Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழத்தில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்களினுள் இருந்த கல்லறைகளின் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்கள் பற்றியே. இந்த துயிலுமில்லங்கள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருந்தன என்று முதலில் பார்ப்போம். 'தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இருந்த இருப்பிடங்களை காட்டும் படம் | படிமப்புரவு: fb' மாவட்டந்தோறும் அமையப்பெற்றிருக்கும் மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:- முல்லைத்தீவு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி - (முதன் முதலில் மாவீரர்களின் நினெவெழுச்சிகள் நடைபெற்று தலைவர் முதன்மைச் சுடரை ஏற்றி அக வணக்கம் செலுத்திய இடம்) அம்பாறை மாவட்டம் உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம். மட்டக்களப்பு மாவட்டம் தரவை மாவீரர் துயிலுமில்லம். தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம். கண்டலடி மாவீரர் துயிலுமில்லம். மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம். திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம். தியாகவனம் மாவீரர் துயிலுமில்லம். வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம். உப்பாறு மாவீரர் துயிலுமில்லம். மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம். முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம். வவுனியா மாவட்டம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம். கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம். முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம். யாழ்ப்பாண மாவட்டம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் (தமிழீழத் தேசத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம்) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் மணலாறு ஜீவன்முகாம் எ உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் மணலாறு டடிமுகாம் எ புனிதபூமி எ கோடாலிக்கல் மாவீரர் துயிலுமில்லம் இந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனை பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப்படுவதுண்டு; இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் 'முகையவிழ்த்தல்' என்று குறிப்பிடுவார்கள். நானும் அதையேதான் இவ்வாவணத்திலும் கையாண்டுள்ளேன். இவ்வொவ்வொரு கல்லறைகளினதும் குறிப்புகள் தாங்கிய அந்த அதன்(விதப்பான பெயர் தெரியவில்லை.. கட்டடக் கலையில் அவ்வளவு அறிவில்லை) பின்பக்கத்தின் மேற்புறத்தில் எண்கள் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டிருக்கும் . இது அந்தத்தக் கல்லறைகளின் எண்ணாகும். இதை வைத்து கல்லறைகளை இலகுவாக அடையாளம் காண முடியும். அடுத்து, கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் வடிவங்களைப் பற்றி பார்க்கப்போவதோடு தென் தமிழீழ மாவீரர் துயிலுமில்ல வாயில்களையும் தோற்றங்களையும் உங்களிற்கு காட்டுகிறேன். வாருங்கள் தகவலிற்குள் தாவுவோம்…. 1983 - 20 பெப்ரவரி 2009 வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = அண்ணளவாக 24,000 (தவிபு அலுவல்சார் எண்ணிக்கை) 1982 - 2009 மே 18 நள்ளிரவு வரையிலான மாவீரர்கள் எண்ணிக்கை = 25,500 - 26,500 தன்னிலாபத்திற்காக மாவீரர்கள் எண்ணிக்கை 50,000+ என்று கூவித்திரிவோரை நம்பவேண்டாம். சிங்களத்தின் இறுதிப் போர் பற்றிய ஒருதலைப் பக்கமான அறிக்கையிலும் 27,000+ என்றுதான் உள்ளதை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்(Humanitarian operation analysis) 1) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்தவிடம்: இது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது. முகையவிழ்த்தது: ஏப்ரல் 7, 1991 முதல் வித்து: வீரவேங்கை மைக்கேல் 1995 ஆம் ஆண்டு சிங்களத்தால் அழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்:- 2002 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 2) எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: 1990 இடிக்கப்பட்டது: 1995 புனரமைக்கப்பட்டது: 2002 முதல் வித்தும் விதைக்கப்பட்டதும்: லெப். செல்வம் சூன் 16, 1991 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 290 நினைவுக்கற்கள் - 490 தியாகசீலம் - 24 'அதன் சுற்றுச்சுவர்' 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 3) கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இங்குதான் முதன் முதலில் மாவீரர் ஒருவர் விதைக்கப்பட்டார். இருந்தவிடம்: இராசவீதி, கோப்பாய் முகையவிழ்த்தது: சூலை 14, 1991 முதல் வித்து: கப்டன் சோலை மொத்த பரப்பளவு: 12 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 654 நினைவுக்கற்கள் - 1199 2002 இலிருந்து இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம்: 1991 இலிருந்து 1996 இடித்தழிக்கப்படும் வரை இருந்த ஒலிமுகம், கல்லறைகள் & நினைவுக்கற்கள்: 4) முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 28, 1991 முதல் வித்து: 2ஆம் லெப். சிகானு (ஆ.க.வெ இல்) மொத்த பரப்பளவு: 15 ஏக்கர் இருந்தவிடம்: கிளிநொச்சியில் இருந்து 51 கி.மீ இலும் மன்னாரில் இருந்து 70கி.மீ தொலைவிலும் உள்ளது. 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 603 நினைவுக்கற்கள் - 348 'பின்னால் மங்கலாக ஒலிமுகமும் தெரிகிறது' 5)ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சூலை 18, 1998 முதல் வித்து: வீர. புரட்சிகா மொத்த பரப்பளவு: 10 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 533 நினைவுக்கற்கள் - 126 'ஆலங்குளத்தில் பொதுச்சுடர் ஏற்றுமிடம்' 'ஆலங்குளம் ஒலிமுகம்' 6)கண்டலடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: லெப். பரமசிவம் இருந்தவிடம்: மட்டு-திருமலை வீதியில் வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடையில் 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 279 'ஒலிமுகம்' 7)தரவை மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: பெப்ரவரி 25, 1991 முதல் வித்து: லெப். விகடன் (கண்டலடி-கட்டுமுறிவு நோக்கிய சிங்களத்தின் முன்னேற்றத்திற்கு எதிரான எறிகணை வீச்சில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். அவர்களில் முன்னவர் இவரே.) 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 2500+ 'தரவையில் பொதுச்சுடர் ஏற்றுமிடம் | 180 பாகைக் காட்சி' 'தரவை ஒலிமுகமும் உள்வீதியும் ' 8)மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லம் 9)தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: (நிலை அறியில்லை) சுதா 2002 வரையிலான மொத்த மாவீரர் பீடங்கள்: 487 கல்லறைகள் கட்டும் முன்:- கல்லறைகள் கட்டிய பின்:- 'ஒலிமுகம்' 10)ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முகையவிழ்த்தது: சனவரி 19, 1991 முதல் வித்து: லெப். நிக்ஸன் & லெப். லவன் மொத்த பரப்பளவு: 5 ஏக்கர் 2002 வரையிலான மொத்த கல்லறைகள் - 391 நினைவுக்கற்கள் - 385 ஒலிமுகம்: 11)வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் முதல் வித்து: வீர. வாசுகி 12)மன்னார் ஆட்காட்டிவெளி துயிலுமில்லம் 13)மன்னாரில் இருந்த ஏனைய இரு துயிலுமில்லங்களில் ஒன்று எதுவெனத் தெரியவில்லை! 14)கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,213 நினைவுக்கற்கள் - 755 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட நினைவுக்கற்கள் இருந்தன.' 'இங்கு மூ விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' நான் மேலே கொடுத்துள்ள படிமங்களில், இடது பக்கம் இருக்கின்ற கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியனவே வலது பக்கம் இருக்கின்ற இரு கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களாக மேம்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆயினும் இது என்னுடைய கருதுகோளே அன்றி அறுதிப்படுத்தப்பட்டதன்று. ஒலிமுகம் (பழையது): ஒலிமுகம் (புதியது): எப்போது பழையதை இடித்துவிட்டு புதியதை கட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தமிழீழ தேசியப் பதக்கம் பெற்ற ஓவியர் புகழேந்தி அவர்கள் நிற்பதை வைத்து (அவர் வந்து சென்ற காலத்தை வைத்துப் பார்த்தால்) இது 2005இற்குப் பின்னரே இடித்துப் புதுப்பிக்கப்பட்டுள்ளதை அறியலாம். 15)முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் 2004 ஆம் ஆண்டில் இது தான் இரண்டாவது மிகப்பெரிய துயிலுமில்லமாகும். 2004 வரையிலான மொத்த கல்லறைகள் - 1,670 நினைவுக்கற்கள் -905 'இங்கு இரு விதத் தோற்றங் கொண்ட கல்லறைகள் இருந்தன.' 'ஒலிமுகம்' 2004 இற்குப் பின்னரான ஒலிமுகம்: 16)அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு மூன்று வித தோற்றங்கொண்ட கல்லறைகள் இருந்தன. அறியில்லா குறிப்பிட்ட ஆண்டு வரை இங்கிருந்த மொத்த, கல்லறைகள் - 74 நினைவுக்கற்கள் - 73 நினைவுக்கல்: 17) உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே! விதம் 1: விதம் 2: 18) புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம் இங்கு நினைவுக்கற்கள் இல்லை. கல்லறைகள் மட்டுமே. அக்கல்லறைகள் இரண்டு விதத்தில் இருந்தன. விதம் 1: விதம் 2: இவ்விதம் தான் முதன்முதலில் கட்டப்பட்டது ஆகும். பொதுச்சுடர் மேடை: 19) தேராவில் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான கல்லறையும் ஒரு விதமான நினைவுக்கல்லுமே இருந்தது. இது விசுவமடுவில் அமைந்திருந்தது. ஒலிமுகம்: "வித்துடல்: லெப். கேணல் அர்ச்சுனனினது ஆகும்" 20) சாட்டி மாவீரர் துயிலுமில்லம் 2002 வரையிலான மொத்தக் கல்லறைகள்: 4 2002 வரையிலான மொத்த நினைவுக்கற்கள்: 150 'சாட்டி ஒலிமுகம்' 'நினைவுக்கற்கள்' 21) உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கிருந்த கல்லறைகளும் நினைவுக்கற்களும் (தனியான படிமம் சேர்த்துள்ளேன்) தரவை மாவீரர் துயிலுமில்லததில் இருந்தவற்றைப் போன்றே இருந்துள்ளன என்பதை கீழக்கண்ட படிமத்தில் புலப்படுபவற்றை வைத்து அடையாளம் காணக்கூடியவாறு உள்ளது. ஒலிமுகம்: 22) ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் அறியில்லா வடிவிலான கல்லறையும் இருந்தது. இதுவரையிலும் கிடைத்த படிமம் கல்லறை கல்லால் கட்டப்படும் முன் எடுக்கப்பட்டதாக உள்ளதால கல்லறையின் வடிவத்தை அறியமுடியவில்லை. இது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கோட்டத்தில் இருந்த ஆலங்குளம் என்ற ஊரில் அமைந்திருந்தது. இதை தலைநகரின் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம் கல்லறைகள்: நினைவுக்கற்கள்: 23)உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம் இங்கு ஒரு விதமான நினைவுக்கல்லும் ஒரு கல்லறையும் இருந்தது. இதனது ஒலிமுக வடிவம் எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தினதைப் போலவே கட்டப்பட்டிருந்தது, ஆனால் மஞ்சள் நிறத்தில் (கனகபுரத்தினதை ஒத்த நிறம்) . கல்லறை & நினைவுக்கல்: ஏனைய 5 துயிலுமில்லங்கள் பற்றி என்னிடம் தகவல் இல்லை. ஆனால் மேற்குறிப்பிட்டவற்றைவிட பல்வேறு வடிவ கல்லறைகளின் படங்கள் இருப்பில் உள்ளன. விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவல்: இறுதிப்போர் காலத்தில் கிளிநொச்சி மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: --> தர்மபுரம் (காலம் அறியில்லை) இறுதிப் போர்க்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டதில் துயிலுமில்லங்களாக விளங்கிய பரப்புகள்: -->தேவிபுரம் 'ஆ' பகுதி குடியேற்ற திட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->இரணப்பாலை பெருந்தோட்டம் (சனவரி 20 பிற்பாடில் இருந்து பெப்ரவரி இறுதி வரை) -->வலைஞர் மடம் தெற்கு களித்தரைப் பகுதி (பெப்ரவரி இறுதியில் இருந்து மார்ச் முதலாவது கிழமை வரை) -->இரட்டைவாய்க்காலையும் வலைஞர் மடத்தையும் பிரிக்கும் கிரவல் வீதிக்கு அண்மையில் உள்ள வெளிப்பகுதி (மார்ச் இரண்டாம் கிழமையில் இருந்து ஏப்ரல் 20 வரை) -->வெள்ளா முள்ளிவாய்க்கால் கப்பல் வீதிக்கு அண்மையில் உள்ள இடம்.(ஏப்ரல் 21- மே 12 வரை) -->மே 13,14,15 அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விதைக்கப்பட்டது. -->மே 16,17,18 விதைக்கப்படவில்லை; விடுபட்டன. இவ்வாறு இறுதிநேரத்தில் விதைக்கப்பட்டவை கீழ்க்கண்டவாறு தோற்றமளித்தன: சனவரி 20 பிற்பாடில் இருந்து மே 12 வரை கல்லறைகள் கட்டப்படாத மாவீரர் பீடத்தின் தோற்றம் உசாத்துணை: 2002ல் மாவீரர் நாள் தொடர்பில் புலிகளால் வெளியிடப்பட்ட ஒரு நிகழ்படம்(video) ஆராச்சிகள் மூலம் தேடியெடுத்து எழுதியவை ஈழநாதம்: 28/11/2004 படிமப்புரவு Vimeo sea tigers 85% screenshots only ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  2. பெண் மாவீரர்
  3. தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்! இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். பிரிவு :- Unit துணைப்பிரிவு - Sub-Unit சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4 சதளம் :- squad /crew = 8–12 பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24 நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55 குவவு - staffel/ echelon = 50- 90 குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250 சமரணி :- battalion /cohort = 300–1000 படையணி :- regiment/ group= 1,000– 3000 படைத்தொகுதி/அதிகம் :- Brigade = 3000 - 5000 படைப்பிரிவு :- division/legion = 6,000– 20,000 திரள் :- corps = 20,000–50,000 களப் படை/ படை :- Field Army/ Army = 100,000–200,000 மூகை/ முனை :- army group /front = 400,000 - 1,000,000 தளம் / விளாகம்/அரங்கம் / அடிபாட்டாளர் கட்டளைப்பீடம் :- region/ theater/ Combatant Command = 1,000,000 - 10,000,000 மேலே உள்ள ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதற்கான விளக்கம். பாமரனிற்கும் புரிய வேண்டும் என்னும் கூட்டத்தினர் இவற்றை வாசிக்க வேண்டாம். :- பிரிவு = Unit சூட்டணி என்றால் சுடும் அணி என்று பொருள். ஒரு சுடும் அணியில் மிகக் குறைவான வீரர்களே இடம்பெற்றிருப்பார்கள். மேலும் இச்சொல் புலிகள் காலத்தில் ஒரு fireteam குறிக்க வழங்கப்பெற்றது. தடூகம் - தட(பெரிய) + ஊகம்(உய்த்துணர்தல், உத்தி, அறிவு, படை வகுப்பு) - பெரிய உத்தியாக அனுப்பப்படக்கூடிய படையின் உட்பிரிவு சதளம் - இச்சொல் squad ஐ குறிக்க மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் உருவாக்கப்பெற்றது. பகுதி - என்னும் இச்சொல்லின் பொருள் அராணுவம் என்பதே. மேலும், பகுதி = part (தற்காலத்தில்) சுற்றுக்காவல் = Patrol (ஈழ வழக்கு) நாரி- platoon என்னும் இச்சொல் வரிசையாகத்தொடுத்த மாலைபோன்று திகழும் படை அணி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குறைந்தது இவ்வளவு வீரர்கள் நிற்பார்கள் என்னும் பொருளில் இங்கு ஒழுங்கமைத்துள்ளேன். படையினன் - Troops எனபதைக் குறிக்க ஏற்கனவே படையினர் என்னும் சொல் ஈழத்தில் வழங்கி வருவதைக் காண்க. குவவு - குவவு என்றால் கூட்டம் என்று பொருள்.. படைப் பொருட் பின்புலம் இச்சொல்லுக்கில்லை குழாம் - society, company, association. சமரணி - சமரில் ஆடும் அணி என்ற மொட்டையான பொருளில் வழங்கியுள்ளேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி தமிழாக்கம் ஆகும். படையணி - சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே புலிகளின் காலத்தில் Regiment-க்கு ஈடாக வழங்கப் பெற்ற சொல். சோழர் காலத்திலும் வழங்கப்பெற்ற சொல். அதையே இங்கும் கொடுத்துள்ளேன். படைத்தொகுதி - இச்சொல்லானது ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஒரு 'Brigade' குறிக்கப் பயன்படுத்தப்படது அதிகம் - ரெஜிமென்ரின் அளவை விட அதிகமான ஆட்கள் இருந்தால், அஃது பிரேகேட் ஆகும் என்பதுவே ரெஜிமென்ற் என்னும் சொல்லின் விளக்கமாகும். எனவே ஒரு படைப்பிரிவில் அதிகமான வீரர்கள் இருந்தால், பண்டைய காலத்தில், அது அதிகம் எனப்படும் என்று அர்தசாஸ்திரம் மூலம் அறிந்து கொண்டேன்(அர்த்தசாச்திரத்தில் இதற்கு வேறு சொல் உண்டு). அதையே இங்கும் வழங்கியுள்ளேன். படைப்பிரிவு- division என்பதன் பொருளும் பகுதியே. மேலும் பிரிவு என்பதன் பொருளும் அராணுவம் என்பதால் இரண்டும் ஒரே சொல்லில் வருவதால் அதை இங்கு சூட்டி விட்டேன். மேலும் இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும். திரள் - Corps என்றால் படையின் உடற்பகுதி(நடுவில் இருக்கும் திரண்ட பகுதி) என்று பெயர். அதே பொருளில் தமிழில் வழங்கும் சொல் திரள் என்பதாகும் . இதன் பொருள் படையின் ஒரு திரண்ட பகுதி . அதையே இங்கும் அதே பொருளில் வழங்கியுள்ளேன். களப்படை/ படை- ஏற்கனவே army என்பதன் பொருள் படை என்றுதான் வழங்கி வருகிறோம். ஆகையால் அதனையே இங்கும் கொடுத்து விட்டேன். மேலும், இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும். மூகை - மூகை என்றால் படைக் கூட்டம்(army group) என்று பொருள். தளம் - இதன் பொருள் ஒரு ஒரு சேனையுட்படும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்பூதங்களிற்கான படைகளையும் துணைப்படை, எல்லைப்படை, அதிரடிப்படை, தற்கொடைப்படை போன்றவற்றையும் குறிப்பது. ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே பல தளங்கள் இருக்கும். இவற்றை Region என்பர் ஆங்கிலத்தில். இவையெல்லாம் இருக்கும் இடத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டே இதனுட்படும். இவை இருக்கும் இடத்தினால் அவ்விடத்திற்கு தளம் என வழங்கி, அதுவே பிற்கலத்திலும், பேந்து தற்காலத்திலும் 'படைத்தளம்' என்னுஞ்சொல்லில் வரும் தளத்தின் பொருளை தாங்கிற்று. முனை - ஈழத்தில் பயன்பாட்டில் இருந்த சொல். எ.கா: வடபோர் முனை.. விளாகம் - போர் நடந்த இடமும் சூழலும் விளாகம் எனப்படும், தமிழில். ஆங்கிலத்தில் theater எனப்படும். அரங்கம் - புலிகள் காலத்தில் வழங்கப் பெற்ற சொல் கடற்படை பிரிவுகள்:- Task elements - பணிக்கடக் கூறுகள் Squadron/ Task unit - கலமணி/சதளம்/ பணிக்கடப் பிரிவு Flotilla/ Task group - கலத்தொகுதி/ பணிக்கடக் குழு Division/ Task group - படைப்பிரிவு/ பணிக்கடக் குழு Strike group/ Taskforce - அடிக்குழு/ பணிக்கடப் படை Battle fleet - சமர் கலக்கூட்டம் Fleet - கலக்கூட்டம் கூடுதல் தகவல்: உசாத்துணை: Military organization - Wikipedia கழகத் தமிழ் அகராதி செ.சொ.பே.மு படிமப்புரவு: கொம்பனி ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.