Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் மனைவி மதிவதனி அவர்களின் குடும்பத்தினர் 1985< தொடக்க காலத்தில் அமரர் வே.க. ஏரம்பு அவர்களுக்கு தலைவர் மாமாவைப் பிடிக்காது. அதனால் சரியான கோபம்.
  2. அமரர் கந்தையா மனோன்மணி மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினரோடு தலைவர் மாமாவும் மதி மாமியும் காலம்: திருமணமான புதிதில்
  3. தலைவர் மாமாவும் மதி மாமியும் 'திரு குண்டப்பா மற்றும் தேசத்துரோகி மாத்தையா ஆகியோருடன்'
  4. மணம் முடித்து நிழற்படம் எடுக்கும் போது மணம் முடித்து நிழற்படம் எடுக்கும் போது திருமணத்திற்கு வந்த ஒருவரின் குழந்தையோடு இருவரும் அமர்ந்திருக்கினம் (மதிமாமியிற்கு அருகிலிருப்பவர் யாரெனத் தெரியவில்லை! )
  5. தலைவர் மாமாவின் திருமண நிகழ்வு 01/10/1984 திருப்போரூர் முருகன் கோவில், தமிழ்நாடு 'மாப்பிள்ளைத் தோழனாக அமர்ந்திருப்பவன் தான் வஞ்சகன் கே.பீ. இருவருக்கும் நடுவில் அமர்ந்திருப்பவர்தான் ஆரம்பகால உறுப்பினர் குண்டப்பா எ கண்ணன் அவர்கள்.' 'பாலா அங்கிளும் வெள்ளை அன்ரியும்' கேணல் சங்கர் மாமாவோடு இத்திருமணம் அவ்விடத்தில் நடைபெற்றதன் நினைவாக அக்கோவிலில் கிழக்குக் கடற்கரைச் சாலையின் விளிம்பிலேயே அமைந்த தெப்பக்குளத்தின் வடமேற்கு மூலையில் சாலைக்கு கிட்டவாக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் சார்ந்த நினைவுக் கம்பங்களூடே இக்கல்வெட்டு அமையப்பெற்றுள்ளது. படிமப்புரவு: நூ.த. லோகசுந்தரம், 2014
  6. தலைவர் மாமாவின் மாமியார் அமரர். ஏரம்பு சின்னம்மா 01/05/1926 - 06/09/2011 இவர் யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணைத்தீவிலுள்ள சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியராவார்.
  7. தலைவர் மாமாவின் மாமனார் 'நாட்டுப்பற்றாளர்' அமரர் வே.க. ஏரம்பு 22/11/1929 - 23/02/2005 எற்பாடு 4:00 மணி பிறப்பிடம்: அருணோதயம், பெருங்காடு வடக்கு, 1ம் வட்டாரம், புங்குடுதீவு, தீவகம், யாழ்ப்பாணம், தமிழீழம் தந்தை: கந்தையா தாய்: மனோன்மணி (01/01/1902 - 30/04/1992) தாத்தா: வேலுப்பிள்ளை உடன்பிறப்புகள்: அமரர் தனலட்சுமி, அமரர் ஞானம்மா வரராஜசிங்கம், இராசம்மா, அமரர் சந்திரசேகரம் இவரது பூதவுடல் 27ம் திகதி நண்பகல் 10 மணிவரை அரசியல்துறையின் தூயவன் அரசறிவியற் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்ததது. 10 மணியளவில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் டென்மார்க்கில் இருந்து இவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எனப் 10 பேரளவில் வந்து கலந்துகொண்டனர். 'கேணல் தமிழேந்தி மலர்மாலை அணிவிக்கிறார். அருகில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் நிற்கின்றார். தலைமாட்டில் அமரர் ஜனனி அன்ரி மாலையை ஒழுங்கமைக்கிறார்.' 'பா. நடேசம்மான் (மாவீரர்)' அன்னாரின் புகழுடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மலர்‌ மாலை அணிவித்து இறுதிவணக்கத்தைச் செலுத்தியதைத்‌ தொடர்ந்து தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர்‌ தமிழேந்தி, தமிழீழ காவல்‌துறைப் பொறுப்பாளர்‌ பா.நடேசன்‌, பிரிகேடியர் தீபன்‌, பிரிகேடியர் ஜெயம்‌, பிரிகேடியர் யாழினி எ விதுஷா, பிரிகேடியர் மேழிகா எ துர்க்கா ஆகியோர்‌ மலர்மாலை அணிவித்து இறுதிவணக்கத்தைச் செலுத்தினர். அருட்திரு யோசெப்‌பு அடிகள்‌ தொடர்ந்து, தமிழீழ கல்விக்கழக துணைப்‌ பொறுப்பாளர்‌ அருள்‌ அவர்களின்‌ தலைமையில்‌ நடைபெற்ற இறுதிவணக்க நிகழ்வில்‌ தமிழீழ கல்வி மேம்பாட்டுப்‌ பேரவைத்‌ தலைவர்‌ அருட்திரு யோசெப்‌பு அடிகள்‌, கிளி. வலயக்கல்விப்‌ பணிப்பாளர்‌ ப.அரியரத்தினம்‌, செஞ்சோலைப் பொறுப்பாளர்‌ செல்வி சுடர்மகள்‌ (ஜனனி அன்ரி), யாழ். மாவட்ட தேசிய எழுச்சிப்‌ பேரவையின்‌ ஊடக இணைப்பாளர்‌ கனகலிங்கம்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன்‌ ஆகியோர்‌ வணக்கவுரை நிகழ்த்தினர்‌. அதனைத்‌ தொடர்ந்து கட்டளையாளர்கள், பொறுப்பாளர்கள்‌, போராளிகள்‌, பொதுமக்கள்‌, உற்றார்‌, உறவினர்கள்‌ புகழுடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்‌. கிளி மத்திய கல்லூரி மாணவர்களின் அணியிசை வகுப்புடன்‌ நாட்டுப்‌பற்றாளர்‌ வே.க.ஏரம்பு அவர்களின்‌ புகழுடல்‌ அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கிளி. திருநகர்‌ பொது மயானத்திற்கு பகல்‌ 12.30 மணிக்கு வந்தடைந்து. ஊர்வலத்திற்கு தமிழீழ காவல்துறையினர் வழமை போன்று பாதுகாப்பு வழங்கினர். மயானத்தில் அன்னாரின்‌ புகழுடல்‌ எரியூட்டப்பட்டது. சிறப்பு நன்றி: இம்மறுமொழிப் பெட்டியினுள் உள்ள பல தகவல்களை எடுக்க உதவி புரிந்த பெயர் குறிப்பிடவிரும்பாத கள உறவிற்கு எனது நன்றி. ஆதாரம்: தனிப்பட்ட தகவல் யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர் | பக்கம் 128 ஈழநாதம்: 25, 27, 28/2/2005 | 09/04/2005
  8. 'நாட்டுப்பற்றாளர்' அமரர் வே.க. ஏரம்பு அவர்களின் தாயார் அமரர் கந்தையா மனோன்மணி (01/01/1902 - 30/04/1992) அன்னார் இறந்தது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் உள்ள இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கையில் உள்ள 93/23 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் ஆகும். இவ்வீட்டில் தான் மதி மாமியின் பெற்றோரும் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தனர். இவரது கணவரான அமரர் வேலுப்பிள்ளை கந்தையா அவர்கள் இவருக்கு முன்னரே மோசம்போய்விட்டார். அன்னாரைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆதாரம்: ஈழநாதம் 1992.05.30 (பக்கம் 4)
  9. தலைவர் மாமாவின் மைத்துனி திருமதி குமாரதாஸ் அருணாதேவி இவர் 2023ல் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதற்கு முழுமையாகத் துணைநின்றவர் ஆவார். எனக்கு புலனாய்வுத்துறைப் போராளி ஒருவர் வழங்கிய நேரடி வாக்குமூலத்தில்: "இவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் பெயரைப் பாவித்து வெளிநாட்டில் தற்தேவைகளுக்கு நிதி திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பில் தலைவர் கவனத்திற்கு அண்ணியார் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணியார் இது தொடர்பில் எடுக்க வேண்டிய செய்கையினை (காசு கையாடல் செய்வோருக்கு பொதுவாக வழங்கும் தண்டனை) தலைவருக்குக் கூற அதை தலைவர் செய்ய மறுத்தார். பின்னர் தலைவர் அவர்கள் தன்னுடன் கூட நின்ற ஒரு புலனாய்வுத்துறைப் போராளியை நேரடியாக வெளிநாட்டிற்கு அனுப்பி இவரை எச்சரிக்கை செய்து அவ்வீனச் செயலை நிறுத்தினார்."
  10. தலைவர் மாமாவின் மைத்துனன் திரு ஏரம்பு சிறிதரன் இவர் 2023ல் போலி துவாரகா பணம் பறிக்கும் நாடகம் அரங்கேறிய போது அதன் பரப்புரைக்கு துணைநின்றார். இ-வ: திரு ஏரம்பு சிறிதரன் மற்றும் கப்டன் அருண்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.