Everything posted by நன்னிச் சோழன்
-
கொச்சு வள்ளம்.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
கேவு வள்ளம்.png
From the album: Different types of boats used by Tamils historically
-
குறுவள்ளம்.png
From the album: Different types of boats used by Tamils historically
-
உரு/Uru Kerala - Modern, Malabar version of Arabic Dhow
From the album: Different types of boats used by Tamils historically
-
உரு jaffna Tamil Eelam | Eelam version of Arabic Dhow
From the album: Different types of boats used by Tamils historically
-
அடுபுணை- தோண வள்ளம்.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
Raft - ஓடம், அம்படலம், ஆது
From the album: Different types of boats used by Tamils historically
-
main-qimg-f08544e60061b140d765e8d5586a6be2.png
From the album: Different types of boats used by Tamils historically
-
main-qimg-c5caedaa16ffdd64f2f0536710524c95.png
From the album: Different types of boats used by Tamils historically
-
main-qimg-53d7cfee20494bd3bcd5270c7af796a2.png
From the album: Different types of boats used by Tamils historically
-
main-qimg-37c6df66b8d31949bd5747390f64791d.png
From the album: Different types of boats used by Tamils historically
-
different types of அம்பி.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பண்டைய தமிழகத்தை காட்டும் வரைபடம்: கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 150+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். → கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது. கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour. துறைமுகம் - அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவும் மக்கள் அல்லது சரக்குகளை துறைமுகத்திலிருந்து நிலத்திற்கு கொண்டுசெல்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் கடற்கரை அல்லது கரையில் உள்ள இடவமைப்பாகும் முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம். பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம். தங்குதுறை - கப்பல் வந்து தங்கிச் செல்லும் கடற்றுறை இறங்குதுறை - Jetty உலர்துறை - dry docks பதனம் - கலங்கள் காற்றினாலும் கொள்ளைக்காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாய் இருக்குமிடம் தோணித்துறை, நாவாய்த்துறை/நாவாந்துறை - தோணிகளை நிறுத்தவும் செலுத்தவும் வாய்ப்பான துறை... மீனவர் - நீர்நிலை வேடுவர் கடற்கலத்தை செலுத்துபவருக்கான பொதுச்சொற்கள் - (helmsman) மீகாமன் மீகான் ஓட்டி நீகான் கடற்பாய்ச்சி படவன் - படகினை ஓட்டுவோன் மண்டாடி - இவர் தொழில் நுணுக்கங்களை அறிந்தவர். இவரே மேலாப்பாச்சி எனவும் அழைக்கப்படுவார் தண்டுக்காரன் - மரக்கலத்தை இயக்கத் தண்டுபிடிப்பவன், கொம்பால் கட்டுமரத்தை செலுத்துபவன். சம்மாடி - படகு/வள்ளத்தின் தலைவர் தண்டையல்/தண்டயல்/தண்டல், மேந்தலை, நீயான் - (captain of the ship) தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் தலைவர் ஆவார். திண்டேல் - கப்பலைக் கண்காணிப்பவன் - boat swain கலவர், கலாள், கம்மகாரர், பரவர், பரதர், பரதவர், நாவிகர், கடலர், திரையர் - (mariners, sailors, seaman, or seafarer) - கடற்கலங்களில் செலவாவோரிற்கான தமிழ்சொற்கள். கடலோடி - கடல் பற்றிய அறிவு கொண்ட நீண்ட காலம் கடலில் செலவாகக்கூடிய பரதர். ஆழ்கடலோடிகள் - ஆழ்கடல்களில் நீண்ட காலம் செலவாகக்கூடிய பரதர். மண்டாடி - கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர்; நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர். கம்மாறுகாரர் (கம்மா + ஆறு + கடலான் என்பதின் சுருக்கம்) - மீன் பிடித்தலில் கெத்தானவன். முத்துக் குளிப்போர் - கடலில் மூழ்கி சங்கு, முத்து போன்ற கடலாழத்தில் உள்ளவற்றை அகழ்ந்தெடுப்போர் தொள்ளாழியார் - கடல் ஆழி பற்றி நிறைந்த அறிவுடையவர். நுளையர் - தென்னை நாரில் இருந்து பாய்க்கயிறு திரிப்பவர். கழியர் - உப்பளவர் கடல்கோலமிட்டாந்தான் - கடல் சூழ்ந்த நிலையிலும் மூழ்காதவன் உச்சாணியார் - பாய்மரத்தின் மேல் இருந்து வேலை செய்யகூடியவர் . மூப்பர், சேவை- மூத்த அதிகாரி கம்மியர் - பொறியியல் அதிகாரி காப்பு - கப்பலில் உள்ள ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி சுழியோடிகள் - சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள். நீர்முழுகி - நீரில் முழுகுவோன் (diver) ஓசுநன் - பாய்மரங்களை உயர்த்துபவன் ஓடாவியார் - தோணி மற்றும் கப்பல்களை கட்டியவர்கள். துறைவன், கொண்கன்- என்றால் துறைமுக பரதவ தலைவன். சேர்ப்பன் - நெய்தனிலத் தலைவன் புலம்பன் - கடற்கரைத் தலைவன் அழிசி - காயல்(back water) அல்லது கழிமுகப்(delta) பகுதியின் தலைவன். இப்பெயர்கள் கூடுதலாக சேரர்களால் சூட்டப் பெற்றுள்ளன. கலப்பத்துக்காரன்,கலப்பத்துஆள் - கலத்தின் நீக்கலடைப்பவன். சாலர் - போக்கூழாக என்னவென்றே தெரியவில்லை! பண்டாரி - தோணியில் உள்ள சமையல்காரன் பண்டாரிப் பெடியன்/ சுடுவான் பெடியன் - சிறுவயது பெடியள், பண்டாரிக்கும் வேலை செய்வொருக்கும் இடையிலான தொடர்பாள். கால் பங்காள் அ கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் சுடுவான் பெடியளின் பதவி. அரைப் பங்காள் அ அரைப் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் பாய்மரமேறி பாய்மரம் அவிழ்த்து விடுவோரின் பதவி முக்கால் பங்காள் அ முக்கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் 12–12 மணிநேர வேலையினை சரியாகச் செய்யும் பருவம் வந்தோர். முழுப் பங்காள் அ முழுப் பங்குவாங்கி - தண்டலிடம் இன்னார் நிறைவாக வேலை செய்வார் என்ற மனநிறைவை பெற்றவர். திடுல், பொறி , கைப்பந்தல், தண்டாரம், சிமிலி, பத்தாசு, மாயிலி, ஏதல், பாரம், பாரகம், மதலை, நவாடா, இகுரி, சோங்கு, பாரதி, வள்ளியம், அம்பணம், ஆலாத்து, நாவம், ஐவி, போழ், கரைவலம், சதா, தொள்ளம் / தொள்ளை, கடவுமரம்- என்னவென்றே தெரியவில்லை! Common name to all types of ships -கடற்கலம், யானம், ஆனம், நீரூர்தி மரக்கோவை - மரத்தால் செய்யப்பட்ட கலங்களுக்குப் பொதுவான சொல். பாய்மரக் கலம்- இச்சொற்கள் பாய்கட்டிய கலங்களுக்குப் பொதுச்சொல்லாக விளங்கின. கட்டுப்படகு - பலகை கொண்டு கட்டிய படகு கப்பல்கால், நடைப்படகு - பெரிய கப்பல்களிலிருந்து இறங்கியேற பயன்படும் படகு. Floater- பங்கிலம், பன்னாலம், தரம், படுவை, வகுத்திரம், பேலகம், யாதனம். ship - கப்பல், நாவாய், கலம், நௌ, நவ்வு/நவ்வி கலப்பற்றுக்கலம் - நீக்கலடைக்கப்பட்டுள்ள கலம் நெடுங்கப்பல் - நீளமான கப்பல் இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல். கலம் - சோழர்காலத்துக் கல்வெட்டுகளில் கப்பல் என்னும் சொல்லின் பொருள் வரும் இடங்களில் இச்சொல்லே இடம்பெற்றுள்ளதால் இச்சொல்லின் பொருள் கப்பல் என்றே கொள்ள முடிகிறது.. பொதுச்சொல்லாக அல்ல. ஆதாரம்: ——→நாகப்பட்டினம் முதல் சுவர்ண தீபம் வரை (பக்கம்: 111,112) சரி, வாருங்கள் இனி கடற்கலங்களைப் பற்றி பார்ப்போம். கீழ்க்கண்ட பண்டைய தமிழர்கள் உருவோட்டிய (sailing) கடற்கலங்களைப் பற்றி மேலும் காண விழைக்கில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட இக் கொழுவியினைச் சொடுக்கவும். நான் இங்கு அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில முக்கிய குறிப்புகளை மட்டுமே தருகிறேன். உங்களுக்கு எமது முன்னோர்கள் உருவோட்டிய இக்கடற்கலங்களைப் பற்றி அறிய ஆசை இருப்பின் மேற்கண்ட கொழுவியினைச் சொடுக்கி ஏனைய புலங்களைப் படிக்கவும். தமிழரிடம் இரு வகையான கடற்கலங்கள் இருந்ததாக கிரேக்கத்து கி.பி. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிபிளஸ் கூறுகிறது என்கிறார் 'MEMOIRS OF THE ASIATIC SOCIETY OF BENGAL' என்ற 1918—1923 ஆண்டு கால நூலின் 7ம் பாகத்திலுள்ள ஒரு பகுதியை எழுதிய Hornell James அவர்கள். இவர் தன் பகுதியின் நான்காம் மடலத்தில் (PART IV.—THE CLASSES OF VESSELS EMPLOYED BY INDIANS IN ANCIENT DAYS PRIOR TO PORTUGUESE MARITIME DOMINANCE.) பக்கம் 215 & 216இல் இக்கடற்கலங்கள் தொடர்பிலான விளக்கத்தை தந்துள்ளார். சங்கடம் (Sangkara): வணிக கடற்கலம் இது கங்கைக்கும் இமாலயத்திற்கும் இடைப்பட்ட பரப்பிற்கு சென்று வந்தது. இதில் பெரியதும் சிறியதும் இருந்தன. இவற்றை பாரிய நீளமான மரக்கட்டைகளை ஒன்றாக்க அடுக்கி உருவாக்குவர். 2. குள்ளத்தோணி (Kolandiophonta/ kolandia): வணிக கடற்கலம் இவை தற்காலத்து குள்ளாவை விட பெரியவையாக இருந்திருத்தல் வேண்டும். ஏறத்தாள சிங்களவரின் யாத்திரை தோணி அளவு உடையனவாக இருக்க வேண்டும். இவை வங்கத்திற்கும் மலேசியாவிற்கும் சென்று வந்தன. இவை மிகப் பெரியன ஆகும். இவை தூம்புக்கட்டை கொண்டவையாகும். (இக்கற்கலங்களின் படிமங்கள் கீழே தரப்பட்டுள்ளன) தங்கு - கடலில் தங்கிநின்று மீன்பிடித்து வருவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கடற்கலம். இவற்றை தற்காலத்தில் "தங்கல் படகு" என்றும் அழைப்பர். பாசனம்- மீட்பிற்கு உதவும் கடற்கலம் வங்கம் - வங்கத்திலிருந்து வந்த கலங்களைக் குறித்திருக்கலாம், வஞ்சி போன்று. பண்ணை - கால்நடைகளை இடம்மாற்ற பாவிக்கப்பட்ட கடற்கலம் என்று கருதுகிறேன். சலங்கு/ சலங்கை: சலங்கு என்னும் பாய்மரக்கப்பல்கள் 3 முதல் 4 பாய்கள் கொண்டவையாகும். நடைச்சலங்கு - சலங்கிலிருந்து ஏற/ இறங்க சலங்கோடு கொண்டுசெல்லும் படகு தீவுப்பற்றில் இக்கடற்கலம் தொடர்பான ஒரு நாட்டுப்புறப் பாடல் உள்ளது. வல்வெட்டிதுறை பாய்மரக் கப்பல்களில் வந்து குவியுது பண்டமடி வாய் நிறையத் தின்று வெத்திலை போடலாம் வாருங்கோ கும்மி அடியுங்கடி வத்தை, சலங்கு, கட்டுமரம், தோணி, வள்ளாங்கள் வந்து குவியுதடி எத்தனை பண்டங்கள் ஏற்றி வரும் எல்லாமே கொள்ளை லாபமடி (தகவல் – கலாநிதி காறை செ.சுந்தரம்பிள்ளை) வல்வை சிதம்பர கல்லூரி நூற்றாண்டு மலரிலிருந்து valvettithurai.org அவர்களால் எடுத்துப் பதியப்பட்ட தகவல்(https://www.valvettithurai.org/salanku-sailing-boat-from-valvettithurai-3986.html?date=1520101800) "சலவர் என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர் களையும் குறிக்கும். சலங்குக்காரர் என்பவரும் முத்துக் குளிப்பவரே. சலாபம் என்பதும் முத்துக் குளித்தலையே குறிக்கும். நீராடுவாரைச் சலங்குடைவர் என்னும் பரிபாடல் (10:90) சலகை என்பது தோணியையும் சலஞ்சலம் என்பது வலம்புரிச் சங்கையும் (சீவக. 184) சலம் புகன்று என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக். 112) குறித்தல் அறியத்தக்கன." - செந்தமிழ் சொற்பிறப்பியல் களஞ்சியம், 6, ச முதல் த வரை பட்டம் : புத்தளக் கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கல வகை உரு : இவை பண்டைய சேர நாட்டில் கட்டப்பட்டவை. இவற்றில் பல வகையுண்டு. பூம், போதில், கோட்டியா, கப்பல், படவா, பரவோ, சம்பூக், பெரியக் மற்றும் பல (டாக்டர் கிரீஷ்மலதா, ஏ.பி இணைப் பேராசிரியர், எஸ்.என். கல்லூரி, செம்பழந்தி, திருவனந்தபுரம்). படம்: கேரள உரு தற்காலத்திற்கு கொஞ்சம் முந்திய காலம் வரையிலும் வட தமிழீழத்தின் வல்வெட்டித்துறையில் உரு கட்டப்பட்டுள்ளது. குள்ளத்தோணி/ யாத்திரை தோணி - படகை விடப் பெரியவை; கப்பலை விடச்சிறியவை. சரக்கு, மக்கள் போக்குவரத்துக்குப் பயன்பட்டது. . இது இருப்பக்கமும் சமனான தூம்புக்கட்டையைக் (outrigger) கொண்டதாகும். தொடுவைவள்ளம்- அவசர காலத்திற்காக தோணியோடு இணைக்கப்பட்டிருக்கும் கடற்கலம். கள்ளத்தோணி - இத்தோணியின் பெயரின் பொருள் கடற்கொள்ளையர்களின் கடற்கலம் போல மிகவும் வேகமாக பயணிக்கக்கூடியது என்பதாகும். அளவுகள்: மிகச்சிறிய முற்பாய்: 10 முழம் நடுப்பாய் = 30 முழம் கடைப்பாய் = 28 முழம் முடுகு - நன்கு வேகமாகச் செல்லக்கூடிய தோணி தாவடித்தோணி - எதிரியின் கலங்களை உடனடியாக நிறுத்தி அதிர்ச்சித் தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படும் தோணி துறைத்தோணி - வலசைக்குப் பாவிக்கும் தோணி கலவம் - தோணியின் பாதி அளவுள்ள கடற்கலம். ஆனால் படகை விடப் பெரியது கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4) வேடி, வேடை - படகளவு தோற்றம் கொண்டது கட்டுவள்ளம்/ கம்பவலை வள்ளம்/ படகு: மசுலா - இது சரக்குக் காவியாகவும் மீன்பிடி படகாகவும் பயன்பட்டது. 'மசுலா-ன் அணியம்' பட்டை- அடிப்பகுதி தட்டையான கடலுக்கு கரைவலை எடுத்துச்செல்லப் பயன்படும் கடற்கலம். இது ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளது. படம்: மகாதல்புரம், கொழும்பு, சிலோன் பகடு - சொகுசுக் கடற்கலம் நீரணி மாடம் / தானக மாடம்/ நீர்மாடம் - சங்ககாலத் தமிழக மக்கள் பயன்படுத்திய உல்லாசப் படகு ஆகும் அம்பி-இவை ஒவ்வொரு விலங்கினதும் தலையைப் போல முகப்பைக் கொண்டிருக்கும் கடற்கலம். பரிமுகவம்பி, அரிமுகவம்பி, கரிமுகவம்பி, ஆமுகவம்பி, அரவமுகவம்பி , ஓதிம அம்பி திமில் = இது 3 வகைப்படும். என்னவென்று தெரியவில்லை. கொடுந்திமில், வான்திமில், திண்திமில் வத்தல்/ பாய் வத்தல் கீழுள்ளது தூத்துக்குடியில் உருவோட்டப்பட்ட வத்தல்/ பாய் வத்தல். இவை வத்தையை விட நீளமானவை. அத்தோடு பாயும் கொண்டவை. சரக்கு ஏற்றி இறக்க பாவிக்கப்பட்டன. length: 34 அடி beam :6¼ அடி depth :2¾ அடி தன்னுதோணி, ஒத்தை, தன்னுவத்தை - சிறிய வத்தை தூத்துக்குடியில் உருவோட்டிய மீன்பிடி தன்னுவத்தை வத்தை - நீளம் குறைந்தது. சில வேளைகளில் பாய் உண்டு நவீன கால வத்தைகள்: 1958 ஆம் ஆண்டில் பல்வேறு மீன்பிடிக் கலங்களின் பரவல் | மூலம். கடற்றொழில் அமைச்சு | 'THE ORU OF SRI LANKA: A single outrigger craft of the northern Indian Ocean' லெப்டினன்ட் கமாண்டர் சோமசிறி தேவேந்திரா, 1990 ஈழத்தில் 'பெரும்பான்மை' பூர்வீக கலங்களின் பரவல் | Small-Scale Fisherfolk Communities in the Bay of Bengal. மெட்ராஸ், இந்தியா, நவம்பர் 1990 பிளாவு - ஒருஉ-ற்கு ஒரு தூம்புக்கட்டை போடப்பட்டிருந்தால் பிளாவு எனப்படும். படிமக்காலம்: ஏறத்தாழ 1920ம் ஆண்டு குள்ளா - பிளாவின் பெரிய வடிவம் தான் குள்ளா . இக்கடற்கலம் தொண்டி அ கடற்கழிகளில் வலைபோட்டு மீன்பிடிக்கப் பயன்பட்டது. இது ஈழத்தில் பயன்பாட்டில் உள்ளது. சிலர் இதனை 'கரைவலை தோணி' எனவும் விளிப்பதுண்டு, ஈழத்தில். 'திருமலை கடற்கரையில் குள்ளாக்களுடன் நிற்கும் தமிழர்' பாதை - இதை உள்ளூரில் பாவிப்பர். இதை பாலப்படகு என்றும் கூறுவர். திருமலையில் மக்கள் நவீன கால பாதையினைப் பாவிக்கின்றனர், 1925ம் ஆண்டுகால படிமம் ஆஞ்செல்கை/ சங்கடம்/ சங்குவடம்/ இரட்டைத்தோணி: லெப். கொம. சோமசிறி தேவேந்திராவின் கருத்துப்படி இக்கலமானது தமிழர்களாலும் சிங்களவர்களாலும் பாவிக்கப்பட்டது. படத்தில் இருப்பவர்கள் சிங்களவர் | படம் வெறும் குறிப்பிடலுக்கு மட்டுமே உக்கடம் -முன் பக்கத்தில் அமர்ந்து செலுத்தும் ஒடம். 1–3 பேர் அளவில் செலவாகக் கூடிய ஓடம். ஆறு குளம் முதலியவற்றில் ஓடக் கூடியது. பஃறி - உள்ளூர் சுமை காவி பஃறியர் - இக்கலத்தில் பயணிப்போர் இவ்வாறு அழைக்கப்பட்டனர் உன்னம் - சிறியளவில் சரக்குக் காவப் பயன்பட்டது. சம்பான், சம்மான், பாறு : இது கால்வாய்களில் பயணிக்க உதவும். குறிப்பாக எமது நாட்டில். இதை ஓட்டுபவரை சம்மானோட்டி> சம்மாட்டி எனப்படுவார் சம்பான் - சீன மொழியிலிருந்து கடன்வாங்கிய சொற்கள் 'வெள்ளவத்தையில் (1890) எடுக்கப்பட்ட படிமம். நிற்பவர்கள் தமிழர்களே' செட்டி, ஓங்கல் = பெருமளவவு மூங்கில்கள் ஒன்றாக சேர்த்திக் கட்டப்பட்டு கொண்டு ஆறு ஏரி போன்றவற்றைக் கடக்கப்பயன்படும் கடற்கலம். இதில் சில நேரங்களில் பாய் இருக்கும். சில நேரங்களில் இருக்காது. இருப்பு அதன் இடத்தைப் பொறுத்து அமையும் . கட்டுமரம், நாட்டுமரம், மரப்புணை, கட்டுப்புணை: 3–5 மரங்களைச் சேர்த்து கட்டி செய்யும் கடற்கலங்களுக்கான பொதுச்சொற்கள். (length 7–10 m) நீர்ம்புணை - இலகு மிதவைகள் மேலாமரம் - ஏதோ ஒரு வகையான கட்டுமரம் தைலேமரம் - ஏதோ ஒரு வகையான கட்டுமரம் ஒத்தனாமரம் - ஒருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கட்டுமரம் இருமரம்: சின்ன மரம் - 1–2 பேர் மீன் பிடிக்க செல்லும் மரம். இது 3 மரம் கொண்ட கட்டுமரமாகும். இதில் தூறிவலை கொண்டு செல்லப்பட்டது. நீளம் - 21 அடி அகலம் - 2 அடி 4 அங்குலம் பெருமரம்- 2–3 பேர் கடலுக்கு செல்லும் கட்டுமரமாகும். இதில் தூறி, எடு மற்றும் பைந்தே ஆகிய வலைகள் கொண்டு செல்லப்பட்டன. இது 4 மரம் கொண்ட கட்டுமரமாகும். நீளம் - 25½ அடி அகலம் - 3½ அடி நாலுகண்டமரம் இருக்காமரம்- இது 5 மரங்கள் கொண்ட கட்டுமரமாகும். ஒவ்வொரு மரத்தின் அளவும் வேறுபடும்.. ஆனால் அதன் ஆப்பக்க மரத்தோடு ஈப்பக்க மரம் ஒத்திருக்கும். நடு மரம் மட்டும் நெடுத்திருக்கும். தூண்டில்மரம் (hook -catamaran) - இதுவும் 5 மரங்களைக் கொண்டதே... ஆனால் இருக்கா போன்று பக்க வாட்டு மரங்களின் நீளத்தில் பெரிய வேறுபாடில்லை கோலம், கோலமரம் : (flying-fish catamaran). சூலை மட்டும் ஓகசுட்டில் மட்டுமே இக்கட்டுமரம் நீர்நிலைகளைல் நடமாடும். இது ஏழு மரம் கொண்ட கட்டுமரம் ஆகும். இரண்டு சிறிய பாய்கள் இதில் கட்டப்பட்டிருக்கும். இதில் 5–7 பேர் வரை பயணமாகலாம். 50 மைல் தொலைவு வரை இதில் பயணமாகலாம். LOA: 33 feet beam at forward lashing: 4 feet beam at aft lashing: 7 feet forward yard: 29 feet after yard: 21 1/2 feet steering oar: 12 feet forward leeboard: 10 1/2 feet after leeboard: 9 feet draft (boards up): 1 foot கட்டுத்தோணி: மடி - இரட்டைக் கட்டுமரம் நீள்மரம், மேங்கா- இது 7 அ 9 அளவில் பெரிய மரங்களை கொண்டு கட்டும் கடற்கலம். இது மேற்கண்ட கட்டுமரத்தைவிட நீளமானது. (length = 11- 13 m) திருநெல்வேலி & கன்னியாகுமரிக் கட்டுமரம்: கைதுமரம்: சிறியது (படம் கிடைக்கவில்லை) அகலம்: - 9- 10 inch நீளம்: 20 feet கோக்காமரம்/ கோடாமரம்: பெரியது அகலம்: - 9- 10 inch நீளம்: 23 feet கன்னியாகுமரி மாவட்டம் இடிந்தகரையில் எடுத்த படம். தேப்பை, பேடா, பேடம்- நாணல் போன்ற புற்களைக் கட்டி செய்தது உடுப்பம்/உடுவை - ஆறுகளில் பாவிக்கப்படும் உடுவலை தாங்கிச் செல்லும் தெப்பம் தவணை / கட்டுப்பானை: raft or float for crossing rivers, especially one made of earthen pots and bamboos. தெப்பம், அடித்தளப்படல், தப்பல், தெப்பை Modern: பரிசல்/ பரிசில்/ கோல்வள்ளம் / வட்டிகை/ கைப்பரிசு/ வல்லம் சட்டி/ சட்டித்தோணி - Coracle- வட்டவடிவ ஆற்றுக் கலம். மிதவை, மிதடி -நீந்துவோர் இடும் மிதவை. அக்கால மிதவைகள் பெரும்பாலும் தென்னக் கோம்பைகள் , மூங்கில்கள் ,முள்முருங்கை மரத் தண்டுகள், ஒதி மரத் தண்டுகள்! அடுத்து கேரளப் பக்க கடற்கலங்களைக் காண்போம். கேரளா பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதி என்பதால் தமிழர்களின் நீட்சியைக் காட்டிட இதனை இங்கு பாவிக்கிறேன். எனினும் மலையாளிகளின் தனித்துவம் எங்கினும் குறைத்து மதிப்பிடவில்லை. புறவஞ்சி, வஞ்சிவீடு - கடற்கல வீடு இவை பொதுவாக கெட்டுவள்ளம் என்று குறிப்பிடப்படுகின்றன. படம்: கேரளாவில் எடுத்தது சுண்டன் வள்ளம்/ கொதும்பு வள்ளம்/ கொம்பன்வள்ளம் - இவை பண்டைய காலத்தில் கடற்சமர்களின் பாவிக்கப்பட்டன. எனினும் தற்போது களிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வள்ளக் களி - வள்ளப் போட்டி ஊடேறு படகு - படகுதாவு போட்டியில் ஒரேநாளில் முன் இறுதிநிலையும் பின் முதல்நிலையும் கண்ட படகு. பள்ளியோடம் - ஆறன்முளா பார்த்தசாரதி கோயிலால கட்டப்பட்டு பாவிக்கப்படும் வள்ளம் படம்: கேரளாவில் எடுத்தது வெப்பு வள்ளம்/ கோவள்ளம் - இவை சமர்களின் போது சுண்டன் வள்ளங்களில் செல்லும் படைவீரர்களிற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் உதவி வள்ளங்களாகும். எனினும் தற்போது களிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படம்: கேரளாவில் எடுத்தது படம்: கேரளாவில் எடுத்தது திருவோணதோணி - இவை கோவில்சார் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவன ஆகும். படம்: கேரளாவில் எடுத்தது சுண்டன் வள்ளத்தின் கடையாருடன் திருவோணதோணி ஒன்று சுருளன் வள்ளம் - இவை முற்காலத்தில் அரசர்களால் பாவிக்கப்பட்டவையாகும். எனினும் தற்போது களிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படம்: கேரளாவில் எடுத்தது ஓடி வள்ளம்/ வடக்கனோடி/ இருட்டுக்குத்தி - இவை முற்காலத்தில் கடற்கொள்ளையரை விரட்ட பாவிக்கப்பட்டன. இவை ஓசையின்றி மிக வேகமாக நகரும் வலுவுள்ளனவாம். எனினும் தற்போது களிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படம்: கேரளாவில் எடுத்தது தெக்கனோடி - சுருளன் போன்ற அணியமும் சுண்டன் போன்ற கடையாரும் கொண்டவை. படம்: கேரளாவில் எடுத்தது கடத்து - ஆட்களை கொண்டு செல்லும் வள்ளங்களுக்கான பொதுச்சொல் கடத்து வள்ளம் பெரிய வள்ளங்கள் அனைத்தும் பொதுவாக வலிய வள்ளம் என்றும் அழைக்கப்படும். அடுபுணை/ தோண வள்ளம் (tona vallam) - கடக்கு கடற்கலம். படம்: கேரளாவில் எடுத்தது கேவு வள்ளம் இந்த மூடிக்கட்டியது போன்ற அமைப்பு இல்லையென்றால் அதன் பெயர் சரக்கு வள்ளம். கட்டுவள்ளம்/ காயல்வள்ளம் மீன் பிடிக்க & காயல் மண் கொண்டுவரப் பயன்படும் வள்ளம். (length - 8 m –12 m) . படம்: கேரளாவில் எடுத்தது குறுவள்ளம் - ஒருவர் அல்லது இருவர் செலவாகும் வள்ளம். படம்: கேரளாவில் எடுத்தது கொச்சு வள்ளம்/ சிறுவள்ளம் - மேற்கண்டதிலும் சிறிய வள்ளம் கரைமாடி வள்ளம் / கம்பவலை வள்ளம் இவை கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலை என்ற இடத்தில் பாவிக்கப்படுகின்றன. தோற்றத்திற்கு வலிய வள்ளம் போன்றவையே. இவற்றையும் துடுப்புக் கொண்டு இயக்குவதுண்டு. இவை கரையிலிருந்து படகின் புறமாலை/அமரம்/ கடையாரில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் (கம்பம்) தொலைவு வரை செல்வதாலும் இவை கம்பவலை என்பதைப் பாவிப்பதாலும் இப்பெயர் பெற்றது. தரை வஞ்சி/ தரை மஞ்சி/ சாவம் மண் ஏற்றிப்பறிக்கப் பாவிக்கும் வள்ளம். செம்பொக் தோணி என்றும் இதை அழைப்பர் முறி வள்ளம் இது இயெமஃகா இயந்திரம் பூட்டி ஓடுவது. அதனால் இதனை எமகா வள்ளம் என்றும் மலையாளிகள் அழைப்பர். இது கெட்டப்பட்ட (stiched) வகையைச் சேர்ந்ததால் இதனை கெட்டு வள்ளம் என்றும் பொதுவாக விளிப்பர். இதன் கடையார் வெட்டப்பட்டுள்ளதால் இதனை கட்டு (cut) வள்ளம் என்று கூட விளிப்பதுண்டு. ஒத்தைக்கோரி வள்ளம் இவை ஆலப்புழாவில் பாவிக்கப்படுவன. கொல்லிவள்ளம் இவை ஆலப்புழாவில் பாவிக்கப்படுவ்கிறது. ஒழுக்கன் வள்ளம் - தூண்டில் கொண்டு மீன்பிடிக்கப் பாவிக்கப்படும் வள்ளம் சீனி வள்ளம் - சீனி மரத்திலிருந்து செய்யப்பட்ட வள்ளம் பட்டி, பட்டிகை, பட்டியாதனம் கேரள காசர்கோடுப் பகுதியில் பாவிக்கப்படும் மீன்பிடிக் கலம். Canoe- ஓடம், அம்படலம் ஓடம் - வடகேரளத்தில் பாவிக்கப்படும் ஓடங்களுக்கான சொல் வஞ்சி - நடு மற்றும் தென் கேரளத்தில் ஓடங்களைக் குறிக்க பாவிக்கும் சொல். ஒற்றைத்தடி வள்ளம் - இது பெரும்பாலும் ஆலப்புழாவில் பாவிக்கடுகிறது. இது இரு வகைப்படும், நீளத்தால்: செறிய ஒற்றத்தடிவள்ளம் வலிய ஒற்றைத்தடி வள்ளம் வஞ்சி- தற்போதைய சேர நாட்டில் உள்ள ஒருவகை கடற்கலம் கொச்சுவஞ்சி/ செறுவஞ்சி - வஞ்சியை விட சிறியது வெப்புத்தோணி - தூண்டில், வரி மீன்பிடித்தல் மற்றும் செவுள் வலைகளை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. வீச்சுதோணி/ வீச்சுவலை வள்ளம் - வீச்சுவலை எடுத்துச் செல்லப் பயன்படுவது தோணி - இவை கடலில் மீன்பிடிக்க பாவிக்கப்படுகிறது. இது இரு வகைப்படும், நீளத்தால்: கொச்சுதோணி/செறுதோணி & வலியதோணி சம்பகம், சம்பதோணி: மலப்புறம் மாவட்டத்தின் தனூர், குட்டாயி, பரப்பனங்காடி ஆகிய கரைகளில் பாவிக்கப்படும் தோணி. தட்டுமரம், பொன்னுத்தடி, தடி, நாலுகண்டமரம், பொன்னி, ஓடு, பிளிப்பு, ஓவு, வரு, வார், அகத்தேப்பாரு, ஆது- கேரளாவில் கட்டுமரத்தை குறிக்கப் பயன்படும் சொற்கள் சலதடி - சலை என்ற மீன்பிடிக்கப் பாவிக்கப்படும் தடி (கட்டுமரம்) பெரிய கடற்கலங்கள் அருமஸ் - பெரிய கடற்கலம் அணையோடி - பெரிய கடற்கலம் கப்பல் - ஆழிகளைக் கடக்க பாவிக்கப்பட்ட பெரிய கடற்கலம் கேவு கப்பல் - சரக்கு கடற்கலம் கேவு தோணி - பயணிகள் கடற்கலம் கோட்டி கப்பல் - நீளமான கப்பல் கோட்டியன் - இலங்கைக்கு ஓடிய கப்பல் சரக்குமேனி - சரக்கு கப்பல் சிவாடா - சிறிய கப்பல் தாரிணி/ தோணி/ நௌரி - கண்ணூரில் ஓடிய சிறிய கப்பல் பருவ, பரு - பத்தேமாரியின் மறு பெயர் பல்கெட்டு - பெரிய கப்பல் மஞ்சி - கரையோர வணிகத்திற்கு பாவித்த கடற்கலம் போதம் - காற்றின் துணையோடு ஆழிகளைக் கடக்க பாவிக்கப்பட்ட பெரிய கடற்கலம் மரக்கலம் - ஆட்களை கொண்டு செல்லும் கடற்கலங்களுக்கான பொதுச்சொல் வளர் - வளபட்டண மக்கள் பாவித்த கடற்கலம் கள்ளக்கப்பல் - கடற்கொள்ளையரின் கப்பல் சோணாடன் - சோழர்களின் கடற்கலம் கப்பல் மஞ்சி - கப்பலிலுள்ள மஞ்சி அவிகப்பல், கொத்தம், கூபகம், கொம்பன் மஞ்சி, ஒத்தை மஞ்சி, படுவா, ஓலமாரி, ஒன்னல், ஒட்டலகம், ஒத்துலகம் - என்னவென்று தெரியவில்லை படி, படிக்கை - கர்நாடக்காவின் மங்களூர் பரப்பில் பாவிக்கப்படும் ஒருவகையான பட்டி இவை பஞ்சு ஏற்றிப் பறிக்க பாவிக்கப்பட்டன. உசாத்துணை: செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி :: TVU :: அபிதான சிந்தாமணி Vallam Kali - Wikipedi Old Heritage - Traditional Boats in Bengal & their names | IBG News நாகபட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை - புத்தகம் (pg 60–110) https://en.vikaspedia.in/viewcontent/agriculture/fisheries/marine-fisheries/capture-fisheries/fishing-boats-in-india Kadakkarapally Boat - wedigboats Uru (boat) - Wikipedia Indigenous Boats The History shipbuilding in the sub-continent , By Prof R C Majumdar, Pages, 521-523, 604-616 A History of South-east Asia - Page 55 by Daniel George Edward சூடாமணி சூத்திரம் தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா INVENTORY OF KATTUMARAMS - Bay of Bengal Memoirs of the Asiatic Society of Bengal volume- VII - pg 140:250, 1918-1923 Record of Traditional Watercraft from South and west Sri Lanka , p.125a, p.116 University of Southampton Research Repository Naval Warfare in ancient India, By Prithwis Chandra Chakravarti, Vol.4, No.4 1930.12, pp.658 Indian Ocean World Centre | East Africa and Early Trans-Indian Ocean World Interchange | Waruno Mahdi, Berlin Different Styles and Designs of Kerala Vessels: Dr.Greeshmalatha, A.P Associate Professor, S.N. College, Chempazhanthy, Thiruvananthapuram Remains of riverine craft: source material for ecological and community studies, Somasiri Devendra, Maritime History Trust (Sri Lanka), 194/3 Quarry Road, Dehiwela, Colombo, Sri Lanka, 1993 The ORU & the YĀTRĀ by Vini Vithārana Tradional Indian ship building : memories, history, technology by Rajamanickam, G. Victor Water transport: origins and early evolution by Hornell, James, 1865-1949 படிமப்புரவு- செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி விக்கிப்பீடியா Lyrical Delights கூகிள் pixers.uk quicknewstamil.com What's Up? Media MuslimVillage.com - Islam | News | Muslim Lifestyle | Muslim Forums | Islamic Events... Katerina Wood 123RF.com https://www.heritagevembaru.in/2017/11/blog-post.html தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள் - தமிழ் விக்கிப்பீடியா Dinakaran Picfair Alamy Divaina TrekEarth Flickr নৌকোঘর "Noukoghar" abode of Bengal Boat H/Bataatha North Primary School Vernacular Nautical Architecture in transition | AmazingLanka.com Kamat Potpourri vikaspedia.in Homepage | Your Article Library AWL Images Deccan Chronicle https://en.wikisource.org/wiki/Page:The_Periplus_of_the_Erythræan_Sea.djvu/256 Indigenous Boats Old Indian Photos Shade Fishing from Catamarans in India (com imagens) | Coisas para fazer A Photography Blog - Inspirations, Tutorials, Tips, Interviews and Showcases MS TECH EXAM Twitter. It's what's happening. Mathrubhumi Palliyodams and Chundan Vallams Journey Via kerala - WordPress.com http://pinintrest.com Medium http://aayvagam.journal.thamizhagam.net/issues/2013/Sep%202013/2%20Article%20Sep%202013.pdf குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
-
Special Border Force during unceasing waves 3 ltte battle.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
sfew.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Border Force during unceasing waves 3 ltte battle.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
afwas.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
afas.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
07-11-07-2595.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
unceasing waves 3 2000 The guardian ltte.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
French 'Le Monde' about unceasing waves 3 Elephantpass victory - 12-5-2000.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
veerakesari.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
thinakaran TN.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Island.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
0001.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்