கனடாவில் வரும் நீங்கள் சொல்கின்ற பத்திரிகைகளை எல்லாம் பத்திரிகை என்று யாரும் இங்கு வக்காலாத்து வாங்கவில்லை.
உங்கள் கருத்துப்படி எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதால் பரபரப்புக்கு பத்திரிகைத் தரம் வந்துவிடுமோ?
ஆக, பத்திரிகைத் துறையில் புகலிட மக்களுக்கு பரபரப்பு அறிமுகப்படூத்திய புதிய விடயம் (novelty) எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுதல். நன்று. நன்று. பரபரப்பின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! :P
உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனடாவில் ஏராளமானோர் இணையத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் பரபரப்பைக் கூட அவ்வாறானவர்கள் வீடுகளில்தான் நான் பரவலாக கண்டேன். தாங்களே கதைகளை இயற்றி அதன் தாக்கம் என்ன என்ற தெளிவின்றி எழுதி மக்களை குழப்புவதை விட தமிழ்நாதம் போன்ற இணையத்தில் வரும் மிகவும் காத்திரமான படைப்புக்களை இணைய வசதி இல்லாத மக்களுக்கு எடுத்துச் செல்லும் மற்றைய பத்திரிகைகளின் சேவை நீங்கள் சொல்வதுபோல கேவலமானது அல்ல. மாறாக கண்டதையும் கற்பனை பண்ணி எழுதி மக்களை முட்டாளாக்க எண்ணும் பரபரப்பை விட அவை பரவாயில்லை .
ஆமாம், ஆய்வு செய்து மட்டும் என்னத்தைக் கிழித்துப் போடுவீர்கள் என்று அறியலாமா? :P :P
ஆக, களத்தில் பின்னகர்வு வந்தால் உங்களுக்குத் தேவை அதைப் பற்றிய இராணுவ ஆய்வு. அவ்வளவே!
அதை பரபரப்பாக சுடச் சுட வேறு தரவேணுமாக்கும்.