Everything posted by மின்னல்
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
24.06.1997 அன்று பெரியமடுப் பகுதியில் ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 9 மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் முன்னேறி பெரியமடுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரால் அமைக்கப்பட்டிருந்த ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் படையணிகளால் 24.06.1997 அன்று ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் பல நூற்றுக் கணக்கான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்தனர். இதன்போது 120மி.மீ ஆட்டிலறி பீரங்கி உட்பட பெருமளவான ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த வெற்றிகரத் தாக்குதலில் லெப்.கேணல் தனம் அவர்களுடன் 83 போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். இதேநாளில் வவுனியா மாவட்டம் புளியங்குளம், பகுதியிலும் பனிக்கநீராவியடிப் பகுதியிலும் ஜெயசிக்குறு படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதல்களில் 9 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இத்தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் விபரங்கள். பெரியமடு ஆட்டிலறி - மோட்டார் ஏவுதளங்கள் மீதான தாக்குதலில் லெப்.கேணல் தனம் (ஐங்கரன்) நாகலிங்கம் யோகராஜ் கேப்பாப்புலவு, முல்லைத்தீவு மேஜர் சிவதீபன் (திருமகன்) பாக்கியராஜா புலேந்திரராஜா கதிரவெளி, மட்டக்களப்பு மேஜர் துளசி இராமலிங்கம் குகபாலிகா காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் மேஜர் ரதி சாமித்தம்பி தேவி சந்திவெளி, மட்டக்களப்பு மேஜர் இந்திரா இராமு சித்திராதேவி இறம்பைக்குளம், வவுனியா மேஜர் கோகுலநாதன் (சாந்தன்) சூசையா பயஸ் கல்லடி, மட்டக்களப்பு மேஜர் விமல் (நிமல்) பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ் பேசாலை, மன்னார் மேஜர் விவேகன் (சந்திரபிரபா) யோகராசா தில்லைநாதன் பெரியபேரதீவு, மட்டக்களப்பு மேஜர் ஈழமூர்த்தி (வரதராஜ்) அன்பழகன் துஸ்யந்தன் செங்கலடி, மட்டக்களப்பு கப்டன் அன்பரசி இராஜரட்ணம் ரஜனி மானிப்பாய், யாழ்ப்பாணம் கப்டன் பவளம் விக்னேஸ்வரராஜா கேமலதா மானிப்பாய், யாழ்ப்பாணம் கப்டன் இந்திராணி கந்தையா புஸ்பராணி புளியங்குளம், வவுனியா கப்டன் அறிவுமாறன் (அரி) கந்தையா சுதாகரன் தர்மபுரம், கிளிநொச்சி கப்டன் பெரியதம்பி (முகுந்தன்) தியாகரராஜா நிதிராஜா அல்வாய், யாழ்ப்பாணம் கப்டன் பரமலிங்கம் நடராஜா ராஜரஞ்சித் பொத்துவில், அம்பாறை கப்டன் பூலோகன் இராமநாதன் பரமசிவம் கொடிகாமம், யாழ்ப்பாணம் கப்டன் ஜெயச்சந்திரன் சிதம்பரப்பிள்ளை சிவநாதன் மாங்குளம், முல்லைத்தீவு கப்டன் அனார்தன் (சுஜி) நாகமணி கோபாலரத்தினம் கோவில்போரதீவு, மட்டக்களப்பு கப்டன் லீலாகரன் (ரவி) செல்வராசா ரவீந்திரன் வெல்லாவெளி, மட்டக்களப்பு கப்டன் மதனரூபன் சோமசுந்தரம் இசைச்செல்வன் கல்லடி, மட்டக்களப்பு கப்டன் புதியவள் லோகிதாஸ் சாந்தமீனா மணியந்தோட்டம், யாழ்ப்பாணம் கப்டன் அன்பு தங்கராசா மகேஸ்வரி உருத்திரபுரம், கிளிநொச்சி கப்டன் நித்திலா (சுபைதா) கனகலிங்கம் தர்சனி அரியாலை, யாழ்ப்பாணம் கப்டன் தமயா விஸ்வலிங்கம் சித்திராதேவி முத்தையன்கட்டு, முல்லைத்தீவு கப்டன் கலை இரத்தினம் ராஜகுமாரி சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் கப்டன் திவ்யா இராமலிங்கம் தேவகி பருத்தித்துறை, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் கீர்த்திராஜ் யோகநாதன் புஸ்பநாதன் கொம்மாதுறை, மட்டக்களப்பு லெப்டினன்ட் சுரேஸ் சுந்தரலிங்கம் சந்திரசேகர் செங்கலடி, மட்டக்களப்பு லெப்டினன்ட் சக்கரபாண்டி (நிதர்சராஜ்) வீரக்குட்டி பிரகலாதன் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ் குமாரசாமி குலசிங்கம் மட்டக்களப்பு லெப்டினன்ட் உதயமூர்த்தி நாகையா அசோக்குமார் மட்டக்களப்பு லெப்டினன்ட் உதயவன் குகராசா ரவீந்திராஜா பெரியபோரதீவு, மட்டக்களப்பு லெப்டினன்ட் கனகமுகன் கோபாலசிங்கம் நிர்மலன் மட்டக்களப்பு லெப்டினன்ட் பௌணராஜ் சீனித்தம்பி ஜெகன் ஏறாவூர், மட்டக்களப்பு லெப்டினன்ட் பொன்னப்பன் நாகமணி கேந்திரமூர்த்தி காக்காச்சிவெட்டை, மட்டக்களப்பு லெப்டினன்ட் கமண்டலன் நடராசா யோகராசா ஏறாவூர், மட்டக்களப்பு லெப்டினன்ட் பரமேஸ் கவிதா கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு லெப்டினன்ட் ஆரணி கறுப்பையா அமுதவல்லி பெரியகுளம், வவுனியா லெப்டினன்ட் நிரஞ்சனா சின்னையா லோஜினி சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் லெப்டினன்ட் நித்தியா திரவியம் அமுதினி கோப்பாய், யாழ்ப்பாணம் லெப்டினன்ட் யோகமதி (ஜெயமதி) இரத்தினம் வதனி அச்சுவேலி, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் நந்தா கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம் வேலணை, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் சுயந்தன் பழனியாண்டி சங்கர் புளியங்குளம், வவுனியா லெப்டினன்ட் ஈழவண்ணன் கேசவன் வாமதேவன் மாத்தளை, கண்டி லெப்டினன்ட் ஈழமாறன் செல்வன் செல்வச்சந்திரன் தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் லெப்டினன்ட் மித்திரன் செல்லத்துரை சுரேஸ்குமார் மூதூர், திருகோணமலை லெப்டினன்ட் இயல்வாணன் தியாகராசா சிறிகாந்தன் இரத்தினபுரம், கிளிநொச்சி லெப்டினன்ட் ஈசன் வேலு ரவி நொச்சிக்குளம், வவுனியா லெப்டினன்ட் அப்பன் (காந்தி) முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன் சித்தங்கேணி, யாழ்ப்பாணம், லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்) பொன்னுத்துரை கிருபாகரன் சுழிபுரம், யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் இசைமொழி சித்திரவேல் மோகன் கதிரவெளி, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் குமரலிங்கம் தங்கராசா சிவலிங்கம் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் கதிரன் உருத்திரமூர்த்தி கரிகாலன் கொக்குவில், மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் ரஜனி (ராஜன்) கணேஸ் புனிதரூபன் இருதயபுரம், மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் தர்மதேவன் கந்தசாமி சசிகரன் செங்கலடி, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் புவிதாசன் ஆறுமுகம் ரஞ்சன் வாழைச்சேனை, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் திருமேனி மகேசன் ரஜினிகாந் நாவலடி, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் குருகுலன் நல்லதம்பி பாஸ்குமாரன் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் வரோதயன் மோகனசுந்தரம் தேவராஜ் ஆரையம்பதி, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா நித்தியானந்தன் செல்வானந்தி நல்லூர், யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் பரிமளா அழகுதுரை கோமதி சம்பூர், திருகோணமலை 2ம் லெப்டினன்ட் யாழமுது (யாழரசி) கடம்பேஸ்ரன் வசந்தமலர் ஜெயந்திநகர், கிளிநொச்சி 2ம் லெப்டினன்ட் ஈழநிலா ஐயாத்துரை றேணுகாதேவி ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 2ம் லெப்டினன்ட் இளம்பிறை சிவலிங்கம் மகேந்திரன் கொம்மாதுறை, மட்டக்களப்பு 2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் கனகலிங்கம் சுலேந்திரகுமார் திருநெல்வேலி, யாழ்ப்பாணம் 2ம் லெப்டினன்ட் சரவணன் சுப்பிரமணியம் கருணாகரன் திருகோணமலை வீரவேங்கை ஜெயாதுயிலன் இராஜகோபால் கரிகிஸ்ணன் திருக்கோவில், அம்பாறை வீரவேங்கை சகாதேவன் ஏரம்புமூர்த்தி மேகநாதன் பேத்தாளை, மட்டக்களப்பு வீரவேங்கை ஜெயானந்தன் சித்திரவேல் ஜெயக்குமார் வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரவேங்கை இன்பன் நவரட்ணம் சுபானந்தம் கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு வீரவேங்கை நீலரட்ணம் விநாயகப்பிள்ளை யோகராசா கிரான், மட்டக்களப்பு வீரவேங்கை லோகதாசன் கண்ணப்பன் சந்திரமோகன் செங்கலடி, மட்டக்களப்பு வீரவேங்கை வேணுகோபன் வல்லிபுரம் குணரட்ணம் தாளங்குடா, மட்டக்களப்பு வீரவேங்கை சண்முகதாஸ் ஐயாத்துரை சந்திரகுமார் கரடியனாறு, மட்டக்களப்பு வீரவேங்கை நன்மாறன் பொன்னுத்துரை யமுனாநந்தன் வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரவேங்கை ரட்ணேஸ்வரன் யோகராசா செந்தில்நாதன் பெரியபோரதீவு, மட்டக்களப்பு வீரவேங்கை சுபத்தனன் இளையதம்பி விநாசித்தம்பி வாழைச்சேனை, மட்டக்களப்பு வீரவேங்கை முரளீஸ்வரன் இராசசிங்கம் பவளசிங்கம் களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு வீரவேங்கை சம்மந்தக்குமார் பொன்னம்பலம் சிவகுமார் கன்னங்குடா, மட்டக்களப்பு வீரவேங்கை வசந்தா முத்துரட்ணம் ரஜனி மூதூர், திருகோணமலை வீரவேங்கை திருச்செல்வி சண்முகராசா ரமா முத்தையன்கட்டு, முல்லைத்தீவு வீரவேங்கை செம்பருத்தி கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி கட்டைக்காடு, யாழ்ப்பாணம் வீரவேங்கை இன்னழகன் சின்னராசா சிவசண்முகம் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு இதேநாள் பனிக்கநீராவியடிப் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் மேஜர் தயாபரன் கதிர்வேல் கிருஸ்ணகுமார் உருத்திரபுரம், கிளிநொச்சி புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் மேஜர் சிவகுரு சந்திரன் அருளாநந்தன் மானிப்பாய், யாழ்ப்பாணம் கப்டன் சிந்தையன் செல்லையா சௌந்தரராஜா கிரான், மட்டக்களப்பு கப்டன் புயல்வீரன் நித்தியானந்தன் பிரபுகாந்தன் இணுவில், யாழ்ப்பாணம் கப்டன் கஜமுகி (மதி) மயில்வாகனம் கீதாஞ்சலி பொக்கணை, முல்லைத்தீவு கப்டன் தமிழினி (வர்ணா) அந்தோனிப்பிள்ளை ஆனந்தி செட்டிகுளம், வவுனியா கப்டன் தேவகி சின்னராசா பத்மராணி யாழ்ப்பாணம் லெப்டினன்ட் பவளராணி கனகரத்தினம் கலாநிதி அல்வாய், யாழ்ப்பாணம் லெப்டினன்ட் காங்கேசன் செல்லத்துரை சுரேஸ்குமார் விசுவமடு, முல்லைத்தீவு ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.
-
1990 - 2004 வரை வீரச்சாவடைந்த 15920 மாவீரர்களின் விபரங்கள்.
தமிழீழ தாயக விடுதலைப் போரில் 1990ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 15 920 மாவீரர்களின் பெயர் விபரங்கள் வீரவேங்கைகள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் பணிமனையினால் உருவாக்கப்பட்ட மாவீரர் விபரக்கோவை ஒன்றிலிருந்து பெறப்பட்ட விபரங்களே இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் விபரங்களில் தவறுகள் இருந்தால் தயவு செய்து info@veeravengaikal.com என்ற மின்னஞ்சலுக்கு அறியத் தரவும். விபரங்களைப் பார்க்க கீழுள்ள இணைப்பில் அழுத்தவும். http://veeravengaika...t=20&start=1610
-
லெப்.கேணல் முகுந்தா - 15ம் ஆண்டு நினைவு நாள்
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள். தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் மாதவன் நினைவு நாள்
திருமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் இருந்து 13ம் கட்டைப் பகுதி நோக்கி வந்த சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மாதவன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாய் மண்ணின் விடிவிற்காக தன்னுயிரை ஈகம் செய்த இம்மாவீரருக்கு எமது வீரவணக்கங்கள்
-
இன்று சுதந்திரபுரப் படுகொலையின் 14 -ம் ஆண்டு நினைவுநாள்.
இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் வழங்கற்பிரிவுப் பொறுப்பாளரும் முன்னாள் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவருக்கு எமது வீரவணக்கம்
-
1987 - 1989 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
நன்றி பகலவன் லெப்.கேணல் ராதா அவர்களின் வீரச்சாவு நாள் மாற்றப்பட்டுள்ளது. info@veeravengaikal.com என்ற முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்.
-
1987 - 1989 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
தாயக விடுதலைக்காக 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் வீரச்சாவடைந்த 1185 மாவீரர்களில் ஒரு குறிப்பிட்டளவானோரின் ஒளிப்படங்களே இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவீரர்களின் ஒளிப்படங்கள் படிப்படியாக இணைக்கப்படும். இணைக்கப்பட்டுள்ள விபரங்களில் தவறுகள் எதுமிருந்தால் தயவு செய்து எமக்கு அறியத் தரவும். மாவீரர்களின் விபரங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று
நினைவு வணக்கம்
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
நன்றி சனியன் லெப்.சைமன் அவர்களின் படம் மாற்றப்பட்டுள்ளது.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
நன்றி தப்பிலி மாவீரர்கள் தொடர்பான உங்களின் குறிப்புக்களிற்கு.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
தாயக விடுதலைக்காக தம்மை உவப்பீகை செய்த மாவீரர்களின் விபரங்களை தனித்தனியாக இணைக்கத் தொடங்கியுள்ளோம். முதற்கட்டமாக 1982 முதல் 1986 வரை வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. விபரங்களைப் பார்க்க http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist
-
18.02 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீரவேங்கை ரவிக்குமார் ம.புண்ணியமூர்த்தி தம்பிலுவில், அம்பாறை. http://veeravengaika...mid=104&cid=196
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
- கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
05.01.2008 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ்(அருள்வேந்தன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அவர்களுடன் லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம். கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை: புலனாய்வுத்துறையின் தாங்கும் சக்தியாக ஒரு மாவீரனாக கேணல் சாள்சைப் பார்க்கின்றேன். போர்க் களங்களில் தன்னை ஆகுதியாக்க கேணல் சாள்ஸ் பல தடவை முன்னின்றுள்ளான். ஆனால் போர் களத்தின் வெளியே நின்று போர்க் களத்தின் அழுத்தத்தின் சக்தியாக நின்று, உழைத்து அந்த உழைப்பின் சக்தியாக நின்ற சாள்சை நினைவு கூரவேண்டும். சில நடவடிக்கைகள் கடினமான சூழலில், கால நிர்பந்த நிலையில், அந்த நடவடிக்கையின் இயங்கு சக்தியாக கேணல் சாள்ஸ் இருந்தான். பிறேமதாச காலத்தில் எமது போராட்டம் அடுத்த சவாலை எதிர்கொண்ட போது, தேசியத் தலைவருக்கு ஓரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது. அது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ணா, சனாதிபதி பிறேமதாச, படைத்தளதிகளால் திட்டம் தீட்டப்பட்டது. எமது தேசியத் தலைவரை கொன்று, தாக்குதல்களைத் தொடுத்து, தேசிய விடுதலைப் போராட்டத்தை இல்லாது அழிப்பதே அத்திட்டம். இந்த நிலையிலேயே அவர்களின் தலைநகரிலேயே அவர்களைச் செயற்பட முடியாதென்று நாம் அப்போது கற்பித்தோம். அதைச் செய்து காட்டியவன் சாள்ஸ். சாள்சின் ஆளுமை என்பது, வரலாற்றில் அதீத தன்னம்பிக்கை, வரலாற்றில் பெரும் வெற்றியாக அமைந்த கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல். அங்கு நம்மால் செய்ய முடியாத வெற்றிகளை எமது போராளிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று, இதை விட பெரியது இருக்கு அதை நம்பிக்கையுடன் செய்வோம் என்று சாள்ஸ் சொன்னான். கொழும்பு களத்தில் கேணல் சாள்ஸ் பல வரலாற்றுத் தடத்தைப் பதித்துள்ளான். அதற்காக அவன் உழைத்த உழைப்பு மிக அதிகம்.- லெப்.கேணல் நம்பி நினைவுநாள்
30.12.2000 அன்று மணலாறு கோட்டத்தில் தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நம்பி(துசி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.- லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவுநாள்
28.12.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு - அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் லக்ஸ்மன் - பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு) மேஜர் துவாரகன் - பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் - ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு) மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை - பதுளை) கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா - கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு) கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் - கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு) லெப் காண்டீபன் ( நடராசா யோகராசா - கிரான், மட்டக்களப்பு) லெப் புரட்சிமாறன் - ராஜித் (அரசமணி சிவகுமார் - ஏறாவூர், மட்டக்களப்பு) லெப் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) லெப் அருணகிரிநாதன் - ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன - தம்பிலுவில், அம்பாறை) 2ம் லெப் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா - கோமாரி, அம்பாறை) 2ம் லெப் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் - தாண்டியடி, அம்பாறை) 2ம் லெப் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் - செங்கலடி, மட்டக்களப்பு) வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் - கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு) வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் - வத்தாறுமூலை, மட்டக்களப்பு) வீரவேங்கை முருகானந்தன் - தமிழரசன் (இளையதம்பி கமலபரன் - ஆரையம்பதி, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் பூமாஞ்சோலை படைமுகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம்மாவீரர்களிற்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.- லெப். கேணல் அப்பையா அண்ணா
- லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு இன்றாகும் . வாகரை - வாழைச்சேனை சாலையில் கிருமிச்சை சந்தியில் அமைந்திருந்த படைமுகாம் மீதான தாக்குதலின்போது லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் - சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு) கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப் மனோச்சந்திரன் - மனோச்சாந்தன் (கோபாலன் கிருஸ்ணகுமார் - ஆரையம்பதி, மட்டக்களப்பு) 2ம் லெப். நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர் - கல்லடி, மட்டக்களப்பு) 2ம் லெப். கண்ணிதன் (யோகராசா தயானந்தன் - கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன் - தேத்தாத்தீவு, மட்டக்களப்பு) வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன் - கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன் - கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் - நேரியகுளம், வவுனியா) வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன் - வெல்லாவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி - இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் ஓயாத அலைகள் - 3 தொடர் நடவடிக்கையின்போது முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில் வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார் - ஏறாவூர், மட்டக்களப்பு) என்ற போராளியும் மணலாறு கொட்டைக்காடு பகுதியில் மேஜர் காதாம்பரி (விக்ரர் அற்புதநாயகி - மாதகல், யாழ்ப்பாணம்) என்ற போராளியும் யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில் 2ம் லெப். பொதிகைமகன் (சிவம் சசிதரன் - அச்சுவேலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் - வேலணை, யாழ்ப்பாணம் ) ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.- லெப்.கேணல் சிவமோகன் மற்றும் 14 வேங்கைகளின் நினைவு நாள்
13.12.1999 அன்று ஓயாத அலைகள் 3 தொடர் நடவடிக்கையின் போது யாழ். குடா நாட்டில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவமோகன் உட்பட்ட 14 வீரவேங்கைளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி) லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு) லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும். வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில் கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் - வேலணை, யாழ்ப்பாணம்) கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா - கொக்குவில், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிளும். தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரில் கப்டன் ஆராதனா (பாலசுப்பிரமணியம் சந்திரவதனி - பூநகரி, கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா - மன்னம்பிட்டி, மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா - மணலாறு) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் (பிள்ளையான் சந்திரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும். கொம்படிப்பகுதியில் நடைபெற்ற சமரில் கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி - கிரான், மட்டக்களப்பு) என்ற போராளியும் ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரில் 2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் - பரந்தன், கிளிநொச்சி) என்ற போராளியும் மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரில் லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் - மதியாமடு, வவனியா) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்- லெப்.கேணல் மனோஜ் நினைவு நாள்
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும் வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில் லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை), மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு), லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை). 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீதான தாக்குதலின் போது கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2, அம்பாறை) கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா - வாகரை, மட்டக்களப்பு) லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் - சித்தாண்டி, மட்டக்களப்பு) லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் - விநாயகபுரம், அம்பாறை) 2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் - கரடியனாறு, மட்டக்களப்பு) 2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் - நெடியமடு, மட்டக்களப்பு) 2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் - சந்திவெளி, மட்டக்களப்பு) 2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் - புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு) 2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் - கரடியனாறு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். போராளிகளின் இந்த இரு தாக்குதல்களில் சிறிலங்கா காவல்துறை மற்றும் படையினர் 10ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். பெருமளவான போர்க்கருவிகள், வெடி பொருட்களும் விடுதலைப் புலிகளால் இதன்போது கைப்பற்றப்பட்டமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ தாய் மண்ணை வல்வளைப்பாளர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்- முல்லைக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்- 17 ஆயிரம் மாவீரர்களின் பெயர் விபரங்களுடன் வீரவேங்கைகள் இணையம்
?????- 17 ஆயிரம் மாவீரர்களின் பெயர் விபரங்களுடன் வீரவேங்கைகள் இணையம்
தமிழீழ தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய வீரவேங்கைகளில் 17 ஆயிரம் வரையான மாவீரர்களின் பெயர் விபரங்கள், மற்றும் ஒளிப்படங்கள், வீரவரலாறுகள் உட்பட்ட பல்வேறு விடயங்களுடன் வீரவேங்கைகள் இணையம் இன்று முதல் இணைய வலையில் கால் பதிக்கிறது. www.veeravengaikal.com- 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
நன்றி அகூதா- தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை ஒருசேர போற்றி வணங்கும் மாவீரர் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. - கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.