Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. இந்தியப் படையினரை வெளியேற்ற தன்னை உருக்கிய "தியாக தீபம்" அன்னை பூபதி அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளான ஏப்ரல் 19ம் திகதி "தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்" ஆகக் கொண்டாடப்படுகிறது. அற்றைநாளில் பொதறிவுப் போட்டிகள் தமிழீழம் எங்கு நடைபெறும்.
  2. கொக்காவில் படைத்தளம் தகர்க்கப்பட்ட பின்னர் நிகழ்படத்திற்கு பொதிக்கிறார்
  3. மத்தியானத்திற்கு ஆட்டிறைச்சி ------------------------------------ இராவைக்கு பண்டி இறைச்சி அதுவும் காட்டுப்பண்டி!
  4. போராளிகளுக்குத் திட்டத்தை விளக்கும் பிரிகேடியர் தீபன் 1991/1992/1993
  5. வித்துடல் விதைப்பு மேலுள்ள ஆவணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி: "பின்னர், வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது புனித விதைகுழியின் மேல் இரு தண்டுகள் போடப்பட்டு அதன் மேல் வைக்கப்படும். அடுத்து சந்தனப் பேழையின் மேல் போர்த்தப்பட்டுள்ள தமிழீழத் தேசியக் கொடி அதிலிருந்து எடுக்கப்படும். "பிறகு கயிறுகள் மூலம் புனித விதைகுழியினுள் இறக்கப்படும், அவரை நன்கறிந்த போராளிகளால். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் துயிலுமில்ல ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர். லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகளில் ஒன்று புனித விதைகுழிக்கு மேல் வைக்கப்படுகிறது. சம நேரத்தில் ஒரு போராளி சந்தனப் பேழையின் மேல் போர்த்தியுள்ள கொடியை எடுக்கிறார். படிமப்புரவு: Associated Press லெப். கேணல் தவாவுடன் வீரச்சாவடைந்த மேஜர் புகழ்மாறனின் வித்துடல் புனித விதைகுழியினுள் கயிறுகள் மூலம் இறக்கப்பட்டு விதைக்கப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு. பெரும்பாலான இடங்களில் புனித விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர். படிமப்புரவு: த.வி.பு. போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். படிமப்புரவு: த.வி.பு. பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு. படிமப்புரவு: த.வி.பு. "விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் தூவிவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு. "ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர். "மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் தூவிச் செல்வர். "
  6. பசீர்/காக்கா & அவரின் மகளும் (26.04.2009)
  7. மாவீரர் துயிலுமில்லங்களின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பலகை
  8. தமிழீழக் கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் எ பேபி சுப்பிரமணியம். ஆனால் இவரைப்போய் தலைவரோடு இருந்த நிழல் என்று கதை கட்டினார்கள் பார்த்தீர்களா?... அட டேய்🤣 அன்னார் தன் ஆசைமகள் அறிவுமதியுடன்...
  9. தமிழீழத் தேசிய எழுச்சி சின்னம் "வாழ்கின்ற காலம்வரை வாழ்த்துங்கள் வீரர்களை பிறர்கென உயிர்க்கொடை கொடுப்பது தெய்வீகம்!" 2002< வன்னியில்
  10. 27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் சிரட்டை வைத்து ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம் துயிலுமில்லத்திற்கு வரேலாத ஆக்கள் இவ்வாறு செய்வதுண்டு.
  11. பரிவுடன் உசாவும் போராளியும் உவகையுடன் நுனிக்கும் சிறுமியும்
  12. கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் "நினைவுச்சுடர்" "காற்றோடு காற்றாகக் கரைந்து போனவர்கள், கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள், அன்னையைவிட அதிகம் அணைத்தது, உன்னைத் தானே! கடலலையே! கடலையே! உரிமையோடு உன்னைக் கேட்கின்றோம் - நீ கரையைத் தொடும் போது எம் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு, 'விடுதலையை வென்றெடுங்கள், விடுதலையை வென்றெடுங்கள். அப்பொழுது அவர்கள் வருவார்கள்.' " --> மேஜர் பாரதி, தவிபு மகளிர் பிரிவின் அரசியல்துறை துணை பொறுப்பாளர் இப்பண்பாடானது லெப் கேணல் மறவன் மாஸ்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களால் 2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தமிழீழம் சிறீலங்காப் படைகளால் வன்வளைக்கப்படும்வரை தொடரப்பட்டது. (Oct 31, 2003 வரை வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)
  13. ஏதோ ஒரு சமர்க்களத்தின் முடிவாய் அள்ளப்பட்டவை 1996<
  14. நினைவுச்சுடர் வேறொரு மா.து. கல்லறை அமைக்கப்பட்டு அதற்கான நினைவுக்கல் வேறொரு மா.து. நாட்டப்பட்டு இரண்டிற்கும் உறவினர்களால் செல்லமுடியாது இருப்பின், பல்வேறு காரணங்களால், "நினைவுச்சுடர்" என்ற ஒன்று உறவினர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். உரியவர்கள் ஒவ்வொரு தேசிய நாளிலும் வந்து அங்கு விளக்கெரித்துவிட்டுச் செல்வர். எனது குடும்பத்தினருக்கான கல்லறை தென்மராட்சியில் இருந்ததால் நாங்கள் கிளிநொச்சி கனகபுரத்தில் இருந்த நினைவுச்சுடரிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று விளக்கெரிப்போம். அது ஒரு தீப்பந்தம் வடிவில் இருந்தது, கீழுள்ளது போன்று. இதற்கும் சில பேரால் செல்லமுடியாது இருக்கும். அவ்வாறு உரியவர்கள் வராமல் இருப்பவைக்கு போராளிகள் ஆளிட்டு விளக்கேற்றுவர். ஒவ்வொரு தடவையும் மாவீரர் நாளன்று து. செல்லும் போது அம்மா, கூடுதலான பூக்களும் சாம்பிராணிக் குச்சியும் கொண்டு வருவார். எமது பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவையை ஓடியோடி ஒவ்வொரு நினைவுதீபங்களின் அடியிலும் குத்தி எரித்துவிட்டு பூக்களையும் சாற்றிவிட்டு எங்களின் நினைவுச்சுடரிற்குத் திரும்புவேன். இன்றும் இது பசுமையான நினைவாக நெஞ்சில் நிலைத்துள்ளது.
  15. வெள்ளை நிறம், முன்னால் இருப்பவதான் குகா அன்ரி... கபில நிற பிளௌவுசும், கறுப்பு சேலையும் அணிந்திருக்கின்றவர். இறுதிப் போரின் போது சிறிலங்கா தரைப்படையின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார். இவரை கடசியாக தென் என்பவர் 13/05/2009 அன்று மாலை சந்தித்தார். (எதையோ தேடிச் செல்லும்போதுதான் இது கிடைத்தது... நல்ல அன்ரி) குகா மாமி:- வான்புலிகளின் இறுவெட்டு வெளியீட்டின்போது... இது கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் எடுத்த நிழற்படம்: தனது கணவரான பேரரையர்(கேணல்) சங்கர் அவர்களின் மாவீரர் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார்:-
  16. கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முழுத் திரைப்பிடிப்புப் படிமம் 2008 இறுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் "விடுதலை வயல்கள்" என்றும் சுட்டப்பட்டன, போரிலக்கியப்பாடலூடாக. படம் எடுக்கப்படும் போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "பெற்றவரை மறந்து, ஒவ்வொரு பொழுதிலும் எம்மை நினைத்து, சாவினில் வாழ்வளித்து, சாகும் போதிலும் எம்மை நினைத்து, வேரோடு பகை வீழ்த்த வீச்சோடு களமாடி வேதனை தீர்த்தவரே! மண்ணுக்குள் விதையாகி மடிப்பூக்கள் எனவாகி விண்ணுக்குள் சென்றவரே! கல்லறை மீது துயில்பவரே!" முழுப் படிமம்: ஒலிமுகமும் சூழலும்:- முதன்மைச் சுடர்ப் பீடமும் சூழலும்:
  17. மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்பு "மாவீரர் பெற்றோரே! மனம் சோர வேண்டாமே! தானாக விடிந்திடும் ஈழம்!" மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழையும் போது மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்படும் காட்சி. இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்காகும். இவர்களை வீதியில் மாவீரர் துயிலுமில்லம் தொடங்கும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லத்தின் முற்றம் வரை அணியிசைக் கலைஞர்கள் அழைத்து வருவர். அணியிசைக் கலைஞர்கள் முன் வர அவர்கட்குப் பின்னார் ஒரு கிடைவரிசையில் போராளிகள் (பெரும்பாலும்) அல்லது மாணாக்கர் கைகளைக் கோர்த்தபடி நடந்து வருவர். அவர்கட்குப் பின்னால் மாவீரர் பெற்றார் வருவர். இவ்வாறு இவர்கள் நுழையும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் நின்றிருப்பர். இவ் அணியிசைக் கலைஞர்களாக, நானறிந்த வரை, பாடசாலை மாணவர்களே கடமையாற்றினர். பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்லும் அணியிசை வகுப்புகள்: அணியிசை வகுப்பிற்குப் பின்னால் செல்லும் மாவீரர் பெற்றார்/உறவினர் (பெற்றார் வரமுடியா இடத்தில்): நவம்பர் 27 என்றாலே மழை தான். இரு மருங்கிலும் நின்று இவர்களைக் காணும் பொதுமக்கள்:
  18. ஈகைச்சுடர்கள் மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும் "கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் - உங்கள் கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்" கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
  19. முதன்மைச் சுடர்ப் பீடம் இங்குதான் பொதுச்சுடர் ஏற்றப்படும் "ஒளி தீபம்தான் தேசம் போலத் தோணுதே! தனித் தேசம் காணப் போரிடு என்றே கூறுதே!" 'முதன்மைச் சுடர் கொளுந்துவிட்டு எரிவதைக் காண்க' கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தின் முதன்மைச் சுடர்ப் பீடம் '???' கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றும் முதன்மைச் சுடர்ப் பீடம்:-
  20. மாலதி படையணியின் உந்துகணை செலுத்திப் பிரிவுப் போராளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.