Everything posted by நியாயம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒவொருத்தருக்கு வாழ்க்கையில, தலையுக்கை ஒவ்வொரு விதமான பிரச்சனை. கடவுள்தான் காப்பற்றவேண்டும். ஆமா இந்த பச்சை புள்ளிக்கே இவ்வளவு எகிறி குதிக்கிறீங்களே.. நீங்கள் எல்லாம் எப்படி உந்த வைப்பர், பேஸ்புக், வாட்ஸப், இத்தியாதி பாடசாலை குழுக்கள், ஊர் சங்கங்கள், கோயில் சபைகள்.. இன்னோறன்னவற்றை சமாளிக்கிறீங்களோ! அங்கினைக்க எப்படி அலுப்பு கொடுப்பீங்கள் என்று நினைத்து பார்க்கவே இங்கை எனக்கு கை, கால் உதறுது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வெளிப்படை தன்மைக்கும் காவாலித்தனத்துக்கும் இடையில் நிறையவே வேறுபாடுகள் உள்ளன பெருமாள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில வருடங்கள் முன் ஐ.பி.சி சேவை விஸ்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தொடக்க வைபவம் நடைபெற்றபோது வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். அப்போது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது ஐ.பி.சி சிறப்பாக நல்ல பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்று. இன்று அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களே ஐ.பி.சி தமிழின் தற்போதைய நிலை கண்டு முகம் சுழிக்கின்றார்கள். ஐ.பி.சியின் சில்லறைத்தனமான ஊடகவியல் செயற்பாடுகள், மற்றும் தரம்கெட்ட வகையில் ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தவறான வழியில் எமது எதிர்கால சந்ததியை கொண்டு செல்லும். மக்களை மடையர்கள் என நினைத்துக்கொண்டு ஊடகங்கள் தனிப்பட்ட லாபங்களை, தமது குறுகிய நோக்கங்களை அடைய நினைப்பது கேவலமானது. வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் தெரியும் தத்தம் நாடுகளில் சட்டம், ஒழுங்கு நடைமுறைகளின் நிமித்தம் எது சரி, எது பிழை. எப்படி ஒன்றை செய்யலாம், எப்படி ஒன்றை செய்யக்கூடாது, தவறான செயற்பாடுகளின் பின்விளைவுகள் என பல்வேறு விடயங்கள். ஆனால், இவர்கள் இலங்கை என வரும்போது வழமையான ஒழுங்கமைப்பு, நடைமுறைகளில் இருந்து இருந்து விலகி தான் தோன்றித்தனமாகவும், எதேச்சையாகவும் காரியங்களை முன்னெடுக்கின்றார்கள். அடுத்தவனை துரோகி, ஏமாற்றுக்காரன் என்று கூறுபவர்கள் முதலில் தாங்கள் யார், தங்கள் யோக்கியதை என்ன என்பதை உணர்ந்துகொள்வது நல்லது. ஒரு சில ஊடகங்கள் செய்கின்ற தவறான செயற்பாடுகள் அனைவரையுமே பாதிக்கும். கடைசியில் எங்களுக்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லி முறைப்பாடு செய்யவேண்டியதுதான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மேலுள்ள கறுப்பு பட்டியல் யாழ் கருத்துக்களத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ளதா? கறுப்பு பட்டியலில் ஐ.பி.சி தமிழ் செய்தி தளத்தையும் உள்ளடக்கம் செய்வதை பரிசீலனை செய்யுமாறு கனம் யாழ் நிர்வாகத்தினரிடம் பரிந்துரை செய்கின்றேன். ஐ.பி.சி தமிழ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு யாழ் கருத்துக்களத்தில் இணைக்கப்படும் செய்திகளுக்கு பின்னூட்டம் இடுவதை நான் நிறுத்தி கொள்கின்றேன். நன்றி!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கனம் யாழ் நிருவாகத்தினருக்கு, யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலமாக சுமந்திரன் சுமந்திரன் சுமந்திரன.. என பல்வேறு தலைப்புக்களில் செய்திகள் இணைக்கப்படுகின்றன. சுமந்திரன் எனும் பெயரில் ஒரு புதிய பக்கத்தை திறந்து அல்லது சுமந்திரன் எனும் ஒரு தனி தலைப்பின் கீழ் அவர் சம்மந்தப்பட்ட செய்திகளை எல்லாம் இணைத்தால் மிகுதி பகுதிகளில் ஆக்கபூர்வமாக எதையேனும் உரையாடலாமே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நிழலி, உங்கள் தகவலுக்கு நன்றி. கருத்துக்களத்தில் ஒருவர் எத்தனை கருத்துக்களை தினமும் பதியலாம் என்று ஒரு கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். இது நிர்வாகத்தில் இருப்பவர்களின் வேலைபழுவை குறைக்கும். அத்துடன், கருத்து எழுதுபவர்கள் உணர்ச்சிவசப்படாமல் ஆற, அமர நிதானத்துடன் கருத்துக்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். புதிய தலைப்புக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் இவ்வளவு என. கருத்துக்கள், செய்திகளின் எண்ணிக்கைகளை விட அவற்றின் தரம் முக்கியம். ஆளுக்கு ஒரு நாளைக்கு இத்தனை விருப்பு புள்ளிகள் என உள்ளது போல், இத்தனை கருத்துக்கள் என நிர்ணயம் கொடுக்கும்போது கருத்துக்களத்தின் தரம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், மேற்கண்ட தலைப்பில் நேற்று எமது நேரம் (கனடா) இரவு என்னால் ஒரு கருத்து பதியப்பட்டது. தற்போது அதை காணவில்லை. ஏதும் தொழில்நுட்ப காரணங்களா அல்லது நிர்வாகத்தினால் அந்த கருத்து நீக்கப்பட்டு உள்ளதா? கருத்துக்களில் மாற்றங்கள் பகுதியில் ஏதும் தகவல் இல்லை. எனக்கு தனிப்படவும் இதுபற்றி ஏதும் தகவல் தரப்படவில்லை. எனது பதிவில் கருத்துக்களத்தின் எதுவித விதிமுறை மீறல்களும் இருக்கவில்லை (கருத்துக்களத்தின் விதிமுறை மீறல் இருப்பின் அதை சுட்டிக்காட்டினால் நல்லது). கருத்து காணாமல் போனதற்கு என்ன காரணம் என்று அறிய விரும்புகின்றேன். யதார்த்தமான நிலைமைகளை உள்வாங்கிய யதார்த்தமான கருத்து அது. எவரது கருத்தும் மேற்கோள் காட்டப்படவில்லை. எவரையும் தனிப்பட குறிப்பிடவில்லை. செய்தியின் பிரகாரம் பொதுவான கருத்தே என்னால் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக தேவை என்றால் விரிவான ஒரு உரையாடலுக்கு தயார். நன்றி!