Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. காலம்: அறியில்லை விவ்ரி கலிபருடன் ரகீம் அவர்கள்
  2. 1994> தமிழீழ காவல்துறை மகளீர் பிரிவின் அணிவகுப்பு துமுக்கி: எஸ்.எல்.ஆர்
  3. இந்த வகுப்புப் படகின் வகுப்புப் பெயர் தெரியவில்லை... தெரிந்தவர்கள் சொல்லவும்... 1990களின் தொடக்கத்தில் இதே படகு தான் மேலுள்ள மறுமொழிப்பெட்டியிலும் உள்ளது.
  4. பலாலி இரண்டாவது கரும்புலி அணி இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. ஆ..." எனக் கூறினார். ஆனால் இவர் உயிரோடு பிடிபட்டது புலிகளுக்கு தெரியாது. பிடிபட்ட கென்னடி அண்ணாவிற்கு சிங்களவரின் வழமையான கொடூரமான சித்திரவதை எப்படியும் நடைபெற்றிருக்கும். கரும்புலி கையில் கிடைத்தால் விடுவானா? பின்னாளில், 2002இல், அப்போது ஒப்பந்த காலத்தில் கைதிகள் பரிமாற்றத்தின்போது இவர் சிங்களவரால் விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!
  5. இப்பெண்போராளியின் இயக்கப்பெயர் செல்வி என்பதாகும். இவர் எதிரியின் கைக்குண்டின் சிதறு துண்டத்தினால் தனது கண் ஒன்றினை இழந்தார்.
  6. சமர்க்கள விரிப்புகள் 4 நாட்கள் குடாரப்புத் தரையிறக்கம்: முதலாம் நாள் மூலம்: vayavan.com, மார்ச் 19, 2019 படை அமைத்தலில், படை நடத்தலில், படை இணைத்தலில் அது ஓர் புதிய சாதனை. பெருங்கடலையும் பெருந்தளங்களையும் தாண்டித் தரையிறங்கி பகை வென்ற சாகச்சமர். 4 ஆவது நாளில் பிரிகேடியர் தீபன் அவர்களால் தரைவழி திறக்கப்பட்டாலும், முதல் மூன்று நாட்களும் வழங்கலுக்கான தரைவழிப்பாதை அறவே இல்லாத மிகப் பெரும் சமர். பாரிய போராயுதங்களினால் விழுப்புண் அடைந்து உயிருக்குப் போராடும் வீரர்களை உடனடிச் அறுவைப் பண்டுவத்திற்கு அனுப்ப வேண்டியவர்களையே அனுப்ப முடியாத வெறிகொள் செங்களம். சிங்களம் திகைத்திடக் களமாடும் வீரர்களுக்கு மிக அருகே நின்று அன்னையாய் தந்தையாய் மாறி பண்டுவம் அளித்தனர், களமருத்துவர்கள். காயமடைந்தவர்களில் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டவர்களுக்கு தாங்கள் கூல் பொக்ஸில் கொண்டு சென்ற குருதியை ஏற்றினர். “படகு கவிழ்ந்தாலும் கூல் பொக்ஸில் உள்ள குருதியைக் கைவிட்டுவிட வேண்டாம்” எனக் கூறி சுண்டிக்குளத்தில் வைத்து திருமிகு இ. ரேகா அவர்கள் கையில் தந்துவிட்ட குருதி உயிர் காக்கத் தொடங்கி இருந்தது. ஆண் போராளி ஒருவர் நெஞ்சிலே ஏற்பட்ட காயத்தால் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். நுரையீரலுக்கும் நெஞ்சறைச் சுவருக்கும் இடையே உள்ள புடைக்குழியினுள் குருதி வெளியேறியதால் நுரையீரல்(A space between Lung and chest cavity) விரிவடையமுடியாமல் இருந்தது. ஆதலால் மூச்சு எடுக்கக் கடினப்ப்பட்டார். மின்னலென விரைந்து செயற்பட்டு Intercostal Drainage Tube(ICD tubu)போட்டு அவரைக் காப்பாற்றினர் தமிழர்சேனையின் சிறப்பு மருத்துவ அணியினர். நீரின் வெளியே மீனாகத் துடித்தவர் இப்போது ஆழமான மூச்சுவிட்டு அமைதி அடைந்தார். தனக்கு அடுத்த நிலையிலிருந்த அணித்தலைவரிடம் செய்யவேண்டிய பணிகளை ஒப்படைத்தார். “அடுத்த அடுத்த கிழமைகளில் நாம் அடையப்போகும் வெற்றிக்கான வேதனையை வெற்றி கண்டு உள்ளோம்” என உச்சத்துப் பல்லி போல மருத்துவர் வித்தகி அச்சம் இன்றிச் சொன்னாள். பாரிய கட்டடங்கள் அல்லது முன்கூட்டியே அமைக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்கழிகள் அங்கு இருக்கவில்லை. ஆதலால், திறந்த பதுங்ககழிகளிலேயே காவு படுக்கையுடன்(With Stretcher) தூக்கி வைத்தோம். அஞ்சிஞ்சி மோட்டார்களிலிருந்துப் விண்ணில் ஏவப்பட்ட எதிரியின் பரவெளிச்சங்கள் இரவைப் பகலாக மாற்றிக்கொண்டிருந்தது. அந்தப் பரவெளிச்சத்திலேயே உதவு மருத்துவர் வண்ணன் லெப்.கேணல் சாந்தகுமாரியிற்கு ஒவ்வொரு மணித்தியாலமும் தவறாமல் குருதி அமுக்கத்தை சோதித்துக் கொண்டிருந்தார். சின்னஞ் சிறிய படகுகள் கொண்டு பாரிய போர்த்தளபாடங்களுடன் அறுவைப் பண்டுவக் கூடத்தையே எம்முடன் கடல்வழி இறக்கிவிட்ட கடல்புலிகளின் வலுவை எப்படி உரைப்பது? குடாரப்புத் தரையிறக்கம்: முதலாம் நாள் மூலம்: vayavan.com, ஏப்ரல் 25, 2020 குடாரப்பு தரையிறக்கத்தில் போர்ப்படகிலிருந்து நாங்கள் தரையிறங்க முன்னரே பல முனைகளில் இருந்தும் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சண்டைப்படகில் அணியத்தில் நாங்கள் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் இருந்தோம். சுருங்கக்கூறின் ஒரு சிறு அறுவைப் பண்டுவக் கூடத்தையும் கடல்வேங்கைகள் எமக்காய் எம்முடன் சுமந்து வந்தனர். கடலில் கடற்படை டோறாக்கள் தாக்கத் தொடங்கின. கரும்புலிப்படகுகள் எமைக்காத்த வண்ணம் எங்கள் அருகே வந்து கொண்டிருந்தபடியால் டோறாக்கள் எங்கள் அருகில் வந்து தாக்கத் தயங்கின. எங்களுக்கு பின்னால் இயந்திர அறையில் எங்கள் படகையும் கதுவீ கருவியையும் இயக்கிய கடற்புலி போராளிக்கு வேட்டுக்காயம் ஏற்பட்டது. சுண்டிக்குளம் கரை மணலில் எம் வீரத்தளபதி சூசை அவர்கள் மற்றும் மருத்துவப் பொறுப்பாளர் திரு.இரேகா ஆகியோரின் ஆசியுடன் கடலில் தொடங்கிய எங்கள் கடற்பயணமானது ஆழமான கரையினை அண்டியபடியே தொடர்ந்தது. அந்த நாள் கடல்சீற்றம் அதிகமாய் இருந்த நாள் அதைவிட சிறீலங்கா கடற்படையின் தாக்குதல் காரணமாக படகுகள் கடலில் மூழ்க நேரிட்டால் நீச்சலடித்து கரையை நோக்கிச் செல்வதற்கு ஏற்பாடகவே ஆழ்கடலை அண்டாமல் கரையை அண்டிச் செல்லுங்கள் என கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கடலோடிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். பொதுவாக வானூர்திப்பயணத்தில் நாடுகளின் பெயர்கள், முக்கிய இடங்களின் பெயர்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு ஊரின் கடற்கரைகளை அண்டிச் செல்லும் போதும் அவ்வூர்களின் பெயர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக மேந்தலைகளால் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, ஆழியான்,மருதங்கேணி,தாளையடி, செம்பியன்பற்று கடற்கரைகளை வெற்றிகரமாகத் தாண்டி மாமுனையை அடைந்தது. மாமுனைக் கிராமத்தை அடைந்தவுடன் மாமுனைச் சந்தியில் ஏலவே தாக்கியழிக்கப்பட்ட மாமுனை மினிமுகாமிலிருந்து தப்பிய தரைப்படையைச் சேர்ந்த ஒருவன் தரையிலிருந்து தாக்கியதால் இந்த கடல்வேங்கை விழுப்புண் அடைந்தான். மின்னலென விரைந்து முதலாவது பண்டுவத்தை களமருத்துவர் வண்ணன் செய்தார். படகிலிருந்தபடியே எமைச் சுதாகரித்துக் கொண்டு மேலும் சிறிது தூரம் பயணப்பட்டு குடாரப்பில் தரையிறங்கினோம். ஆம், எமது மகத்தான மருத்துவ பணி படகிலேயே ஆரம்பித்தது… நிற்க! குடாரப்பு தரையிறக்கத் தாக்குதலிலும் அதைத் தொடர்ந்த வந்த நாட்களில் வீரச்சாவு அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் சமர்பல வென்ற சமர்களநாயகனுக்கும் வீரவணக்கம்.🙏 கோழி அடிச்சு குழம்பு வைச்சு… குடாரப்புத் தரையிறக்கத்தின் வலி ஒன்று மூலம்: https://www.uyirpu.com/?p=9032 எழுதியவர்: இ.கவிமகன் ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது. அந்த சம்பவம் உண்மையில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் எப்படியெல்லாம் தங்களின் கூரிய பங்கை தந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை இலகுவாக சொல்லிச் சென்றது. 'குடாரப்புத் தரையிறக்கம்' சொல்ல முடியாத வரலாற்று பக்கத்தை கொண்டது. இதில் பல ஆயிரம் சம்பவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்று இன்றைய இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அதிர்ப்த்தியை தரலாம். அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் பற்றி பதிவிடப்படவில்லை என்று கோவிக்கலாம். அல்லது என் மீது இந்த சம்பவத்தை பதிவதால் எதிர்ப்பு எழலாம். ஆனால் இது மதம் தொடர்பான பதிவல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதியப்பட வேண்டி முக்கிய சம்பவம். எம் விடுதலைப் போராட்டம் தனக்குள் சாதி மத பேதமின்றியே தன்னகத்தே அனைவரையும் ஒரு கோட்டில் இணைத்து வைத்திருந்தது. மதக் கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எப்போதும் தடை விதித்ததில்லை. அது பல விமர்சனங்களை உருவாக்கி இருந்தாலும் தடை இல்லை என்பதுவே நியம். அதற்கு மடு மாதா ஆலயம், வற்றாப்பளை கண்ணகி ஆலயம் போன்றவை போல பல நூறு வணக்க தலங்களின் பெருவிழாக்களை அவர்களே பாதுகாப்பு வழங்கி மக்கள் செய்து வந்ததை குறிப்பிடலாம். இந்த நிலையில், அனைத்து மத குருக்களும் விடுதலைப்புலிகளால் மதிக்கப்பட்டே வந்தார்கள். அது இந்து கிறிஸ்த்தவம் என்ற பாகுபாடில்லை. இந்த நிலையில் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றான "கொல்லாமை உண்ணாமை" என்ற பெரும் விடயம் இந்து மத குருக்கள் மாமிச உணவுகளை உண்ணாமையை குறித்து பேசுகிறது. கொல்வதும் அதை உண்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. உண்மையில் தீவிர இந்து மதம் சார்பானவர்கள் மாமிச உணவுகளின் அருகே செல்லக்கூட மாட்டார்கள். அவ்வாறான ஒரு இந்து மத குரு பற்றியே இந்த பத்தி கூற விளைகிறது. குடாரப்புச் சண்டை தொடங்கிய முதல் நாள், அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். அவர்களில் இந்து மத குருவும் ஒருவர் இருந்தார். அவர் இயக்கப் போராளிகளைக் கண்டதும் பெரும் மகிழ்வடைகிறார். கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உணர்த்துகிறார். “தம்பி உங்களக் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டம். இன்றுதான் மனசு நிறைஞ்சிருக்கு.” என்று மகிழ்வின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு புலிகளைக் கண்டது பெரு மகிழ்வைத் தந்தது. கடல், இத்தாவில், நாகர்கோவில், மருதங்கேணி என நான்கு புறமும் படயினரின் பயங்கர தாக்குதல்கள் அந்த பகுதி எங்கும் நடக்கின்றது. மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். போராளிகள் தம் இலக்குகளை அடையும் ஓர்மத்தோடு சண்டையிடுகிறார்கள். அதைப் போலவே சிங்கள படைத்துறையும் தனது படை வலுவை பிரயோகிக்கிறது. இரு தரப்பும் அதியுச்ச பலத்தை பிரயோகித்து கொண்டிருந்தனர். அப்படியான சண்டைக்களத்தில் காயமடையும் போராளிகளுக்கான மருத்துவ அணியையே அவர் சந்தித்திருந்தார். அவர்களும் அவரை கண்ட மகிழ்வில் இருக்கிறார்கள். "அப்பா நீங்கள் கவனமா இருங்கோ. இது சண்டைக்களம் இங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியாதப்பா. கவனமா இருங்கோ பங்கர்ல…" மருத்துவப் போராளிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புகிறார்கள். "சரியப்பு, சாப்பாடுகள் என்ன மாதிரி? சாப்பிட்டீங்களா?" அவர் உணவை பற்றி வினவிய போது, "ஓம் அப்பா, சாப்பாடு இருக்கு. பட்ஜட் கொண்டு வந்தனாங்கள். சாப்பாட்ட பற்றி நினைக்க முடியாதப்பா. இந்தச் சண்டை வெற்றி பெறும் வரைக்கும் எங்களால சாப்பிட முடியாது அப்பா. மருதங்கேணி பக்கமாக உடைச்சு பாதை எடுக்கும் வரை இது தான் அப்பா சாப்பாடு." என்று மருத்துவ போராளி ஒருவர் தனது உணவுத் தொகுதிப் பையை காட்டுகிறார். அதற்குள் சில உலருணவுகள், பொரித்த இறைச்சித் துண்டு போன்றவை இருக்கின்றன. அதைக் கேட்ட உடனே அவருக்கு கவலையாக இருந்தது. "சரியப்பு நான் பிறகு வாறன்." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். அங்கே சண்டையணிகள் உலருணவை மட்டுமே நம்பி சண்டையை செய்தனர். அவர்களுக்கு உணவு வருவதென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதனால் உணவைப் பற்றி அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் எண்ணங்கள் முழுவதும் சண்டை பற்றியே இருந்தது. ஆனால், காயப்பட்டு வரும் போராளிகளுக்கு உணவுத் தேவை எழுந்தது. உலருணவை சாதாரணமான போராளிகள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை ஆனால் காயப்பட்ட போராளிகளுக்கு இருக்கவில்லை. அவர்களால் உலருணவை உண்ண முடியாது. அதனால் உடனடி சமைத்த உணவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த நிலையில் அங்கே தரித்து நின்ற மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர் தணிகை, வித்தகி மற்றும் மருத்துவ போராளிகளான வண்ணன் மற்றும் நிர்த்தனா ஆகியோர் களைப்படைந்து காணப்படுகிறார்கள். வரும் காயக்காரரை பாதுகாக்க அவர்கள் அயராது உழைக்க வேண்டி இருந்தது. இத்தாவில் பக்க களமுனைக்கு கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் படைய மருத்துவர் சத்தியா மற்றும் மருத்துவப் போராளி திருவருள், சுதர்சன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களும் இவர்களைப் போலவே சண்டையை எதிர் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தொடர்ந்த தாக்குதல்கள் தூக்கமற்ற இரவுகளாகவே இருந்தன. அதோடு உணவுகளும் இல்லாமல் இருந்தது. காயப்பட்ட போராளிகளும் மருத்துவர்களும் சோர்வடைந்து இருந்த போதும், அவர்களுக்கான உணவு வளங்கல்கள் கிடைப்பது பெரும் சிக்கலாக இருந்தது. சண்டை தொடங்கி 2 ஆவது நாள் மேலே குறிப்பிட்ட இந்து மதக் குரு அங்கே வருகிறார். போராளிகள் படும் கஸ்டங்களை அவரால் தாங்க முடியாது இருந்தது. எதுவும் பேசாது திரும்பி சென்றவர். தன் வீட்டில் கூட்டுக்குள் நின்ற இரண்டு சேவல்களை பிடித்து கொண்டு ஓடி வருகிறார். “தம்பி நான் கொலை செய்ய மாட்டன் எனக்கு உரிக்கவும் தெரியாது. இதை உரிச்சு தர முடியுமாப்பு.? நான் சமைச்சு கொண்டு வாறன்." மருத்துவர்களால் அவரின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே காயப்பட்டிருந்த 6 போராளிகளுக்கு சிகிச்சை செய்திருந்தார்கள். கைகள் , உடை என்று அனைத்தும் அந்த போராளிகளின் குருதியில் நனைந்தருந்தன. அதை விட தொடர்ந்தும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பல போராளிகளை மீள்உயிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டியும் இருந்தது. அதனால் அவர்கள் மறுக்கிறார்கள். “இல்லை அப்பா நிறைய போராளிகளுக்கு சிகிச்சை குடுக்க வேணும். நாங்கள் இதில மினக்கட இப்ப நேரம் இல்லை அப்பா. பரவாயில்ல நீங்கள் யோசிக்க வேணாம் அப்பா நாங்கள் உலருணவு சாப்பிட்டனாங்கள் சாப்பாட்டை பற்றி கவலையில்லை அப்பா." அவர்கள் தம் கடமையில் மூழ்கிப் போய்விட இந்து மத குருவால் எதையும் செய்ய முடியவில்லை. கொல்வதும் உண்பதும் தவறான செயல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்ந்து வரும் அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளான போராளிகள் பசியோடு இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. அவரின் மனப் போராட்டம் இறுதியாக அடிப்படை இந்துதத்துவ கோட்பாட்டை உடைத்தெறிகிறது. கோழியை கொன்று உரிக்கிறார். சோறும் சுவையான கோழிக் கறியும் சமைக்கிறார். உயிரை கொல்லுதல் பாவம் என்று வாழ்ந்த அந்த இந்துமதக் குரு, போராளிகளுக்காக இரண்டு கோழிகளை கொலை செய்தும், அதை தன் கைகளால் சமைத்தும் பெரும் வெற்றி ஒன்றுக்காக தம்மை ஆகுதி ஆக்கத் தயாராக இருந்த அந்த போராளிகளின் பசியை போக்கினார். எங்கள் மக்களுக்காக அவர்களின் வாழ்வுக்காக போராளிகள் எதையும் செய்ய தாயாரானவர்கள் எதையும் தியாகிக்க துணிந்தவர்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறானவர்கள் அல்ல, தமது குடும்பம், தனிநபர் விருப்பங்கள் என்றும் மதம், சாதியம் போன்ற கொள்கைகள் என்றும் பலவாறான கட்டுப்பாட்டு விழுமியங்களை பின்பற்றியே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப் போராளிகளுக்கும் எம் போராட்டத்துக்குமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் எம் மக்கள் என அந்த இந்துக் குரு சொல்லி நின்றார். இது நடந்து 3 ஆவது நாள் போராளிகளுக்கான உணவு வழங்கள் மருதங்கேணி பகுதியில் இருந்து ஒழுங்காக கிடைக்கத் தொடங்கிய போது இந்து மதக் குரு கொஞ்சம் ஆறுதலடையத் தொடங்கினார். ஆனால் அவர் அதன் பிறகு கூட காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் உதவியை மருத்துவ அணிக்கு செய்தார். உணவூட்டி தண்ணீர் பருக்கி அவர்களுக்கு உதவினார். வரு சண்டைக் கள முனையில் போராளிகளுக்கு உதவ எந்த பயமும் இன்றி ஆனால் அன்று பின்னேரம் காலில் பாரிய காயமடைந்திருந்த சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணிப் போராளி வைத்தியை (வைத்தி அண்ணை) அவசர சிகிச்சைக்காக தமது மருத்துவ பதுங்ககழி நோக்கி தூக்கிக் கொண்டு வந்தார்கள் மருத்துவர்களான வித்தகி மற்றும் தணிகை ஆகியோரை தாண்டி திடீர் என்று கிபிர் தாக்குதல் நடக்கிறது. நடந்த கிபிர் தாக்குதலில் தப்பிக்க நிலத்தில் நிலை எடுக்கிறார்கள். பல வான்குண்டுகள் அந்த பிரதேசம் எங்கும் கிபிரால் விதைக்கப்பட்ட போது, இந்துக் குருவின் வீட்டுப்பக்கத்தில் இருந்தும் பெரும் புகைமண்டலம் எழுந்தது. அப்போது அவர்களின் மனதில் அந்த மதகுரு வந்து போனார். அவரின் வீட்டை நோக்கி ஓடிய போராளிகள் காலை வரை தமக்கு உணவளித்து தம் தந்தையாக நின்று தம்மை பராமரித்த அந்த மதக்குரு உடல் உயிரற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு மனமுடைந்தார்கள். அவரை தூக்கினார்கள் உயிரற்ற வெற்றுடலை துப்பரவு செய்தார்கள். அப்போது அந்த பெரியவரின் மனைவி ஓடி வருகிறார். கதறி அழுதார். போராளிகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து குடுக்க வேணும் என்றுதான் அவர் அவர்களுடன் செல்லாது இங்கே தங்கி இருந்ததை எண்ணி மனம் வருந்தினார்கள் போராளிகள். ஆனாலும் தளரவில்லை. குடாரப்பில் வீரச்சாவடைந்த போராளிகளோடு இன்றும் அவரை நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்… ******
  7. 😂😂😂 Youtube: Samugam Media | 125K subscribers🤥🤥🐷 இலங்கையில் குவிக்கப்படும் இந்திய இராணுவத்தால் பதற்றம்!! | அடுத்தடுத்து வெளியாகும் பரபரப்பு தகவல்!!! தமிழ் சிறி விட்ட விக்கிரமாதித்தியா நேற்று வரவில்லையாம், இன்டைக்கு பின்னேரம்தான் வருகுதாம். இவனுகளின்ட எந்த தண்ணியில மிதந்து வருகுதோ தெரியல.🤣🤣 @1:43
  8. 😁 இன்னொன்ட கவனிச்சியளே, யாழ் களத்தின் நம்பகத்தன்மை. இங்கு ஒரு செய்தி போட்டால் அது எவ்வளவு நம்பகமான செய்தி என்பதும் அதை மக்கள் எவ்வளவு தொலைவு கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறார்கள் என்பதும் இதன்மூலம் கண்கூடு, மேலும், யாழ் களத்தின் செய்தி பரப்பல் வேகம் மிகையானது. எதிர்காலத்தில் எம்தேசம் தொடர்பான ஏதேனும் நல்ல செய்தி பரப்ப வேண்டுமென்றால், தமிழ்ப் பரப்பில், யாழை சரியான விதத்தில் பயன்படுத்தினால் சரி. காட்டுத் தீயாய் பரவும் என்பதற்கு இதுவொரு வெற்றியளித்த எதிர்பாராத சோதனை முயற்சி.
  9. இந்திய ராணுவம் இலங்கையில் தரை இறங்கியது! சரத் பொன்சேகா ராணுவ புரட்சி?.. - Sri Lanka Crisis | India 7:19இல் ... "இந்தியா தீடீரென தனது கமாண்டோ போஸ் எனப்படும் ..... அதிரடிப்படை ....... 180 பேரை அங்கு கொண்டு சென்று தரையிறக்கியுள்ளது" @தமிழ் சிறி நீங்கள் போட்டதில பாதியையும் நான் போட்டதில பாதியையும் கலந்து கைகால் மூக்கு வைத்து இஞ்ச நடக்குது 😂😂. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள்.🤦‍♂️ அடியா சக்கை! 🤣🤣🤣🤦‍♂️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.