பூபாலசிங்கம் - மன்னார்) வீரவேங்கை கருணாநிதி (சர்வகுலராசா சிவரூபன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயகுமார் (குமாரசாமி மகேந்திரகுமார் - வவுனியா) வீரவேங்கை சசி (ஜெகநாதன் ஜெயசீலன் - கிளிநொச்சி) வீரவேங்கை வதனன் (பரணி) (பொன்னுத்துரை இந்திரஜித் - கிளிநொச்சி) வீரவேங்கை கிருபாகரன் (பெரியகறுப்பன் காளிமுத்து - மலையகம்) வீரவேங்கை தர்சன் (நந்தன்) (ஜோசப் அலெக்சாண்டர் - மலையகம்) வீரவேங்கை விஸ்வநாத் (கணேசன் மயில்வாகனம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராஜ் (தங்கவேலாயுதம் ஜெயராஜ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பைரவன் (விசுவலிங்கம் விமலகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சூட்டி (கணபதிப்பிள்ளை யோகேந்திரராஜா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நடிகன் (ராஜீவ்காந்தி) (நடராசா திருஞானமூர்ததி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரவிச்சங்கர் (யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுபாஸ் (குலசிங்கம் விஜயராசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேல்ராஜ் (சிவராசா சுதாகிருஸ்ணன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயவர்மன் (நடராசா ஜெயானந்தம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ரமேஸ் (அட்சரலிங்கம் சந்தானலிங்கம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சின்னப்பதாஸ் (திசைவீரசிங்கம் லெட்சுமணாளன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஈஸ்வரன் (பாலகிருஸ்ணன் செந்தில்வேல் (அப்பன்) - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணியரசன் (ஜோசப் ஈழநேசன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராஜீவ் (கு.நடராசா - திருகோணமலை) வீரவேங்கை கங்கை (அத்தனாஸ் அப்புசொனியஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோணேஸ் வீரவேங்கை சக்கரவர்த்தி வீரவேங்கை நிதர்சன் (சின்னத்தம்பி சந்திரகுமார் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை உசா (பசுபதி பாலசுந்தரம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மகிந்தன் (கார்ததிகேசு ஏகாம்பரம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை எட்றிச் (ஆசீர்வாதம் எஸ்.ரீபன் அனுராஜா - யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் காங்கேசன்துறையில் சிறிலங்கா படையிருனான மோதலில் வீரவேங்கை மயூரன் (அப்பன்) (சிவலிங்கம் மயூரன் - அளவெட்டி, யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர். இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73மி.மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் இதே நாளில் ஜெயசிக்குறு படையினருடன் மதியாமடுப் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் சங்கரதாஸ் (தெய்வநாயகம் பிரபாகரன் - மட்டக்களப்பு) ஜெசிக்குறு படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாங்குளத்தில் வீரச்சாவைத் தழுவிய 2ம் லெப்டினன்ட் ராஜன் (சுப்பிரமணியம் சந்திரன் - கண்டி) திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் வசந்தன் (றம்போ) (நடராஜா மனோராஜன் - யாழ்ப்பாணம்) ஆகியோரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். புளியங்குளச் சமரில் காவியமான மாவீரர்களின் விபரம் வருமாறு மேஜர் காவிரிநாடன் (றொசான்) (இராஜகுலேந்திரன் வாசகன் - யாழ்ப்பாணம்) மேஜர் சௌதினி (துரைராஜா றோகினி - யாழ்ப்பாணம்) கப்டன் சந்திரமதி (ரட்ணசாமி ஜெயலட்சுமி - வவுனியா) கப்டன் தயாவதி (கணேசமூர்த்தி லலிதாதேவி - யாழ்ப்பாணம்) கப்டன் வைதேகி (பொன்னழகன் இராசலட்சுமி - கிளிநொச்சி) கப்டன் வேந்தினி (பூபதிராஜா கஸ்தூரி - முல்லைத்தீவு) கப்டன் செந்தணல் (விநாசித்தம்பி அன்பரசி - யாழ்ப்பாணம்) கப்டன் கௌரவன் (இராயகோபால் இராஜசேகர் - வவுனியா) கப்டன் சந்தியா (கனகரட்ணம் செல்வகுமாரி - வவுனியா) கப்டன் பாமகள் (கிருஸ்ணா ஜெனார்த்தனி - கிளிநொச்சி) லெப்டினன்ட் சுபாங்கனி (மகேந்திரராசா கிருபாலினி - முல்லைத்தீவு) லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) (கண்ணையா விஜயகுமாரி - அவிசாவளை) லெப்டினன்ட் அமுதநிலா (அமவாசி வக்சலாதேவி - கண்டி) லெப்டினன்ட் அருச்சுனன் (துரைசிங்கம் ஜசிந்தராஜ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வண்ணமலர் (வேலாயுதம் டெய்சினி - வவுனியா) லெப்டினன்ட் ஈழநாயகி (யேசுதாசன் சசிகலா - வவுனியா) லெப்டினன்ட் இளந்திரையன் (கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் - கிளிநொச்சி) லெப்டினன்ட் சந்திரவதனா (வல்லிபுரம் சந்திரகலா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வேட்பாளன் (கணேசன் நடேசன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சூரியலதா (செல்லத்துரை அருட்செல்வி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) (சுப்பிரமணியம் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மன்னவன் (கிருஸ்ணபிள்ளை சாமுவேல் - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் பிருந்தா (வல்லிபுரம் சாரதா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) (வேலுப்பிள்ளை கமலாதேவி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் வசந்தி (பஞ்சலிங்கம் குகந்தினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சின்னமணி (கந்தையா இராசலிங்கம் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் எழிற்கொடி (சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி - வவுனியா) 2ம் லெப்டினன்ட் ஜோதி (அருமைத்துரை தர்மினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஆடலரசன் (ஆறுமுகம் சுதர்சன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் (செல்வநாயகம் விஜயராசா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கடலரசன் (கதிரவேலு சிவகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) (பத்மநாதன் சுயதீபன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இராஜேஸ்வரன் (ராஜா ஜெயச்சந்திரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை உமையாள் (குணமணி சுகந்தா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிந்துஜா (கந்தசாமி ராஜி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நளினி (சரவணமுத்து செல்வமலர் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) (முனியாண்டி தமயந்தி - கண்டி) வீரவேங்கை செந்தூரா (தங்கராசா சரஸ்வதி - திருகோணமலை) வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) (வேலுப்பிள்ளை உமாரூபி - வவுனியா) வீரவேங்கை அருணந்தி (கணேஸ் யோகமலர் - முல்லைத்தீவு) வீரவேங்கை தமிழ்மொழி (தம்பிராசா சுபாஜினி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மாங்கனி (வெள்ளைச்சாமி மாரியம்மா - கொழும்பு) வீரவேங்கை விடிவுமகள் (முருகுப்பிள்ளை பர்மிலா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அன்புவிழி (இராமச்சந்திரன் ஜெயதீஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாமதி (இராசலிங்கம நிர்மலாதேவி - மட்டக்களப்பு) வீரவேங்கை சேந்தன் (வேந்தன்) (சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ஈகைச்செலவன் (பரமசிவம் உதயசீலன் - கிளிநொச்சி) வீரவேங்கை சிவப்பிரியா (சீவரட்ணம் ஜெயந்தி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) (சக்திவேல் சுவர்ணாதேவி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நல்லவள் (சின்னராசா சுகிர்தினி - முல்லைத்தீவு) வீரவேங்கை அல்லி (கிருஸ்ணபிள்ளை சுமித்திரா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) (வடிவேல் தேவி - வவுனியா)- லெப்.கேணல்கள் பாவா - யோகா நினைவு நாள்
மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவா மற்றும் லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வெல்லாவெளி சந்தியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடாத்திய கிளைமோர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மட்டு - அம்பாறை அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் தயாசீலன் (பாவா) (செல்வராசா ஜெகதீஸ்வரன் - திருக்கோவில், அம்பாறை) தொண்டு நிறுவனங்களிற்கான மட்டு - அம்பாறை மாவட்ட இணைப்பாளர் லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா - வெல்லாவெளி, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம்மாவீரர்களினதும் இதே நாள் முல்லை மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் நீரில் மூழ்கி சாவடைந்த துணைப்படை வீரர் லெப்டினன்ட் திரிஸ்ராசா (திலிப்பையா திரிஸ்ராசா - கள்ளப்பாடு, முல்லைத்தீவு) என்ற மாவீரரினதும் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
கண்ணீர் வணக்கங்கள்!!!- வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் லெப்.கேணல் சிவாஜி உட்பட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த 25 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் - கொக்குவில், யாழ்ப்பாணம்) மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா - தென்னமரவடி, திருகோணமலை) மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் - மட்டுவில், யாழ்ப்பாணம்) மேஜர் பொழிலன் (துசி) (பத்மநாதன் பாலரட்ணம் - மைலிட்டி, யாழ்ப்பாணம்) மேஜர் அருள்மணி (செல்லத்துரை சாந்தரூபன் - கரணவாய் , யாழ்ப்பாணம்) கப்டன் மேனன் (இராஜதுரை சுந்தரேசன் - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்) கப்டன் கண்ணன் (பாரீஸ்) (கதிரவேல் பத்மசீலன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) கப்டன் தமிழ்மாறன் (பொன்னுத்துரை ரமணன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சிறீக்காந் (சந்திரசேகரம் சிறிதரன் - கொக்குவில், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) (முத்தையா சிறீகுமார் - வட்டக்கச்சி, கிளிநொச்சி) லெப்டினன்ட் சிவச்செல்வன் (கணபதிப்பிள்ளை கமலநாதன் - வட்டக்கச்சி, கிளிநொச்சி) லெப்டினன்ட் தமிழ்மறவன் (பத்திநாதன் ஜெயசீலன் - திருக்கேதீஸ்வரம், மன்னார்) 2ம் லெப்டினன்ட் கனிவேந்தன் (இராசு திவாகரன் - கொழும்பு, சிறிலங்கா) 2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் (சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நிரோயன் (பெனடிற் சிம்சன்ராஜ் - உருத்திரபுரம், கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்) (முத்துச்சாமி செல்வா - கொழும்பு, சிறிலங்கா) 2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் (விஜயன் சதீஸ் - பாலத்தோப்பூர், திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் மாதங்கன் (நவரட்ணராசா செல்வக்குமார் - ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் திருவாசன் (தோமஸ் ஜெயராசா - செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (நடராசசிங்கம் சுதர்சன் - புலோலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை கலியுகன் (பூரணசந்திரன் நவனந்தராஜ் - வட்டக்கச்சி, கிளிநொச்சி) வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கணேஸ் - புலோலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை பேரின்பன் (குமாரசாமி தர்மசீலன் - புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்) வீரவேங்கை புத்தூரன் (கந்தசாமி பிரபாகரன் - புத்தூர், யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழன்பன் (பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன் - நாரந்தனை, ஊர்காவற்றுறை ,யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- முதற்பெண் கடற்கரும்புலி அங்கயற்கண்ணியின் நினைவு நாள்
16.08.1994 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வீரகாவியமான முதற்பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “அபித” கட்டளைக் கப்பல் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவை16.08.1994 அன்று கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டன. எட்டரை மணிநேரத்தில் சுமார் 35 கி.மீட்டர்கள் தூரத்தை நீந்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்டன் அங்கயற்கண்ணியினால் சிறிலங்கா கடற்படையின் மேற்படி கடற்கலங்கள் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். கப்டன் அங்கயற்கண்ணி தொடர்பான பதிவு: கடலன்னையின் பெண் குழந்தை (முதற் பெண் கடற்கரும்புலி) உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. "இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்" அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும். தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சி குடிக்கக் கூட வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்த போதெல்லாம், தான் எடுத்த முடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள். தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ 35 கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்து விட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்க முடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்க முடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை. ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக் கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை. கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள். ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது. லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகளாலும், பண்புகளாலும், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம். "நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா" என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. 'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிற மாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை' என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக் கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது. கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தன் தோழிகளிடம், "நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும்" என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ்வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள். எல்லாம் தயார். கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், "என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா?" என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள். "இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்" என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள். 1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? எல்லோருக்குமே பரபரப்பு. தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது. "ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ?" என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர். "ரைட், கட்டளைக் கப்பல் அவுட்" என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர். சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். "என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்?" என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, "ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்?" என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது. அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள். ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள். தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப் போட்டு விட்டது.- டோறா மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு
15.08.1999 அன்று கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் எழில்வேந்தன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருமலை - முல்லைத்தீவு கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு அணி மீது 15.08.1999 அன்று அதிகாலை கொக்குளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடுமையான சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையின் டோறாப் படகு ஒன்றை மீது கடற்கரும்புலிகள் தமது வெடிமருத்துப் படகினோல் மோதி வெடிக்கவைத்து மூழ்கடித்தனர். இதன்போது கடற்கரும்புலி லெப்.கேணல் நீதியப்பன் (வீரபாகு சிவனேஸ்வரன் - மூதூர், திருகோணமலை) கடற்கரும்புலி மேஜர்அந்தமான் (எழில்வேந்தன்) (வடிவேல் செந்தில்குமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் மேலும் இரு டோறா படகுகள் கடற்புலிகளின் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்தன. இக்கடற்சமரின்போது சிறிலங்கா கடற்படையினர் பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் நாட்டின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் - மேஜர் எழில்வேந்தன் ஆகியோரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கடற்கரும்புலி மேஜர் திசையரசி - லெப்.கேணல் பழனி - மேஜர் தூயவள் ஆகியோரின் நினைவு
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் திசையரசி, கடற்புலி லெப்.கேணல் பழனி, கடற்புலி மேஜர் தூயவள் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.08.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட படகு விபத்தில் கடற்கரும்புலி மேஜர் திசையரசி (செல்லச்சாமி செல்வம் - உடுத்துறை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப்.கேணல் பழனி (பழனிராஜ்) (அங்கமுத்து சிவநாதன் - கண்டி, சிறிலங்கா) கடற்புலி மேஜர் தூயவள் (சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி - முரசுமோட்டை, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாயக விடுதலைப் பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1990களில் மட்டக்களப்பில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரை படை முகாமின் இரண்டாவது கட்டளை மேலாளரான மேஜர் கருணாநாயக்க மீது வாகரைப் படை முகாமில் வைத்து 09.08.1999 அன்று கரும்புலித் தாக்குதலை நடாத்தி கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
முல்லைக் கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் காவியமான இரு கடற்கரும்புலிகள் உட்பட்ட மூன்று மாவீரர்களினதும், அக்கரைப்பற்றில் வீரச்சாவைத் தழுவிய லெப். ராகவன் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 04.08.2001 அன்று முல்லைக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கடற்கரும்புலி கப்டன் ராகுலன் (ஏரத்பண்டா கிருஸ்ணகுமார் - பரந்தன், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் கரிகாலன் (பூலோகசிங்கம் புஸ்பகாந்தன் - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு) மேஜர் சர்மா (ஆறுமுகம் சங்கரலிங்கம் - கல்லடி, மட்டக்களப்பு) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இதேநாள் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்டினன்ட் ராகவன் (இராசேந்திரன் சுதாகரன் - நாவற்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிரக்ளை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்- சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ற குறியீட்டுப் பெயருடன் பெருமெடுப்பில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: மேஜர் ஜெயசுதா (பாமதி தியாகராசா - யாழ்ப்பாணம்) மேஜர் ஜேசுதாஸ் (குலவீரசிங்கம் தயாபரன் - யாழ்ப்பாணம்) மேஜர் திருமேனி (ராம்கி) (கணேசன் தேவதாசன் - அம்பாறை) மேஜர் இமையவன் (கேசவன்) (ஐயாத்துரை குகதாஸ் - யாழ்ப்பாணம்) கப்டன் நாயகி (இலங்கநாயகி ஆறுமுகம் - வவுனியா) கப்டன் பெருநாகன் (பூபாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்) கப்டன் சிவநாதன் (இரத்தினம் கலைச்செல்வன் - கிளிநொச்சி) கப்டன் சுகந்தன் (நாதன் சசிக்குமார் - யாழ்ப்பாணம்) கப்டன் கலாதரன் (காளிராசா கவிஞதாசன் - திருகோணமலை) கப்டன் பிருந்தன் (ஜெகநாதன் சிவபாலன் - கிளிநொச்சி) கப்டன் அம்பி (ராகல்) (கார்த்திகேசு யோகராசா - அம்பாறை) கப்டன் தியாகி (இருளாண்டி பாஸ்கரன் - கிளிநொச்சி) கப்டன் நகுலேஸ் (நகுலேஸ்வரி) (பத்மாதேவி வைத்தீஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் கலையரசி (வளர்மதி சுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்) கப்டன் நாயகன் (சிவகுருநாதன் குமரகுருநாதன் - யாழ்ப்பாணம்) கப்டன் கவிஞன் (நாராயணமூர்த்தி பாஸ்கரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தரணிதரன் (திலீப்) (தர்மலிங்கம் நேசராசா - மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஜெயசீலி (குணலட்சுமி ஆறுமுகசாமி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வேங்கை (செல்லையா புஸ்பமலர் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கமலினி (உசாநந்தினி சண்முகநாதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் யாழிசை (ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை - முல்லைத்தீவு) லெப்டினன்ட் ஆவர்த்தனா (கவிதா கந்தசாமி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சேரன் (நாகேந்திரம் கோகிலதாசன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாவரசன் (நல்லையா பாலச்சந்திரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஐம்பொறி (சடாச்சரம் அஸ்டாச்சரம் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தாயகம் (குமார்) (மயில்வாகனம் விஜயகுமார் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் அண்ணாத்துரை (கோவிந்தபிள்ளை பத்மநாதன் - கிளிநொச்சி) லெப்டினன்ட் கமலன் (முத்துராசா தம்பிராசா - கண்டி) லெப்டினன்ட் சிவாகரன் (துரைராசசிங்கம் சசிகரன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வாணன் (புலேந்திரன் புவனேந்திரன் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பத்மசிறி (மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல் - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் கர்ணன் (வீராச்சாமி இராஜேஸ்கண்ணா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குயிலன் (கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கார்முகிலன் (தம்பு ஜெயசீலன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேது (கிறகரி சத்தியராஜ் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (சிவசம்பு மதியழகன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மன்னவன் (கந்தசாமி சிறிதரன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சத்தியபவான் (அன்ரனி விஜயேந்திரன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பொன்னரசன் (பாலசிங்கம் சிவகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இனியவன் (தியாகராசா தீபன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருள்நம்பி (சிவசம்பு சிவகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் யசோ (நாகராசா நந்தகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சிவசங்கரன் (சோதிவேற்பிள்ளை குணசீலன் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் யாழரசன் (செல்வரட்ணம் செல்வகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமுடி (தியாகராசா தவனேசன் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்) (கணேசபிள்ளை குமரன் - திருகோணமலை) வீரவேங்கை காதாம்பரி (அனித்தா செல்வராசா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை குணசீலி (தேவசுந்தரம் பிறேமாவதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை இன்பரசி (புனிதசீலி ஞானசீலன் - மன்னார்) வீரவேங்கை செயல்விழி (சுமங்கலா) (சுஜித்திரா கந்தையா - முல்லைத்தீவு) வீரவேங்கை பூவிழி (மகேஸ்வரி கணேஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வவி (விஜயா) (கௌசலாதேவி இராசையா - கண்டி) வீரவேங்கை கார்த்திகாயினி (தேவகி முருகவேல் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வதனி (கலைச்செல்வி தில்லைநாதன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கடல்மதி (கடல்வாணி) (தெய்வேந்திரம் மேனகா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கவி (தெய்வேந்திரம் சர்மிளா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுருதி (அமுதினி பிள்ளையாக்குட்டி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை ராகுலா (இந்திரானி சண்முகரட்னம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை செல்வரதி (ஜஸ்ரினா பூபாலசிங்கம் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை குகமதி (சுதர்சினி கணபதிப்பிள்ளை - யாழ்ப்பாணம்) வீரவேங்கை நாயகன் (நாகராசா ஜெயபாஸ்கரன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கதிரோன் (சோமசுந்தரம் சுகந்தன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை திருமாறன் (தெய்வேந்திரம் பகீரதன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை உதயதீபன் (பொன்னுச்சாமி கேதீஸ்வரன் - முல்லைத்தீவு) வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்) (சுகுமாரன் குமார் - கண்டி) வீரவேங்கை செங்கோடன் (செங்கோலன்) (சூசைப்பிள்ளை ஜெசுதாஸ் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பாண்டியன் (அலோசியஸ் அன்ரன் லீனஸ் - மன்னார்) இந்த முன்னகர்வு முயற்சியின்போது கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்காண்ட எறிகணை வீச்சில், லெப்.கேணல் வெண்நிலவன் (கவாஸ்கர்) (செபமாலை ஜோர்ச்சந்திரசேகரன் - மன்னார்) என்ற போராளியும் கிளிநொச்சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்குண்டு வீச்சில் கப்டன் உத்தமன் (வடிவேல் சிவநாதன் - யாழ்ப்பாணம்) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். -- வீரவேங்கைகள் இணையம் Veeravengaikal.Com http://www.veeravengaikal.com info@veeravengaikal.com மாவீரர்களது நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் - தேசியத் தலைவர்- லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
புளியங்குளத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தாட்சாயினி, கப்டன் பாஞ்சாலி மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் மாதவன்(சுனித்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது லெப்.கேணல் தட்சாயினி (மனுவேற்பிள்ளை கிளறின்வுறோனா - புலோப்பளை, யாழ்ப்பாணம்) கப்டன் பாஞ்சாலி (சுபாம்பிள்ளை மேரிவென்சலற்றா - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் மாதவன் (சுனித்) (கில்பேட் டானியல் - செல்வபுரம், முல்லைத்தீவு) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.- பலாலி விமானப்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நினைவுநாள்.
- ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் நினைவு நாள்
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட 137 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு மேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் - கிளிநொச்சி) மேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா - மன்னார்) மேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் - முல்லைத்தீவு) மேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் - யாழ்ப்பாணம்) மேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் - கிளிநொச்சி) மேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா - யாழ்ப்பாணம்) மேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் - மட்டக்களப்பு) கப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் - மட்டக்களப்பு) கப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் - மட்டக்களப்பு) கப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் - யாழ்ப்பாணம்) கப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் - மட்டக்களப்பு) கப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் - மாத்தளை) கப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் - மன்னார்) கப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி - யாழ்ப்பாணம்) கப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி - யாழ்ப்பாணம்) கப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா - திருகோணமலை) கப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் - மன்னார்) கப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா - யாழ்ப்பாணம்) கப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் - யாழ்ப்பாணம்) கப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் - யாழ்ப்பாணம்) கப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் - மட்டக்களப்பு) கப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா - யாழ்ப்பாணம்) கப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி - திருகோணமலை) கப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி - யாழ்ப்பாணம்) கப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி - யாழ்ப்பாணம்) கப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா - முல்லைத்தீவு) லெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி - மட்டக்களப்பு) லெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா - மட்டக்களப்பு) லெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி - வவுனியா) லெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி - கிளிநொச்சி) லெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் - திருகோணமலை) லெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் - கிளிநொச்சி) லெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் - கிளிநொச்சி) லெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் - வவுனியா) லெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் - கிளிநொச்சி) லெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா - மன்னார்) லெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ - அம்பாறை) 2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி - கண்டி) 2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் - வவுனியா) 2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா - மன்னார்) 2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் - மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் - திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி - மன்னார்) 2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி - கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவராசா சிவகுமார் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி - மன்னார்) 2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா - முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி - யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் - கிளிநொச்சி) வீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா - அம்பாறை) வீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் - மட்டக்களப்பு) வீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் - மட்டக்களப்பு) வீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் - மட்டக்களப்பு) வீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா - மட்டக்களப்பு) வீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் - மட்டக்களப்பு) வீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா - அம்பாறை) வீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் - அம்பாறை) வீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் - மட்டக்களப்பு) வீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் - அம்பாறை) வீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா - மட்டக்களப்பு) வீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் - மட்டக்களப்பு) வீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி - மன்னார்) வீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி - மன்னார்) வீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி - கிளிநொச்சி) வீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி - கிளிநொச்சி) வீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி - முல்லைத்தீவு) வீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி - கிளிநொச்சி) வீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி - திருகோணமலை) வீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா - மட்டக்களப்பு) வீரவேங்கை ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் - யாழ்ப்பாணம்) வீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி - யாழ்ப்பாணம்) வீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி - யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணை எதிரியின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். - ரிவிகிரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.