Everything posted by karunya_02_09
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
நல்ல பயனுள்ள செய்திகளை தருவதற்கு மாறாக சரி தவறு என்பதை தாண்டி ஒருவர் தனிப்பட்ட இவ்வாறான விடயங்களை பொது வெளியில் செய்தியாக்குவது விரும்பத்தக்கது அல்ல. தலைப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
-
சதுரங்க வேட்டை
வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். - Karunya -
-
நான் உங்கள்... மின்கம்பம்
வழிவழியாய் வந்த மரங்களின் வாழிடம் எல்லாம் வலுக்கட்டாயமாய் பிடுங்கியதாய் வலுக்குது குற்றச்சாட்டு நடுகை வாரமென்று நட்டுவைத்த நாலுமரம் தளிர்த்த நாள் முதலாய் ஆறுதலாய் வந்தமர்ந்த காக்கைகளை காணவில்லை தனிமையோ தாழவில்லை. வாழ்க்கை வெறுத்துப்போன வௌவால்களின் தற்கொலைத் தளமானேன் விடிந்ததும் வீழ்வதறியா விட்டில்கள் விளையாடும் களமானேன் முடியவில்லை முறிந்து விடுகிறேன். . நாலு நாள் நாறட்டும் வீடெல்லாம்..... இப்படிக்கு..... நான் உங்கள் - மின்கம்பம் - By. Karunya
-
பெண்ணாய் பிறந்து விடடால்....
👍
-
வாய்ச் சொல்லில் வீரரடி
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்.. by Karunya.
-
வாய்ச் சொல்லில் வீரரடி
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...
-
கடவுள்
கடவுள் நடுச்சபை தன்னிலே உடுக்கை இழந்தவள் - இருகை எடுத்தே அழைத்தாலன்றி இடுக்கண் களையேன் - என்று வேடிக்கை பார்த்திருந்த நீரெல்லாம் என்ன கடவுள்...! கர்ணனின் கொடையையே அவன் வினையாக்கி அவன் வரங்களையே சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த நீரெல்லாம் என்ன கடவுள்...! துரோணரை வீழ்த்திடப் பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும் ஒரு பக்கச் சார்புடையீர் இப்படி உம் குற்றப்பட்டியல் கூடிக்கொண்டே போகிறதே நீரெல்லாம் என்ன கடவுள்...! அட..... நான் மறந்து தான் போய்விட்டேன் நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில் நரகுலத்துக்கே உரித்தான நாலைந்து பண்புகளை ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள் அந்தக் கடவுள்களே அறியா வண்ணம் by karunya
-
காருண்யா
உள்ளதை மறைத்து உள்ளவரோடே உறவாடும் ஊடக நரிகளின் உஷ்ணப் பேருமூச்சோ . வள்ளலார் வாக்கையே வசைபாடிய - நம் வம்சம் போக்கற்ற போலிச்சாமியார்களின் புகலிடம் ஆனது கண்ட பூமித்தாயின் கனல் முச்சோ மாட்டுக்கே நீதி தந்ததோன் - மண்ணில் மட்டற்ற மாசு புரிந்தார் பணம் செய்யும் மாயத்தால் மண்புளோராய் மாறி மானமின்றித் திரிதல் கண்டு வெட்கித் தன் விழி மறைத்த நீதித் தாயின் சின மூச்சோ சுழலத் தொடங்கிய மின்விசிறி என் சிந்தனைக்கு சுவரிடவே வழமை வாழ்க்கைக்குத் திரும்பியவளாய்...... காருண்யா