-
Posts
27353 -
Joined
-
Last visited
-
Days Won
74
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by akootha
-
24.03- கிடைக்கப்பெற்ற 18 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீரவணக்கங்கள் !!!
-
இரண்டாவது விமான நிலையம் திறக்கப்பட்டது தற்போதுள்ள ஆசிய உலக மற்றும் இணைகளை பொருளாதார நிலைமையை வைத்துப்பார்த்தால் ஒரு புத்திசாலித்தனமான முதலீடாக இல்லை என பலரும் கூறுகிறார்கள். ஏற்கனவே வருவாயில் என்பது வீதம் கடன் உள்ள நிலையில் இந்த முதலீடு கடனை குறைக்குமா இல்லை கூட்டுமா என்பது இன்னும் சில வருடங்களில் தெரியவரும். இந்த முதலீடுகள் நூரைச்சோலை போன்று சிங்கள அரசை மேலும் பல நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க தூண்டும்.
-
தமிழ் மாணவர்கள் ஆரம்பித்துள்ள இணையத்தளம்! 2011ம் ஆண்டு எகிப்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேஃஸ் புக் ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் பேஃஸ் புக் ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடையம். அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். டமில்ரைசிங்.காம் (tamilrising.com) (தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும். எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும். http://www.tamilrising.com/
-
21.03- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
-
நங்கள் பள்ளிகரனையை சார்ந்த மாணவர்கள் நங்கள் போராட்டம் நடத்த கூடதென்று காவல் துறை எங்களை முன்கூடியே எங்களை கைது செய்து ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர், எங்களுக்கு ஒரு சட்ட ஆலோசகர் தேவைபடுகிறது தயவு செய்து உதவவும். எங்களுக்கு சட்ட ஆலோசகர் தேவை நண்பா இப்படிக்கு தாமோதரன் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 9940246206 நம்முடைய வாக்காளர் அடையாள அட்டையை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைப்போம், நமக்கு தேவை இல்லை இந்த அரசியல் விளையாட்டு. வாருங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகை இடுவோம். இப்படிக்கு தாமோதரன் 9940246206
-
இலங்கை விவகாரம் - இலவச சிகிச்சை அளித்து டாக்டர்கள் நூதன ஆதரவு http://bit.ly/WGsmzK இலங்கை விவகாரத்தில் இந்தியாவே தகித்துக் கொண்டிருக்கையில், நெய்வேலி ஏரியாவில் உள்ள டாக்டர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி, வித்தியாசமான முறையில் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நெய்வேலி வட்டார அகில இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த டாக்டர்கள் நேற்று ஒருநாள் மட்டும், தங்களிடம் சிகிச்சைக்காக வந்த வெளி நோயாளிகளுக்கு சிகிச்சைக் கட்டணம் வாங்காமல் இலவச சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
-
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று. மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர். கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
-
கண்நீரைதவிர வேறெதை தர? : ஒரு கோடி மாணவர்கள் ஈழத்துக்காய்,அவர்களின் சொந்தங்களின் விடிவுக்காய் திரண்டு தொடர் முழக்கம் எழுப்பி போராடப்போகிறார்கள் என்பதே புல்லரிக்கிறது. எங்களுக்காய் உண்ணாமல்,உறங்காமல் சாக்கடைக் கொசுக்கடியில்,அரசியல் கொசுக்கடியில் அவஸ்தைப்பட்டு வாரம் கடந்தும் போராடும் என் சொந்தங்களை நினைக்க புல்லரிக்கிறது. கண்நீரைதவிர வேறெதை தர? வாழ்த்துக்கள் தம்பிகளே,தங்கைகளே...நீங்கள் நினைத்தது கிடைக்கும்.கிடைக்கும் வரை போராடுவோம். நாங்கள் உங்களோடு. - ராவண் யாழ்ப்பாணம் புலம்பெயர் தேசம் ஒன்றில் இருந்து. இதோ தமிழகத்தில் இருள் போய் பொழுது விடிய ஆரம்பித்து விட்டது . ரத்த சகதியில் செத்து , சொந்தங்களை இழந்த, உரிமைகளை இழந்த , அரச பயங்கரவாதங்களால் ஒடுக்கப்பட்ட , சக தமிழன் வாழ்விலும் இருள் மறைந்து நிச்சயம் விடியும்; அது வரை உலகம் எங்கும் தமிழர் போராட்டம் தொடரும் . தமிழகத்தில் இதோ மாணவர்கள் ஆயத்தத்தில் உள்ளார்கள் . மாணவர்களே உங்கள் நகரத்தில் உங்களுக்கு பக்கத்தில் எங்கு போராட்டம் என்று கேட்டு விசாரித்து கொள்ளுங்கள் . இறுதியாக மாணவர்கள் உங்களை மட்டுமே நம்பி தமிழர்கள் ; உங்களை மட்டுமே நம்பி தமிழர்கள் ;
-
19.03- கிடைக்கப்பெற்ற 55 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள்வீர வணக்கங்கள் !!!
-
Cartoonist Bala எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது. முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது. ஒரு பாலசந்திரனைக் கொன்று இன்று தமிழகம் முழுக்க .. உலகம் முழுக்க பல பாலசந்திரன்களை உருவாக்கி விட்டிருக்கிறார்கள் கொன்ற ராஜபக்சேவும் துணை நின்ற சோனியாவும். அதுவும் வழக்கமான போராட்டம் என்றால் சட்டக்கல்லூரி மாணவர்களும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மட்டுமே வீதிக்கு வந்த நிலை மாறி இன்று தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டக்களத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது பாலசந்திரனின் ஒற்றைப்பார்வை எத்தனை வீரியமிக்கது என்று புரிகிறது. இன்று வீதிக்கு வந்திருக்கும் மாணவர்கள் அத்தனைபேரும் கடந்த நான்காண்டுகளாக ஈழப்படுகொலைக் காட்சிகளை மனதிற்குள் போட்டு புழுங்கித் தவித்திருக்கிறார்கள் என்பதையே இந்த எழுச்சிக்காட்டுகிறது. ஏதோ ஒருவகையில் இப்படியான ஒரு எழுச்சிக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். மாணவர்கள் எழுச்சி ஒன்று படுத்தப்பட வேண்டும்.. வென்றாக வேண்டும் நாம்..
-
18.03- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!