Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன்பன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தமிழன்பன்

  1. மணிவண்ணன் முடிந்தவரை நல்லது செய்தார் , ஆனால் இந்த கஜேந்திரகுமார் அணி எல்லாத்தயும் கெடுத்து விட்டது .
  2. வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர் மன்னாரைச் சேர்ந்த 2 பேர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது. களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் என பெண் உள்ளிட்ட எழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/களவுச்ச்சம்பவத்துடன்_தொடர்புடைய___7_பேர்__கைது!
  3. முதலில் ராஜபக்ஸ கும்பல் அடித்த 52 பில்லியன் காசினை பறிக்க முடியாத ஏலாவாளிகள் நீங்கள் . தில் இருந்தால் அதனை செய்து மக்கள் மேல் சுமத்தும் வரியை இல்லாமல் செய்யுங்கள் . இன்னுமொரு அரளயவை செய்து கள்ளரை விரட்டி அடியுங்கள்.
  4. சம்பந்தன் ஐயாவே , தெரியாமல் தான் கேட்கிறேன் , நீங்கள் யார் முதலில் , உங்களுக்கு நினைவு உள்ளதா ? 10 வருடத்துக்கு முன்னரே சிங்கள கொடி பிடித்து , மஹிந்தவை தேசிய தலைவர் என்று கூறி வரலாற்று தவறை செய்த உங்களை .... வேண்டாம் நிம்மதியாக செத்து போங்கள் . உடம்பு பலத்துக்கு சூப் வைத்து குடியுங்கள் . இதுவரை செய்த நாறல் வேலைகள் போதும். சரியாக சொன்னீர்கள். இவரை சுமா கும்பல் எப்பவோ கழற்றி விட்டார்கள் , இந்தால் இப்பவும் தான் இருக்கிறன் என்று சொல்கிறாராம்
  5. இலங்கை அரசியல்வாதிகளை விட பிக்குகளை இந்த பேச்சுக்குள் இழுப்பது நல்ல விடயம் . யார் என்ன தீர்வுக்கு வந்தாலும் அதனை இலகுவாக உடைக்க கூடியவர்கள் இந்த பிக்குகள் . இந்தியா என்பது வைகோர் பட்டைடை நாய்க்கு சமம் . எந்த விமோசனமும் தமிழருக்கு இல்லை. வடக்கு கிழக்கு இரண்டையும் இணைத்து குறைந்த பட்சம் தீர்வு திடடத்தை எடுத்து , அதனை வலுப்படுத்தி கொண்டு எமது முற்று முழுதான சமஷ்டி தீர்வுக்கு போக வேண்டும் . இந்த வகையில் யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும் . இதன் அடுத்த கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு போய் மாணவர்கள் மற்றும் எல்லா தமிழ் சமூக அமைப்பினருடனும் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை முதலில் வரையறை செய்யவேண்டும் . அதன் பின்னர் சிங்கள மற்றும் அரசாங்கத்துடன் பேச போக வேண்டும் . தமிழ் மக்கள் இப்போதைக்கு என்ன வேண்டும் என்பதை இறுக்கமாக பேசவேண்டும் . சம்பந்தன் மற்றும் சுமாவை , தவிர்க்க வேண்டும்.
  6. சிறுவர்களின் திறமையையும் அவர்களின் திறன்களையும் வளர்த்தெடுக்கும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று அமைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் அரச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை உள்ளடக்கி இந்தச் செயற்றிட்டத்தைப் பலப்படுத்துவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கின்றது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களும், சிறுவர்கள் மீதான துர்நடத்தைகளும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், இவ்வாறானதொரு திட்டம் காலத்தின் தேவையாகவும் மிக அவசியமானதாகவும் தவிர்க்கப்பட, முடியாததாகவும் அமைகின்றது. ஆனால், இந்தக் கட்டமைப்பின் ஊடாக எவ்வாறான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்ற தெளிதலை - திட்டத்தை இப்போதே வரையறுத்துக் கொள்வது சாலச்சிறந்தது. பாடசாலைச்சிறார்கள் மீதான பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் என்பன சர்வ சாதாரணமாக நடைபெறும் விடயங்களாக இன்று மாறிவிட்டன. குடும்பம்,பாடசாலை, சமூகம் என்று சிறார்களுக்குப் பாதுகாப்பான சூழல் என்று எதையும் வரையறுத்துக் கூற முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாலியல் துஷ்பிரயோகம் என்ற கொடுமையை நாம் ஒரு செய்தியாகக் கடந்துவிடுவோம். ஆனால், இந்தக் கொடுமையால் பலநூறு சிறார்கள் தம் வாழ்வை, உள அமைதியை, எதிர்காலத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அல்லாமலும், வடக்கு மாகாணத்திலும் தேசிய ரீதியிலும் போதைப்பொருள்கள் இன்று பாடசாலைக் கட்டமைப்பில் மிகச் சாதாரணமாக ஊடுருவியுள்ளன. போதைப்பொருள் விற்பனை முகவர்களின் மிக இலகுவான இலக்காக பாடசாலைகளும் மேலதிக வகுப்புகளுமே அமைந்துள்ளன. பதின்ம வயதுச்சிறார்களை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பலநூறுபேர் பாடசாலைகளுக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் சிறுவர் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்படும் இந்தப் புலனாய்வுப் பிரிவானது, சிறுவர்களின் நடத்தைகள் மற்றும் அவர்களின் இதர விதான செயற்பாடுகள் தொடர்பில் தீவிர கவனத்துடன் செயற்பட வேண்டும். அதேநேரம், சிறுவர்களை மாத்திரம் மையப்படுத்தியதாக இந்தக் குழுவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படல் ஆகாது. மாறாக சிறுவர்களை பாடசாலைகளுக்கு அருகிலும், சமூகத்திலும் அணுகுபவர்கள் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். அதுவே சிறுவர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான ஆத்ம நடவடிக்கையாக அமையும். ஒரு கை தட்டினால் ஓசை வராது. அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள சிறுவர் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடுகளும் அத்தகையனவே. இந்தப் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் என்பன வெற்றிபெற வேண்டுமாயின், அவர்களுக்கு முழுப்பலமாகப் பொலிஸார் செயற்பட வேண்டும். ஏனெனில் புலனாய்வுப் பிரிவில் இடம்பெறப்போவது ஆசிரியர்களும் அதிபர்களுமே. போதைப்பொருள் மாபியாக்கள் அண்மைக்காலமாக ஆயுத கலாசாரத்துக்குள் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், பொலிஸார் வழங்கும் ஆதரவும் பாதுகாப்பும்தான் இந்தப் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்துவதுடன் வினைத்திறனாகச் செயற்படவும் வைக்கும். https://newuthayan.com/article/"சிறார்களைக்_காக்க_ஒரு_கட்டமைப்பு"
  7. ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வின் காரணமாக, யாழ்ப்பாண இளைஞர்களிடத்தில் குறிப்பாக 17 தொடக்கம் 25 வயதுடையவர்களில்" இருதய வால்வில் கிருமித்தொற்று ஏற்படுகிறது என்றும், இதனால் இருதயம் செயலிழப்பது அதிகரித்துள்ளது என்றும் மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஊசிமூலம் போதைப்பொருளை நுகர்வதால் எய்ட்ஸ் தொற்று இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது அல்லது அதிகரிக்கும் அத்தனை ஏதுநிகைளும் ஏற்பட்டிருக்கின்றது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டிருந்தன. இந்தத் தகவல் வெளிப்பட்டு, ஓரிரு நாள்களில் அதே சாரப்பட்டதான இருதயநோய் தொடர்பான எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது. இவ்விருதகவல்களையும் வைத்து அச்சமடைந்தாலும் 'பதற்றமடைந்தாலும், அதில் ஆச்சரியத்துக்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை. வடக்கு மாகாணத்தில், குறிப்பாகயாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு ஆட்படுவது சாதாரணமான விடயமாக இன்று மாறிவிட்டது. சிறுவர்கள், யுவதிகள், இளைஞர்கள் என எந்தவொரு வயதுப் பிரிவையும் 'சமூகப் பிரிவையும் போதை மிக இலாவகமாக இரையாக்கி நகர்ந்து கொண்டிருக் கின்றது. சமூகச் சீரழிவுகள், கலாசாரச் சீரழிவுகள் என போதையின் பிடியில் நின்று உழலும் இளைஞர் களையும், யுவதிகளையும் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புகின்ற போதிலும், எந்த வொரு காத்திரமான முன்னேற்றமும் ஏற்பட்டதாகவில்லை. ஏனெனில், போதையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களைவிடவும், போதை இளைஞர்களிடத்தில் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. மட்டுமல்லாமல் மறுவாழ்வுக்கு உட்பட்டோர்கூட மீண்டும் மீண்டும் போதையின் பாதையில் பயணிக்கத் தலைப்படுவது பதிவுகளாக அமைந்திருக்கின்றன. போதைப்பொருள் பாவனை எவ்வளவுக் கெவ்வளவு சமூக மயப்படுகின்றதோ அவ்வளவுக்கவ் வளவுநாட்டின் அத்தனைதுறைகளும் நெருக்கடிக்குள் தள்ளப்படும். சுகாதாரத்துறை மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால், சுகாதாரத் துறையின் முழுமையான சரிவுக்கு போதையின் அதீத ஊடுருவல் ஒரு காரணமாக அமையும். ஆதலால், மேற்குறிப்பிட்ட செய்திகளும் தகவல்களும் இத்துடன் முற்றுப்பெறும் விடயமல்ல. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதாயின் இதுவொரு ஆரம்பப்புள்ளி. எந்தவொரு நாட்டில் போதைப்பொருள் தலைவிரித்தாடுகின்றதோ அங்கு மருத்துவத்துறைக் கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கும். பணம் தண்ணீராகச் செலவாகும். இதுவே யதார்த்தம். கஞ்சாவைச் சட்டபூர்வமாக்கிய உருகுவே, இன்று கஞ்சாவைவிற்றுக் காசாக்கியதை விடவும் கூடுதலான நிதியை போதையால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவத் தேவைக்காகச் செலவிட்டுக் கொண்டிருக் கின்றது.இதனால்தான் அந்த நாடும், கிட்டத்தட்ட அதேபோன்றதான கொள்கையை உடைய தென்ன மெரிக்கக் கண்டமும் அபிவிருத்தியை அடைந்து விடவில்லை. ஆதலால், இலங்கையில் கட்டற்று ஊடறுத்துத் திரியும் போதைப்பொருள், மருத்துவத்துறையை ஆட்டம்காணச் செய்வதுடன், கஜானாவையும் காலிசெய்யும். இது தொடர்பான தகவல்கள் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து அணிவகுத்துவரும். எடுக்கப்படும் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்து அதன் 'அடைவு காலம்' வித்தியாசப்படும், அவ்வளவே. https://newuthayan.com/article/போதையின்_பாதையில்!
  8. மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி ஞானேந்திரன் லெக்சன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானியாக மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் அவர்கள் தனது முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழை பெற்றுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் கற்றதோடு உயர்தரத்தில் தொழில்நுட்பக் கல்வியை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். கடந்த வருடம் கொழும்பு ரத்மலான விமான பயிற்சி சேவையில் இணைந்து முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றுதலை பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/ மன்னார்_மாவட்டத்தின்_இரண்டாவது_இளம்_விமானி!
  9. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம், இச்சட்டமூல முன்மொழிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரபல துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கியதாக இயங்கிவரும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம். கடந்த ஒக்டோபர் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இச்சட்டமூலமானது பயனர்களின் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் தனியுரிமைசார் சுதந்திரம் போன்றவற்றில் பாதிப்பேற்படுத்தக்கூடியவாறான சரத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது. இச்சட்டமூலத்தின் சரத்துக்கள் அரசியமைப்புக்கு ஏற்ப அமைந்திருக்கின்றதா என ஆராய்ந்த உயர்நீதிமன்றம், அவற்றில் அநேகமானவை மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளை நிவர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதன்படி இச்சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார்ந்தோர் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளமையை வரவேற்கின்றோம். அதேவேளை இக்கலந்துரையாடல்கள் வெளிப்படையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இச்சட்டமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழுவின் ஊடாக அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்படுவதானது ஏனைய அனைத்து சரத்துக்களுடனும் ஒப்பிடுகையில் மிகப்பாரதூரமானதாகும். அதுமாத்திரமன்றி 'பொய்யான கருத்துக்கள்' மற்றும் 'தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்' போன்ற பொதுவான சொற்பதங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது இச்சட்டமூலம் அதிகாரிகளால் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றது. மிகமுக்கியமான சட்டங்களைத் தயாரிக்கும்போது உரிய நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன பின்பற்றப்படவேண்டும் எனவும், குறிப்பாக சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். ஆகவே நிகழ்நிலைக்காப்பு சட்டமூல முன்மொழிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது (நா.தனுஜா) https://www.virakesari.lk/article/172239
  10. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரொருவர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை (21) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொண்ட போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போதை மாத்திரையினை 250 ரூபாவிற்கு நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார். குறித்த சந்தேக நபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை (22) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/172254
  11. இமாலயபிரகடனத்தை கையளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் இந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ள வலிகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளது. பன்முகத்தை தன்மை குறித்த ஈடுபாடுகளிற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களை கொண்ட பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தோம் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செல்வாக்கு செலுத்தக்கூடிய எவரும் இமாலய பிரகடனம் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்கான அதன் ஆணை குறித்து அறிந்துகொள்ளச்செய்வதே இதன் நோக்கம்.எனவும் கனடா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் படங்களும் இந்த சந்திப்பும் கனடா தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கடுமையான உணர்வு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை நாங்கள் அறிகின்றோம் நாங்கள் நேர்மையாகவே இது குறித்து கவலையடைகின்றோம் இந்த வேதனையை பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின்மூலம் வேதனையை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை இமாலய பிரகடம் மற்றும் அது தொடர்பான சந்திப்புகளிகளின் முக்கிய நோக்கம் இலங்கையின் சம்மந்தப்பட்ட பங்குதாரர்கள் அனைவரையும் உள்வாங்கி தமிழர்களிற்கான நிரந்தர அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் எனவும் கனேடிய தமிழ் காங்கிரஷ் தெரிவித்துள்ளது. நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் எவற்றிலும் ஈடுபடவில்லை அதற்கான பொறுப்பு தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களிடம் உள்ளது எனவும் கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172259
  12. பண மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டே இவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர்கள் இதற்காக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அறையொன்றை பெற்றிருந்தனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விளம்பரத்தின்படி நேற்று புதன்கிழமை (20) குறித்த இடத்துக்கு இரண்டு கொள்வனவாளர்கள் கார் மற்றும் ஜீப் ஒன்றை கொள்வனவு செய்ய வந்துள்ளனர். இதன்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை விற்பதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க முற்பணம் தருமாறு குறித்த அலுவலகத்திலிருந்த முகாமையாளரும் மற்றொருவரும் கொள்வனவாளர்கள் இருவரிடமும் கேட்டுக்கொண்டனர். இதன்படி, ஒரு கொள்வனவாளரிடமிருந்து ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் மற்றைய நபரிடமிருந்து மூன்று கோடியே முப்பது இலட்சம் ரூபாவும் பெறப்பட்டுள்ளது. பின்னர் பணத்தை பெற்ற அவர்களில் ஒருவர் குறித்த நிறுவனத்தின் அறைக்கு சென்று, வாகன திறப்பு மற்றும் ஆவணங்களுடன் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றார். இதனையடுத்து இரு கொள்வனவாளர்களும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணை நடத்திய பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 41, 43 மற்றும் 65 வயதுடைய பன்னிபிட்டிய, மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். https://www.virakesari.lk/article/172196
  13. மன்னார் மாவட்டத்திற்கான மாவட்ட செயலாளராக கே.கனகேஸ்வரன் இன்றைய தினம் ( 21.12.2023 ) நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் அசோக அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும் மன்னார் முல்லைத்தீவு அபிவிருத்தி குழுவின் தலைவர் கே. காதர் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை (23.12.2023) காலையில் பதிவியேற்கவுள்ளார். 1998 முதல் 2003 செப்டெம்பர் வரை கொடிகாமம் போகட்டி அ.த.க. பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் 2003 முதல் 2004 ஓகஸ்ட் வரை நிர்வாக சேவைக்கான பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின்னர் அவர் 2004 ஓக்டோபர் முதல் 2015 ஆண்டு மே மாதம் வரையில் தொழில் திணைக்களத்தின் பிரதித் தொழில் ஆணையாளராகப் பணியாற்றினார். 2015 ஜூன் முதல் 2019 செப்டெம்பர் வரையில் மருதங்கேணிப் பிரதேச செயலாளராகவும் 2019 ஒக்டோபர் முதல் 2019 டிசம்பர் வரையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராகவும் அவர் பணியாற்றினார். 2019 டிசம்பர் 16 முதல் 2023 நவம்பர் 21 வரையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராகப் பணியாற்றிய வேளை நிர்வாக சேவை விசேட தரத்துக்குத் தேர்வாகிய அவர் 2023 நவம்பர் 22 முதல் தற்போது வரையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றுகின்றார். இந்தநிலையில் நாளைமறுதினம் (23) சனிக்கிழமை முதல் மன்னார் மாவட்ட அரச அதிபராகப் பதவியேற்கும் வகையில் இன்று 21 அவருக்கு நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/மன்னார்_மாவட்டச்_செயலாளராக_ கே.கனகேஸ்வரன்_நியமனம்!
  14. இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவும் இணைந்து வெளியிட்டுள்ள 'இமய மலைப் பிரகடனத்தையும்' அவை நிராகரித்துள்ளன. அந்தப் பிரகடனம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கவில்லை என்று 6 புலம்பெயர் அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை தமிழர் தாயகத்தில் செயற்படும் அரசியல் தரப்புகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும். ஈ.பி.டி.பி.யும் மாத்திரமே இந்தச் செயற்பாட்டை வரவேற்றுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன இதனை நிராகரித்துள்ளன. தனிப்பட்ட தனி சிலரின் சுயலாப முயற்சிக்காக இது முன்னெடுக்கப்படுவதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, ரணில் அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்புச் செய்யும் முயற்சி என்று இதைச் சாடியுள்ளது. பல எலிகள் சேர்ந்தால் புற்றெடுக்க முடியாதென்பார்கள். அதேபோன்று, இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியிலும் பலரும் இப்போது ஈடுபட்டிருப்பதைக் காண முடிகின்றது.இது குட்டையை குழப்பும் முயற்சியே. பௌத்த-சிங்களப் பேரினவாதிகளுக்கும் அதுவே தேவையாக இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்த வரையில் அடுத்த தேர்தலுக்கான வியூகமாக இந்த முயற்சிக்கு முட்டுக்கொடுக்கின்றார். புலம்பெயர் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் ஒரே கோட்டில் ஏமாற்ற முற்படுகின்றார். அவரது இந்த முயற்சிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஆரவு கொடுக்கின்றனர். இதில் இரா.சம்பந்தனும், எம். ஏ.சுமந்திரனும் நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கையில் ரணிலின் பின்னால் திரிந்தவர்கள். ரணிலின் எல்லா முயற்சிக்கும் கண்மூடி ஆதரவளித்தவர்கள். ஒட்டு மொத்த தமிழ் தலைவர்களும் பௌத்த-சிங்கள ஆட்சியாளர்கள் ஏமாற்றுவார்கள் என்று அவர்களை எச்சரித்தபோதும் அதையெல்லாம் புறக்கணித்து ரணிலுக்கும் தோள்கொடுத்தனர். இறுதியில் என்ன நடந்தது? இப்போதும் உலகத் தமிழர் பேரவை என்ற 'கடிதத்தலைப்பு' அமைப்பினதும், சிங்கள மக்கள் மத்தியிலேயே அறியப்படாத சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினருடனும் இணைந்து தீர்வு முயற்சியில் தலையைப் போடுவதோ அல்லது அவர்களது இமயமலைப் பிரகடனத்தை ஏற்பதோ மீண்டும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் செயலே. புலம்பெயர் சமூகத்தின் ஆதரவு தேவைதான். தேரர்களின் ஆதரவும் தீர்வு முயற்சிக்கு அவசியம்தான். அதைச் செய்வதற்கான வழி நேர்வழியில் இருக்கவேண்டும். அதைவிட கோடிப்புறத்துக்குள் கூடிக்கதைத்துவிட்டு இதுதான் பிரகடனம் என்று சொல்லி அதைத் தமிழர்கள் தலையில் கட்டநினைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. https://newuthayan.com/article/இனியும்_மிளகாய்_அரைக்காதீர்
  15. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்த விடயத்தில் கனடா ஒருபடி மேற் சென்று' இலங்கையில் இறுதிப்போரின்போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர்' என்று தீர்மானமும் நிறைவேற்றியிருக்கின்றது. கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கப் பிரதிநிதிகள்தான் அன்றுமுதல் இன்றளவும் குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் இந்தக் குரலால் ஈழத்தமிழர்களுக்காக எதையாவது சாதிக்க முடிந்ததா? என்ற கேள்வியும் இங்கெழுவது தவிர்க்க முடியாததாகின்றது. தமிழர்களுக்கு எதிரான நெருக்குவாரங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களின் வாழ்விடங்களில் அவர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத் திணிப்பு நாளுக்குநாள் வேகம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. தமிழர்களின் காணிகள் அடாத்தாகக் கையகப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன, அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில்தான் இருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் இன்னும் தொடர்கின்றன. எனில், அமெரிக்க கனேடியப் பிரதிநிதிகளின் கொழும்புக்கு எதிரான இந்த நிலைப்பாடு எத்தகையது? இவர்களின் எதிர்ப்பால் கொழும்பின் மீது கனதியான தாக்கத்தைச் செலுத்தமுடியவில்லை என்றால், இந்த எதிர்ப்பின் பாற்பட்ட பயன்தான் என்ன? இந்த இடத்தில்தான், 'வல்லரசுப் பிரதிநிதிகளின் ராஜதந்திரத்தின் பலவீனம் பட்டவர்த்தனமாகின்றது. சர்வதேசத்தில் தனக்கிருக்கும் எதிர்ப்பைச் சமாளிக்க, தனக்கு ஆதரவானவர்களை ஒன்றிணைக்கும் போக்கில் கொழும்பு ஒப்பாரும் மிக்காரும் இல்லா நிலையிலேயே செயற்பட்ட, செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றது. அதேபோல், கொழும்புக்கு எதிரான ஈழத்தமிழர்களின் ஆதரவு மனோநிலையில் உள்ள இத்தகைய பிரதிநிதிகள் நாடுகளைக் கடந்து கட்சிகளைக் கடந்து ஒன்றுபட்டு ஒரு பொதுப் பொறிமுறையூடாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருந்தால்,அந்தக் குரல் இலங்கையால் கேட்கப்படாவிட்டாலும் சர்வதேசத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகும் விடயமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈழத்தமிழர்களுக்கு நீதிகேட்டவர்கள் முதலில், எமக்கு ஆதரவான 'வல்லரசுப் பிரதிநிதிகளின் குரலை ஒன்றுசேர்க்கவேண்டும். அவர்கள் தம் எதிர்ப்பை நிலைப்பாட்டை பொதுக்கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வெளிப்படுத்த உரிய வழிவகைகளை ஏற்படுத்தவேண்டும். இதற்கான ஆரம்பப் படிநிலை கொஞ்சம் கடினம்தான். ஆனால் ஆரம்பித்தால் அதன் செயற்பாட்டு வேகம் வேறு ரகத்தில் இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளும் தாக்கங்களும் தனித்து நிற்கும். செய்வார்களா (ஐ) #uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking
  16. தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் அவரது ஆட்சிகாலத்தில்தான் கொலைகள் அரங்கேறின. கையில் வேண்டுமானால் இரத்தக்கறை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அலுமாரியில் நிச்சயம் எலும்புக்கூடுகள் இருக்கும் - என்று ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:- பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய மஹிந்தராஜபக்ச, தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என்றும் எம்முடன் இணையுங்கள் என்றும் கூறியுள்ளார்.2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரது சகோதரர்தான் பாதுகாப்புச் செயலாளர். லசந்த விக்கிரமதுங்க, தாஜுதீன், பிரதிப் எக்னெலிகொட, ரவிராஜ், சிவராமன், போத்தல ஜயந்த உள்ளிட்டவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். 2005ஆம் ஆண்டு முதல்தான் இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன. மஹிந்தவின் கையில் இரத்தக்கறை இல்லாமல் இருக்கலாம். அவரின் அலுமாரியில் எலும்புக்கூடுகள் இருக்கும். இந்த கொலைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மைத்திரி-ரணிலின் கூட்டாட்சியில் நீதி கிடைக்கவில்லை. மைத்திரி-ரணிலின் ஆட்சியின்போது ராஜபக்சக்களின் வழக்குகள் மறைக்கப்பட்டன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஷானி அபேசேகரவுக்கு எல்லாம் தெரியும். அதனால்தான் அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்தக் கொலைகள் அரசியல் படுகொலைகளாகும். லசந்த, தாஜுதீன், ரவிராஜ் போன்றவர்களை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்' என்றார்.(ஐ) #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate #colombo
  17. மாவீரர் நாள் நினைவேந்தல் நிறைவுக்கு வந்து ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனால் மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக, மாவீரர்நாளால் உண்டான சலசலப்பு மாத்திரம் இன்னமும் குறையவில்லை. மாவீரர் நாளைப் பயன்படுத்தி எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம்,பெளத்த - சிங்கள மக்களை உசுப்பேத்தலாம் என்று தென்னிலங்கை தினமும் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் மாவீரர் நாளை வைத்துக்கொண்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் இன்னமும் அடங்குவதாயில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னக்கோன், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொடர்ச்சியாக மாவீரர் நாள் தொடர்பில் பேசி வருகின்றனர். 'மாவீரர் நாளை கடைப் பிடிக்க அனுமதித்தமை கவலைக்குரியது', 'மாவீரர் நாளை கடைப்பிடித்த அனைவரையும் கைது செய்வோம்', ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் மீளுருவாக்கப்படுவர்', 'மாவீரர் நாளை கடைப்பிடித்த அனைவரையும் கைது செய்யுமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் பணிப்பு' இந்தச் செய்திகளே தென்னிலங்கையில் அண்மைக்கால பேசுபொருள். அடுத்த ஆண்டு தேர்தலுக்கு நாடு முழுதும் தயாராகி வருகின்றது. நாட்டின் வங்குரோத்து நிலைமையிலிருந்து மீட்சியில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்வைத்து துணிவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு யாரும் தயாரில்லை. எனவே அடுத்த ஆண்டு தேர்தலுக்காக மீண்டும் இனவாதத்தைக் கையிலெடுப்பதற்கு தென்னிலங்கை தயாராகிவிட்டது. அதையே இந்தச் செய்திகள் கட்டியம் சொல்கின்றன. விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றியீட்டியதை வைத்து ராஜபக்ச குடும்பம் அரசியல் செய்தது. ஒரு கட்டத்தில் புலிகளைப் பயன்படுத்தாமல் அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அதனால் அடிக்கடி ராஜபக்சக்களால் புலிக்கதை சொல்லப்பட்டு வந்தது. இப்போதும் தேர்தல் காய்ச்சல் என்றவுடன் மீண்டும் புலிக்கதை அரங்கில் பேச ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மாவீரர் தினம் தமிழர் தாயகத்தில் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றது. மாவீரர் நாள் இங்கு கடைப்பிடிக்கப்பட்டமையால் எந்தவொரு குழப்பமும் ஏற்படவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இன முறுகல் தோன்றவில்லை. மாவீரர் நாளைக் கடைப் பிடித்த மக்கள் தங்கள் உறவுகளை அமைதியாக நினைவுகூர்ந்து விட்டு தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டனர். புலிகளை மீளுருவாக்குவது பற்றிச் சிந்திப்பதற்கோ அது தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதற்கோ இங்கு எவருமில்லை. ஆனால் சிங்கள அரசியல்வாதிகளே, இங்கு நடக்காத விடயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி தங்கள் வாக்கு ஆதாயத்துக்காக இவற்றைக்கிளறிக் கொண்டிருக்கின்றனர். மாவீரர்நாளை கடைப்பிடித்தமையால் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவொரு குந்தகமும் ஏற்படவில்லை. மாறாக மாவீரர்தினத்தைக் காரணம் காட்டி தமிழர் தாயகத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகளைத்தான் ஏற்படுத்தியிருந்தார்கள். இப்படியானதொரு சூழலில் மாவீரர் நாளை வைத்து அரசியல் செய்து சிங்கள மக்களிடத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு சிங்கள அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இந்த நாட்டில் இன்றுவரை தீர்க்கமுடியாத இனப்பிரச்சினைக்கு வித்திட்டதும் இவ்வாறுதான். அமைதியாக இருக்கும் மக்களிடத்தில் தங்களின் வாக்குகளுக்காக இனவாதத்தை விதைத்துவிட்டு இன்றுவரை அதைவைத்தே அரசியல் அறுவடை செய்கின்றனர். இதேபோக்கு இனியும் தொடர்ந்தால், நாடு இப்போதிருப்பதைக் காட்டிலும் மோசமான நிலைக்கே செல்லும். இதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணர்ந்தால் சரி. [எ] https://newuthayan.com/article/இனவாத_விதைப்பும்_அரசியல்_அறுவடையும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.