நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
Everything posted by நன்னிச் சோழன்
-
ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் - ஆவணம்
மாவீரர் பீடங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம் 'தலைநகர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்' கல்லறைகள் & நினைவுக்கற்கள் மாவீரர் துயிலுமில்லங்களினுள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அப்பகுதிகளைச் சுற்றி உள்வீதிகள் இருக்கும். இப்பகுதிகள் யாவும் சதுர வடிவிலே பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் நிரை நிரையாக மேலும் பிரிக்கப்பட்டிருக்கும். அந்நிரைகளில் உள்ள கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் என்பன எண்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வெண்கள் கல்லறைகளினதும் நினைவுக்கற்களினதும் தலைப்பகுதியில் (உடையவரின் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் கல்லின் பின்புறத்தில்) வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டு வெள்ளை நிறத்தில் வட்டமிடப்பட்டிருக்கும். இவ்வெண்கள், நிரைகள் அடங்கிய பட்டியலை மாவீரர் துயிலுமில்லத்தினுள் தொண்டர் சேவைக்காக வந்திருப்போர் (பெரும்பாலும் மாணவர்கள்) வைத்திருப்போர். தம் உறவின் மாவீரர் பீடத்தை மறந்த அல்லது கண்டுபிடிக்க இயலாத உறவினர்கள் இவர்களிடம் வந்து உதவி பெற்றும் தம் உறவு உறங்கும் மாவீரர் பீடத்தை அடையாளம் கண்டுகொள்வர். நினைவுச்சுடர் ஏற்றுபவர்கள், தமக்கு விரும்பிய ஒரு நினைவுச்சுடர் தண்டை ஏற்றிவிட்டுச் செல்லலாம்.
-
துயிலுமில்ல மஞ்சள் கொடி.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
நாங்கள் வன்னியில விளையாடினது... இவை 2000களின் மத்தியில்... பொருட்கள் கொண்டு விளையாடுவது. நடைவண்டி தள்ளுவது ரயர் ஓட்டுவது தண்ணித்துவக்கு பேப்பர் ரொக்கெற் - இரொக்கெட்டால வகுப்பறைக்குள் எறிபடுவது. வண்டில் இழுப்பது - ஒரு பாட்டாவினை வெட்டி சில்லாகவும், ஒரு வகையான மருந்துப் போத்தலின் அடிப்பகுதியில் கம்பியைச் சொருகி அதை சில்லுக்குச் சொருகிவிட்டு அந்த மருந்துப் போத்தலின் வாயிலில் நீண்ட தடியைச் சொருகி கையைப் பிடிப்பதற்காகவும் பயன்படுத்தினோம். கொஞ்சம் செலவு செய்தால் அந்த வண்டிலின் பின்பக்கத்தில் இழுபொறிக்கு பூட்டுவது போன்ற சில்லுக்கொண்ட பெட்டியைப் பூட்டலாம். நல்ல விளையாட்டு. ஆமியும் இயக்கமும் - நாங்கள் எப்படி விளையாடினாங்கள் எண்டால், ஒரு காவலரண் போன்ற ஒன்றை சிரட்டைகள் மற்றும் செங்கல்கள்/சீமந்துக்கல்கள் கொண்டு அடுக்கிக் கட்டிவிட்டு அதற்குள் இருந்தபடி ஆமியின் முன்னேற்றத்தைத் தடுப்பது போன்ற விளையாட்டு - கற்களால் எறிபடுவது, தண்ணியூற்றி மணலால் செய்யப்பட்ட கற்களை கூடுதலாகப் பயன்படுத்தினோம்; அவை பட்டால் உடைந்துவிடும். தடிகள் கொண்டு துவக்குகளும் உருவாக்குவோம். கதை எப்படியெண்டால், ஒரு கன்னை ஆமியாயும் இன்னொரு கன்னை இயக்கமாயும் இருக்கும். ஆமிக்கன்னை முன்னேறி வர அடிதான். பிறகு கன்னை மாறுவம், ஆனால் சில அறுவான்கள் கறுவியம் வைச்சுப்போடுவாங்கள். போன முறை எங்களிட்டை வாங்கினத்துக்கு இந்த முறை எங்களுக்குத் தருவாங்கள். பாவியள். 😂🤣😂🤣 கால்களால் விளையாடுவது கீம்ஸ் - இதன் எழுத்தைச்சொல்லி விளையாடுவது. நானிது விளையாடுவது குறைவு. காலை மிதிச்சு மிதிச்சு விளையாடுவது. எனக்கு மறந்துவிட்டது. தொட்டால் பிடிப்பது - ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் ஓடும் ஏனையோரில் ஆரேனும் ஒருவனை துரத்திச்சென்று தொட வேண்டும். பின்னார் அந்த தொடப்பட்டவனே பிடிப்பவர் ஆகுவார். இதில் பல விதிகள் உண்டு. புளிச்சல் - பந்துகளால் ஒரு கன்னையைச் சேர்ந்தவர் மறு கன்னையைச் சேர்ந்தவர்களுக்கு எறிவது. பட்டுது எண்டால் நல்லாப் புளிச்சுப்போடும். பந்தை உயரத்திற்கு எறிந்து பிடிப்பது அமர்ந்தபடி விளையாடுபவை கைகளால் விளையாடுவது:- தக்காளி புக்காளி - இந்தப் பாடலிற்கு ஏற்ப கையை அகம் புறமாக திருப்பி எடுத்து விளையாடுவது. பாடல்: "தக்காளி புக்காளி தர்மத் தக்காளி கப்பல் வந்து பிரண்டடிக்க சுப்பையா." பென்சிலை வைச்சு ஒரு பாட்டு உள்ளது. அது மறந்துபோனன். அது கலர் பென்சிலின் எப்யரைச் சொல்லச்சொல்ல கைவிரல்களை அதற்கேற்ப மடிப்பது. வாழைக்காய் தோழைக்காய் - இது ஆர் குசு விட்டது என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்துவது. பாடல்: "வாழைக்காய் தோழைக்காய் வண்டியில் ஏத்தற்காய் அஸ் பஸ் குஸ்." கடைசியாக நிற்பவனே அந்த நாறல் வேலையைச் செய்த நன்னாறிப்பயலாகக் கருதப்படுவான். 😂🤣.... ஐயோ பாவம்! பொருட்கள் கொண்டு விளையாடுவது ஆடுபுலி ஆட்டம் மோட்டர் வைத்து விளையாடுவது காட்ஸ் சேகரிப்பு: கிரிக்கட் காட்ஸ், இந்த மல்யுத்தம் போன்ற சண்டையாளர்களின் படங்கள் பொறித்த காட்ஸ், அதைவிட இன்னபிற காட்ஸ் என்று பல விதமான காட்ஸை சேகரித்து அதை பிறருடன் பரிமாறிக்கொள்வது. இது 2008 இறுதியில் விளையாடத் தொடங்கினேன். பூவரசு பீப்பீ - பூவரசு இலையில் பீப்பீ செய்து ஊதுவது.
-
FU-nP2qWYAA2fcE.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
FU-nP-uXEAIPYbA.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
FU-nQKkXoAAQrLi.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
FU5agFBXoAYi7s2.jpg
-
Lt-Col-Kamalini-medical-team.webp
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte images (7).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Major Chittu's cemetry
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
ltte images (6).jpg.
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
- Tamil national leader velupillai prabhakaran images (7).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (12).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (13).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (6).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (3).jpg
- Tamil national leader velupillai prabhakaran imag.es (5).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (8).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (1).jpg
- Tamil national leader velupillai prabhakaran images (2).jpg
-
asd.jpg.
-
Indian Journalist
-
FP5NIHHXEAAW-8F.jpg
-
FP5NH3AXsAYVRAz.jpg
-
FRlFdyXWUAE8kVq.jpg