Everything posted by நியாயம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் மோபைல் மூலம் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது தன்னிச்சையாக சிறிதுநேரத்தில் வெளியேற்றப்படுகின்றேன். பிரைவேட் மோடில் உள்நுழைவது இதற்கு காரணமா? இப்படி உங்கள் வேறு யாருக்காவது ஏற்படுகின்றதா? எதையாவது எழுதும் போது சிறிதுநேரத்தில் நான் எனது கணக்கில் இருந்து லொக் அவுட் ஆக்கப்படுவதால் கருத்துக்களை இடுவது சிரமமாக உள்ளது. இப்படி கடந்த ஒரு ஆறு மாத காலமாக உள்ளது என நினைக்கின்றேன்.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
நேற்று இன்னோர் சுய ஆக்க பகுதியில் பூமிக்கு வெளியில் இன்னோர் கோளில் நின்று பூமியை தரிசிக்கும் ஓர் சிந்தனை பகிரப்பட்டது. அப்படியான கற்பனை சுவாரசியத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை தூண்டியது. அவ்வாறே உங்கள் சுய ஆக்கத்தில் காலங் காலமாக கூறப்படும் இந்த காகம்-வடை-நரி கதையில் நரி, காகம் ஆகியவற்றின் உளப்பாடு பற்றி கற்பனை செய்வது சிந்தனையை தூண்டுகின்றது. மிருகங்களின் மொழி, பறவைகளின் மொழி வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் உட்பட தக்கன பிழைத்தல் பற்றிய கொள்கையின் கீழ் அனைவரும் கட்டுப்படுகின்றோம். வாழ்வாதார போட்டி!
- மனிதா உன்னைத்தான்!
-
மெய்தீண்டாக் காதல்........!
ஐயா, உங்கள் காதல் அழகு. இப்போது ஆண், பெண் இருவரும் ஊரில் பெரும்பாலும் பேபி பேபி என்று தான் அழைக்கின்றார்கள். காதால் கேட்டேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
📍📍📍 செயற்கை நுண்ணறிவை நாம் எப்போதோ பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இப்போது என்ன நடைபெறுகின்றது என பார்த்தால் ஒரு மோபைல்/இணையத்தில் இயங்கும் பொறிமுறை/செயலி மூலம் பரந்துபட்ட விடயங்களை ஒரு இடத்திலேயே கணிக்க/உருவாக்க/வெளிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிப்புக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. இங்கு யாழ் கருத்துக்களத்தில் திண்ணை எனும் பெயரில் அரட்டை அடிக்கும் இடம் உள்ளது. திண்ணையில் நாம் எமது கருத்துக்களை, எண்ணங்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். அப்போது மற்றைய உறுப்பினர்கள் நாம் கூறுபவற்றை பார்க்கலாம், பதில் இடலாம். எமது அரட்டையை புறந்தள்ளிவிட்டு தாம் புதிதாக வேறு பொருளிலும் எதையாவது எழுதலாம். சட்ஜிபிடி கிட்டத்தட்ட ஒரு அரட்டை பெட்டி/திண்ணை போன்றதே. சில மாறுபாடுகள் எவை என்றால் உரையாடலில் இரண்டு தரப்பு மட்டுமே பங்குபற்றுகின்றன. ஒன்று: நாம் (தனிநபர்) மற்றையது: செயற்கை நுண் திறனில் இயங்கும் ஒரு பொறிமுறை. இப்போதைக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு உரையாடலில் இணையக்க்கூடிய வசதி இல்லை. ஆனால், எதிர்காலத்தில் பலர் சேர்ந்து செயற்கைநுண் திறனில் இயங்கும் பொறி மூலம் ஒரே நேரத்தில் இணையக்கூடிய வசதி ஏற்படுத்தப்படலாம். ஆங்கிலத்தில் உரையாடலை செய்தால் அதிக துல்லியமான பதிலை சட்ஜிபிடி வழங்கும். தமிழில் உரையாடல் செய்யலாம். ஆனால் சட்ஜிபிடி பதில்கள் தமிழில் என்றால் ஆங்கிலம் போல அதிக துல்லியமாக அமையாது. காரணம் அதன் மட்டுப்படுத்தப்பட்ட மொழி ஆளுகை. ஆயினும் எதிர்காலத்தில் தமிழ் மொழி மூலம் உரையாடுவதில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். சட்ஜிபிடி உரையாடலில் இணைய முன்னர் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. உரையாடல் விடயங்களை நேரடியாக சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம், சட்ஜிபிடி பதிலை வைத்து முடிவுகள் எடுக்கக்கூடாது போன்றவை (உதாரணமாக மருத்துவ ஆலோசனை பெறுவது என்றால் மருத்துவரை நாடவேண்டும். சட்ஜிபிடி கூறக்கூடிய பரிகாரத்தை கடைப்பிடிப்பது கூடாது). சட்ஜிபிடி மூலம் நாம் எப்படி பயன் அடைகின்றோம், அதனால் நன்மை அடைகின்றோமா, தீமை அடைகின்றோமா, அதன் வீச்சுக்கள் எவை, அதனால் செய்யக்கூடியவை எவை, செய்ய முடியாதவை எவை என்பவை இப்போது விரிவாக விபரிப்பது கடினம். உளி மூலம் ஒரு சிற்பியால் அழகிய சிலையை வடிக்க முடியும். அதே உளியை தவறான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவின் நல்லதும், கெட்டதுமான தாக்கங்கள் அதை பயன்படுத்தும் தனிநபர்களிலும் தங்கி உள்ளன. கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி செயற்கை நுண் திறனில் இயங்கும் அரட்டை பெட்டியினுள் செல்லலாம்: https://chat.openai.com Hi/Hello/Greetings/வணக்கம்.. இப்படி எதையாவது கூறி உரையாடலை ஆரம்பிக்கலாம். எமது இடுகைகளை பொறுத்து, நாம் வழங்கும் தரவுகளின் நிமித்தம் எமக்கு கிடைக்கின்ற பதில்கள் வேறுபடும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்…
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾 அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐 யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾 “சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾 நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾 சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾 📍📍📍 முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும். என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது. தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது. இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன. ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம். மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி. இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன. கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம். எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 🙏🏾🙏🏾🙏🏾 தொடரும்..
-
தமிழன்னை அருட்புகழ்
அருட்புகழ் அருமை. இதனை எழுத்து வடிவத்தில் மேலே இணைத்து திருத்தம் செய்யுங்கள். நீங்கள் இணைக்கும் படம் சிறிது காலத்தில் காணாமல் போகலாம். ஆனால் எழுத்தில் எழுதி இணைத்தால் எப்போதும் பார்க்கலாம். தவிர, கூகிழ் போன்ற தேடற்பொறிகளும் உங்கள் படைப்பை இனம் காண உதவும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
கவனம் இல்லாமல் வெளியில் நின்றால் நுளம்பு உடம்பில் டிசைன் போட்டுவிடும். பிறகு கடிபட்ட இடத்தை சொறிவது ஒரு தனி சுகம். இப்போது நல்ல நுளம்புவலைகள் உள்ளன. நிம்மதியாக தூங்கலாம். பயம் வேண்டாம்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ChatGPT பற்றி யாழ் கருத்துக்களத்தின் நிலைப்பாடு என்ன? CharGPT ஐ பயன்படுத்தி ஆக்கத்தை உருவாக்கிவிட்டு அதில் சிறிய மாற்றத்தை செய்து இங்கு இணைத்தால் கண்டிபிடிக்க முடியாது அல்லது கடினம். நாம் தொடர்பாடல் செய்யும் முறையில் பாரிய மாற்றங்கள் காத்து உள்ளன.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
பொலிஸ்காரனுக்கு வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசை என்பது உண்மைதான். வாகனத்தை மறித்துவிட்டு தாங்கள் வெளிநாடு வருவது எப்படி என ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. தவிர கைவிசேடம் கேட்பவர்களும் உண்டு.
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
காணொளி என்று முன்பு எழுதினேன். காணொளி தவறு காணொலி சரி என கூறப்பட்டது. காணொலி எனக்கு சரியாக தென்படுகின்றது. ஒளி + ஒலி = காணொலி
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
என்னய்யா பில்லியனராய் வரவேண்டும் என்று அடுத்த தலைமுறை தவிக்கிது. மில்லியனரை இப்படி படுகொலை செய்துள்ளார்கள் 😫 கிரிக்கெட் ஜெண்டில்மான் கேம் என்று சொல்வார்கள். இதில் கொலைகாரர் கூட்டமும் உள்ளதோ 😩
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கிருபன்! 🎂🎈🎈 அகவை.. 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், நான் ஒவ்வொரு தடவையும் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது எனக்கு மின்னஞ்சல் எச்சரிக்கை வருகின்றது. இப்படி எனக்கு மின்னஞ்சல் வராமல் இந்த தெரிவை நீக்கிவிட முடியுமா? நன்றி! கருத்துக்களம் Hi நியாயத்தை கதைப்போம், You just logged in from a device we haven't seen you use before. Device * Browser *** Estimated Location* ***
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இனி இதற்கு என்று பேஸ்புக்கில் பிரத்தியேக கணக்கு ஒன்று ஆரம்பிக்க வேண்டுமே 🤔
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு நாளைக்கு ஆறு ஏழு ஆணி சும்மாதான் தாறாங்கோ விருப்பமான இடங்களில் அடிச்சு விட எதையாவது அதில் தொங்கவிடலாம் தானே. ஆணியை புடுங்குவதை விட அடிப்பது இலகு என்பதால். நானும் இனி ஆணி அடிக்க யோசித்து உள்ளேன். வினா தொடுத்தேன். மற்றும்படி அப்போது கேட்ட விடயங்கள் உண்மைதானே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விடுப்பு ஒரு பக்கம் போகட்டும். இந்த பச்சை குத்துதல் நடைமுறை யாழ் கருத்துக்களத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளதா அல்லது வீழ்ச்சிக்கு இட்டு சென்றுள்ளதா அல்லது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களை மட்டுறுத்தல் செய்து நொந்து போனதால் கருத்துக்களம் 24/7 பேஸ்புக் போல் இயங்கவிடப்படாமல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்துவிடப்பட்டு உள்ளது போல.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
உங்களுக்கு பறப்பு அசெளகரியத்தை கொடுத்தால் விமான நிறுவனத்திற்கு முறைப்பாடு கொடுக்கலாம். படம்/காணொலியை அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம். Refund/Gift voucher ஏதும் கொடுப்பார்கள். விமானத்தின் Tail Numberஐ குறித்தால் அதன் வயது, பின்னணி பற்றி அறியலாம். சிலருக்கு தாம் பயணிக்கும் விமானங்களின் Tail IDஐ சேகரிப்பது பொழுது போக்கு. வெவ்வேறு சமயங்களின் அந்தந்த விமானங்களை இனம் காணலாம்.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
கோவிட் பிரச்சனை ஒருபக்கம், பொருளாதார பிரச்சனை மோசம் ஆனால் சனம் ஒவ்வொரு நாளும் இலங்கை போய்க்கொண்டு தான் உள்ளார்கள். க.பொ.த உயர்தரம் பரீட்சைக்கு வினாத்தாள் அடிக்கவே கடதாசி இல்லையாம். இப்படி ஒரு நிலமையை யார் எதிர்பார்த்தார்கள். இது எங்கே போகுமோ பார்ப்போம். அங்கு பொருட்கள் வெளிநாட்டு விலையில் போகுது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இங்கு இணைக்கப்படும் பல யூரியூப் காணொலிகள் அவற்றின் இணைப்புக்கள் சொடுக்கப்படும்போது சத்தம் கேட்கின்றன, ஆனால் ஒரு கணம் பின்னர் காட்சிகள் தெரியவில்லை. நிற பிறழ்வு உள்ள திரை மட்டும் தோன்றுகின்றது. இது யுரியூப் இணையத்துடன் மட்டும் தொடர்புபட்ட பிரச்சனையா? எனது ஊகம் காப்புரிமைகள் கவனத்தில் எடுக்கப்படாது உருவாக்கப்படும், தரவேற்றம் செய்யப்படும் யூரியூப் காணொலிகள் இப்படி தோன்றுகின்றனவோ என்பதுதான். 🤔
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் விசுகு; ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டுகள்!