Jump to content

Nellaiyan

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  5336
 • Joined

 • Last visited

 • Days Won

  28

Everything posted by Nellaiyan

 1. காவாலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
 2. ... ஜென்சி .... கேட்கும்போதெல்லாம் மெய்மறக்கும் ஒரு தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி ... My link எனக்கு மிகப்பிடித்த பாடகியின் முதல் தமிழ்ப்பாடல் இது என நினைக்கிறேன் 'சில்லிட வைக்கும் பனிக்காற்றில் பச்சைப்பசேல் மலைச்சாரலில் நடந்து வருவதுபோல் இருக்கும்.ஜென்சியின் குரல்.' எவ்வளவு சத்தியமான வார்த்தை.. `தம்தன தம்தன... தாளம் வரும்', `என் வானிலே...' `தெய்வீக ராகம்', `அடிப்பெண்ணே', `இரு பறவைகள் மலை முழுவதும்', `மயிலே மயிலே உன் தோகை எங்கே...' 'ஆயிரம் மலர்களே மலருங்கள்...', ‘மீன் கொடித் தேரில்'. எப்பொழுது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்.... இவர் அதிகம் பாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் நாம் நிறைய இழந்துவிட்டோம்!! ஆனாலும் இதுவரை நமக்கு கிடைத்தது எல்லாம் பொக்கிஷங்கள்..
 3. கணீரென்ற குரலுடைய புன்னகை அழகி தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது. எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா http://www.youtube.com/watch?v=ocSqTdy8f1k மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது. ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது. மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு. சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி. (முன்பொரு இணைப்பை சுஜாதாவின் முதல் பாடல் தொடர்பாக பார்த்திருந்தேன் ... யான் பெற்ற இன்பம் ...)
 4. சபேசன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ... பதினாறும் பெற்று (... இங்கு பதினாறு என்பது பதினாறு பிள்ளைகளையும் சேர்த்துத்தான் ... சிங்களவன் அழித்தொழிக்கிறான், இப்படியாவது நிரவுவோம் ...) பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ....
 5. .... கேபியை ஒதுக்கியதற்கு பின்னர், கேபி கண்காணிக்கப்படவில்லை, அவர்/ அவரின் மனைவி/பினாமிகளின் பெயரில் இருந்த சொத்துக்கள் பல வருடங்களாகியும் மாற்றப்படவில்லை! பெயரில், அவரின் நிஜ உருவம் தெரியாது, இறுதிக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ... விடப்பட்ட பிழைகளை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
 6. ... மார்ச் 30, லண்டன் ஹீத்ரொ விமான நிலையம், இரவு 9.30 மணி, கொழும்பு செல்லும் சிறிலங்கன் எயார் லைன்ஸுக்காக காத்திருக்கும் லவுண்ஞில், ஒரு கண்ணாடி போட கறுத்த உருவத்துக்கு அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள்(பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு), உரையாடல்கள் ஆங்கிலமும், தமிழும் மாறி மாறி ... பின்பு அவ்வுருவம் விமானத்துக்குள் சென்று உட்கார்ந்ததாம், அமோக வரவேற்பாம்... ... அவ்வுருவம், விமானம் கொழும்பு கட்நாயக்கா விமான நிலையத்தை அடைந்தவுடன், எல்லோரிடமும் சேர்ந்து இறங்கியதாம், ஆனால் வெளியில் வரும்போது இராஜ மரியாதைகளுடன் வேறு வழியால் கூட்டி செல்லப்பட்டாராம்! ... அவ்வுருவம் ... டீபாம் டீவியில் உலாவும் டாக்குத்தராம் என்று சொல்லுகிறாங்களடாப்பா!!!!!!! இந்த உருவத்தையும் எம் பத்திரிகைகள், இனையத்தளங்கள் ... பேட்டி எடுத்து ... உண்மையை அம்பலப்படுத்தலாமே????????
 7. இச்செய்தி 100% உண்மை!!! ... இதனை ஒன்பதுகளில் ஒன்றாக சென்ற ... முன்னால் திம்பு ரெலோ ... உறுதிப்படுத்தினாராம்!
 8. ... மாமாக்களை கேயாண்ணா பீனாவை வைத்து பிடிக்கப்படுவதற்கு முன்னுக்கே, இங்கு லண்டனில் ஹம்ஷா நானா சிலரை பிடித்து விட்டாராம். அதுவும் போன வருசம் செப்ரம்பர் மாதத்துக்கு முன்னுக்கேயே இந்த மாமாக்கள் நானாவின் வலையில் வீழ்ந்து விட்டார்களாம்!! ... இங்கு வெம்பிலி பகுதியில் உள்ள ஒரு பீச்சுக்கு முன்னுக்கு வாற பாம் றெஸ்ரோரன்டில் தானாம் சாப்பாடு போட்டவராம் நானா!!! ... முதலில் அங்கு விருந்துக்கு போன மாமாக்கள் மறுத்தவர்களாம், தாம் அப்படிப் போகவில்லை என்று, ஆனால் மாமாக்களின் கெட்டகாலம் விருந்தை சிறப்பாக சீசீரிவி படம் பிடித்துட்டுதாம் ... எண்டுறாங்களடாப்பா!!!???!!!!!
 9. ... முதல் முறையாக பதிவார், ஓர் ஆக்கபூர்வமான எழுத்தை பிரசுரித்திருக்கிறார்கள்! ... நன்றிகள் ... "து" பட்டம் கட்டி எழுதாமைக்கு! ... இந்த கேயாண்ணா பீனாவிற்கு புலத்தில் இந்த ஒன்பதுகளுக்கு பின் சில மாடு பிடித்துதிரியும் மாமாக்கள் இருக்கிறார்கள்! அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்! ... மக்கள் அவர்களிடம் சிலவல்ல பல கேள்விகளுக்கு விடை தேடுகிறார்கள், முடிந்தால் அவர்களை பகிரங்க மேடையில் ஏற்ற வேண்டும் ... ... இங்கு சில வதந்திகள், லண்டனிலுள்ள மாமாக்களின் அடையாளங்கள் தொடர்பாக ... 1) எங்கள் யாழ்கள பாண்டருடன் சேர்ந்த லிட்டிலெயிட் கும்பல் 2) தமிழர் நலன்புரி அமைப்பின் பொறுப்பான டாக்குத்தராம். 3) டீபாம் டீவியில் வரும் டாக்குத்தரும் அடக்கமாம். 4) சவுத்தோல் பகுதியிலுள்ள அப்புக்காததாம். 5) லண்டனில் வாணவேடிக்கைகள் செய்த சில கவுண்ஸிலருகளாம். 6) .... ... இந்த மாமாக்கள் சிலர் தங்கள் முன்னைய நடவடிக்கைகள் இங்கு தெரியவரின் தம் வேலைகள் அம்போ ஆகிவிடும் என்றுதான் சரணாகதி அடைந்தவர்கள் என்று கதைக்கிறாங்களடாப்பா?. இந்த மாமாக்களில் சிலர், சில முன்னால் புலிகளை பிளாக்மெயில் செய்வதாகவும் சொல்கிறார்களடாப்பா???? ... ... ஒரு உண்மையை இங்கு சொல்ல வேணும், உந்த கேயாண்ணா பீனாக்களை அம்பலப்படுத்துவதில் மாற்றுக்கறுத்து மாணிக்கங்கள் புலிகளை முந்திக்கொண்டு ஓடுகிறார்களாம்???? ...
 10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாந்தி! இன்றைய நாள் போல் எல்லா நாளும் அமைய எனது குடும்பம் சார்பில் நல்வாழ்த்துக்கள்!
 11. has not set their status

 12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்!!! .... எப்போ டும் டும்??
 13. சிறி, உது வேண்டாம், உது இலங்கை சரக்கு!!! புறக்கணியுங்கோ, கீழ் உள்ளதில் ஏதாவது ஒன்றை மடக்கப்பாருங்கோ!
 14. அருமையான பாடல், இணைப்பிற்கு நன்றிகள்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.