Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. எனக்கு நியூசிலாந்து பற்றி விரிவாக தெரியாதபடியால் உங்கள் வினாவுக்குரிய பதில் தெரியவில்லை. சில தடவைகள் அங்கு சென்றுள்ளேன். பல விடயங்களை நேரில் பார்க்க அதிசயமாகத்தான் தோன்றின. எனக்கு முன்பு தெரிந்த நியூசிலாந்து பற்றிய விபரங்கள் அதன் தேசிய கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த காணொளியையும் ஒருக்கால் பாருங்கள். எனக்கு நியூசிலாந்து பெண்ணின் காணொளி பார்த்தபோது இந்தப்பெண் நினைவில் வந்தார். ஒரு காலத்தில் எல்லார் தலையிலும் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் பின்னர் தூக்கி எறியப்பட்டார் (தற்போதைய பேச்சு வழக்கில் கழுவி கழுவி ஊத்தினார்கள்). https://youtu.be/K9yqU37MhT4?si=1u6izceSgWKVMWn0
  2. ஆமாம், மிகவும் உணர்ச்சிகரமாகத்தான் உள்ளது. பேசும் மொழி புரியாவிட்டாலும் அவரது உணர்ச்சிகள் மயிர் கூச்செரியச்செய்கின்றது.
  3. பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இரண்டு காலில் தானே நடக்கின்றார்கள்? உங்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டுடன் சென்றபோது நோர்வே விமான நிலையத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லையோ? இந்தப்பெண்ணின் தந்தை மாஸ்டர் என காணப்பட்டது, பெயர் வரதராஜன் (வரதர்) என உள்ளது. நான் யாழில் பிரபலமான பொருளியல் ஆசிரியர் பெண்ணோ என நினைத்தேன். இது வேறோர் வரதர் பொண்ணு. தமிழ் பல் மருத்துவர் மீது துப்பாக்கி சூடு அதுவும் நோர்வேயில் இது அரிதான சம்பவம். அதற்காக நோர்வேயை இழுத்து வைத்து கும்மக்கூடாது. கடந்த வருடம் என நினைக்கின்றேன் தனது மனைவியை இன்னோர் ஆள் மூலம் சுட்டுக்கொன்ற தமிழருக்கு கனடா நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டது என ஒரு செய்தி வாசித்த ஞாபகம். இதுவும் ஒரு உறவுநிலை சம்மந்தப்பட்ட மரணம் போலுள்ளது. தனிப்பட்டவர்களின் மனநல பிரச்சனைகளுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டை குறை சொல்லலாமா?
  4. ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த செய்தி முன்பு தமிழ்வின் தளத்தில் வந்தது. கூகிழ் தேடலில் சாவு அறிவித்தல் கண்டேன். https://www.tamilthakaval.org/obituaries/ragavi-varatharajan/
  5. கேலிச்சித்திரத்திற்கு நன்றி கலைஞர் கவி அருணாசலம். தந்தையார் சுட்டு கொல்லப்பட்ட சமயம் நானும் கொழும்பில் தான் வசித்தேன்.
  6. உள்ள பிரச்சனைகள் போதாது என்று.. வேலியில போற ஓணானை வேட்டிக்குள் பிடிச்சு விட்டால்..
  7. இவரது தந்தை மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுதினம் ஜனவரி ஐந்து என ஒரு தகவல் பார்த்தேன். தந்தை தற்போது உயிருடன் என்றால் அவர் எப்படியான நிலைப்பாட்டை எடுப்பாரோ?
  8. இவர்களே வீட்டுக்கு அழைப்பு எடுத்து மாட்டிவிடுவார்கள் போல் உள்ளதே. இனி சில நாட்கள் பின் கந்தையர் கருத்துக்களத்தில் காணாது போய்விட்டால் வீட்டில் என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்கலாம். அண்மையில் இங்கு பகிரப்பட்ட ஒரு செய்தியில் விபரித்தவாறு பிரேசில் நாட்டில் ஒரு ஆணுக்கு நடந்த கொடுமை போல் நடக்காது என பிரார்த்தனை செய்வோம்.
  9. இது இலங்கையின் நண்பன் இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனம் போலும்.
  10. எமது ஊடகங்கள் தீனி இல்லாமல் நாக்கு தொங்க திரிகின்றன. உங்கள் கதை விரைவில் செய்தியாக வருகின்றதோ தெரியாது.
  11. ஆமாங்க ஊரில் எப்படியான ஆரோக்கியமான உணவை உண்கின்றார்கள் என நாங்கள் நேரில் பார்க்கின்றோம். ஆரோக்கியம் என்பது அவரவரது ஊக்கம், முயற்சியிலும் தங்கி உள்ளது. அவரவர் வாழும் இடத்தை குறை சொல்ல வேண்டாம். அதற்குமேல் எங்களை மீறி நடைபெறுவதற்கு என்னதான் செய்ய முடியும்.
  12. பார்ப்பதற்கு பெரிய கொள்கலன் போல் உள்ளது. எனக்கு இதை பார்த்ததும் வடகொரியா சட்டென நினைவில் வந்தது.
  13. நானும் இந்த காணொளியை மிக நீண்டகாலம் முன் பார்த்தேன். இது எத்தனையாம் ஆண்டு? ஸ்டாலினும் உட்கார்ந்து வடிவேல் அவர்களின் பேச்சை கேட்கின்றார். கடைசியில் தமிழ்நாடு அரச மரியாதையுடன் விஜயகாந்த் இறுதி நிகழ்வு நடந்துள்ளது. காலம் எவ்வளவு விந்தையானது.
  14. தனது இருபதாவது வயதில் 1983 கலவரங்களுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வாய், மூக்கினூடு நுரை தள்ளியதாக செய்தியில் உள்ளது. மாரடைப்போ?
  15. துரோகி பட்டம் கொடுப்பது போன்றதுதான் இதுவும். சரி சரி டென்சன் ஆக வேண்டாம்.
  16. தலைப்பில் துரையப்பா அவர்களின் பேரப்பிள்ளை என உள்ளது. கலைக்களஞ்சியத்தில் மருமகன்/பெறாமகன் என உள்ளது. இங்கே எவருக்குமே நிசான் பற்றி இணையத்தகவல் நீங்கலாக எதுவும் தெரியவில்லை. இதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும் என்றால் முதலில் தலைமை பொலிஸ் அதிகாரி நிசானுக்கு தமிழ் பேசத்தெரியுமா என்பதே ஒரு கேள்விக்குறி. அடுத்ததாக இவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்துகின்றாரா, இவர் வாழ்வியல் எப்படிப்பட்டது என்பது எமக்கு தெரியாது. அடுத்ததாக இவர் இலங்கை பிரச்சனைகளை எப்படி பார்க்கின்றார், துரையப்பா அவர்கள் சாவு விடயத்தை எப்படி பார்க்கின்றார் இவை எதுவுமே எமக்கு தெரியாது. இலங்கை/இலங்கை தமிழர் பிரச்சனை/கனடா தமிழர் பற்றிய நிசான் கண்ணோட்டம் யாது என்பது எமக்கு தெரியாது. நிசான் மிக நீண்டகாலம் கனடாவில் வாழ்கின்றார் எனும் அளவில் அவர் நிச்சயமாக நம்மவர்களை மட்டுக்கட்டி இருப்பார். நம்மவர்களை எடைபோடத்தெரியாத ஒருவர் இவ்வளவு பெரிய உயர்நிலைக்கு வரமுடியாது. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவர் இன்னோர் உறவினர் எனும் தகவலின் அடிப்படையில் இங்கே சேறடிக்கப்படுகின்றார். யாழ் களத்து ஜாம்பவான்களின் கருத்துக்களை பார்க்க புளகாங்கிதம் ஏற்படுகின்றது என நான் ஏற்கனவே மேலே கூறி உள்ளேன். இங்கே கோசான் ஒரு படி மேலே சென்று நிசானுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் எனும் அளவில் கருத்து சொல்லி உள்ளார். இங்கே எல்லாரும் அறிவாளிகள் அல்லவா.
  17. எனக்கு தெரிந்த அளவில் கனேடிய அரசாங்கம் நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் இலங்கை மக்களின் நலன்களிற்காக பல்வேறு திட்டங்களை செயற்படுத்திவருகின்றது. காவல்துறை பொறுப்பதிகாரி நிசான் அவர்கள் போதைவஸ்து சம்மந்தமான விடயங்கள், கும்பல்களை கட்டுக்குள் கொண்டுவருவதிலும் அனுபவம் மிக்கவர் என கூறப்படுகின்றது. இலங்கை போலிசு அல்லாடும் நிலையில் அனுபவஸ்தர் ஒருவர் உதவி மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றால் நாம் அதற்கு ஆதரவாக நிற்கவேண்டும். இலங்கை போலிசு என்றாலே இனப்பிணக்குகளை மட்டும் எப்போதும் தொங்கிப்பிடித்துக்கொண்டு ஆடக்கூடாது. போலிசு சேவை நாளாந்த வாழ்வில் பலநூறு உள்ளன. நீங்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு ஊஞ்சல் ஆடுகின்றீர்கள். நிசான் பயணம் கனேடிய அரசாங்கத்தின் வேண்டுகோள் நிமித்தமான உத்தியோகபூர்வமான பயணமாக தெரிகின்றது. இங்கே இந்த இடத்தில் நிசான் நில்லாமல் ஒரு சீக்கியரோ அல்லது வேறு நாட்டு இனத்தவரோ நின்றால் என்ன செய்வீர்கள்? இலங்கை போலிசு சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அந்த நன்மைகள் எல்லாருக்கும் உண்டு. போக்குவரத்து துறை தொடக்கம் போதைவஸ்து வரை பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.
  18. நான் நோக்கும் விடயங்கள்: ராஜபக்ச குடும்பம் ஆட்சியை கைப்பற்றி நாட்டை நாசமாக்காமல் பார்க்க வேண்டும். மைத்திரி போல் அனுபவம் இல்லாதவர்கள் தலைமைக்கு வந்து நாட்டை நோக வைக்க கூடாது. தமிழர் பொது வேட்பாளருக்கு வோட்டு போடுவது பிரச்சனை இல்லை. ஆனால் இது பரிசோதனை களம் இல்லை. தமிழ் வேட்பாளருக்கு வோட்டு பிரிவது ராஜபக்ச அரசியலுக்கு சாதகமாக அமையக்கூடாது. ரணில் மூலம் அதிக எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் நிலமை இன்னும் மோசமாக செல்லாது என நினைக்கின்றேன்.
  19. தமிழ்வின் தளத்தில் ஈ பி டி பி கட்சி தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். எனது அபிப்பிராயமும் தற்போதைய நிலமையில் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதே நல்லது போல் தோன்றுகின்றது. ரணில் சிறந்த தெரிவு இல்லையாயினும் உள்ளவற்றில் இதுவே நல்லதாக தெரிகின்றது.
  20. @nedukkalapoovan தற்போது எந்த நாட்டில் வாசம் செய்கின்றீர்கள்? இலங்கை, இலங்கை போலிஸ் பற்றி சல்லடை போடுவது சரி. உங்கள் தற்போதைய நாட்டை அறிந்தால் நாங்கள் வகுப்பை, ஆராய்ச்சியை உங்கள் நாட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்: அதன் போலிஸ், அதன் அரசாங்கம், அதன் வரலாற்று சம்பவங்கள் என ஒவ்வொன்றாக.. உங்கள் கதையை பார்தால் உங்கள் அமைவிடம் நிச்சயம் தேவலோகம் போல் தெரிகின்றது.
  21. 2024 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! 🎉🎉
  22. இணையத்தில் வாசித்து, யூரியூப் காணொளிகள் பார்த்து பெற்ற தகவல்களின் பிரகாரம் இவர் பொலிஸ் துறையில் அதீத திறமைசாலிகளில் ஒருவர். இவரது பதவி இன்னும் ஐந்து வருடங்களுக்கு அண்மையில் நீடிக்கப்பட்டு உள்ளது. வட அமெரிக்காவில் பெரியதொரு பிரதேசத்து காவல்துறைக்கு பொறுப்பாக எங்களில் ஒருவர் உள்ளது எமக்கு பெருமையை அளிக்கும் விடயம் மட்டுமல்ல எமது துறைகளில் நாம் முன்னுக்கு வருவதற்கு மிகப்பெரிய ஊக்குவிப்பும் ஆகும். பீல் என அழைக்கப்படும் பிரதேசத்துக்கு மட்டும் அல்ல ஒன்றாரியோ மாகாணத்தின் பொலிஸ் அமைப்புக்களின் தலைவரும் இவர் என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட ஒருவருக்கு யாழ் யாழ் கருத்துக்களத்து ஜாம்பவான்கள் பாடம் எடுக்கின்றார்கள் என்றால்.. ஆஹா.. எந்தப்பக்கம் திரும்பி புளகாங்கிதம் அடைவது என தெரியவில்லை.
  23. இலங்கைக்கு நமது ஆயுள் காலத்தில் மீண்டும் இன்னோர் சுனாமி வரக்கூடாது. பெரிய பிரச்சனை என்ன என்றால் நம்மட சனம் இருக்கும் இடத்தைவிட்டு மசியாது. ஆட்களை குண்டுக்கட்டாக தூக்கித்தான் அப்புறப்படுத்த பேண்டும். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்வதற்கு உதுகள் சொல்வழி கேட்கும் சனங்களா.
  24. வரப்போகுது வரப்போகுது என்று சொல்லி ஒரு நாள் திரும்ப வரப்போகுது என்று வைப்போம். எச்சரிக்கை கொடுப்பது சரி. இன்னோர் சுனாமி அழிவின் பாதிப்புக்களை தடுக்க/குறைக்க எப்படியான முன்னேற்பாடுகள் தற்போது உள்ளன? எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் அந்த எச்சரிக்கையை மக்கள் செவிமடுத்து கேட்டு தம்மை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இறங்குவார்களா? இயற்கை அழிவுகளுக்கான ஆபத்துக்கள் நிறையவே உள்ளன. இதற்கான தயார்ப்படுத்தல் உள்ளதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.