Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. கனம் யாழ் நிர்வாகத்தினருக்கு, எனது பட்டியலில் உள்ள Ignored Users கருத்துக்கள் திண்ணையில் காண்பிக்கப்படுவதை தவிர்க்க வழி உள்ளதா? நன்றி.
  2. பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கிருபன்ஜி.
  3. அன்பின் சமூக ஆர்வலர்களே, டோக்யோ ஒலிம்பிக் 2020 கள நிலவரம், பதக்க நிலவரம் சம்மந்தமாக விளையாட்டு திடலில் ஓர் உரையாடலை ஆரம்பியுங்கள், சுவாரசியமாக இருக்கும். நான் இப்போது சவூதி, ஜேர்மனி ஆரம்பசுற்று உதைபந்தாட்ட ஆட்டம் பார்க்கின்றேன். சவூதி நன்றாக விளையாடுகின்றது.
  4. தலைப்பு தமிழ் செல்வன் படுகொலையில் கருணாவின் பங்கு. ஆனால், இங்கு எதுவித ஆதாரமும் கொடுக்கப்படவில்லையே. ரஞ்சித்தின் ஊகங்கள் வரலாற்று ஆவணம் ஆகமுடியுமா?
  5. கிராண்ட் மாஸ்டரை தமிழில் பேய்க்காய் என்று போடுங்கோ. வெட்டரணை தமிழில் பழசு என்று போடுங்கோ.
  6. கனம் யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு, எனது பெயர் அருகில் "Community Regular" என்று ஒரு பலகை தொங்குவதை அண்மையில் அவதானித்தேன். இதை தமிழில் "சமூக ஆர்வலர்" என மாற்றினால் சிறப்பாக அமையும். 😉 "நியாயத்தை கதைப்போம்" எனும் எனது பெயரை "சமூக ஆர்வலர்" என மாற்றி தரமுடியுமா? அல்லது "சமூக ஆர்வலர்" எனும் பெயரில் நான் ஒரு புதிய கணக்கை ஆரம்பிக்கலாமா? 😁
  7. எனக்கு தமிழ் மக்களின் துரோகியை பற்றி எழுத பல பக்கங்கள், திரிகள் தேவை இல்லை. இந்த ஒரு பதிவே போதும். இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகியாக விளங்குவது ஒரே ஒரு ஆள்தான். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி.. சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனைகளை வளர்த்து, அந்த சூட்டில் குளிர் காய்ந்து... பன்னெடுங்காலமாக அயோக்கியத்தனங்கள் செய்யும் இந்தியாவே தமிழ் மக்களினது துரோகி. இலங்கையில் சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பிரச்சனைகள் காலம் காலமாக தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் அடிப்படை சித்தாந்தம். தனது அண்டை நாடு இலங்கை தன்னை விட எந்த விதத்திலும், வகையிலும் மேலோங்குவதை இந்தியா விரும்பாது, அனுமதிக்காது. இங்குள்ள பலரும் சாடும் கருணா, டக்ளஸ் எல்லாரும் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கொள்கை வகுப்புக்கள், தயாரிப்புக்களின் பக்க விளைவுகள், இதனுள் சீமானும் அடக்கம். அவ்வளவே. இன்றும் கூட பலர் இலங்கை தமிழருக்கு இந்தியா தனி நாடு பெற்று தரும் என கனவு காண்கின்றார்கள். தொடர்ந்து கனவு காணுங்கள். இந்தியா உங்கள் வாய்க்குள் கக்கூஸ் செய்துவிட்டு போகும். துட்டனை கண்டால் தூர விலகு. இந்தியாவின் சகவாசம் இலங்கைக்கு கொள்ளி கட்டை.
  8. ரஞ்சித்தின் இடுகைகள் யாழ் கருத்துக்களத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. யாழ் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. நாளை சட்ட ரீதியாக ஏதும் சிக்கல் வராது எனும் துணிவில் தனக்கு பிடித்தமான வகையில் விபரணம் செய்கின்றார். எமது சக உறவு எனும் அடிப்படையில், அது யார் என்றாலும் மனச்சுமைகள் இறங்குவதற்கு, மன ஆற்றுப்படுத்தலுக்கு துணை நிற்கலாம். மற்றும்படி, இலங்கையில் பிறந்து, கல்விகற்று, அகதிகளாக அலைந்து, எல்லா தரப்பினதும் அராஜகங்களை எதிர்கொண்ட சாதாரண மக்களால் யார் யார் என்னென்ன துரோகங்கள் இழைத்தார்கள் என்பதை இலகுவில் மறக்க முடியாது.
  9. ஒருவரும் ஒருவரையும் மதிக்க எல்லாம் தேவை இல்லை; கருத்துக்கள விதிமுறைகளை அனுசரித்தாலே போதும் முடி கொட்டாது. நீங்கள் என்ன சொல்லுறீங்கள்? 😁 யாழ் கருத்துக்கள நிர்வாகத்தினரே, எமது சக கருத்தாளர் குமாரசாமி அவர்கட்கு தலையில் முடி வளர வைக்க (அதாவது...டிரான்ஸ்பிளாண்ட் செய்துவிட) முடியுமா? திண்ணை உரையாடலுக்கு மீண்டும் அனுமதி கொடுக்க இயலுமா? 🤔
  10. யாயினி அண்மையில் பதிவுகள் இட்டும் பார்வையாளர் பகுதியில் உள்ளார் என்று இங்கு ஏதோ தவறு நடந்துள்ளது.
  11. சிவராம் அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து என முன்னமே அறியவில்லையா? சம்பவங்களை வாசிக்கும் போது தனக்கு ஒன்றும் நடக்காது அல்லது ஒருவரும் தனக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில் இருந்தாரோ என எண்ணத்தோன்றுகின்றது. சிவராம் அவர்களின் கொலையாளி இங்கு எழுதப்படும் பதிவுகளை இப்போது வாசித்துக்கொண்டும் இருக்கக்கூடும்.
  12. உங்கள் பார்வை மிகவும் தவறானது. எத்தனை கருத்துக்கள் எழுதப்படுகின்றன என்பதற்கும் தனி மனித தாக்குதல்கள் செய்யாமல் எல்லோருடனும் பண்பாக உரையாடல் செய்வதற்கும் என்ன சம்மந்தம்? என்னால் நீங்கள் குறிப்பிடும் ஆயிரம் கருத்துக்களை பத்து நாட்களில் இடுகையிட முடியும். நான்கு ஐந்து மணித்தியாலங்களில் இரு நூற்று ஐம்பது கருத்துக்களை என்னால் இலகுவாக எட்ட முடியும். இதே மாதிரி ஓர் தளத்தை உருவாக்கி இரண்டு நாட்களில் இயங்கு நிலைக்கு கொண்டு வரக்கூடிய அனுபவம், அறிவு எனக்கு உள்ளது. சமூக அக்கறை உள்ளதால் யாழ் கருத்துக்களத்துடன் தொடர்பில் உள்ளேன்.
  13. அண்மைக்காலமாக யாழ் கருத்துக்களத்தில் தனி மனித தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றன. ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து இந்த கொரனா காலத்தில் மன அழுத்தத்தை போக்குகின்றார்கள் போல் உள்ளது. நிர்வாகத்தில் உள்ளவர்களே கருத்துக்கள் பதியும்போது உணர்ச்சிவசப்படுகின்றார்கள். கருத்துக்கள விதிமுறைகள் சும்மா ஒரு சம்பிராயத்துக்கு மட்டுமே உள்ளனவோ என்று எண்ணத்தோன்றுகின்றது. கருத்துக்களை அவை விதிமுறைகள் மீறாமல் எழுதப்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்க நேரப்பற்றாக்குறை என்றால் நிர்வாகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சிலரின் தொடர்ச்சியான பல பதிவுகளை பார்க்கும்போது இவர்கள் எதை எழுதினாலும் பரவாயில்லை என்று நிர்வாகமே கைவிட்டுவிட்டது போல் தோன்றுகின்றது. பெரும்பாலான திரிகளில் தலைப்புடன் சம்மந்தமேயில்லாமல் கருத்தாளர் ஒருவரை இழிவுபடுத்தவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு பதிவுகளை இடுகை செய்கின்றார்கள். கருத்துக்களத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லோரும் எழுதுவதற்கான அனுமதி அவர்கள் எப்படி பண்பாக சக கருத்தாளர்களுடன் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் கொடுப்பட்டால் உகந்தது.
  14. வடமராட்சி நகர்வின் ஏக காலத்தில் காங்கேசன்துறை, பலாலியில் தொடங்கி தெல்லிப்பழை பகுதி நோக்கி இராணுவம் முன்னேற தொடங்கியது. ஆனால், வடமராட்சி பிரச்சனை பெரிதாகும் முன்னரே காங்கேசன்துறை இலகுவாக இராணுவத்தின் வசமாகிவிட்டது. பொதுமக்கள் இராணுவத்துக்கு தண்ணி காட்டிவிட்டு உள் பாதைகளால் இரகசிமாக தமது வீடுகள் பார்க்க சென்று வந்தார்கள். இராணுவத்திடம் பிடிபட்டவர்கள், தாக்குதல்களுக்கு உள்ளானவர்களும் உண்டு. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு சென்றார்கள். இந்திய இராணுவம் வெளியேறி போர் தொடங்கியதும் மீண்டும் 1990 பாரிய இடம்பெயர்வு. ஆனால் அது நிரந்தரமானது. முன்பு அவ்வப்போது காங்கேசன்துறை பலாலி இராணுவ முகாம்களின் போக்குவரத்தை வழிமறித்து கண்ணிவெடி தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அதன் விளைவுகளை மக்கள் சமாளித்தார்கள். ஆனால், 1987 ஹாபர் வியூ அடியுடன் காங்கேசன்துறை அவல பூமி ஆகிவிட்டது. கடற்படை, விமானப்படை, தரைப்படை சேர்ந்து ( காங்கேசன்துறை முகாம், பலாலி முகாம் இராணுவம்) அந்த பகுதியை துவம்சம் செய்தது.
  15. ஆமாம், குமாரசாமி ஜேர்மனி குடிவரவுத்துறை நிர்வாகக்தில் உள்ள சமூகஆர்வலர் என மெய்ச்சி பெருமைப்பட்டு கொள்ளலாம்.
  16. நுணாவிலான் யாழ் இணையம் கருத்துக்கள நிர்வாகத்தில் மட்டும் அல்ல கனடா குடிவரவுத்துறை நிர்வாகத்திலும் உள்ளார் என்று அறியும்போது பெருமையாக உள்ளது. வேலியே பயிரை மேய்ந்தால் யாழ் கருத்துக்களம் உருப்படும். வாழ்த்துக்கள்!
  17. நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். மயிர்கூச்செரியும் தாக்குதல் நடாத்தப்பட்டது. கொப்பேகடுவ துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓட்டம். சிங்களத்திற்கு பேரிழப்பு. பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை, அழிவுகளை, அலசவேண்டிய, நினைவுகூர வேண்டிய தேவை இல்லை. எல்லாரும் பத்திரமாய் காங்கே சன்துறை துறைமுகத்தில் கப்பல் ஏறி கனடாவுக்கு அகதிகளாய் வந்துவிட்டார்கள். ஆஹா ஓஹோ என்று வாழ்கின்றார்கள். வேறென்ன வேண்டும்? எமக்கே இறுதி வெற்றி. வணக்கம்.
  18. இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம்.
  19. யாழ் நிர்வாகத்தில் ஆண்கள் மட்டும் உள்ளார்கள். பெண்கள் இல்லை. முகம் அறியப்பட்ட ஒன்று, இரண்டு பெண்களை நிர்வாகத்தில் இணைத்தால் யாழ் இணையத்தின் வளர்ச்சிக்கு நல்லது. மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி இல்லை.
  20. இலங்கையில் மருத்துவ வசதிகள் நாம் நினைக்கும் வகையில் மட்டமாக இல்லாமல் திருப்திப்படும் அளவில் உள்ளதாக அறிந்தேன். அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகராக நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவாம். முதியவர்கள் விடயத்தில் நாம் எவரையும் நம்ப முடியாது. பிள்ளைகள் சிரத்தை எடுப்பதுபோல் நிச்சயம் வெளியார் கவனம் எடுக்கமாட்டார்கள். குருதி, சிறுநீர் மாதிரிகளை ஆய்வுசாலைக்கு அக்கறையாக எடுத்து அனுப்புவது தொடக்கம் தவணை முறையில் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவது, கவனமாக வெளியில் அழைத்து சென்று கவனமாக வீட்டுக்கு கூட்டிவருவது வரை பிள்ளைகளின் அல்லது கரிசனை உள்ள நெருங்கிய உறவுகளின் உதவி பெரியோருக்கு தேவை. யாரையும் நம்பினால் ஒன்றுக்கும் உத்தரவாதம் இல்லை.
  21. அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது.
  22. இன்று சரஸ்வதி பூஜை, நாளை விஜயதசமி. வாழ்த்து பகுதியில் இதற்கு வாழ்த்து தெரிவிக்கலாமா? மூட நம்பிக்கைகள் பற்றி இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதாக கருத்துக்களில் மாற்றம் பகுதியில் சில தடவைகள் அவதானித்தேன். எனவே சந்தேகம் தோன்றியது. மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது என்று யாழ் கருத்துக்களத்துக்கு எதிராக ஒரு கேஸை போடலாம் என்று சொல்ல வாறீங்களோ? ஒவ்வொரு நாளும் நீங்கள் சிறுக சிறுக கேகரித்து பொக்கிசமாக போற்றும் பச்சை நாளை ஏதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காணாமலும் போகலாம். எனவே ஸ்கிரீன் சொட் எடுத்து வையுங்கள்.
  23. ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும். ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது.
  24. வெளிப்படை தன்மைக்கும் காவாலித்தனத்துக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன பெருமாள்.
  25. சில வருடங்கள் முன் ஐ.பி.சி சேவை விஸ்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தொடக்க வைபவம் நடைபெற்றபோது வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். அப்போது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது ஐ.பி.சி சிறப்பாக நல்ல பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்று. இன்று அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களே ஐ.பி.சி தமிழின் தற்போதைய நிலை கண்டு முகம் சுழிக்கின்றார்கள். ஐ.பி.சியின் சில்லறைத்தனமான ஊடகவியல் செயற்பாடுகள், மற்றும் தரம்கெட்ட வகையில் ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தவறான வழியில் எமது எதிர்கால சந்ததியை கொண்டு செல்லும். மக்களை மடையர்கள் என நினைத்துக்கொண்டு ஊடகங்கள் தனிப்பட்ட லாபங்களை, தமது குறுகிய நோக்கங்களை அடைய நினைப்பது கேவலமானது. வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் தெரியும் தத்தம் நாடுகளில் சட்டம், ஒழுங்கு நடைமுறைகளின் நிமித்தம் எது சரி, எது பிழை. எப்படி ஒன்றை செய்யலாம், எப்படி ஒன்றை செய்யக்கூடாது, தவறான செயற்பாடுகளின் பின்விளைவுகள் என பல்வேறு விடயங்கள். ஆனால், இவர்கள் இலங்கை என வரும்போது வழமையான ஒழுங்கமைப்பு, நடைமுறைகளில் இருந்து இருந்து விலகி தான் தோன்றித்தனமாகவும், எதேச்சையாகவும் காரியங்களை முன்னெடுக்கின்றார்கள். அடுத்தவனை துரோகி, ஏமாற்றுக்காரன் என்று கூறுபவர்கள் முதலில் தாங்கள் யார், தங்கள் யோக்கியதை என்ன என்பதை உணர்ந்துகொள்வது நல்லது. ஒரு சில ஊடகங்கள் செய்கின்ற தவறான செயற்பாடுகள் அனைவரையுமே பாதிக்கும். கடைசியில் எங்களுக்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லி முறைப்பாடு செய்யவேண்டியதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.