Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

saravanar

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. May 2024: பெரிய நகைசுவை. உங்கடை சிவில் சேவையில் 25% முழுக்க ஊழல் அல்லது செயல் திறன் அற்றது. அடுத்த 50% செயல் திறன் இல்லாதது என்று ரிசேவ் வங்கி தலைவர் சொல்லியிருக்கிறார். அவர் மேலும் சொல்கிறார் .... சுதந்திரத்திற்குப் பிறகு, ... 1950 முதல் 70 களில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் திறமை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டனர். ஆக பிரிட்டிஷ் ஆட்சியில் பயிறுவிக்கப்பட்டு அதன் வழிவந்தவர்கள் நேர்மையாக இயக்கியிருந்தார்கள். அவர்களை கலைத்துவிட்டு இந்திய வழி என்று மார்தட்டி போட்டு நீங்கள் அதே பிரிட்டனுக்கு விசா எடுக்க வரிசையில் நிண்டது தான் மிச்சம். அதுக்குள்ள எங்களுக்கு வகுப்பு எடுக்கிறீர்களா? சுத்த கோமாளிகள். உங்களுக்கு கூசா தூக்குபவர்களை வளர்த்தெடுப்பது தான் உங்கள் இலக்கு! உலகில் வெளிப்படைத்தன்மையில் (Transparency International - Corruption Index) 93வது இடத்தில் உள்ள இந்தியா 5வது இடத்தில உள்ள சிங்கப்பூரை அடைய பல யுகம் வேண்டும். உந்த கோமாளிகளை விட்டுவிட்டு சிங்கப்பூர் சிவில் சேவையில் இருந்து பயிட்ச்சிகளை பெறுமாறு பல தடவை மாகாணசபையை அன்று வலியுறுத்திவந்தேன். அன்று சிங்கப்பூரில் இருந்து விஜயம் செய்த இரண்டு அமைச்சர்களும் அதட்கு வழிசெய்வதாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் கதிரை பிடிப்பதில் முழுநேரத்தையும் செலவழித்தால் இன்று அர்ஜுனாவும் அதிகாரிகளும் கடிப்பிடப்படுவதை பந்தி பந்தியாக எழுதுவது, ஆராய்வது (நிலாந்தன்!) என்று நேரம் போகிறது After independence, the IAS succeeded the ICS as a homegrown response to support universal franchise democracy in a low-awareness society. In the 1950s to 70s, IAS officers were known for their competence, integrity, and commitment. However, this reputation has declined due to ineptitude, inefficiency, and corruption.Currently, about 25% of IAS officers are either corrupt, incompetent, or inefficient. The middle 50% started well but have become complacent, while only the top 25% are truly delivering. Ideally, we need 75% to be effective, says former IAS officer and RBI governor D. Subbarao . https://www.fortuneindia.com/enterprise/25-ias-officers-corrupt-incompetent-or-inefficient-middle-50-complacent-d-subbarao/116843
  2. அய்யருக்கு நீங்கள் சொன்னது அருமையான பதில் அண்ணர். இந்த சம்பிரதாயங்களை மாற்றுவதில் உங்களை போன்று பல ஆயிரம் பேர் பங்குபெறவேண்டும். ஆனால் இதட்கு எதிர்மறையாக இந்தியாவில் இருந்து சில முறைமைகள் புகுத்தப்படுகின்றமையை நான் காண்கிறேன், அடிமைத்ததனத்தை உறுதிசெய்கின்ற வகையில்!
  3. ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.
  4. உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
  5. நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன். Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago https://dbsjeyaraj.com/dbsj/?p=15596
  6. நான் உங்களுக்கு கொளுத்தி தந்திருப்பன். இந்த பிள்ளையான் சிறையில இருக்கவேண்டிய மகாபாதகன்.
  7. மைத்திரிக்கும் போரை முன்னின்று நடத்தி இந்த நாடு பவுத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என்றவருக்கும் அதீத கற்பனையில் மிதந்து தான் தமிழ் இளைஞர்கள், யுவதிகள், மக்களும் வோட்டு போட்டவை. இப்படிக்கு உங்கடை ஆட்சி காலத்தில தமிழர் தேசிய இராணுவத்துக்கு (TNA - Tamil National Army) எண்டு எங்களை தேடி கொண்டு வர காட்டுக்குள்ளால தப்பி கொழும்பு வந்து தப்பிய சிறுவன். (ஆம் அதுவும் பிரேமதாச - ஜேவிபி யுத்த காலத்தில்!! ) https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-38/
  8. அப்பாடா என்ன ஒரு சத்தத்தையும் காணோமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது இன்னுமொரு பெரிய திட்டத்தோடு வந்துவிட்டீர்கள். தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடங்க முதல் உங்கடை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னத்தை இதுவரை சாதித்துள்ளது என சொல்லமுடியுமா? நீங்களும் நாடு கடந்து என்னும் மிஞ்சி இருக்கிறவரையும் நாடு கடத்தி போட்டு உங்கடை பேரியக்கத்தை தொடங்கிற யோசனையா இது.
  9. பாவம் அந்த ஆளு. எவ்வளுவு நாடகம், கதைவசனம் எழுதினாலும் அவற்றின் அதீத முயற்சியை பாராட்டுவார் இல்லை.
  10. இருக்க கூடும். நீராடியாக போய் செய்யாவிட்டாலும் உள்ளக புலனாய்வு தகவல்கள் கொடுத்தவர்களாக இருப்பார்கள். இப்பவும் தமிழர் வீடுகளை இனம் காட்டி அவர்கள் வீடுகளில் நகை களவெடுப்பதட்கு உடந்தையாக மற்ற இனத்தவர்களுடன் சேர்ந்து செயல்படுவது நம்மவர் தான். அந்த நாட்டின் சுதந்திரங்களையும் வளங்களையும் பாவித்து உருப்பட சந்தர்ப்பம் இருந்தாலும் செய்ய மாட்டாங்கள் இந்த பாவிகள். 😒
  11. சரியாக சொன்னீர்கள். இன்னும் தங்களை சுயபரிசோதனை செய்ய தயாரில்லை. இவர்கள் வாழாவிருந்துவிட்டு இப்ப மற்றவர்கள் தான் பிளை என்று புது வியாக்கியானம் பண்ணுகிறார்கள்
  12. "இனிமேல் இதுபோன்ற மோசமான உள்ளடக்கத்துடன் திரும்பி வரவேண்டாம். பகிர்ந்து கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. ஆனால், வைரஸ் வீடியோக்கள் நீண்ட காலத்திற்கு அதிக லைக்குகளைப் பெற முடியாது. தயவுசெய்து கவனிக்கவும்" இது தான் இந்த வீடியோயோவிற்கு கீழுள்ள கருத்துக்களில் ஒன்று. அதாவது எங்களது சமூக குறைபாடுகள் பற்றி விமர்சம் செய்யவேண்டாம் . ஆனால் அமெரிக்க அழியவேண்டும், கனடா துலையவேண்டும். நாங்கள் தான் எல்லாவற்றையும் விஞ்சிய இனம் என்று ஒரு வீடியோ போட்டால் அதிக லைக் பண்ணுவம். இது தான் இவர்கள் மேல வர தடையாக உள்ள ஒரு காரணம், ஆனால் இதை சுட்டி காட்டினால் நீ என்ன வெளளையானா என்று கோபம். ஆனால் அதே வெள்ளையனுக்கு சார் சார் சார் என்று பட்டம் போடுகிறார்கள். வந்தே மாதரம் தெருவில மூத்திரம் என்று தான் வாழுவோம் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் எங்களை வெறுப்பதை நாங்கள் நிறுத்தமுடியாது. தீவிர வலுதுசாரி (far-right) சக்திகள் புலம்பெயர்த்தோரை வேண்டாம் என கிளம்பி ஆட்சி பீடங்களையும் கைப்பற்றுகிற இந்த நேரத்தில் நாங்கள் அவர்களின் கருத்துக்களையும் செயல்களையும் நியாயப்படுத்துகின்ற வகையில் நடத்துகிறோம். இவர்களை அரவணைத்து அவர்களின் நிகழ்வுகளில் ஒன்றாக நடனமும் ஆடிய அந்த பிரதமருக்கு இவர்களாகவே ஆப்பு வைத்திருக்கின்றார்கள் என்றால் எதிர் காலத்தில் இப்படி இன்னொரு தலைவர் செய்ய முன் கனக்க யோசிப்பார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.