Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    51176
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள். சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும். ADVERTISEMENT முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும் சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
  2. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  3. நல்வாழ்த்துக்கள் ,ராஜவன்னியன்.
  4. எல்லா போர்களிலும் வென்ற இஸ்ரேலை முடக்கிய ஈரான் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  5. ஆம் பலோத்காரமாக இனப்பரம்பலை ஏற்படுத்த அரசும் அதன் அடிபொடிகளும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்படுகிறார்கள். இதனை தான் தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். இதே விதமான கருத்தை குளோபல் தமிழ் செய்திகளுக்கு ஒரு நேயரின் கருத்துக்கு பதில் எழுதும் போது(காலம் 2010) (இப்போ கருத்து எழுத முடியுமா தெரியவில்லை) கொரனவில் பிள்ளையார் சிலையை வைத்து தமிழ் மக்களை குடியேற்றினால் சிங்களவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என கேட்டிருந்தேன். பதில் அக்கருத்தாளரிடம் இருக்கவில்லை. யாழ பல்கலைகளகத்தில் சிங்கள மாணவர்களை அதிகரிப்பதும் சிங்கள அரசின் நரி மூளைகளில் ஒன்று.
  6. எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில் பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.
  7. இஸ்ரேலுக்கு மத, இன வெறி இல்லாமல் 340000 பலஸ்தீனியர்களை கொன்று குவித்ததை எப்படி அழைக்கலாம்?
  8. ஒரு பில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனிதர்கள் எனும் வகைக்குள் அடங்கவில்லையா? மேற்குலகில் வெள்ளைகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சார்பாக மேற்று ஊடகங்கள் எழுதுகின்றன என்ற கூற்றுக்கு என்ன பதில் உங்களிடம் உண்டு??
  9. அமெரிக்காவுக்கு தெரிந்த ஈரானின் தாக்குதல் உத்தி | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
  10. நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂
  11. நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.
  12. உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃 இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.
  13. கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள். உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃 சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝
  14. பின்வாங்கியது America... என்ன செய்யப் போகிறது இஸ்ரேல்?
  15. ஈரானுக்கு இருக்கவே இருக்கு proxy கள். அவர்களை வைத்தே இஸ்ரேல் வாழ் நாள் பூராக தாக்குதல் நடாத்திக்கொண்டே இருக்கும். செங்கடல் பக்கம் மேற்கின் ஒரு கப்பலும் போக முடியாத படி பண்ணி விட்டார்கள்.
  16. நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??
  17. ஈரானிய ட்ரோன்களை இடைமறித்து தாக்க உதவுகின்றார்கள். ஈரான் ஏவுகணைகளை ஏவ தொடங்கியதாக அல்ஜசீரா சொல்கிறது. அவற்றை தாக்கவும் உதவுவார்கள்.
  18. சைப்பிரசில் உள்ள ஐக்கியராச்சிய விமானபடை தளத்தில் இருந்து தாக்குதலை தொடங்கி உள்ளது.
  19. அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன.
  20. ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வெளியே வந்து விடுவார் என நம்பலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.