Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51967
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. "தமிழரைக்கண்டால் பிடிக்காது" இப்பிடி சொல்லுறவை யார்? காலம் போற கெதியைப்பாத்தியலே, காலம் கெதியாய்ப்போனால் பறுவாய்யில்லை வயசுமல்லே கெதியாய் ஏறுது. இந்த முறை ஐரோப்பாவில வலுகெதியா வெய்யிலும் வந்திட்டுது. காலம் மாறிப்போச்சு போல கிடக்கு. காலம் மாறிப்போனாலும் பறுவாய்யில்லை ஐரோப்பாவுக்கு வந்த எங்கட சனமும் அல்லே மாறிப்போச்சுதுகள். அதை நினைக்கத்தான் பெரிய வயித்தெரிச்சலாய் கிடக்குது பாருங்கோ. அப்ப இங்கவந்த புதுசில "பாசைப்பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை." அப்பவும் என்ன இப்பவும் தான்!. அப்ப எல்லாரையும் வந்தவுடன காம்பில தானே விடுவாங்கள். விடைக்கே பாக்கிஸ்தான், துருக்கி, குருதீஸ், கறுப்பர் எண்டு பல நாட்டுக்காரரும் இருப்பாங்கள். எங்களை ஸ்ரீலங்கன் எண்டு செல்லி ஒண்டாகத்தான் விடுவினம் நாங்களும் ஒண்டாகத்தான் இருக்கப்போறம் எண்டு ஒஷ்டாய் இருந்தனாங்கள் அதோட ஒண்டாய் சமைச்சு சாப்பிட்டு அவங்கள் குடுக்கிற சோசல் காசில் மிச்சமும் பிடித்து ஊருக்கும் காசு அனுப்பினனாங்கள் பாருக்கோ. அது அப்ப பாருங்கோ இப்ப இதைக்கேட்டுப்பாருங்கோ - அப்ப வந்த சனத்திட்ட... காம்போ? சோசலோ? ரெட்குறஸோ? எண்டு இங்கேயே பிறந்து வளந்தவங்கள் மாதிரி கேப்பினம். அப்பவெல்லாம் ஒண்டாய் இருந்த சனம் காலப்போக்கிலே வதிவிட வசதி, நெஷனாலிட்டி கிடைச்சவுடன இப்ப என்ன சொல்லுகினம் தெரியுமே நாங்கள் எனி தனிய எங்கையும் எங்கட சனம் இல்லாத இடமாய் இருக்கப்போறம் என்னுகினம். எங்கட தமிழ்சனத்தோட இருந்தால் பிரச்சினையாம். இதை வெள்ளையன் சொன்னாலும் பறுவாயில்லை. தமிழனே இப்பிடி சொன்னால் எப்பிடி இருக்கும் பாருங்கோ. தமிழரைக்கண்டால் பிடிக்காது. தமிழ் படிக்கப் பிடிக்காது. தமிழ் புத்தகங்கள், பேப்பர் பிடிக்காது எண்னுவினம் அப்படி எண்டால் வெள்ளையனோட எண்டாலும் சேர்ந்து வாழுகினமோ அதுவும்மில்லை கேட்டால் அவங்களின்ட கலாச்சாரம் சரியில்லை என்னுகினம். வெள்ளையனின்ட புத்தகம், பேப்பர் வாசித்தாலும் விளங்காது அவையளுக்கு. இப்பிடி இருக்கேக்க இப்பிடிப்பட்ட தமிழரிண்ட நிலமை எங்கபோய் முடியுமோ தெரியாது. "அகதி" எண்ட சொல்லுக்கு ஏற்றமாதிரி வாழ்ப்போகினமோ? அதைவிட பெரிய பகிடி என்ன வெண்டால் தமிழராலேயே உழைக்கிற தமிழர் சிலரும் தமிழரை கண்டால் பிடிக்காது எண்டு சொல்லுகினம். தமிழரை பிடிக்காத தமிழருக்கு தமிழ்சாப்பாடுமல்லே பிடிக்கக்கூடாது. ஆனால் அதுபிடிச்சிருக்கு பாருங்கோ. பங்கு இறைச்சி, யாழ்ப்பாண முருங்கைகாய், மரவள்ளக்கிழங்கு கறுத்தக்கொழும்பான்மாம்பழம் எண்டு வடிவாய் வெட்டுவினம் கண்டியலே. இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு "தமிழரிண்ட சாப்பாடு நல்ல மலிவுச்சாப்பாடு" பாருங்கோ. இப்பிடி எங்கட சனம் போற போக்கை பார்த்தால் எங்க போய் முடியுமோ தெரியாது. தமிழரைக்கண்டால் தெரிந்தும் தெரியாதவர் போல், தமிழரைக்கண்டால் புரிந்தும் புரியாதவர்போல், எங்கட சனம் வாழவேண்டியதாய் போட்டுது. நாட்டுப்பிரச்சனை தீர்ந்தாலும் இப்பிடியான புதுப்புது பிரைச்சினைகள் துவங்கீட்டிது பாருங்கோ. இப்பிடி இருக்கிற ஆட்க்களை எப்பிடி திருத்தமுடியும். "கெடுகிறன் பந்தயம் பிடி" என்னுறவையோட எப்பிடிப்பாருக்கோ கதைக்கமுடியும். உப்பிடியான ஆட்க்கள் தானாத்திருந்தவேனும் இல்லாட்டி திருத்தப்படவேனும் என்னுறதுதான் ஐடியா ஐயாசாமின்ட ஐடியா. எதுக்கும் இப்பபோட்டு பிறகு வாறன்... எல்லாருக்கும் மங்களம்முண்டாகட்டும்.
  2. பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும் 1.டச்சு கயானா --- சுரினாம். 2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ 3.அபிசீனியா --- எத்தியோப்பியா 4.கோல்டு கோஸ்ட் --- கானா 5.பசுட்டோலாந்து --- லெசதொ 6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா 7.வட ரொடீஷியா --- ஜாம்பியா 8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே 9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா 10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட் 11.சாயிர் --- காங்கோ 13.சோவியத்யூனியன் --- ரஷ்யா 14.பர்மா --- மியான்மர் 15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ் 16.சிலோன் --- ஸ்ரீலங்கா 17.கம்பூச்சியா --- கம்போடியா 18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான் 19.மெஸமடோமியா --- ஈராக் 20.சயாம் --- தாய்லாந்து 21.பார்மோஸ --- தைவான் 22.ஹாலந்து --- நெதர்லாந்து 23.மலாவாய் --- நியூசிலாந்து 24.மலகாஸி --- மடகாஸ்கர் 25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல் 26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா 27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய் 28.அப்பர் பெரு --- பொலிவியா 29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா
  3. கிறீன் லாண்டின் (Green Land) ஒரு பகுதி எந்த கண்டத்தின் பகுதியாக உள்ளது?
  4. ஐடியா ஐயாசாமி நான் சீட்டு பிடித்தால் சேருறாங்களும் இல்லை! என்னை சீட்டில சேக்கிறாங்களும் இல்லை!! பிள்ளையள் நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டன். ஏன் தெரியுமே? என்ர இனத்தை என்னால் மறக்க முடியுமே! தான் ஆடாவிட்டாலும் தன்ர சதை ஆடும் எண்டகனக்கா எங்கட இனம் என்ர இனம்தானே. ஆனால் சிலசனம் இங்க ஐரோப்பாவில தன்ர இனத்தை கண்டால் நாயை கண்ட நாய் உறுமின கணக்கா உறுமுதுகள். இதைத்தான் நாய்க்குணம் எணடு சொல்லுறதோ தெரியவில்லை. அது கிடக்கட்டும். இப்ப நான்சொல்லவந்த விசயத்தை விட்டுட்டு எதேதோ அலட்டுறன். இதைத்தான் எங்கடசனம் அலட்டல் குணம் எண்டு சொல்லுறவையோ தெரியாது. நேற்று எங்கட சுந்தரத்தான் கவலையாய் வந்தான் கவலை என்டாலும் கவலை பேய்க்கவலை கண்டியலே. என்னடாப்பா சுந்தரம் கவலையாய் வாறாய் ஏதும் காசுப்பிரச்சனையோ எண்டு கேட்டன். இல்லை அண்ண என்னை ஒருத்தரும் சீட்டுக்கு சேர்க்கினமில்லை எண்டான். உன்னை யாரடாப்பா சீட்டுக்கு சேர்க்கமாட்டன் எண்டது நீயும் வேலை உன்ர மனுசியும் வேலை அதால நீ ஒழுங்காய் சீட்டுக்காசை கட்டுவாய்தானே எங்கட ஊரிலை எண்டால் இரண்டுபேரும் வேலைசெய்தால் கட்டாயம் அவர்களுக்குத்தானே முதலிடம் எண்டு சொல்லுவினம். அது எல்லாம் ஊரிலை தான் அண்ண இங்கசீட்டுப்பிடிக்கிற ஆட்கள் சீட்டுப்பிடிக்க வாற ஆட்களிண்ட நிலமையை அவையலுக்கு தற்சமையம் உள்ள கஷ்டங்கள் இதுகளை பார்த்துத்தான் சேர்ப்பினம் எண்டான். நல்ல கொள்கையாய் இருக்கு கஷ்டப்படுபவர்களுக்கு முதலிடம் கொடுக்கிறவன்களுக்கு கோவில் கட்டியல்லே கொண்டாட வேண்டும் எண்டன். தாச்சியார் எண்டால் சீட்டுக்கு பொறுப்பா ஒருத்தர் இருப்பார். அவறைத்தான் உந்தப்பேர் சொல்லிக் கூப்பிடுறது. உந்தப்பதவி கிடைச்சவையில எழும்பின் ஆட்களும் உண்டு தலைகுப்பிற விழுந்த ஆட்களும் உண்டு பாருங்கோ. நான் அவனிட்ட கேட்டன் கஷ்டப்பட்ட ஆட்களைத்தானே சீட்டுக்கு சேற்ப்பம் எண்ட கொள்கை உள்ள ஆட்களுக்கு சப்போட்டா கதைச்சால் அதுக்கு நீ ஏன் கோவப்படுகிறாய் எண்டு கேட்டன். அப்பதான் அவன் விஷயத்தை வடிவாய் விபரமாய் சொன்னான். அண்ணை ஊரிலைதான் இரண்டுபேரும் வேலை செய்தால் சீட்டுக்கு சேர்ப்பினம். இங்க அப்படியில்லை. இங்க சீட்டுக்குசேருபவர் குடும்பத்திலை ஒரு ஆள்தான் வேலை செய்ய வேணும். அதோட சீட்டுக்கு சேருறவற்றை குடும்பத்திலையாறாவது வந்து கொழும்பிலை லொட்ஐpலையோ இல்லாட்டில் ரஷ்சியாவிலையோ தாய்லாந்திலையோ நீண்டு இங்கவர அவதிப்பட்டுக் கொண்டிருக்கவேணும். அடிக்கடி ரெலிபோன் அடித்து காசு அனுப்பச்சொல்லி கேட்டபடி அறுக்கவேணுமாம் இப்படியான பிரச்சனை உள்ள ஆட்களைத்தான் சேர்ப்பினமாம் எண்டு சொன்னான் பாருங்கோ. நீ சொல்லுறது என்க்குப்புரியுதில்லை சுந்தரம் இதுக்கும் சீட்டுக்கும் என்ன தொடர்பு எண்டு கொஞ்சம் விளக்கி சொல்லடாப்பா? எண்டு கேட்டன். இப்படியான கஷ்டத்திலை இருக்கிறவன்கள் நல்லாக் கழிச்சு கேட்டு சீட்டை எடுத்து அனுப்புவான்கள். அப்பத்தானே தாச்சியாருக்கும் மற்ற சீட்டுக்காறறுக்கும் நல்ல லாபம். அதைவிட்டுட்டு எங்களைப்போல் இரண்டு பேரும் வேலை செய்தால் கடைசியாய்தான் சீட்டை எடுப்பம் எண்டிட்டு என்னை சேர்க்க மாட்டன் என்கிறான்கள் எண்டான். இப்பத்தான் அவன்றை உண்மையானகவலை என்னவெண்டு எனக்க விளங்கிச்சிது. என்க்கு விளங்கியதை உங்களுக்கு விளக்கி சொல்லிப்போட்டன். கஷ்ரப்பட்டவன் சீட்டுப்போட்டு சீட்டால் உயர்ந்தது அங்கே கஷ்ரப்பட்டவனை சீட்டில் சேர்த்து சேர்த்தவன் உயர்ந்தது இங்கே. திருக்குறளை எழுதின வள்ளுவர் இப்ப இங்க வந்தால் இப்பிடித்தான்குறள் எழுதியிருப்பார் பாருங்கோ. ஐரேப்பாவிலே சீட்டு பிடிக்கிறதுக்கு எங்கட ஆட்கள் புதுப்புது சட்டதிட்டம் கொண்டுவந்திட்டினம். சீட்டு பிடிக்காதவனுக்கும் வட்டிக்கு விடாதவனுக்கும் மதிப்பில்லை. அந்த காலத்திலை படிச்சவனுக்குத்தான் மதிப்பு. இந்தகாலத்திலை ஐரேப்பாவிலே பிடிச்சவனுக்கும் விட்டவனுக்கும் தான் மதிப்பு. பிடிச்சவன் என்டால் சீட்டு விட்டவன் எண்டால் வட்டி. இப்ப உங்களுக்கு எல்லாம் வடிவாய் விழங்கியிருக்கும் எண்டு நம்பிறன்... எல்லாருக்கும் மங்களம் உண்டாகட்டும் மீண்டும் அடுத்தமுறை சந்திக்கிறன்.
  5. உலகின் பெரிய பாலைவனங்கள், அமைந்துள்ள நாடு, பரப்பளவு. (சதுரமைல்) 1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000 2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000 3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000 4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000 5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000 6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000 7.தக்லிமாகன் சீனா 1,40,000 8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000 9.தார் இந்தியா 1,00,000 10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான் 1,00,000
  6. கந்தப்புவும் - சோமண்ணையும் கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசிக்கு கழுத்து வலியென்று டாக்குத்தரிட்டபோனால். அவர் "வெயிற்றை" குறைக்கச்சொல்லி சொல்லுகிறாராம் சோமண்ணை: சுந்தரத்தானின் மனுசி ஓல்லித்தடி மாதிரி. அதிலையும் இன்னம் வெயிற்றை குறைச்சால் எப்பிடியிருக்கும்? கந்தப்பு: டொக்டர் சொன்னது மனுசியின்ற வெயிற்றை இல்லையாம் சோமண்ணை: அப்ப எதையாம் ? கந்தப்பு: சுந்தரத்தானின் மனுசியின் கழுத்தில இருக்கிற 70 பவுண் தாலிக்கொடி 25 பவுண் தங்கச் சங்கிலியின்ர வெயிற்றாம். சோமண்ணை: ???!!!... ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: ஐரோப்பிய நாட்டில் வாழும் எங்கட பெண்டுகள் இப்ப தங்கட இனத்தவரை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினமாம். சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம் எண்டு சொல்லுங்கோ ! கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம் கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது! சோமண்ணை: ஏன்? கந்தப்பு: நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்... ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்! சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும். கந்தப்பு: ???!!!... -------------------------------------------------------------------------------------------------------------------------------------- கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான். சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்? கந்தப்பு: கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம்.
  7. கடல்களும். அவற்றின் பரப்பளவும் உலகில் உள்ள கடல்களும். அவற்றின் பரப்பளவும் (சதுரக்கிலோமீட்டர்) 1.தென் சீனக் கடல் --- 29,64,615. 2.கரீபியன் கடல --- 25,15,926. 3.மத்திய தரைக் கடல --- 25,09,969. 4.பேரிங் கடல் --- 22,61,070. 5.மெக்சிகோ வளைகுடா --- 15,07,639. 6.ஜப்பான் வளைகுடா --- 10,12,949. 7.ஒக்கோட்ஸ்க் கடல் --- 13,92,125. 8.ஹட்சன் வளைகுடா --- 7,30,121. 9.அந்தமான் கடல் --- 5,64,879. 10.கருங்கடல் --- 5,07,899. 11.செங்கடல் --- 4,52,991. 12.வடகடல் --- 4,27,091. 13.பால்டிக் கடல் --- 3,82,025. 14.கிழக்கு சீனக்கடல் --- 12,52,180. 15.கலிஃபோர்னியா வளைகுடா --- 1,61,897. 16.அரபிக் கடல் --- 2,25,480. 17.ஐரிஸ் கடல் --- 8,650. 18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா --- 2,28,475
  8. நன்றி சுவி அண்ணா. தாய் மண்ணே வணக்கம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  9. உலகப் போர் ஆசிரியர்: 2ம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன? மாணவன்: முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி 2ம் தடவை நல்ல போரா நடத்தணும்னு முடிவு செஞ்சிருப்பாங்க சார்! --------------------------------------------------------------------------------------------------------------------------------- ஈ மொ‌ய்‌க்கறது டாக்டர் என் நெத்தியில ஈ ஒண்ணு வந்து உக்காந்துட்டு போக மாட்டேங்குது! அது செத்த ஈ. ஒண்ணும் தொந்தரவு பண்ணாதே? அது தொந்தரவு பண்ணல்ல டாக்டர், அத மொய்க்கறதுக்கு ஒரு 200 ஈ வருது பாருங்க அதுதான் பிரச்சனையா இருக்கு! டாக்டர்:?1?1 ---------------------------------------------------------------------------------------------------------------------------- செட் பல் உங்க பல் சுத்தமா டேமேஜ் ஆகியிருக்கு. செட் பல்தான் வைக்கணும், அதுக்கு 10000 ரூபா ஆகும். 10000 ரூபா ஆகும்னா அதுக்கு நான் ஒரு நல்ல நெக்லஸ் எடுத்துடுவேனே டாக்டர். ஆனா உங்க சிரிப்பே போயிடுமே. நெக்லஸ் போட்டுகிட்ட அப்புறம் யார் என்னோட பல்ல பாக்கப்போறாங்க டாக்டர். ------------------------------------------------------------------------------------------------------------------------------------ மும்தாஜ் ஷாஜகான் மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் கட்டினான்.... மடப்பய... நானா இருந்தா மும்தாஜ் நினைவாக அவ தங்கச்சிய கட்டியிருப்பேன்.
  10. உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா படம்: தில் இசை: வித்யாசாகர் பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா வரிகள்: கபிலன் உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா? நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா? (உன் சமையல்..) நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா? நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா? நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா? (உன் சமையல்..) நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா கன்னங்களா? நான் தீண்டல் என்றால் நீ விரலா ஸ்பரிசங்களா? நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா தாலாட்டா? நீ தூக்கம் என்றால் நான் மடியா தலையணையா? நான் இதயம் என்றால் நீ உயிரா துடித்துடிப்பா? (உன் சமையல்..) நீ விதைகள் என்றால் நான் வேரா விலைநிலமா? நீ விருந்து என்றால் நான் பசியா ருசியா? நீ கைதி என்றால் நான் சிறையா தண்டனையா? நீ மொழிகள் என்றால் நான் தமிழா ஓசைகளா? நீ புதுமை என்றால் நான் பாரதியா பாரதிதாசனா? நீ... நீ தனிமை என்றால் நான் துணையா தூரத்திலா? நீ துணைதான் என்றால் நான் பேசவா யோசிக்கவா? நீ திரும்பி நின்றால் நான் நிக்கவா போய்விடவா? நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா? நீ காதல் என்றால் நான் சரியா தவறா? உன் வலது கையில் பத்து விரல்... பத்து விரல் என் இடது கையில் பத்து விரல்.... பத்து விரல் தூரத்து மேகம் தூறல்கள் சிந்த தீர்த்த மழையில் தீ குளிப்போம்..
  11. வெப்பமான இடம் சரி. குளிரான இடம் சைபீரியா. பாராட்டுக்கள் இன்னிசை.
  12. மீண்டும் முயற்சியுங்கள் இன்னிசை.
  13. உலகின் எந்த நாடுகள் முறையே அதி வெப்பமான, அதி குளிரானவை?
  14. படம் : நெஞ்சில் ஓர் ஆலயம் - 1962 குரல் : பி.சுசீலா முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ (முத்தான) சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ (முத்தான) வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ (முத்தான)
  15. நள தமயந்தி பாடல்: என்ன இது என்ன இது இசை அமைத்து பாடியவர்: ரமேஸ் விநாயகம்
  16. சரியான விடை. வாழ்த்துக்கள்.
  17. புலி புலி தமிழ் புலி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  18. பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம். தந்தையைக் கொன்றுவிட்டுச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வாய்பேசமுடியாத காது கேளாத தாயையும் சகோதரியையும் பிரிந்திருந்து, திரும்ப வந்து லைலாவைச் சந்தித்துக் கடைசிக் காட்சியில் தாய் கொடுக்கும் விஷம் கலந்த சோற்றை வாங்கித் தின்றுவிட்டு வாயோரம் ரத்தம் வழியச் செத்துப் போகிறார். அருமையான ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் சிரத்தையுடன் நடித்துள்ள நடிகர்களும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின. துக்கங்கள், துன்பங்கள் நிறைந்த ரணமாகிப் போன வாழ்க்கைக்கிடையே தென்றல் வருடுவது போல வந்து ஆசுவாசப்படுத்துவது லைலா சூர்யா தொடர்பான காட்சிகள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஒரு மருந்து மாதிரி உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. சிநேகம் இருந்த மனங்களில் காதல் பூத்ததை வெளியே சொல்லாமல் இருவரும் தவிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை சூர்யாவும் (உணர்ச்சியேயில்லாத இறுகிய முகம் ஒரு வசதி) லைலா(லூசுச் சிரிப்பு இல்லாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்க வேண்டிய கோபத்தை பிதாமகனில் பழி தீர்த்துக்கொண்டார்! அப்படியும் சரணத்திற்கு முன்பாக வரும் சுபா குழுவினரோடு பாடியிருக்கும் "மனசில் எதையோ" வரிகளில் சூர்யா பார்க்காத தருணத்தில் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை எடுத்துவிடுவார்!) இருவரும் நன்றாகச் செய்திருப்பார்கள். வசனங்களுக்குத் தேவையில்லாத காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். பின்னணிப் பாடலாக வரும் இந்தப் பாடலே மனதில் ஓடும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் இதமாய் நம்மைத் தழுவும் புல்லாங்குழல் இடையிடையேயும் தனது இனிய இசையை வெளிப்படுத்தியிருக்கும். மிகமிக அடங்கிய மெல்லிய குரலில் பாடத் தொடங்கும் பாலு பின்பு அப்படியே உச்ச ஸ்தாயிக்குக் குரலைக் கொண்டு சென்று அட்டகாசமாகப் பாடியிருப்பார். பாடுவதற்கும் கடினமான பாடல். "விழுகிறதே" "நனைகிறதே" என்ற வார்த்தைகளை அவர் அலையலையாய் பாடியிருப்பது கடற்கரைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது. பாலுவின் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பாடல். முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீ தானே முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ மனசில் எதையோ மறைக்கும் விழியே மனசைத் திறந்து சொல்லடி வெளியே கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு மனசைத் திறந்து சொல்லடி வெளியே என் இதயத்தை... என் இதயத்தை வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன் உன் விழியினில்... உன் விழியினில் அதனை இப்போது கண்டுபிடித்துவிட்டேன் இதுவரை எனக்கில்லை முகவரிகள் அதை நான் கண்டேன் உன் புன்னகையில் வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ சலங்கை குலுங்க ஓடும் அலையே சங்கதி என்ன சொல்லடி வெளியே கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு ஏலோ ஏலோ ஏலே ஏலோ என் பாதைகள் என் பாதைகள் உனது வழிபார்த்து வந்து முடியுதடி என் இரவுகள் என் இரவுகள் உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே.... முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே....
  19. கிறிஸ்தோபர் கொலம்பஸ் முதன் முதலில் அமெரிக்க கண்டத்தில் தரை இறங்கிய இடம் தற்போது எந்த நாட்டில் உள்ளது?
  20. கவுண்டமணி, விஜய டீ.ராஜேந்தர் பங்கு பெறும் டெவில் ஷோ. டெவில் ஷோவுக்கு வர அனைத்து நடிகர், நடிகைகளும் பயந்து கொண்டிருக்கும் வேளையில் அதை அறிந்த டீ.ஆர் தான் அதில் கலந்துகொண்டால் வீராச்சாமிக்கு இலவசமாக பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற நப்பாசையில் கவுண்டருக்கு போனை போடுகிறார். கவுண்டரின் போன் அலறுகிறது. இந்த போன எடுத்தா நச்சு நச்சுன்னு இவனுங்க தொல்ல தாங்கமுடியலப்பா! எந்த பன்னிக்குட்டி ராமசாமி லைன்ல இருக்கானோ என்று கவுண்டர்: ஹலோ டீ.ஆர்: "தூங்கும்போது ஆட்டணும்டா காலு காலு இல்லாட்டி விடிஞ்சிபுட்டா ஊத்திடுவான் பாலு பாலு" கவுண்டர்: டேய் யார்ரா நீ பேர கேட்டா ஊள உடற? மரியாதையா பேர சொல்லு இல்லாட்டி படுவா படுக்க பேன் பாத்துபுடுவேன். டீ.ஆர்: அழகுக்கு ஒரு அரவிந்தசாமின்னா வீரத்துக்கு இந்த வீராச்சாமி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கற வீராச்சாமி ஹீரோ சார். டெவில் ஷோல என்னையும் சேத்துக்குங்க சார். கவுண்டர்: ஆஹா ஏழரை போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேக்குதே, இத சேக்கலாமா வேணாமா என்று கலவரமாகிறார். நம்ம திரையுலக வாழ்க்கைல இவன மாதிரி எத்தனை பேர பாத்திருப்போம். வா மகனே இன்னிக்கு உனக்கு மொத்தமா கஞ்சி ஊத்தறேன். உடனே கெளம்பி வா. டேய் பசங்களா செட் ரெடி பண்ணுங்க, லைட்டு ஆன் பண்ணுங்க ஒரு வெயிட்டான பார்ட்டி வந்துகிட்டு இருக்கு. டேய் இங்க இருந்த ஆடியன்ஸ் எங்கடா ஒருத்தனையும் காணும். யாருமே இல்லன்னா ரொம்ப கேவலமா போயிடுமே. எவனாச்சும் நாலு பேரை கூப்பிடுங்கடா... சார் நீங்க போன் பேசிட்டு இருக்கும்போதே இன்னிக்கு யார் இன்னிக்கு கெஸ்ட்னு தெரிஞ்சி போச்சு அப்பவே எல்லாரும் எகிறி குதிச்சி ஓடி போயிட்டாங்க சார். அப்ப நான் தனியா மாட்டிகிட்டனா... என்று யோசித்துக்கொண்டிருக்கும்போ
  21. ஒருவரும் முயற்சிக்கவில்லை. தமிழ்நாடு என்பது விடை. 5 தடவை நிதியமைச்சராக தமிழ்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இம்முறை நிதியமைச்சராக உள்ளவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.