தமிழீழ விடுதலைப்போராளி திலீபன் நினைவு நாள்
விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்க அஞ்சலி
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி திலீபன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26.09.2010) ஞாயிறு காலை 10.30 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி திலீபன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். நிறைவாக தொல்.திருமாவளவன் திலீபன் குறித்த நிறைவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தனிச்செயலாளர் பாவலன், சேகுவேரா, வெளியீட்டு மைய மாநில துணைச் செயலாளர் நீல.தமிழேந்தி உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திலீபன் நினைவு நாளையொட்டி, தென் சென்னை மாவட்ட மருத்துவர் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமையும் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை மாவட்டச் செயலாளர் மருத்துவர் செ.முரளிதரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
http://www.thiruma.in/2010/09/blog-post_26.html#more