Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. உங்கள் கருத்தை பார்த்தபின் சற்று மயக்கம் ஏற்படுகின்றது. ஆனால், இணையத்தில் தேடுதல் செய்தபோது பிரஜைகள் குழு தலைவர்கள், உறுப்பினர்கள் இந்திய அமைதிப்படை காலத்தில் கொலை செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் உள்ளன. இங்கு ரஞ்சித் கூறும் சம்பவம் பற்றிய தகவலும் உள்ளது. அதில் ஒன்று அவர் ஈ பி ஆர் எல் எவ் இயக்கத்தினால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அவர்கள் கடத்திய ஒரு தமிழ் பெண், மற்றும் ஒரு முஸ்லீம் பெண் விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழு கவனத்திற்கு அவர் கொண்டு சென்றதே கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என உள்ளது. தவிர இன்னோர் காரணத்திற்காக அதே பிரதேசத்து பிரஜைகள் குழு துணை தலைவரும் கொலை செய்யப்பட்டார் எனவும் தகவல் உள்ளது. மேலதிகமாக பின்னர் பல வருடங்களின் பின் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களும் இதே தேவாலயத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. இந்திய அமைதிப்படை பிரஜைகள் குழுவை உருவாக்கினால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஏன் இந்திய அமைதிப்படை பாதுகாப்பும் கொடுத்து ஆயுதங்களும் வழங்கிய ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட வேண்டும்? நிதர்சனம் தொலைக்காட்சி 1986, 1987 ஆண்டுகளில் பிரபலம். யாழ் நகர் பகுதி மக்களுக்கு அது பார்க்கக்கூடியதாக அமைந்தது. நிதர்சனம் தொலைக்காட்சியை நான் அப்போது தவறாமல் பார்ப்பேன். அதன் தகவல்களின் அடிப்படையிலேயே பிரஜைகள் குழுவின் தோற்றம் பற்றிய கருத்தை கூறினேன்.
  2. பலருக்கு பிரஜைகள் குழு என்றால் என்ன என்று இப்போது விளங்குமா என தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் பிரஜைகள் குழு 1986/7 ம் ஆண்டளவில் விடுதலை புலிகள் அமைப்பினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக உளவாளிகள் நடமாட்டம், கிராமங்களிற்கு வரும் வெளியார் பற்றிய தகவல் இவர்களினால் பெறப்பட்டு ஒரு விழிப்புணர்வு குழுவாக செயற்பட்டது. காலப்போக்கில் பிரஜைகள் குழுவின் செயற்பாடுகள் விஸ்தாரணம் பெற்றது என நினைக்கின்றேன். எனது தகவல் சிலவேளைகளில் தவறாகவும் அமையலாம் ஏன் என்றால் நான் நீண்ட காலத்தின் பின் பழைய நினைவுகளை கிரகிக்கின்றேன். பிரஜைகள் குழு பற்றிய விரிவான விளக்கம் தெரிந்தவர்கள்/ஏக காலத்தில் அப்போது ஊரில் வாழ்ந்தவர்கள் உங்கள் கருத்தை பகருங்கள். இந்திய அமைதிப்படை காலத்தில் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவது வழமையாக நடைபெற்றது. பிரஜைகள் குழு தலைவர்களும் முக்கியமாக குறி வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். வலிகாமம் பிரதேசத்து பிரஜைகள் குழு தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நினைவு சாதுவாக உள்ளது. அவர் பெயர் நினைவில்லை. பிரஜைகள் குழுவில் அங்கத்தவம் பெற்ற சிலர் பின்னர் இலங்கை தேர்தல்களிலும் நின்று வென்றார்கள் எனும் நினைவும் வருகின்றது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆதவாளர்கள் அல்லாத ஒருவர் பிரஜைகள் குழு உறுப்பினராகவோ தலைவராகவோ விளங்க முடியாது என நினைக்கின்றேன். இவை எனது பழைய நினைவு மீட்டல்கள் மட்டுமே. எனது தகவல் தவறாகவும் அமையக்கூடும்.
  3. விக்கி கலைக்களஞ்சியத்தில் பார்த்தேன். இப்போது பிரித்தானியாவில் கிறிஸ்தவர்களின் சதவீதம் மொத்த சனத்தொகையில் 40 சொச்சத்திற்கு இறங்கிவிட்டதாம். கிறிஸ்தவம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்ட ஒன்றுதானே?
  4. ஐ பில் எல் விளையாட்டுக்கு கோடிக்கணக்கில் வீரர்களை ஏலத்தில் எடுக்கின்றார்கள். இந்த பிள்ளைக்கு சில லட்சங்களாவது அனுசரணை வழங்க மாட்டார்களா? இந்தியாவை பொறுத்தமட்டில் என்ன சாதிக்கின்றார்கள் என்பதை விட யார் சாதிக்கின்றார்கள் என்பது முக்கியமானது.
  5. ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.
  6. அவரது பக்கத்திற்கு சென்று பேட்டியை பார்த்தேன். நன்றி! https://www.facebook.com/share/v/1AYvxzrnG1/ பேட்டி சுவாரசியமாக உள்ளது.
  7. தோழர் சோபாசக்தி டிலுக்சனுக்கு குதிரை ஓடியுள்ளார் என்பதுதான் இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டு என நானும் விளங்குகின்றேன். இது பரவாயில்லை. சட் ஜீபிடி துணையில் ஆங்கிலத்தில் எழுதி அதை கூகிழ் தமிழில் பெயர்த்து எமது பாடசாலை குழுமத்து நிருவாகத்தினர் ஆங்கிலத்திலும், தமிழிலும் (தமிழ் ஆங்கிலம் விளங்காத ஆட்களுக்காம்) அறிக்கைகள் விட்டு கடுப்பேத்துகின்றனர் யுவர் ஆனர். இலங்கையில் முதன் முதலாக பிளேன் கட்டியதாக உரிமை கோரும் தமிழ் விமான கட்டுமானியின் பேட்டி இணைப்பை தாருங்கள் என்றால் தர மாட்டாங்களாம்.
  8. ஜெயராசா ஏன் இந்த முக்கு முக்குகின்றார்? இந்த மனுசனுக்கு வழங்கப்படவேண்டிய பழைய கொடுப்பனவுகள் இன்னும் நிலுவையில் உள்ளது போலும்.
  9. அவரது பேட்டி இணைப்புக்களை வழங்குங்கள் என்ன சொல்கின்றார் என கேட்டுப்பார்ப்போம். கிட்டு மாமாவின் காலத்தில் உலங்கு வானூர்தி ஒன்று உருவாக்கும் முயற்சி நடைபெற்றது, அது சில அடிகள் உயரம் எழுந்துவிட்டு விழுந்தது என அப்போது ஆட்கள் சொல்ல கேட்டுள்ளேன்.
  10. எமது பாடசாலை குழுமத்தில் அரசாங்கம் வழங்கிய வங்கி விபரம் பற்றிய தகவலை இணைத்தார்கள். நானும் இதைத்தான் கூறினேன். பாதிக்கப்பட்ட எமது உறவுகள், சொந்தங்களிற்கு நேரடியாகவே நாம் உதவி செய்யலாம். அரசாங்கம் ஊடாக செய்யும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு செல்லும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அபாய அறிவிப்புக்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சில தினங்கள் முன் பார்த்தேன்.
  11. இம்முறை பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் இல்லாமல் மாவீரர் தினம் பழைய காலம் போல அமைதியாக உணர்ச்சிபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. கிருபன் ஜி வழமைபோல் மாவீரர் தின உரையை எங்கோ தேடிப்பிடித்து இணைத்துள்ளார். தலைவரின் புதல்வி என உரிமை கோரும் ஒருவரின் மாவீரர் தின உரையும் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.
  12. சிறப்பான நடவடிக்கை. படிக்க வந்துவிட்டு சொறி சேட்டை செய்பவர்கள் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வியை தொடர அனுமதிக்ககூடாது.
  13. திருநெல்வேலி சம்பவம் போதைப்பொருளுடன் சம்மந்தப்பட்டது என இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டபோது கூறினார். பிரான்ஸ் இளைஞர் பற்றிய செய்தி இணைப்பை தாருங்கள். @விசுகு அவர்கட்கு தெரியுமா சம்பவம் பற்றி. தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை விட போதைப்பொருள் பிரச்சனைகளை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டுவதாக இன்னோர் இலங்கை நண்பர் கூறினார்.
  14. எங்கள் காலத்தில் ஷெல், விமான குண்டு வீச்சு காலங்களில்தான் இப்படி உடல் சிதறும் அவல காட்சிகள் தென்படும். போர் இப்போது இல்லை. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு விட்டது. ஆனால், உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். என்ன கொடுமை சாமி இது. விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.
  15. 2008 ஆண்டு வரை தலைவர் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினங்களில் இவர்கள் நினைவுகூறப்படவில்லையா? இந்த புறக்கணிப்பு/தொய்வு நிலை பின்னர் ஏற்பட்டதா?
  16. இந்திய அணியினர் ஐ பி எல் விளையாட்டினுள் அதிகம் ஐக்கியமாகிவிட்டதால் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை போல.
  17. 2009 போர் நிறைவடைந்தது. இப்போது ஆண்டு 2025 நிறைவடையும் தருவாயில் உள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் புத்தபகவான் வடக்கு, கிழக்கில் சிலைகளாகவும், விகாரைகளாகவும் வியாபிக்கின்றார். தொல்பொருள் திணைக்களம் காலங்காலமாக தமிழர் உரிமைகொண்டாடும் இடங்களை கையகப்படுத்துகின்றது. இலங்கை அரசு தரப்பில் யாராவது அனைத்து மக்கள் நலன்களையும் கருத்திற்கொண்டு அக்கறையுடன்/கரிசனையுடன் இப்படியான விடயங்களை கையாள்வதாகவோ கண்டுகொள்வதாகவோ தெரியவில்லை. யதார்த்தம் இலங்கையில் இவ்வாறு காணப்படுகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தமது இருப்பை, நலன்களை உறுதிப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். விடுதலை புலிகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்தார்களா ஆதரிக்கின்றார்களா என்பதற்கு அப்பால் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட தேசியகொடி ஒரு வெளிநாட்டு மாநகரசபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பலர் உழைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். இது தவறான விடயமாக தெரியவில்லை.
  18. கலைஞர் இராஜன் அவர்களிற்கு இதய அஞ்சலிகள்; ஆழ்ந்த இரங்கல்கள்! யாழ் கருத்துக்களத்தில் இராஜன் அவர்கள் பதிந்த பதிவுகளை இணையுங்கள், வாசித்து பார்ப்போம். ஓம் சாந்தி! 🙏
  19. ஐயனார் கோயில்கள் முன்பே பரவலாக உள்ளன. ஐயப்பன் கோயில்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது உள்ளதாக தேடல் மூலம் அறிந்தேன். இலங்கையை விட்டு வெளியேறிய பின்பே ஐயப்பன் ஆலயம் அவ்வப்போது செல்கின்றேன். வழமையான சுவாமி தரிசனம் பெறுகின்றேன். ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் முறைகளை பின்பற்றுவது இல்லை.
  20. நானும் ஐயப்பனை வழிபடுகின்றேன். அறியா பருவ பிள்ளைகளிற்கு ஐயப்ப சுவாமிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துவது எல்லாம் சரி. கற்கும் வயதில் நாடு தாண்டி பயணம் செய்யும் அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமா? கடவுளை எமக்குள் காண வேண்டும் என்பதை தானே இந்து மதம் போதிக்கின்றது. இப்போதே காடு, மலை ஏறிச்சென்று கடவுளை தரிசிக்கும் ஆர்வத்தை சிறுவர்களிற்கு ஏற்படுத்தினால் அவர்கள் கடைசியில் சாமியாராக போகவேண்டியது தானா? ஐயப்பன் அனைவரையும் காக்கட்டும்!
  21. நானும் இப்போது கணித்து பார்த்தேன். வவுனியா புகையிரத நிலையம் தொடக்கம் புளியங்குளம் புகையிரத நிலையம் வரை கிட்டத்தட்ட 25 கிலோமீற்றர் தூரம் வருகின்றது. இது கிட்டத்தட்ட காங்கேசன் துறை தொடக்கம் சாவகச்சேரி வரையான தூரம். புளியங்குளம் பக்கம் பெருமளவு வயல்/தோட்டங்கள் என்றாலும் இரண்டு அங்கீகாரம் பெற்ற புகையிரத கடவைகள் போதாது.
  22. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.
  23. நல்லவிடயம். புதிய மாணவர்களுக்கு ஏற்கனவே தங்குமிடம் தொடக்கம் புதிய அணுகுமுறையில் கற்பது, பாடங்களை தெரிவு செய்வது, போக்குவரத்து , சாப்பாடு, காசு, குடும்பத்தை பிரிவது என ஏகப்பட்ட பிரச்சனைகள். பகிடிவதை தொல்லை இல்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் ஏற்படும்.
  24. இந்தியா போன்ற நாட்டில் சும்மா சுட்டால் போதாது கால்களுக்கு இடையில் தொங்குவதற்கு குறிபார்த்து சுட்டால்தான் திருந்துவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.