Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. நான் ஆங்கிலத்தில் எழுதி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் 32 பகுதிகளாக. அதன் எல்லாப் பகுதிகளினதும் லிங்க் இங்கு ஏற்கனவே கொடுத்துள்ளேன். சிங்களம் எனக்கு அறவே வராது . மிக மிக கொஞ்சம் தான் விளங்கும் R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference "The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtn School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s" in this regard. Some historians are toying with the concept that the legendary arrival of Vijaya is perhaps from Gujarat or Punjab. Prof T. W. Wikramanayake’s article gives data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference "Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake" in this regard. Also, Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”.
  2. "ஒரு தந்தையின் புலம்பல்" "முதுமையின் வாசலில் காத்து நிற்கிறேன் முதலடி வைத்து உள்ளே போக முறுக்கு மீசை கொஞ்சம் தளருது முழங்கால் மூட்டு வலிக்கத் தொடங்குது!" "தள்ளாட்டம் என்னில் வெள்ளோட்டம் பார்க்குது தனிமை என்னைத் தேடி வருகுது தத்துவம் போதிக்கும் பக்குவம் வருகுது தலை மயிரும் வெளுத்துப் போகுது!" "ஆடை மாற்றுகையில் அவதிப் படுகிறேன் ஆகாரம் எதோ கொஞ்சம் சமாளிக்கிறேன் ஆசை ஒன்றிலும் இல்லாமல் தவிர்க்கிறேன் ஆத்திரம் அடக்கி அமைதியாய் வாழ்கிறேன்!" "சாப்பிட எடுத்தால் கையும் நடுங்குது, சாதம் தெரியாமல் கீழே சிந்துது, சாந்தமான உன் முகம் ஏனோ சிவக்குது சாபம் இடுகிறாய் பழசினை மறந்து!" "பொறுமை கொண்டு புரிந்துணர்வு கொண்டு பொடியனாய் உன்னுடன் ஓடி விளையாடியும் பொய்கள் கூறி நிலாவினைக் காட்டியும் பொறுப்புடன் வளர்த்ததை எண்ணிப் பாராயோ?" "உன்னை குளிக்க வைக்க பட்டபாடு உறங்க வைக்க சொல்லிய கதைகள் உற்சாகம் கொடுக்க செய்த தந்திரம் உயிர் உள்ளவரை மனதின் மகிழ்வுகளே!" "முதுமை பார்த்து முகம் சுளிக்காதே முதிர்ந்து விழும் குருத்தோலையும் ஒருநாள் முழக்கம் செய்து சுடுசொல் கொட்டாதே முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்!" "சில நேரங்களில் ஞாபகம் மறக்கும் சினம் கொண்டு கேவலப் படுத்தாதே சிந்தித்து பார்த்தால் உண்மை அறிவாய் சிரசில் கைவைத்து அன்பு காட்டுவாய்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] View insights 139 post reach All reactions: 3You, உருத்திரசிங்கம் நாகேஸ்வரி and Indumathy Vadivel
  3. "சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் மறுநாள் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடினர் எனவும் துர்க்காதேவியின் அந்த சாதனைகள் தூரத்திலில்லாமல் ஒரே ஒரு ஒன்பது நாளிலேயே முடிந்து விட்டது எனவும் அம்மா எனக்கு ஒரு முறை கூறியது அப்பொழுது ஞாபகம் வந்தது. நான் அடுத்தநாள், பாடசாலை போனதும் என் சமய ஆசிரியர் இடம் எப்படி பராசத்தி ஒன்பது நாளில் சூரனை வென்றார் என பணிவாக கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். உங்களை எல்லாம் பாடசாலையில், இந்த ஆடைக் கோலத்தில் படிக்க விட்டதே போதாது, இப்ப கேள்வி ஒரு பக்கம் என என்னை உற்றுப் பார்த்தார். என் வகுப்பில் எல்லோரும் முழு நீள காற்சட்டை, சட்டை , கழுத்துப் பட்டி [tie], தோல் பட்டை [belt], சப்பாத்து என்று இருக்க, நான் அரைக் காற்சட்டை, சட்டை , வெறும் காலுடன் நிற்பது அவருக்கு ஒரு அருவருப்பு கொடுத்தது போல, விலகி நின்று பார்த்து விட்டு, மறுமொழியே தராமல் போய்விட்டார். இத்தனைக்கும் அவர் சமய ஆசிரியர்.! கடவுளின் முன் எல்லோரும் சமம் என்று போதிக்கும் ஆசிரியர்!! இவரை சொல்லி ஒரு குற்றமும் இல்லை, கூலி வேலை செய்து பிழைக்கும் திருநாளைப் போவார் நாயனார் என்ற நந்தனார், ஒரு நாள் சிதம்பரம் போனார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஒரு வேளை என் சமய ஆசிரியர் போல் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே மனவருத்தத்துடன் இறைவனை மனமுருகி பாடினார். ஆனால் அந்த இறைவன் கூட உள்ளே வா என்று கூப்பிடவில்லை, என்றாலும் நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்து, வெளியில் இருந்த தன்னை பார்த்து வழிபட வழி செய்தார் என்று ஒரு புராணம் கூறுவது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால் இவரைக் குறை சொல்லி என்ன பயன்? "நந்தியை விலத்தி-ஒரு அருள் காட்டியவனை-எனக்குப் புரியவில்லை? மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை கொன்றவனை-எனக்குப் புரியவில்லை?" "வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை நீ அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது! கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு நீ தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது!" பாடசாலை விட நேரடியாக, நான் யாழ் நூலகத்துக்கு போய், அங்கு உள்ள புத்தகங்களை பிரட்டி காரணம் அறிந்தேன். அப்ப தான் எனக்கு முயற்சியும் நம்பிக்கையும், உடலில் வலிமையையும் இருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம் என்ற துணிவு பிறந்தது! அது மட்டும் அல்ல பராசத்தி ஒன்பது நாளில் வென்றதுக்கு முக்கிய காரணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள் என்று அறிந்தேன். எனக்கு அப்படி கைகொடுக்க இந்த சமூகத்தில் அப்படி மூவர் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியா? ஆனால் இந்த நவராத்திரி சொல்லும் செல்வம், கல்வி, வீரம் , இவற்றில் குறைந்தது ஒன்றாவது இருந்தால் என் சாதனைகள் வெகு தூரத்தில் இருக்காது என்பதை உணர்ந்தேன்! இன்றில் இருந்து நவ [ஒன்பது] ஆண்டில், நான் அதை செய்யவேண்டும் என நான் சபதம் எடுத்தேன் சில ஆசிரியர்களின் போக்கு சரி இல்லை என்றாலும் , அங்கு நல்ல , எல்லோரையும் சமமாக மதிக்கும் சில ஆசிரியர்களும் இருந்தது எனக்கு ஒரு பலத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது, அதில் ஒருவர் தான் எமது வகுப்பு முதன்மை ஆசிரியரும் , உயிரியல் பாட ஆசிரியருமான 'சிவசேகரம்' ஆவார். அவர் என் நிலையை உணர்ந்து, பாடசாலை விட்டபின் பிரத்தியேக வகுப்பு என்னுடன் சேர்த்து சிலருக்கு இலவசமாக நடத்தினார், அவர் தனிய பாடங்களை மட்டும் இல்லாமல், அதனுடன் சேர்த்து மானிடமும் சொல்லித் தந்தார்! அது மட்டும் அல்ல 'சாதனைகள் எல்லா மனிதராலும் முடியும். அது உங்கள் கையிலேயே இருக்குது. நம்புங்கள்! நம்புங்கள்!! நம்புங்கள்!!! . உங்களை புரியுங்கள் முதலில், உங்களை தடுப்பவர்கள் உங்களை தாழ்த்துபவர்கள் எல்லோரும் ஒரு பயத்தில் தான், நீங்கள் வளர்ந்தால், சாதனை புரிந்தால் தங்கள் வண்டவாளம் வெளியே வரும், தாங்கள் இதுவரை சுரண்டி வாழ்ந்ததுக்கு முற்றுப் புள்ளி வரும். அந்தப் பயமே' என்று அடித்துக் கூறினார் . அது தான் என்னை உண்மையான மனிதனாக வளர்த்தது என்று சொன்னால் மிகையாகாது!! "மரத்தில் ஏறாதவன் பெருமை பேசுவான் மரத்தில் இருந்து விழவில்லை என்று! பறவைகள் எல்லாம் மழைக்கு ஒதுங்குது பருந்துவோ மேகத்துக்கு மேலே பறக்குது!" "பிரச்சனைகள் எப்பவும் பொதுவானது தான் சிந்தனையும் செயலும் வித்தியாசம் காட்டும்! தலைவருக்காக நீ காத்து இருக்காதே கண்ணாடியைப் பாரு நீயே தலைவன்!" நான் சாதாரண வகுப்பில் என் பாடசாலையில் மட்டும் அல்ல, என் மாகாணத்திலே முதலாவதாக வந்தேன், அது தான் என் முதல் சாதனை! எனக்காக பாடசாலை பரிசளிப்பு விழாவில் பல பரிசுகள் காத்திருந்தன, எனினும் பரிசளிப்பு விழாக்கு, மாணவர்கள் வரவேண்டிய உடை கட்டுப்பாடால், நான் அதற்குப் போகவில்லை, பரிசும் வாங்கவில்லை, அது எனக்கு ஒரு பொருட்டும் இல்லை. என் நோக்கம் எல்லாம் சாதனை! சாதனை!! சாதனை!!! உயர் வகுப்பில் மீண்டும் நானே முதலாவதாக வந்து, மீண்டும் பரிசளிப்பு விழாவையும் , முதல்வர் உட்பட சில ஆசிரியர்களையும் புறக்கணித்து, அவர்களுக்கு என் நன்றி ஒன்றையும் சொல்லாமல், பல்கலைக்கழகம் சென்றேன் . அப்ப தான் முதல் முதல் காக்கி துணியில் நீள் காற்சட்டை, சப்பாத்து எல்லாம் போட்டேன். என்னை பொல்லாதவன், முரடன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். கல்வியை, பண்பாட்டை மதிக்கத் தெரியாதவர்களையே புறக்கணித்தேன், ஆனால் அவர்கள் உலகத்துக்கு / பாடசாலைக்கு சரஸ்வதி பூசையை முன்னின்று நடத்தி, கல்வியின் பெருமையை இடித்து கூறுபவர்கள். அது தான் வேடிக்கை! நான் மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, அங்கேயே விரிவுரையாளராகவும் வந்து விட்டேன்! சாதனைகள் தூரத்தில் இல்லை! எல்லாம் அருகருகே ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டு இருந்தன. பல்கலைக்கழக வட்டாரத்திலும் என் மதிப்பு கூடிக் கொண்டே போனது. இன்று நான் சபதம் இட்டு நவ ஆண்டு. நான் படித்த பாடசாலை அதிபர் என்னை சந்திக்க வெளியில் காத்து நிற்கிறார். அவரின் வேண்டுகோள் பரிசளிப்பு விழாவுக்கு தலைமை தங்க வேண்டும் என்பதே என அறிந்தேன். நான் அவரை சந்திக்க, அல்லது நான் யார் என்பதை காட்டிட விரும்பவில்லை. என்றாலும் அவருக்கு ஒரு செய்தியை என் துணை விரிவுரையாளர் மூலம் அனுப்பினேன். 'பாடசாலை பரிசளிப்பு விழாவுக்கு ஒரு சீருடையுடன் மாணவர்களை அழைப்பதில் தவறு இல்லை, ஆனால் அந்த வசதி இல்லாத, ஆனால் திறமையாக சித்தி அடைந்து பரிசு பெறுபவர்களுக்கு, பாடசாலை தங்கள் நிதியில் இருந்து, சீருடை முழுமையாக கொடுத்து கௌரவப் படுத்தவேண்டும். சரஸ்வதி பூசைக்கு செலவழிக்க எப்படி பணம் சேர்த்தீர்களோ அப்படியே இதற்கும் சேர்க்கலாம்' என்று எழுதி இருந்தேன்! எந்த பரிசளிப்பு விழா , என்னை உடை காரணமாக நிராகரித்ததோ, அதே பரிசளிப்பு விழாவில் இன்று எனக்கு கம்பளி வரவேற்பு! உலகம் வேடிக்கையானது , அதில் மனிதர்கள் பாவம் நடிகர்களே !!. இதை விட எனக்கு இனி ஒரு சாதனை வேண்டுமா ?, அந்த, என் கடவுள் 'சிவசேகரத்தை' தேடினேன், ஆனால் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார் என்ற செய்திதான் வந்தது. நான் முதல் பிள்ளையாரையோ சரஸ்வதியையோ வணங்காமல், சிவசேகரத்தை அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என்று என் பேச்சை தொடங்க, அப்ப தான் அந்த முதல்வருக்கும், சமய ஆசிரியருக்கும் 'நான் யார்' என்று தெரிந்தது. அவர்கள் நடிகர்கள் தானே. மௌனமாக எழும்பி அவர்களும் அந்த வணக்கத்தில் பங்கு பற்றினார்கள்! சாதனைகள் தூரத்திலில்லை! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. "சிந்து சம வெளி மக்களின் கேத்திர கணித அறிவு" சுல்ப சூத்திரத்தில் (Shulba Sutras, 800-200 BC) விவரிக்கப் பட்ட கேத்திர கணித கொள்கைகளே இந்தியா உப கண்டத்தில் கணிதத்தின் ஆரம்பமாக முதலில் [அதிகமாக] கருதப்பட்டது. பலி பீடங்களை அமைப்பதற்கான விதிகளை உரைக்கும் இந்த சுல்ப சூத்திரம், வேதத்தின் [Vedas] ஒரு பிற்சேர்க்கை ஆகும். கணித ரீதியாக மிக முக்கியமான நாலு சுல்ப சூத்திர பகுதிகள் பௌத்தயானா [Baudhayana, 800 BC)], மானவ [Manava, 750 BC], அபஸ்தம்பா [Apastamba, 600 BC], கட்யயன [Katyayana, 200 BC] போன்றவர்களால் தொகுக்கப் பட்டது. இவர்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் இந்தியாவின் முதல் கணிதக் குறிப்பை வழங்கியவர் பெளத்தயானா ஆகும். 'மூலை விட்டத்தின் பக்க அளவில் அமைந்த பரப்பானது, மற்ற இரு பக்கங்களின் நீள அளவுகளில் அமைந்த பரப்புக்குச் சமம்’ ["A rope stretched along the length of the diagonal produces an area which the vertical and horizontal sides make together"] என்பது இவரது அற்புதமான கணிதச் சிந்தனையாகும். இந்தக் குறிப்பில் தோன்றும் வடிவம், செவ்வகம் என பௌத்தயானா வெளிப்படையாகக் குறிப்பிட வில்லை. எனினும், அந்தக் குறிப்பில் செவ்வக வடிவம் மறை முகமாகத் தோன்றுவதை நாம் உணரலாம். எப்படியாயினும் பௌத்தயானா உண்மையில் செவ்வக வடிவைத் தான் குறிப்பிட்டாரா என்பது இன்னும் ஒரு ஆய்வுக்குரிய கேள்வியாகவே விளங்குகிறது. இவர் வழங்கிய மற்றொரு குறிப்பில், ‘ஒரு சதுரத்தின் குறுக்களவில் அமைந்த பரப்பானது, அதன் பரப்புக்கு இரு மடங்காக அமையும்’ என மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்தச் சிந்தனை, இரு சமபக்க செங்கோண முக்கோணங்களுக்கான பைத்தாகரஸ் தேற்ற உண்மையை வெளிப் படுத்துகிறது. இந்த தேற்றத்தை பயன் படுத்தியே, யாக குண்டங்கள், பலிபீடங்கள் போன்ற வழிபாட்டு முறைகளுக்குப் பயன்படும் கட்டமைப்புகளை இவர் ஏற்படுத்தினர். மானவ பெரும்பாலும் ஒரு வேதகால குருவாகவே காலம் கடத்தினார். இவரின் சூத்திரம் மற்றவை போன்று அவ்வளவு முக்கியம் பெறவில்லை. எனினும் இவரின் சுத்திரத்தில் π இன் பெறுமானம் = 25/8 = 3.125 என குறிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அபஸ்தம்பா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த, இந்தியக் கணித மேதை. தனக்கு முன் தோன்றிய பௌத்தயானாவைப் போன்றே, தனது கணிதச் சிந்தனைகளை 'சுல்ப சூத்திரம்’ என்ற குறிப்புகளில் வழங்கினார். தனது கணிதக் கண்டு பிடிப்புகளை, யாக குண்டங்களின் வடிவமைப்புக்கும், சிலை, தூண், கோபுரம் போன்ற தெய்வ வழிபாட்டுக்குத் தேவைப்படும் பொருட்களை நுட்பமாக அமைப்பதற்குமே பெரும்பாலும் வழங்கியிருந்தார். இந்தச் சுல்ப சூத்திரக் குறிப்புகளில், கேத்திர கணிதம் சார்ந்த கணித சூத்திரங்களையும், அமைப்பு முறைகளையும் அபஸ்தம்பா வழங்கியிருந்தார். குறிப்பாக, கொடுக்கப் பட்ட வட்டத்தின் பரப்பிற்கு இணையான சதுரத்தைக் கண்டறிந்ததும், இரண்டின் மூல வர்க்கத்துக்கான அருமையான சூத்திரத்தை, √2=1 + 1/3 + 1/(3×4) - 1/(3×4×34) என வழங்கியதும் ஆகும், இது ஐந்து தசம தானங்களுக்கு [1.4142156861] சரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மிகச் சிறந்த கணிதப் படைப்புகளாக, இது இன்றும் விளங்குகிறது. பலி பீட அமைப்பை பற்றி ஒன்பது நூல்கள் எழுதியுள்ள கட்யயன, அதில் நீள் சதுரம், செங்கோன முக்கோணம், சாய்சதுரம் போன்றவற்றை கணித ரீதியாக நன்கு கையாண்டு உள்ளார். எப்படியாயினும் கிரேக்கர்கள் போல தமது தேவை அல்லது நாகரிக வளர்ச்சி நிமித்தம் கணிதத்தை ஆராய்வு செய்தார்களா அல்லது சமய சடங்குகளுக்காக, அதில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க அல்லது அதை ஒரு ஒழுங்கு படுத்த மட்டுமே கணிதத்தை ஆராய்வு செய்தார்களா என்று எமக்குத் தெரியா. இந்த சூத்திரத்திற்கு முன்பு, எந்த பதியப் பட்ட கேத்திர கணித அறிவும் கிடைக்காததால், மேற்கு ஆசியாவே இந்த இந்தியாவின் கணித சிந்தனைக்கு மூலமாக இருந்தது இருக்கலாம் என சில அறிஞர்கள் பரிந்துரைத்தார்கள். எனினும், சிந்து சம வெளி நாகரிகத்தின் எச்சங்கள் இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதியிலும் இன்றைய இந்தியாவின் வட மேற்கு பகுதியிலும் கடந்த நூற்றாண்டின் பகுதியல் கண்டு பிடிக்கப்பட்டது. இது ஒரு சிலரின் சிந்தனையை அடியோடு மாற்றி அமைத்தது. இந்த சிந்து சம வெளி நாகரிக அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்படாமல் இருந்து இருந்தால், இந்தியச் சரித்திரம் வேதகாலத்தில் இருந்துதான் தொடங்கியது என்னும் தவறான வரலாறாக இன்னும் நம்பப்பட்டு கொண்டு இருக்கும். அது மட்டும் அல்ல, இந்திய வரலாறே ஆரியமயமாக்கப் பட்டிருக்கும். அந்த கண்டு பிடிப்பு சுல்ப சூத்திரத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கேத்திர கணிதத்தைப் பற்றி அதிநவீன புரிதல் கொண்ட ஒரு நாகரிகம் அங்கு இருந்ததை உலகத்திற்கு எடுத்து காட்டியது. பிந்திய வேத காலத்தில் கடைப் பிடித்த கேத்திர கணித பயிற்சிக்கும் சிந்து சம வெளி நாகரிகத்தில் கடைப்பிடித்த கேத்திர கணித பயிற்சிக்கும் ஒரு தொடர்பு இருந்ததா என உறுதிப் படுத்துவது கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. எப்படியாயினும் முன்னைய சிந்து வெளி மக்களால் பயிற்சிக்கப் பட்ட கேத்திர கணித அறிவு, அவர்களை வென்று அல்லது காலநிலை மாற்றத்தால் அல்லது வேறு எதாவது காரணத்தால் அல்லது இவைகளின் தொகுப்புகளால் கங்கை நோக்கி பயணம் செய்த ஆரியர்களை இந்த சுல்ப சூத்திரங்களை எழுத தூண்டி இருக்கலாம்?. அதேவேளை சிந்து சமவெளி திராவிடர்கள் தெற்கு நோக்கி போய் இருக்கலாம்? கட்டாயம் எதோ ஒரு வகையில் ஆரியர்களை செல்வாக்கு படுத்தியே இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்க முடியும். ஆரம்ப ஹரப்பான் நாகரிகம், கணிதத்தை தமது நடை முறை தேவைக்கு மட்டுமே பெரும்பாலும் பாவித்தது. மேலும் எடைகள், அளவிடும் அளவு கோல், மற்றும் ஆச்சிரிய படத்தக்க அளவு முன்னேறிய, செங்கல் தொழில் நுட்பம் போன்றவற்றில், அவர்கள் முதன்மையாக அக்கறை செலுத்தினார்கள். இங்கு விகிதங்கள் நன்றாக பயனுள்ள வகையில் அவர்கள் பயன்படுத்தினார்கள். இன்றும் செங்கல் விகிதம் 4:2:1 திறமையான பிணைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு உகந்த ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. மிகவும் நேர்த்தியாக திட்டம் இடப்பட்ட சிந்து சம வெளி நாகரிகத்தின் வீதிகளும் அவை வடக்கு, கிழக்கு, மேற்கு தெற்கு என்ற திசைகளில் நேராக அமைக்கப்பட்டதும் சிந்து சம வெளி மக்கள் கேத்திர கணிதத்தைப் பற்றிய நடைமுறை அறிவாவது கட்டாயம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு சான்று பகிர்கிறது. சிந்து சம வெளி பற்றிய முன்னைய ஆய்வுகள், இவர்கள் நடை முறை அறிவுகள் மட்டும் இன்றி, கேத்திர கணிதத்தின் அடிப்படை கொள்கைகளை அறிந்தும் இருந்தார்கள் என எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல கண்டு பிடிக்கப்பட்ட பல எடைகள் திட்டவட்டமான கேத்திர கணித வடிவங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவை பொதுவாக கனசதுரம், உருளை [பீப்பாய்], கூம்பு, நீள்வட்ட உருளை மற்றும் வட்டம் போன்ற வடிவங்களில் இருக்கின்றன [produced in definite geometrical shapes (cuboid, barrel, cone, and cylinder to name a few) ]. அத்துடன் நீளத்தை அளவிடும் கருவிகளும் நில அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு சிந்து சம வெளி நகரங்களில் கண்டு பிடிக்கப்பட்ட அளவு படிகளும் நீளத்தை அளவிட பாவிக்கப்பட்ட கருவிகளும் [அளவு கோல்களும் / scales for the measurement of length] எமக்கு எடுத்து காட்டுவது இந்த பண்பாடு இடம் சார்ந்த அளவுகளை, அதாவது நீளம், அகலம், உயரம், பருமன் போன்றவற்றை சரியாக அளவிடும் அறிவு ஒன்றை கொண்டிருந்தார்கள் என்பது ஆகும் [that the culture knew how to make accurate spatial[of or relating to space] measurements]. உதாரணமாக, கி.மு. 1500 -க்கும் முந்தைய காலகட்டங்களிலேயே தந்தத்திலான அளவு கோல்களை சிந்து சமவெளி நாகரிக திராவிட மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். லோத்தல் என்னுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த அளவுகோல் 46 மில்லி மீட்டர் நீளத்தை, சீராக 27 இடைவெளி கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு அலகு 1.70 மில்லி மீட்டரை சரியாக குறிக்கிறது. அதே போல, மொகஞ்சதாரோவில் 1.32 அங்குலம் (33.5 மி.மீ) இடைவெளியில் அளவுகள் குறிக்கப் பட்டிருந்தது. இது சிந்து அங்குலம் என அழைக்கப்படுகிறது. அப்படி பத்து அலகு 13.2 அங்குலம், ஒரு அடியை கொடுக்கிறது. இதை ஒரு சிந்து அடி என நாம் இன்று கூறுகிறோம். அப்படியே மற்றும் ஒரு வெண்கல கோல் கண்டு பிடிக்கப் பட்டது. இது 0.367 அங்குலம் அங்குலமாக குறிக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் அல்ல, அவை மிகவும் துல்லியமாக குறிக்கப்பட்டு இருப்பது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இப்ப இந்த அலகின் நூறு மடங்கு 36.7 அங்குலம் ஆகிறது. இது பொதுவாக நடக்கும் போது ஒரு நீண்ட காலடியின் தூரம் ஆகும் [the distance covered by a long step]. மேலும் தோண்டி எடுக்கப்பட்ட / கண்டு பிடிக்கப்பட்ட கட்டிடங்களின் எச்சங்கள் இந்த அளவீடுகள் மிக துல்லியமாக அங்கு ஹரப்பானால் பாவிக்கப் பட்டதை எடுத்து காட்டுகிறது. அந்தக் கால கட்டத்தில் உபயோகிக்கப் பட்ட செங்கற்களின் அளவு 4:2:1 என்ற விகிதாச்சார முறையில் அமைந்திருந்தது. இவர்கள் தமது வியாபாரத்தில் கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் செய்யப் பட்ட எடைகளைப் பயன் படுத்தினார்கள். எல்லா அளவுகளிலும் ஒரு ஒழுங்கு முறை பின்பற்றப் பட்டிருந்தது. இந்தச் சான்றுகள் சிந்து சமவெளி நாகரிக கால கட்டத்திலேயே கணித அளவீடு படி நிலையை அடைந்திருந்ததை தெள்ளத் தெளிவாக பதிவு செய்கிறது. மேலும் ஒழுங்கான வடிவமைக்கப் பட்ட பல்வேறு அளவுகளில் கைவினை பொருள்கள் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது இவர்கள் தரமான எடை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் செம்மையான எடை அளவுகளை பாவித்ததற்கு ஒரு சான்றாக உள்ளது. விரிவாக பரவியிருந்த இந்த நாகரிகத்தில், ஒவ்வொரு நகரத்திலும் ஒரே சீரான எடைகள் பாவித்து இருந்தது அவர்கள் எவ்வளவு தூரம் ஒரு தரமான அலகுகள் அமைப்பு ஒன்றை அடைய கவனம் செலுத்தினார்கள் என்பதை கட்டாயம் காட்டுகிறது. கண்டு பிடிக்கப்பட்ட எடைகளை ஆய்வு செய்ததில் அவர்களுடைய எடைகள் இரும முறைமையிலும் தசம முறைமையிலும் [An analysis of the weights discovered suggests that they were based on the binary and decimal systems ] 1:2:4:8:16:32:64:160: 200:320:640:1,600: 3,200: 6,400: 8,000:12,800 என்னும் விகிதத்தில் உருவாக்கப் பட்டிருந்தன தெரிய வந்தன. இதற்குக் கணித ரீதியிலான காரணம் ஏதாவது கட்டாயம் அவர்களிடம் இருக்க வேண்டும். இந்தக் காரணம் என்ன வென்று நமக்கு இன்னும் தெரியவில்லை. இங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழுதடைந்த எடைகளை தவிர்த்த மொத்தம் 558 எடைகளில் மிகவும் சிறியது 0.856 கிராம் ஆகவும் மிகவும் பெரியது 10,865 கிராம் [இது கிட்டத்தட்ட 25 இறாத்தல் எடை ஆகும் / approximately 25 pounds] ஆகவும், மிகவும் பொதுவாக காணப் பட்ட எடை 13.7 கிராம் ஆக, மிகவும் சிறியதின் 16 மடங்காக, சிந்து வெளியில் பாவிக்கப்பட்ட அலகுகளில் ஒன்றாக இருப்பது போல தோன்றுகிறது. மேலும் முதல் எழு சிந்து எடைகள் முன்னையதின் இரு மடங்காக 1:2:4:8:16:32:64. ஆக, இரும முறைமையில் இருப்பதும் இதன் பிறகு எடை தசம முறைமையில் கூடுவதும் காணப்பட்டது. இந்த பெரும்பாலான எடைகள் கன சதுர வடிவாகவும் அவை படிகக்கல் போன்ற ஒன்றாலும் [செர்ட் /Chert), சற்கடோனி (சல்சிடனி /Chalcedony), சுண்ணாம்புக்கல் (limestone) போன்றவற்றாலும் செய்யப் பட்டவை ஆகும். எடை போடும் தராசுகள் மொகஞ்சதாரோ, லோதல், கலிபாங்கன் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட போதும் அவை அனைத்தும் முழுமையாக அமையப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது எப்படி யாயினும் சிந்து வெளி கேத்திர கணிதத்தைப் பற்றி இது வரை எமக்கு கிடைத்தவையில் முதன்மையாக உள்ளவை கட்டிட வரை படம் அல்லது திட்டங்கள், வீது ஒழுங்கமைப்பு போன்றவையாகும் [primarily concerned with patterns occurring at the macro-scale (such as building plans, street alignments, etc.)]. சிற்பங்களில் காணப்பட்ட கலை வடிவங்கள் அவர்கள் பொது மையத்தை கொண்ட அல்லது ஒன்றை ஒன்று குறுக்காகச் சந்திக்கின்ற வடங்கள், முக்கோணங்கள் வரையக்கூடியவர்கள் என்பதை காட்டுகிறது [there is evidence that these people could draw concentric and intersecting circles and triangles.]. மேலும் ஹரப்பான் அலங்கார வடிவமைப்பில் வட்டத்தின் பாவனையை மாட்டுவண்டி படத்தில் காணலாம். இங்கு சக்கரத்தின் விளிம்பை சுற்றி அநேகமாய் ஒரு உலோக பட்டை பொருத்தப்பட்டு உள்ளது. இது இலகுவாக அவர்களின் அறிவுத் திறனை எமக்கு காட்டுகிறது. வட்டத்தின் சுற்றளவுக்கும் வட்டத்தின் விட்டத்திற்கும் உள்ள தொடர்பை அல்லது விகிதத்தை அவர்கள் அறிந்து இருந்தார்கள் என்பதை எமக்கு காட்டுகிறது, அதாவது அவர்கள் π இன் பெறு மானத்தை அறிந்து இருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. என்றாலும் முத்திரையிலும் மட் பாண்டங்களிலும் அடிக்கடி காணப்பட்ட சிறியளவிலான கேத்திர கணித வடிவமைப்புகள் இன்னும் விரிவாக ஆராயப் படவில்லை. இது வரையில் பரிந்துரைத்ததை விட, இந்த வடிவமைப்புகள், சிந்து வெளி மக்களின் கேத்திர கணித மேம்பட்ட புரிதலை தெளிவாக காட்டுவதாக நாம் இலகுவாக நம்பலாம். ஆகவே, இந்தியா துணைக் கண்டத்தில் கணிதத்தின், முக்கியமாக கேத்திர கணிதத்தின் ஆரம்பம், கி மு முதல் ஆயிரம் ஆண்டு காலத்து சுல்ப சூத்திரத்தை விட்டு, கி மு முன்றாவது ஆயிரம் ஆண்டு காலத்து சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போகிறது. திட்டமிடப்பட்ட நகரங்கள், தரப்படுத்த ப்பட்ட அளவீடுகள், மெசொப்பொத்தேமியா மற்றும் மத்திய ஆசியாவுடனான நீண்ட தூர வர்த்தக தொடர்புகள் இந்த நாகரிகத்தின் உயர் தொழில் நுட்பங்களுக்கு சான்றாக இருந்தாலும் அங்கு பதியப்பட்ட எந்த தகவல்களும் இன்று வரை கிடைக்காததால், சிந்து வெளி மக்களின் கணித அறிவைப் பற்றி எம்மால் விரிவாக புரிந்து கொள்ள முடியவில்லை [Although the well-planned cities, standardized system of measurements and evidence of long-range trade contacts with Mesopotamia and Central Asia attest to the high technological sophistication of this civilization, the unavailability of written records has up to now prevented us from acquiring a detailed understanding of the level of mathematical knowledge attained by the Indus people.]. எனினும் அங்கு தோண்டி எடுக்க ப்பட்ட பொருட்களில் காணப்பட்ட கேத்திர கணித வடிவமைப்புகள், அவர்கள் வட்ட வடிவத்தின் பண்புகளை விரிவாக அறிந்து இருந்தார்கள் என்பதை எமக்கு எடுத்து காட்டுகிறது. குறிப்பாக சிக்கலான வடிவங்களால் வெளிகள் ஒழுங்காக அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது வட்ட வளைவுகளால் அடைக்கப்பட்ட பரப்பை சரியாக கணித்தார்கள் என்பதை காட்டுகிறது [In particular, designs which exhibit space-filling tiling with complicated shapes imply that the Indus culture may have been adept at accurately estimating the area of shapes enclosed by circular arcs.]. ஆகவே இந்த அறிவு அந்த நாகரிகம் நிலை குலைந்த பின்பும் உள்ளூர் மக்களிடம் தொடர்ந்து இருந்து, அது பிற்பாடு வந்த வேத காலப் பண்பாட்டின் ஒரு சில கணித சிந்தனைக்கு வழிகோலி இருக்கலாம். எனவே இதனை கணக்கில் கொள்ளாமல் கணிதவியல் சரித்திரம் எழுதுவது, நுனிப்புல் மேய்வது போலவே அமையும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் ? பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒரு சிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது? ஒரு பக்கம் காதல் பாட்டுடனும் மறுபக்கம் இப்படியும் தான் நிலா இன்று படாத பாடு படுகிறது?. நானும் ஒரு நிலாவை மறவாமல், அதன் நினைவில் மூழ்கிறேன்! "கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க வண்ண உடையில் துள்ளி வந்தாய் விண்ணில் உலாவும் மதியும் தோற்று கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!" "வெண்மை கொண்ட என் உள்ளத்தில் பூண் போல் உன்னை அணிந்துள்ளேன் ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன் எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!"
  6. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 04 ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before]. அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் (கி பி 277-304), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாகக் காட்டுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வ தென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கைத் தீவிற்கு வரும் முன்பே, சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்பு தான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாகத் தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? பிராமண குருக்கள் இலங்கையில் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் இருந்தது என்பது உண்மையே, உதாரணமாக, ஒரு வரலாற்று கதையில், ரிஷிகள் என்று அழைக்கப்பட்ட, இரு கல்விமான்கள் வட இந்தியாவில் இருந்து, தென் திசை நோக்கி புறப்பட்டு இலங்கையை வந்து அடைந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அகஸ்தியர் [அகத்தியர்], புலஸ்தியர் ஆகும். புலஸ்தியர் அகத்தியரின் மாணவராகும். இதில் அகத்தியரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என்றும் கருதப்படுகிறது. முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவை எல்லாம் புராணத்திலும் இதிகாசத்திலும் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்லவேண்டும், முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேணியும் [குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மேலும் துரத்தப் பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப் பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது தனக்கு பிறந்த பிள்ளை ஒன்றை கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? [Picture 04: மாங்குளம் கல்வெட்டு என்பது தமிழ்நாட்டின் மாங்குளம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும்
  7. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 03 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனாரின் நற்றிணை 366 ஆம் பாடலை ஒரு உதாரணமாக கீழே தருகிறேன். "அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே!" [நற்றிணை 366] அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல் கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அந்தக் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு, வாடைக் காலத்திலும் பொருள் தேடிக்கொண்டிருப்போர் உண்மையில் மடவர் (மடையர்) என்கிறது அந்தப் பாடல். பேசுவதற்கு முதலில் சைகை தோன்றி, பின் குரல் மூலம் ஒலி எழுப்பி, பின் அது மற்றவர்களால் கேட்டு உணரக் கூடிய, அடையாளப் படுத்த கூடிய, குரல் அல்லது ஒலி மொழியாக மாறி, அதற்கு, ஒரு முதல் கட்டமைப்பாக எழுத்து தோன்றி, பின் அதற்கு ஒரு கட்டுப்பாடாக இலக்கணம் வரையறுத்து, அதன் பின் தான் இலக்கியம் மலர்கிறது. சிங்களம் என்ற இனம், மற்றும் சிங்கள மொழி தோன்ற முன், இந்த ஈழத்து புலவர் எப்படி அழகாக, ஆழமாக, கவர்ச்சியாக ஆனால் மறை முகமாக தன் மனக்கிளர்ச்சியை உங்களுடன் பகிர்கிறார் என்று பாருங்கள் !! தீபவம்சம், பாடம் 19 இல் [Dīpavaṁsa [The Chronicle of the Island] XIX.], 17 ஆவது பாடல், இந்த அரசனை கொன்று, தட்டிகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கடைசி ஐந்து ஆட்சிகள் தமிழரினதாக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்] மொத்தம் 14 ஆண்டுகள் 7 மாதம், கிமு 103 ஆண்டில் இருந்து ஆட்சி செய்தனர் என்கிறது [Having killed this king, a person Dāṭhiya by name reigned two years. These five sovereigns belonging to the Damila tribe governed fourteen years and seven months in the interval between the two parts of Vaṭṭagāmani’s reign] இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவியது எனவும், சேனன் குத்திகன் (கி.மு 237-கி.மு 215) என்ற இரு தமிழர் ஆட்சி செய்தனர் எனவும் அது மேலும் கூறுகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், தமிழர் என்ற சொற்பதம் பல இடங்களில் மொழியையும் இனத்தையும் குறிக்க இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ளது, ஆனால் முதலில் கி பி 4 ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட பாளி நூல் தீபவம்சதில் ஒரே ஒரு முறை தான் சிஹல [‘Sihala' / lion in Pali] என்ற சொல் பாவிக்கப் பட்டுள்ளது. அதுவும் சிங்கத்திற்குப் பிறகு, தீவு சிஹல என் அறியப்படும் என்று மாத்திரமே குறிக்கப் பட்டுள்ளது [“The island of Laṅkā was called Sīhala after the Lion (sīha); listen ye to the narration of the origin of the island which I am going to tell.” Dipavamsa IX, Vijaya’s Story]. " குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்; "கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே " என்றும்; "குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே" என்றும்; ... திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடியுள்ளார். எனவே பாடும் அளவிற்கு பெருமை அடைவதாயின், இந்த சிவ ஆலயம் கட்டாயம் இதற்கு முன்னதாகவே, மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்திருக்கும். மகாவம்சம் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா - விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை - விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககைத் தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது 'சிவலிங்கம் மற்றும் அது போல்' என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira - vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, and a third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna - vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. இதை இன்றும் கண்கூடாக சில சந்தர்ப்பங்களில் ஓரளவு காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக குறுந்தூர் மலை நிகழ்வைக் கூறலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும்
  8. "ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது" "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும் பூவையரின் அழகை ஆண்கள் அறிவர் பூரிப்பு கொண்டு மயங்கித் திரிவர்!" "பூமி முழுவது கூட்டி திரிந்து பூசி மெழுகி காதல் பேசி பூசை செய்து மயக்குவதை பார்த்து பூதங்கள் ஐந்தும் தம்முள் சிரிக்கும்!" "ஆண்டாள் மாலை மகளுக்கு சூடி ஆண்டவன் அருளுக்கு தாய் வேண்ட ஆடவன் நடிப்பை காதலாய்ச் சூடி ஆகாய கோட்டையில் கனவு காண்கிறாள்!" "தையல் திருமணம் வேண்டி நோன்பிருந்து தையில் முன்பனி நீராடி தவமிருந்தவள் தைரியம் இழந்து ஆண்டுகள் போக தைவரல் இன்பத்திற்கு தன்னை கொடுக்கிறாள்!" "ஆபரணம் பல பரிசாய் பெற்று ஆடைகள் புதுசாய் அவன் கொடுக்க ஆட்சேபனம் இன்றி அவனுக்கு இணங்க ஆண்டாள் மாலையில் வண்டுகள் மேயுது!" "சாத்திரம் அகற்றி சீதனம் ஒழித்து சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சாதகமான சூழ்நிலை உலகில் ஏற்படின் சாதாரண மாலையும் கல்யாண மாலையாகும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] தைவரல்: - கையால் அழுத்துதல், வருடுதல், தடவுதல்
  9. "குடும்பத் தலைவி" என்னுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர் தான், இன்று என் அண்ணாவை திருமணம் செய்யப் போகிறவர். அவளின் பெயர் 'தமிழ்', அவள் படிப்பிலும் அழகிலும் சாதாரணமே. ஆனால் நல்ல பண்பாடும் மற்றும் கலைகளிலும் ஈடுபாடு உள்ளவள். நான் அதற்கு எதிர்மாறு. படிப்பிலும் மற்றும் அழகிலும் முன்னுக்கு நிற்பவன். அதனால் கொஞ்சம் இறுமாப்பும் உண்டு. படிக்கும் காலத்தில் நான் அவளை கணக்கிலேயே எடுப்பதில்லை. சிலவேளை கொஞ்சம் அவள் கவலை அடையக் கூடியதாக, பலரின் முன்னிலையில் பகிடி கூட செய்துள்ளேன், அவள் அது எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து, பொருட் படுத்தாமலே விட்டு விடுவாள். நான் இறுதி பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, உதவி விரிவுரையாளராக அதே பல்கலைக்கழகத்தில் நியமனமும் பெற்றேன். அவளும் சாதாரண சித்தி பெற்று. கிராமப்புற பாடசாலை ஒன்றில் உதவி ஆசிரியர் பதவி பெற்றார். அவள் எல்லா சக மாணவர்களிடமும், பரீட்சை முடிவின் பின் விடை பெரும் பொழுது, என்னிடமும் வந்தாள். நான் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. என்றாலும் அவள் தான் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்த சிற்றுண்டியில் ஒன்றை எடுத்து, மிக சர்வ சாதாரணமாக என் வாயில் திணித்து விட்டு, 'காலம் மாறும், உன் திமிரும் அடங்கும், என்னிடமே நீ, என்னை மதித்து ஆலோசனை பெரும் காலம் வரும்' என்று ஒரு புன்முறுவலுடன் கூறி விட்டு புறப்பட்டு சென்றாள். அதன் அர்த்தம் அப்ப எனக்குப் புரியவில்லை. நான் அதைப்பற்றி பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை. இன்று அவள் எனக்கு அண்ணியாகப் போகிறாள். எம் அம்மா பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் அகால மரணம் அடைந்தார். அன்றில் இருந்து இன்றுவரை அப்பாவே என்னையும், அண்ணாவையும், தங்கையையும் பல சிரமங்களுக்கிடையே, நல்ல படியாக வளர்த்து எடுத்தார். அண்ணா ஒரு மருத்துவர். நான் இயற்பியல் [பௌதிகவியல்] விரிவுரையாளர். தங்கை பல்வைத்திய துறையில் நான்காம் ஆண்டு மனைவி. ஏன் அப்ப கூட ஒரு பொறியியலாளர். அதனால் எமக்கு பண கஷ்டம் இல்லை, ஆனால் குடும்பத்தை கவனிக்க ஒரு தலைவி தான் இல்லை. அப்பவே தலைவனும் தலைவியும். அப்பாவின் செல்லப் பிள்ளைதான் என் தங்கை. அவரே சிலவேளை குடும்ப தலைவி மாதிரி கட்டளையிடுவார். அப்பாவும் அதை பொருட்படுத்துவதில்லை, சிலவேளை அதை ஊக்கப் படுத்தியும் உள்ளார், ஆனால் அது எனக்கு ஒரு பிரச்சனையாக என்றும் இருக்கவில்லை. அவள் எனக்கும் செல்லப் பிள்ளைதான்! இன்னும் தமிழ், வலது கால் எடுத்து எம் வீட்டுக்குள் வரவில்லை, ஆனால், அப்பா என்னையும் தங்கையையும் கூப்பிட்டு, 'உங்க வரும் கால அண்ணி. திருமணத்தின் பின் வேலைக்கு போகமாட்டார். அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நான் கேட்டதின்படி. நானும் வீட்டு வேலை, வெளிவேலை என்று களைத்துப் போய்விட்டேன். நாளையில் இருந்து அவரே இந்த வீட்டின் குடும்பத் தலைவி. நீங்க இருவரும் அதற்குத் தக்கதாக உங்களை தயார்படுத்த வேண்டும்' என்று ஒரு போடு போட்டது தான் இப்ப என்னை வருத்திக் கொண்டு இருக்கிறது. அன்பான வேண்டுகோளா இல்லை கட்டளையா எனக்கு ப் தெரியாது, அதைப்பற்றி சிந்திக்கும் நிலையில் நான் இல்லை. ஆனால் தங்கையோ ஒரே குதூகலம், தனக்கு ஒரு நல்ல அண்ணி மற்றும் வீட்டுக்கு ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவி வருகிறார் என்று! இப்ப எனக்கு அந்த கடைசி நாள், விடை பெரும் நிகழ்வு, படமாக ஓடிக் கொண்டு இருந்தது. அதை நினைக்க நினைக்க மனம் கொதித்துக் கொண்டு வந்தது. கேவலம் ஒரு சாதாரண என் சக மாணவிக்கு, முதல் தரத்தில் சித்தியாகி, பெரும் பதவியில் இருக்கும் நான் மதிப்புக் கொடுக்கும் காலம் வந்ததே என்று! கர்வம் இன்னும் என்னை விட்டு அகலவில்லை. அது என்னுடன் பிறந்தது! என்றாலும் ஒரு பயமும் என்னை வாட்ட தொடங்கியது, நான் மூன்றாம் ஆண்டில் இருக்கும் பொழுது, நடந்த ஒரு பகிடிவதை தான் அதற்கு காரணம். அவள் முதலாம் ஆண்டு கலைப் பீட மாணவி, பெயர் ஜெயா, அவளை என் சக நண்பர்கள் பகிடிவதை செய்யும் பொழுது, பூ கொத்து ஒன்று கொடுத்து, அந்த நேரம் அந்த வழியே போய்க் கொண்டு இருந்த என்னிடம் கொடுத்து, 'ஐ லவ் யு' சொல்லும்படி கூறி உள்ளார்கள். அது எனக்குத் தெரியாது. எனவே அவர் வந்து திடீரென பூ கொத்து நீட்டிக் கொண்டு 'ஐ லவ் யு' சொல்ல, அவள் உண்மையில் மிகவும் அழகு வாய்ந்தவளாக இருந்தும், என்னுடன் பிறந்த கர்வமும் முரட்டுக் குணமும், அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, உனக்கு படிக்க வந்தனியா இல்லை மாப்பிள்ளை தேடி வந்தனியா என்று பேசி, பூ கொத்தை பிடுங்கி அவள் தலையில் போட்டு, போடி என்று தள்ளி விட்டேன். இதை அந்த சக நண்பர்கள் மறைந்து இருந்து வீடியோவும் எடுத்து விட்டார்கள். அவள் அங்கிருந்து பயத்துடன் அழுது கொண்டு போய் விட்டாள். அதன் பின்பு தான் எனக்கு உண்மை புரிந்தது. இதற்கு இடையில் அந்த வீடியோ நண்பர்களுக்கிடையில் பரவவும் தொடங்கி விட்டது. அப்பொழுது தான், தமிழ், என் சக மாணவி, இன்று என் வருங்கால அண்ணி, என்னிடம் வந்து, ஜெயா மிகவும் நொந்து இருக்கிறாள், அந்த வீடியோ பரவுகிறது, பாவம் அவள், அவளை ஏன் நீ காதலித்து, அந்த விடியோவுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடாது என்று ஆலோசனை வழங்கினார். ஜெயா உண்மையில் ஒரு அழகு சிலை. அவளின் அழகை என் உள்ளம் பொருநராற்றுப்படையின் ஒரு பாடலுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. அப்பவும் அது எனக்கு திருப்தி தரவில்லை "அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண் இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல் ....... நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின் ....... அணங்கென உருத்த சுணங்கணி யாகத் தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை" ஜெயாவின் கூந்தல் ஆற்றின் நீரோட்டத்தால், வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல் இருக்கிறது. அவளது நெற்றி பிறைநிலா போல் இருக்கிறது. புருவம் வில் போல் வளைந்து இருக்கிறது. அழகிய இளமையான குளிர்ந்த கண்களை அங்கு காண்கிறேன். மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய். நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற வெண்மையான பல். நாணமிகுதியால் பிறரை நோக்காது சாய்ந்திருக்கும் கழுத்து. பிறரை வருத்தும், பசலை படர்ந்த, ஈர்க்கும் நடுவே செல்ல முடியாத நெருங்கிய, எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்கள் ... இன்னும் வார்த்தையில் அடங்கா அழகின் அழகு. என்றாலும் என் கர்வம் அதை ஏற்கவில்லை, ஆகவே ஒரு சாட்டாக, 'எம் குடும்பம் எம் குடும்ப தலைவன் / தலைவியின் சொற்படியே நடப்பது. அதை என்னால் மீறமுடியாது. அப்படி என்றால் அங்கே போய் அதை கேளு' என்று அந்த வேண்டுகோளை உதறித் தள்ளி விட்டேன். அப்ப தமிழ் 'காலம் வரும் பொழுது, நான் கட்டாயம் அதை செய்வேன்' என்று சபதம் இட்டு போனது இப்ப ஞாபகம் வருகிறது. நாளையில் இருந்து அவளே குடும்ப தலைவி, அப்பா முழுப் பொறுப்பையும் அவளிடம் நாளை கொடுக்கப் போகிறார். அது தான் இப்ப என்னை வாட்டும் ஒன்று! உண்மையில் அவள் நல்ல அழகு, அவளும் முதல் வகுப்பில் சித்தி அடைந்து, அங்கேயே விரிவுரையாளராகவும் இருக்கிறாள் . எல்லாம் நல்ல பொருத்தம் தான், எனவே தமிழ் குடும்ப தலைவியாக வந்து, அவள் முன்பு சொன்ன சபதத்தை நிறைவேற்ற முன்பு, நானே அவளை காதலித்தால் என்ன என்று என்னில் தோன்றியது. தமிழ் அவளை திருமணத்துக்கு அழைத்திருந்தால், அவளும் திருமண மண்டபம் வந்து இருந்தாள். இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று, நானே முன்னின்று அவளை வரவேற்று, பின் தனியாக உன்னுடன் பேசவேண்டும் என்று அவளுக்கு கூறினேன். அவளும் அதற்கு இசையை, நான் 'ஐ லவ் யு' என்று அவளிடம் கூறினேன். அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மிக அமைதியாக முதலில் இருந்தாள், பின் ஆறுதலாக உங்க குடும்ப தலைவன் அல்லது தலைவியுடன் கதைத்து அவர்களுக்கூடாக பதில் சொல்லுகிறேன் என்று அமைதியாக விலகி போய்விட்டாள். அப்ப தான் என் வீணான கர்வத்தின், தற்பெருமையின் உண்மை புரிந்தது! அண்ணாவின் கல்யாணத்தின் பின் இப்ப ஒரு கிழமையும் கடந்து விட்டது, அண்ணி, எம் குடும்பத் தலைவி ஒன்றும் என்னிடம் சொல்லவே இல்லை. ஏன் ஜெயா கூட , ஒரே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தும், இது வரை ஒன்றுமே சொல்லவில்லை. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் நான் ஒன்றும் கேட்கக் கூடாது என்று பேசாமல் இருந்து விட்டேன். சில மாதங்கள் கழிய, ஒரு நாள் அப்பாவின் முன்னிலையில், அண்ணி என்னை கூப்பிட்டு, உனக்கு பெண் பார்த்து உள்ளோம், எங்கள் எல்லோருக்கும் நல்ல மகிழ்வு, நாளை நானும் நீயும், அண்ணாவும் பெண் பார்க்க போகிறோம் என்று ஒரு குண்டு தூக்கி போட்டார். எனக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. எதிர்த்து சொல்லவும் இப்ப துணிவு இல்லை. காரணம் அவர் இப்ப குடும்பத் தலைவி, அப்பா அவர் பக்கமே, அது தான் பிரச்சனை? என்றாலும் ஒருவாறு கொஞ்சம் தைரியம் பெற்று, நான் ஒருவளை விரும்புகிறேன். அவளையே கைப்பிடிக்க விருப்பம் என்றேன். அப்ப தான் அண்ணி, ஒரு குடும்பத் தலைவியின் நிலையில் நின்று, 'தலைவன் / தலைவியின் சொற்படியே நடப்பது. அதை என்னால் மீறமுடியாது' என்று நீ அன்று சொன்னது பொய்யா? என்று ஒரு போடு போட்டார். அப்பாவும் அண்ணாவும் அது என்ன என்று விசாரிக்க, எல்லா கதைகளும் வெளியே வந்தது. அண்ணி மிக அமைதியாக புன்முறுவலுடன் 'காலம் வரும் பொழுது, நான் கட்டாயம் அதை செய்வேன்' என்று முன்பு சபதம் இட்டத்தை நினைவு படுத்தி, நான் எவருக்கும் கேடுதல் நினைப்பத்திலை, நான் சொன்னதையே இப்ப செய்கிறேன் என்றார்! அம்மாவின் தானத்தில், அவர் என்னை அன்புடன் அணைத்து, எனக்கு எல்லாம் தெரியும், உன் ஜெயாவை தான் நாளை பார்க்கிறோம் என்றார், என் சக மாணவி, என் அண்ணி, எங்கள் குடும்பத் தலைவி! நான் இப்ப , நான் காதலிக்கும் ஜெயாவைத் தான் திருமணம் செய்யப் போகிறேன். தமிழ், இல்லை அண்ணி, தான் முன்பு முன்மொழிந்த பெண்ணையே எனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார். அப்படியென்றால் யார் வென்றது? யார் தோற்றது ? "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது எனோ? உறவு தேடி காதல் நாடி கர்வம் துறந்து கேட்டது எனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் பகிடி வதை வருவது எனோ? கண்ணீர் துடைத்து மகிழ்வு கொடுக்க சபதம் இட்டு போனது எனோ?" "காலம் போனாலும் கோலம் மாறினாலும் கர்வம் இன்னும் வருத்துவது எனோ? குடும்பத்த தலைவி சொற்படி தானே கல்யாணம் என்று சமாளிப்பது எனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. சந்திரபானு (ஆங்கிலம்: Chandrabhanu அல்லது Chandrabhanu Sridhamaraja; தாய்: จันทรภาณุ ศรีธรรมราช) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்த தாமிரலிங்க இராச்சியத்தை 1230-ஆம் ஆண்டில் இருந்து 1263-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசராவார். தென் தாய்லாந்தில் இவர் கட்டிய கோயில் மூலமும் பாண்டியர் கீழ் சில ஆண்டுகள் இலங்கையை ஆண்டதன் மூலமும் அதிகம் அறியப்படுகிறார். இவர் 1247-ஆம் ஆண்டில் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள் அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தார். பின்னர் பாண்டியர் உதவியுடன் சில ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டான். எனவே அவனுடன் போர்வீரர்களாகவோ, உதவியாளராகவோ கட்டாயம் அவன் ஆண்டுகொண்டு இருந்த தாமிரலிங்க இராச்சியத்தில் இருந்து, அவனின் தமிழ் போர்வீரர்கள் மற்றும் உதவியாளர்களுடன் சிலரோ , பலரோ வந்திருக்கலாம். அவர்களின் மொழி, பண்பாடு வித்தியாசம் என்பதால், அதிகமாக அந்த சமூகம் எங்கேயோ ஓரிடத்தில் தனியாக குடியமர்த்தப்பட்டு இருக்கலாம். அதுவே சாவகச்சேரி [Cāvakac-cēri.] யாக இருந்து இருக்கலாம் என்று ஊகிக்கிறேன் .
  11. "திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்" திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற் கொண்டு பேசுவார்கள். இல்லை யென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள். சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் , கணப் பொருத்தம், மகேந் திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான். அந்த ஆண் - பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை. மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர். மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு. ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு. இப்படி பல கூறுகின்றனர். எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை. ஆண் - பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர் குறிப்பிடுவர். உதாரணமாக, நாலடியார் பாடல் 86 இல், "பல்லாரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... " என்கிறது. ஆசாரக் கோவை பாடல் 48 இல், கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று... கூறி, கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232: "நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்... ") மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61: ".. நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே." ) என்கிறது. தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி, வரைவு, வதுவை என்றும் குறிப்பிடுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும் [ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும் [ஆண்மை என்பது இங்கு ஆண் தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே], ஒத்த வயதும் [வயது ஒற்றுமை], ஒத்த உருவும் [உருவழகு], ஒத்த அன்பும் [இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும் [கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென்பது இதன் பொருள். அதாவது, குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை) வியத்தல் புறங் கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப் படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க் கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும். அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம். நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர் . ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடு பேறடைதல் என கொள்ளலாம். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது. இதை குறுந் தொகைப் பாடல் ஒன்று "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே" என்கிறது. அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்று படுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா? 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப் பாடல். "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர். திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி. தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவு கின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. எனவே துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடை யிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரி மாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான். அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் : 'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!' இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற் காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர் தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. உண்மையில் முன்னமே, குறைந்தது 1976 இல் இருந்து - Genetic distance analysis by Dr R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia - மற்றும் பலரால் 'சிங்களவர்கள் பற்றிய மரபணு ஆய்வுகள்' வெளிவந்து விட்டன. ஆனால் இங்கு விவாதிக்கப்பட்டது அல்லது வெளியிடப்பட்டது Sri Lanka's only indigenous population Vedda share genetic link with ethnic populations in India Vedda, the only indigenous population in present-day Sri Lanka, is believed to be the direct descendants of the island’s early inhabitants. [இலங்கையின் ஒரே பழங்குடி மக்கள்தொகையான வேடர் இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பைப் கொண்டுள்ளது. எனவே இன்றைய இலங்கையில் உள்ள இந்த வேடர்கள் , தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள் என்று இதனால் நம்பப்படுகிறது. அவ்வளவுதான்!! . அதாவது இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த, ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும், திரு விருமாண்டிக்கு கிடைத்தது போல அல்லது ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற பழங்குடியினர் போன்றோர் போல எனவே உங்கள் கேள்வி, இந்த ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு அதன் முடிவுகளை அடுத்தடுத்து வெளியிட வேண்டிய தேவை /காரணம் ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதன் பின்ணணியில் இருப்பது யார்? அதற்கான் தேவை என்ன? அந்தத் தேவை ஏன் தற்போது எழுகிறது என்பதே. இங்கு தேவையற்ற , பொருத்தமற்ற ஒன்றே என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் இதே வலைத்தளத்தில் / யாழ் இணையத்தில் nunavilan என்பவரால் இலங்கையில் சிங்களவர் நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி [இலங்கையில் சிங்களவர் - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி] பதியப்பட்டது October 20, 2021 இல் இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார் என்றும் அதன் விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது எனவே அண்மைய நாட்களில், இலங்கையருக்கும் குறிப்பாக சிங்களத்திற்கும் இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறும் ஒரு போக்கு அதிகரித்துச் செல்கிறது. என்பது முற்றிலும் பிழை இது எப்பவோ முடிந்த முடிவு. இங்கு குறிப்பாக கூறியது இலங்கை 'வேடர்கள் தான் இலங்கைத்தீவின் தீவின் ஆரம்பகால மக்களின் நேரடி வழித்தோன்றல்கள்' என்பதே இறுதியாக இலங்கையர் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இந்தியக் கண்டத்திலுள்ளவர்களுடன் மொழிவழி, பண்பாட்டு, கலை கலாச்சார, மரபணு ஒற்றுமை இருப்பது சிறு குழந்தைய் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. சொல்ல இலகுவாக இருக்கும். அங்கு ஆராயும் பொழுது தான் சிக்கல்கள் தெரியும் உதாரணமாக இந்தியாவிலேயே, ஒரே நிலப்பரப்பிலேயே, வட இந்தியர் தென் இந்தியர் - இவர்களுக்கிடையில் வேறு பாடு உண்டு அதேபோல சுமேரியருக்கும், அவர்களை சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்களுக்கும் தொடர்பு இல்லை நன்றி
  13. "சிங்களத்திற்கும் [இலங்கை வேடருக்கும்] [தென்] இந்தியருக்கும் இடையில் மரபணு ஒற்றுமையாக இருக்கிறது என்பது எதிர்பார்த்த ஒன்றே. இது ஒரு புதுமையும் அல்ல மறைமுக நிகழ்ச்சிநிரலும் அல்ல" டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆஃப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆஃப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும். முன்னைய ஆப்பிரிக்க மக்களின் ஆதி இடப் பெயர்வு நடைபெறவில்லை என்றால், மனித இனம் உடல் அமைப்பில் நீக்ரோ இனத்தைப் போன்றே இருந்து இருப்பார்கள். அது மட்டும் அல்ல, ஆப்பிரிக்காவை தவிர்ந்த மற்ற உலகின் பகுதிகளில் மனித இனம் என்று ஒன்று இருந்து இருக்காது. மனித இனம் பல கட்டங்களாக ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததாக பெரும் பாலான மானுட வியலாளர்கள் நம்புகிறார்கள். ஒரு மில்லியன் சகாப்தத்திற்கு முன், ஆசுத்திராலோ பித்தேக்கசு அஃபெரென்சிசு [Australopitheus Afarensis] க்குப் பிறகே, ஹோமோ எரக்டஸ் (Homo erectus) எனப்படும் எழு நிலை தொல்முன்மாந்தன் அல்லது நிமிர்ந்தநிலை மனிதர்கள் என அழைக்கப்படும் மனித இனத்தின் பழமையான மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியே நடந்து சென்று ஐரோப்பா மத்திய கிழக்கு, ஆசியா போன்ற பகுதிகளில் குடியேறினார்கள் என்பதில் இன்று எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் பின், நமது மூன்றாவது மூதாதையர் நியாண்டர்தால் [Neanderthal] மனிதனை தொடர்ந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] என்ற அதிநவீன கருவிகள் பயன்படுத்தும் மனிதன், மரபணு அடையாளம் காட்டி அல்லது குறியீடு M168 கொண்ட இவ் மனிதன், இரண்டாவது அலையாக ஆப்பிரிக்காவை விட்டு இடம் பெயர்ந்தது. இவன், அதற்கு முன் இடம் பெயர்ந்த தனது முன்னைய மூதாதையர்களை வெற்றி கொண்டான் என்கின்றனர். இந்த கருதுகோளின் படி இன்றைய நவீன மனிதன், இந்த ஹோமோ சேப்பியன்ஸின் சந்ததி ஆகும். இவர்கள் காட்டில் விலங்குகளை வேட்டையாடி காய் கனிகளை சேகரித்து உண்டு வாழ்ந்தனர். இந்நிலையில் இருந்த கற்கால மனிதன் ஒரு பகுதியாக நடந்தும் இன்னும் ஒரு பகுதியாக கட்டு மரம் போன்ற சிறு படகிலும் பயணம் செய்து இடம் பெயர்வு நடந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. இந்த முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்கள் [beachcombers], ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக தென் இந்தியா, இலங்கை, அந்தமான் வழியாக இடம் பெயர்ந்தார்கள். இவர்கள் தான் இந்திய, இலங்கையின் முதலாவது குடியிருப்பாளர்கள் இது இலங்கை வேடர்களிடமும் காணப்பட்டது!. இன்று இந்த கடற்கரையோர அடையாளம் காட்டி , இந்தியாவின் குடித்தொகையில் ஆக 5% மட்டுமே. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகின்றது. இறுதியாக, இவர்கள் விரைவாக இந்தியாவின் கடற்கரையோரமாக பயணித்து தென்கிழக்கு ஆசியாவையும் அவுஸ்ரேலியாவையும் பெரும்பாலும் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்தார்கள். அதன் பிறகு, கொஞ்சம் காலம் கடந்து, இரண்டாவது குழு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்கு, தெற்கு மத்திய ஆசியாவிற்கு இடம் பெயர்ந்தார்கள். [இலங்கை அன்று பிரிபடாத ஒரு பகுதியாக தென் இந்தியாவுடன் ஒட்டி இருந்தது, கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது.] இந்தியாவில்,குறிப்பாக தென் இந்தியாவில் குடியேறிய முன்னைய கடற்கரையோரங்களில் ஒண்டித் திரிபவர்களின் வழித்தடம் - M130 (M168-M 130) ஆகும். இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் pre-Dravidian] என அழைக்கலாம். இவைகளை தொடர்ந்து M89, 45,000 ஆண்டு அளவிலும் பின் ஈரான் சமவெளியில் அல்லது தென் மத்திய ஆசியாவில் M9, 40,000 ஆண்டு அளவிலும் தோன்றின. அங்கு இருந்த இந்து குஷ் (Hindu Kush), இமயமலை (Himalayas), தியன்-சான் (Tian-Shan) போன்ற பெரிய மலைத் தொடர்கள் இவர்களின் இடம் பெயர்தலுக்கு மிக இடைஞ்சலாக இருந்தன. இதனால் இந்த யூரேசிய மரபுக்குழு [Eurasian Clan M9] இரண்டு தொகுதியாக பிரிவு பட்டு இருக்கலாம்? ஒன்று இந்து குஷ்ஷினது வடக்கு பக்கமாகவும் மற்றது தெற்கு பக்கமாக பாகிஸ்தானுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம். இந்த தெற்கு நோக்கி இடம் பெயர்ந்த பழைய கற் காலத்தின் இறுதி பகுதி [Upper Palaeolithic, Late Stone Age / (40,000-10,000 B.C.)] மக்களின் Y-குரோமோ சோம்மில் [chromosome / மரபணுச் சரம் / மரபணுத் தாங்கி] திடீர் மாற்றம் ஏற்பட்டு மரபணு அடையாளம் காட்டி M20 தோன்றியது. இது இந்தியா தவிர வெளியில் கணிசமான அளவு இல்லை-மத்திய கிழக்கு மக்களில் ஒரு வேளை 1-2 சத வீதம் இருக்கலாம் என்றாலும் துணைக்கண்டத்தில், தென் இந்தியாவில் இது கிட்டத்தட்ட 50 சத வீதத்திற்கு அதிகமாக உள்ளது. இந்த M20 (M168-M9-M20) மரபணு அடையாளம் காட்டியை காவும் கூட்டம் கிட்டத் தட்ட 30,000 ஆண்டுகளுக்கு முன் பெரும் அளவில் இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து உள்ளது. இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-Dravidian] என அழைக்கலாம். [இப்படி இந்த யூரேசிய மரபுக்குழு M9 இன் சில உறப்பினர்கள் இந்தியா நோக்கி குடிபெயரும் போது மற்ற உறுப்பினர்கள் வடக்கு நோக்கி மத்திய ஆசிய, ஐரோப்பா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்த கூட்டத்தில் இருந்து படிப்படியாக M173 மரபணு அடையாளம் காட்டி தோன்றி, அது முதலாவது பெரிய மனித குடி பெயர்தலாக ஐரோப்பாவிற்குள் நுழைந்தார்கள். எப்படியாயினும் எதிர்பாராத சில காரணங்களால், M173 கூட்டத்தின் சில உறுப்பினர்கள் திரும்பி தெற்கு ஆசிய நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இது காலநிலைகளால் ஏற்பட்டும் இருக்கலாம்? இந்த திரும்பிய கூட்டத்தில் இருந்தே [M168 > M89 > M9 > M45 > M207 > M173 > M17] M17 என்ற இந்தோ – ஐரோப்பியர் குறியீடு [Indo-European marker] தோன்றியது. இது முதலாவதாக 10,000-15,000 ஆண்டுகளுக்கு முன் உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் [Ukraine or southern Russia] தோன்றியது. பின் கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா [Eurasia], ஸ்டெப்பி [steppe] பகுதி முழுதும் பரவி, அங்கிருந்து கிழக்கு, மத்திய ஐரோப்பா பகுதிகளுக்கும், ஈரானின் ஊடாக, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் வட இந்தியாவிற்கும் பரவியது என கண்டு பிடித்து உள்ளனர். மேலும் தேர் / ரதம் கி மு 3000 ஆண்டளவில் இவர்களால் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும் இந்த அகன்று பரந்த மரங்கள் அற்ற புல்வெளியான ஸ்டெப்பி பகுதியில் தான், இதற்கு ஒரு 1000 ஆண்டுகளுக்கு முன், குதிரைகள் இவர்களால் பழக்கப்படுத்தப்பட்டன (domesticated). இன்று 35% க்கும் அதிகமான இந்தி (Hindi / ஹிந்தி] மொழி பேசும் இந்தியா ஆண்கள், இந்த மரபணு குறியீட்டை கொண்டுள்ளார்கள். ஆனால் திராவிட மொழி பேசுபவர்களில் இது 10% க்கும் குறைவாகவே உள்ளது. இது 10,000 ஆண்டுகளுக்குள் தான், அதிகமாக 5000 ஆண்டுகளுக்குள், ஸ்டெப்பியில் [புல்வெளி] இருந்து கணிசமான இந்த குழு இந்தியாவிற்குள் வந்ததை காட்டுகிறது] அதாவது, 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப் படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. ஸ்பென்சர் வெல்ஸ் [Spencer Wells] [இவரை நான் பத்தாவது உலகத் தமிழ் மகாநாட்டில் [10 th World Tamil Conference, Chicago / 4 th to 6 th July 2019] ஒரு முறை சந்தித்தேன்] எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்"[Indian marker] என அழைக்கப்படும் M 20, திராவிடர்களின் மூதாதையர் வழி L(HAPLOGROUP –L) மரபுக் காட்டி, 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இவர்கள் மத்திய கிழக்கு, தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் [Baluchistan] ஊடாக சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள். இந்த மலைத் தொடர் இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது. அங்குதான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன, இந்த முன்னைய மூதாதையரை / மனித இனத்தை முதனிலைத் திராவிடர் [proto-dravidian] என அழைக்கலாம். இந்த மரபுக் காட்டி M 20 யைக் கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தின் இந்த முக்கிய இடம் பெயர்வு, தனக்கு முன்னால், இன்றைக்கு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியா கரையோரம் இடம் பெயர்ந்த மரபுக் காட்டி M 130 கொண்ட ஆதி மனிதக் கூட்டத்தினை எதிர்கொண்டது. இந்த முன்னைய கரையோர ஆதி மனிதனை முந்திய திராவிடன் [pre-dravidian] என அழைக்கலாம். இந்த முதனிலைத் திராவிடர் கூட்டம், முந்திய திராவிட கூட்டத்துடன் கலந்தன. இந்த கலப்பில் இருந்தே திராவிட வரலாறு பிறந்தது. மரபுக் காட்டி M 20 கூடுதலாக தெற்கு மக்களிடம் மட்டும் காணப்படுவதுடன் சிலவேளை 50 வீதத்திற்கும் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு வெளியில் இங்கும் அங்கும்மாக மட்டுமே காணப்படுகிறது. அதே வேளையில் மரபுக் காட்டி M 130 இந்தியாவில் தெற்கில் மட்டுமே முதன்மையாக காணப்படுவதுடன் அதுவும் 5 வீதம் அளவிலேயே காணப்படுகிறது. மேலும் இந்த இரண்டு மரபுக் காட்டிகளின் கலப்பில் கரையோர மக்கள் கூட்டத்தின் ஆண் வழி பங்களிப்பு குறைவாக இருப்பது அறியமுடிகிறது. ஆகவே தென் இந்தியா புகுந்த மரபுக் காட்டி M 20 கூட்டத்தினர், அங்கு ஏற்கனவே குடியிருந்த மரபுக் காட்டி M 130 கூட்டத்தினரிடம் இருந்து தமக்கு மனைவிமாரை அல்லது ஒரு வாழ்க்கைத் துணைவியை பெற்றனர் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இவர்கள் கரையோர ஆண்களை பெரும்பாலும் துரத்தி, அல்லது கொலைசெய்து, அல்லது அவர்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கொடுக்காமல் இருந்து இருக்கலாம். என நம்பப்படுகிறது. மேலும் விந்திய மலைத் தொடரின் தெற்கில் வாழ்ந்த இந்த முந்திய திராவிட குழு, முதனிலைத் திராவிடர் குழுவின் பேச்சை ஏற்றுக் கொண்டு இருக்கலாம். அத்துடன் இமயமலை இந்தியா உபகண்டத்தை வட மத்திய ஆசியாவில் இருந்து பிரிக்கிறது. ஆகவே இது ஆதி தென் இந்தியா மக்களின் வடக்கிற்கான நடமாட்டத்தை கடினமாக்கிறது. அதே போல சிந்து நதியும் தார் பாலைவனமும் மேற்கிற்கான இயற்கை தடையாக உள்ளது. அரக்கன் மலைத் தொடர்கள் இந்தியா உப கண்டத்திற்கும் தென் கிழக்கு ஆசியாவிற்குமான பயண முட்டுக் கட்டையாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நீண்ட கால தனிமை, நாளடைவில், தனித்துவமான திராவிட இனத்திற்குரிய பண்புகள் தோன்ற வழிவகுத்தது எனலாம். உதாரணமாக இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். எனவே, மரபுக் காட்டி M 130 யை குறிப்பிட்ட அளவு கொண்ட இலங்கை வேடரும் இந்தியாவின் பழங்குடியினருக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றே! சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று, ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எனது முன்னைய கட்டுரைகளில் இருந்து தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "Dr. Nagalingam Ethirveerasingam (PhD)" / மகன் அர்ஜுனன் எதிர்வீரசிங்கத்தின் கடிதம் / தகவல் On Thursday, 18 April 2024 at 11:55 am Dr. Nagalingam Ethirveerasingam (PhD) passed away peacefully at his home in Los Angeles, California, USA. He was surrounded by his family. He was 89 years old. Nagalingam Ethirveerasingam (Ethir) was born in 1934 in a one-room hut with a palmyrah palm leaf roof and a mud floor in Periyavillan, a small village on the Jaffna Peninsula. He taught himself to high jump in his backyard by analysing pictures in an athletics book he had won as a prize after one of his first meets at Jaffna Central College. He made a silent promise to himself that he would make it to the Olympics after watching a newsreel of the 1948 Olympic Games at a theatre in Jaffna Town. Four years later, at the age of 17, he competed at the 1952 Olympic Games in Helsinki, Finland. His athletics journey continued as he went on to compete at the 1956 Melbourne Olympic Games and won the first Gold Medal in any sport for Ceylon at the 1958 Asian Games in Toyoko, followed by a Silver Medal at the 1962 Asian Games In Jakarta, Indonesia. Ethir broke high jump records at every age while at Jaffna Central College, performing strengthening exercises with homemade weights using old bus axles and other bus parts. After winning the National Meet in Colombo in 1951, he finally acquired a specialist athletics coach, P.E. Rajendra, and a workout regime. He was then selected to be on the team for the 1952 Olympic Games in Helsinki, traveling by ship for over one month to reach Finland. He next participated in the 1954 Asian Games, where he placed fourth despite jumping the same height as the medal winners, setting a new Asian Record that he shared with them. In 1955 and 1956, Ethir was voted the Ceylon Daily News "Sports Star of the Year." He transferred to St. Joseph's College, Colombo, for his 'A' Levels and to be nearer his coach. In 1956, he was awarded a full athletic scholarship to the University of California, Los Angeles (UCLA). He later earned a Master’s Degree from California Polytechnic University, San Luis Obispo, and a PhD from Cornell University in 1971. In 1958, despite co-holding the Asian High Jump record, as well as the Ceylon record, he was initially not selected to be on the team for the Asian Games in Tokyo, Japan. However, due to a series of newspaper articles written by Daily News Sports Editor Carlton Seneviratne, the selection committee relented, allowing Ethir to participate. But being selected so late, the committee told him he had to find and pay his own way to Tokyo from Los Angeles. A benefactor, Donavan Andre, donated US$ 5,000 for his travel just a few days before the games. He arrived shortly before the Games began, wearing his UCLA track suit with the Ceylon insignia patch pinned on, as he wasn't provided with a uniform by the association. His fellow teammates then elected him Captain of the team. (YouTube video of Ethir jumping at the Asian Game with his narration: https://youtu.be/LLAXSs67Dpw?si=YFJrfm9pyM6BSfI7) Ethir not only won the Gold Medal but also set a new Asian and Ceylon record of 6 feet 8 inches (2.03 meters). His Ceylon record lasted until 1989. Meanwhile, back in Ceylon, the 1958 Anti-Tamil riots were occurring at the same time that he was competing. He was unaware of the events unfolding in his country until he spoke to his brother upon returning to the USA. History repeated itself in 1960 and 1962. In 1960, despite being the Asian and Ceylon High Jump record holder, and jumping the qualifying height for the Olympics, he was not selected for the Mexico City Olympic Games. Again, in 1962, a campaign was required for his selection, and he won a Silver Medal at the Asian Games in Jakarta. Ethir was a witness to several pivotal events in the troubled pre-war history of Ceylon/Sri Lanka. In 1956, he was almost killed when he and two friends went to observe the Federal Party's Satyagraha at the Galle Face esplanade against the "Sinhala Only Bill" that was to be introduced in Parliament. In the attacks against the peaceful protesters that ensued and anti-Tamil riots that spread across the country, Ethir and his two friends were almost killed by rioters. Fortunately, one of the rioters recognised him from the pictures in the newspapers when he won the Ceylon “Sports Star of the Year“ award. This man then took them into a pharmacy and told the pharmacist to let them stay until it was safe. Another historic event that he witnessed was the 20 February 1961 Satyagraha at the Jaffna Kachcheri by members of the Tamil political parties. This peaceful protest was also met with violence by the state. After graduating from UCLA with a bachelor’s degree, he returned to Ceylon but struggled to find employment in his field - Agriculture Education. He returned to the United States to earn his Master’s Degree and then attempted to find employment in Ceylon again. However, like many thousands of Tamils, he was unable to do so and instead accepted an offer to teach in Sierra Leone at the University of Njala. Over his academic career, he worked at Universities in Sierra Leone, Nigeria, and Papua New Guinea. He also worked for UNESCO. It was in 1965 in Sierra Leone that he met and married the love of his life, Juliet Ann Power. She had joined the US Peace Corps after graduating from university and was also posted to Sierra Leone. They had three children and eight grandchildren and would have celebrated their 58th wedding anniversary in May of this year. In 1994, after retiring at the age of sixty, Ethir wanted to ‘give back’ to his country and people for all the support he had received during his athletics career. He applied for a position at the University of Jaffna, Kilinochchi Campus (Agriculture) at the height of the war. His application was accepted and despite the dangers due to the ongoing war and severe embargoes on fuel, electricity, medicine, and other essential items to most of Northern Sri Lanka, he returned to his homeland to work in the LTTE-controlled Vanni on a one-year contract. Rather than working for only one year and returning to the US, he stayed on in the Vanni as an unpaid volunteer after his contract ended, working tirelessly on humanitarian, education, and sports projects to aid civilians impacted by the conflict. He was in Kilinochchi in October 1995 when 500,000 civilians were displaced from the Jaffna Peninsula to the Vanni and other areas. He was part of the team in Kilinochchi that received the Internally Displaced Persons and coordinated their emergency food and shelter. He felt that all his training and academic career had prepared him for this mission and remained an unpaid volunteer for the rest of his life; living and working in the North & East of Sri Lanka for 6 to 10 months of every year from 1994 until the COVID pandemic in 2020. He relied on benefactors in the Tamil Diaspora and the support of his wife, Juliet, to cover his expenses. His work focused on education, sports, and helping the most marginalised communities. All his life he was a forceful opponent of the caste system. His last trip to Sri Lanka, whose citizenship he never relinquished despite being eligible for US citizenship, was February to April of 2023 when, at the age of 88 and despite contracting COVID while in Jaffna, he gave workshops in Jaffna and Kilinochchi for athletics coaches and athletes on coaching methods and talent recognition. During the years from 1994 until the end of the war, Ethir worked tirelessly for peace and a negotiated end to the war. He traveled the world, meeting with governments, political leaders, human rights groups, and the Tamil Diaspora to advocate for civilians affected by the war, and later, the 2004 Tsunami. Some of the most important work was what he accomplished after the end of the war in 2009. His sporting achievements and fame ensured that he had access to and was well respected by all sides in the conflict. As a result, he was able to meet with and act as a conduit for unofficial messages between the warring parties aimed at creating the conditions for peace talks. The Harvard Initiative in 1997 was one of these efforts, which like countless others unfortunately failed. He directly impacted thousands of people through humanitarian and development projects in education and sports for war and tsunami-affected persons, inspiring others to live selflessly and work for the betterment of society. These projects and initiatives spanned various sectors and included the differently-abled for whom he was a lifelong advocate. Notably, after the war ended he co-conceived the SERVE Institute, which made educational videos that were distributed to schools throughout the North and East. Due to the lack of qualified teachers in some of the remote areas of the North and East most severely affected by the war, especially the areas inhabited by marginalised persons due to their caste. The Institute made videos in Tamil of expert teachers teaching lessons in Mathematics, Chemistry, Physics, and other subjects and distributed these to schools throughout the North and East. They were a valuable resource for students when the COVID pandemic made attending school impossible. Ethir was also the force behind the groundbreaking study of the Northern education system in 2014 that consulted thousand of parents, educators, community leaders, and administrative staff. The resulting Northern Education System Review (NERS) made wide-ranging, revolutionary recommendations to improve the education system. Many of these recommendations were incorporated by the Northern Province Ministry of Education. The National Ministry of Education in Colombo was also impressed and incorporated some of the recommendations and conducted similar studies in other parts of the country. (Link to the report: https://www.edudept.np.gov.lk/reviewreporteng.html) Ethir believed in helping people no matter their ethnicity, religion, or linguistic background. In his travels and coaching throughout Sri Lanka, he identified athletes who he thought could compete at an international level. The first of these was Manjula Kumara Wijesekara, who would go on to be the Sri Lankan record holder in High Jump. Manjula could only speak a little English and Ethir almost no Sinhalese when Ethir invited him to the US to live with his family in Los Angeles. Manjula lived with Ethir’s family for a year during which Ethir coached him and he took intensive English classes. He eventually earned a full scholarship to the University of Southern California (USC). Ethir did the same with current Sri Lankan high jump record holder Ushan Thiwanka Perera, and high jumpers Nalin Priyadarshana, and Purnima Gunarathna who all stayed at his home in LA while he coached them and assisted them in their quest to receive scholarships to US universities. Sri Lankan Olympic Silver medalist Susanthika Jayasinghe also stayed at his home and was coached by him for three months in 2007 when she made her ‘comeback’ to athletics. She won the Bronze medal at the World Championships in Osaka, Japan that year. Both Susanthika and Manjula helped in post-war coaching clinics that Ethir conducted in Northern Sri Lanka. In 1998, Sri Lankan President Chandrika Kumaratunga Bandaranaike offered him the honorific ‘Deshabandu,’ which he respectfully declined, stating in his letter to her, “I cannot in good conscience accept such a title when my people are suffering and the war is continuing.” He was the last of his six siblings: brothers Sellathurai Nithiyanantham, Nagalingam Ratnasingam, Nagalingam Rajasingam, Nagalingam Segarajasingam, Nagalingam Pararajasingam, and sister Parameswary Nadarajah. Nagalingam Ethirveerasingam is survived by his wife of 57 years, Juliet Ethirveerasingam (Power); his children Sakunthala, Nahulan, and Arjunan; his eight grandchildren Ryan Corsaut, Samantha Quezada, Cassandra Quezada, Benjamin Quezada, Devin Ethirveerasingam, Lila Ethirveerasingam, Hayden Ethirveerasingam, and Nara Ethirveerasingam; his son-in-law Paul Quezada, and daughters-in-law Jennifer Ethirveerasingam and Nimmi Harasgama. In lieu of flowers, please make a contribution to a charity of your choice that works in Sri Lanka. For more information please contact: Arjunan Ethirveerasingam US Mobile: +1 562 881 3502 SL Mobile/WhatsApp: +94 (0) 765770395 Email: arjunan100@yahoo.com
  15. "எந்தன் உயிரே" "அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து ஆரத் தழுவி ஆசை தூண்டி இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!" "அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி இடுப்பு வளைவு இன்பம் சொரிய ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக உரிமை நாட்டும் உத்தம உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 02 கடந்த பத்து இலட்சம் வருட காலப்பகுதியில், இலங்கை பல சந்தர்ப்பங்களில் இந்திய உப கண்டத்துடன் இணைந்து இருந்தது. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கி மு 5000, அதாவது இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் கடைசியாக ஒரே பகுதியாக இருந்துள்ளது. எனவே இலங்கையின் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்தி ஆராய்வது இயலாத விடயம் ஆகும். இலங்கையும் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்ததனால், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் கூட இரு நாடுகளிலும் ஒரே விதமாக இருந்ததாகவும் கருதப் படுகிறது. தென்னிந்தியா பூர்வீக கலாசாரம் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவி இருந்தது. புராதான வரலாற்றுக்களிலும் கிராமிய கதைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டு காலமாக உறவுகள் இருந்து வந்தமை தெரிவிக்கப் பட்டுள்ளது. புராதான இலங்கையில் இராவணனும் இராட்சதர்களும் வசித்த வரலாறும் இயக்கர்கள், நாகர்கள் சீவித்த சரித்திரங்களும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்கின்றன. எனவே, இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன் பின்னர் அப் பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas], இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5 ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப்படுத்தப் படுகிறது [nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க. இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala]. பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம். பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும் மணி மேகலையும் கூட யாழ் குடா நாட்டை நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டு பிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள் [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம். இதில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன் அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை எடுத்து காட்டாக அடுத்த பகுதியில் விளக்கத்துடன் தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்தும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும்
  17. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 01 இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa / தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவ்வேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists from different tribes / ethnic groups into one race] இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை. இந்த கால பகுதியில் இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கு சரிந்து வருவதையும் வட இந்தியாவில் வைதீக மதமும், தென் இந்தியாவில் சிவனை முழு முதற் கடவுளாக வழிபாடும் சைவ மதமும் மீண்டும் வலுப்பெற்று வருவதையும் கேள்விப் பட்ட புத்த மத துறவிகள், புத்த மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, அதற்கு காவலனாக சிங்கள இனத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. எனவே விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும், அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும், மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி குடிகளின் [நாகர், இயக்கர்] இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக பின் உருவாக்கப்பட்டது என்பது மிக மிக தெளிவு. நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது ஆரியர்கள், திராவிடர்கள் [தமிழர்கள்], என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள். என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள். இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள், பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து 'Damela, Dameda, Dhamila and Damila' என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் 'மூத்த' ['elder'] இருப்பது கவனிக்கத் தக்கது. எட்டாம் அத்தியாயம், பண்டு வாச தேவன் பட்டாபிஷேகத்தில், சிங்கபுரத்தில் [Sihapura or sinhapura] சிங்கபாகுவின் [Sihabahu or Sinhabahu] மரணத்துக்குப் பிறகு, அவனுடைய மகன் சுமித்த அரசன் ஆனன. மதுர நாட்டரசனுடைய மகளை அவன் மணந்து கொண்டான்.[Sumitta was king; he had three sons by the daughter of the Madda king./ -Madda = Skt. Madra, Means Madura, the capital city of the Pandyans] அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் இளையகுமாரன் பண்டு வாச தேவன், வியனுக்கு பின் ஒரு ஆண்டு கழித்து ஆட்சி பொறுப்பை ஏற்றான் என்கிறது மகாவம்சம். எனவே பண்டு வாச தேவனின் தாய் ஒரு தமிழிச்சி என தெரியவருகிறது. அவனின் மகள் வழிப் பேரனான, பண்டுகாபயனின் [பண்டு அபயனின்] மகன் மூத்தசிவா [Mutasiva meaning: Elder siva] ஆகும். மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜய சிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் 'பண்டு' என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டு வாசதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படு கின்றன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் [ Picture 01:தேவநம்ரியதீசன் மகிந்த தேரர் உள்ளிட்ட குளுவினரை மரியாதையுடன் வரவேற்றல், Picture 02: குவேனி, Picture 03: விஜயன் பாண்டிய இளவரசியை மணத்தல்]
  18. "முதலாவது எழுதப்பட்ட சட்டம்" ஒரு சட்ட எழுத்துருச் செதுக்கப்பட்ட களிமண் பலகைத் துண்டும் [வில்லையும்] செம்பினால் வடி வமைக்கப்பட்ட உர்-நம்மு [அல்லது ஊர் நம்மு / Ur-Nammu] என்ற சுமேரிய மன்னரின் உருவச் சிலையும் ஈராக்கில் உள்ள நிப்பூரில் கண்டு பிடிக்கப்பட்டது. இது கி மு 2100 ஆண்டை சேர்ந்தது. இந்த உர்-நம்மு என்ற சுமேரிய மன்னரின் குற்றவியல் சட்டம் 17 விதிகளை கொண்டு உள்ளது. அது மேலோட்டமாக பல்வேறு குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் கூறுகிறது. சுமேரியர்களின் கண்டு பிடிப்புகளில் மிகவும் உறுதியானதும் தொலை நோக்கானதும் இந்த உர்-நம்முவின் சட்ட விதித் தொகுப்பு ["The Code of Ur-Nammu"] ஆகும். எல்லா பண்பாடும் அல்லது நாகரிகமும் ஏதாவது சில சமூக ஒழுங்கமைப்பும் சச்சரவுக்கான தீர்மானமும் வைத்து இருந்தாலும், சட்டம் என்பது ஒரு தனித் துவமான தோற்றப்பாடு [distinct phenomenon] ஆகும். சட்டம் என்பது எழுதப்பட்டு, குற்றம் செய்தவர்களுக்கு அதன் மூலம் தண்டனை வழங்கப்பட்டு [நிர்வகிக்கப் பட்டு], சச்சரவு ஏற்படுத்திய அந்த முரண்பாடுகள் தீர்க்கப் படுகிறது. முன்னைய சுமேரியாவில் சட்ட முரண் பாடுகள் அல்லது பிரச்சனைகள் ஒரு சில வழி முறைகளை பின்பற்றின. நீதிமன்றத்திற்கு அந்த சச்சரவுகள் போக முன், அந்த பிரச்சனையில் பங்கு பற்றிய எல்லா தரப்பினர்களுக்கும் இடையில் முதலில் சமாதானம் செய்ய முயற்சிப்பார்கள். இந்த செயல் முறை மச்க்ஹீம் [maskhim] என்று அழைக்கப்படும் ஒரு நடுவரின் [arbitrator] தலைமையில் நடைபெறும். இது தோல்வியுறும் தருவாயில், இந்த முரண்பாடு நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு டிகுட்ஸ் [dikuds] என்று அழைக்கப்படும் நீதிபதிகள் குழு [panel of professional judges] அவர்களின் விவாதத்தை கேட்கிறது. கி மு 2400 ஆண்டு அளவில் சுமேரிய சமுகத்தில் சட்டம் இயல்பாக / சாதாரணமாக இருந்தது. இந்த சட்டம் பலவீனமானவர்களை, ஏழைகளை, விதவைகளை, அனாதைகளை பணக்காரரிடம் இருந்து காப்பாற்ற வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த உர்-நம்முவே சிறந்த பெரிய சிகுரத் கட்டியவர்கள் ஆகும். பின்பு வந்த "கண்ணுக்குக் கண்" அல்லது "பலிக்கு பலி"[“eye for an eye,”] என்ற சட்டங்கள் போல் அல்லாது, உதாரணமாக ஹம்முராபி சட்ட தொகுதி [The Code of Hammurabi], இது , இந்த ஆரம்ப கால சட்டம், தீங்கு இழைத்ததற்கான நட்ட ஈடு [monetary compensation] வழங்குவதில் கவனத்தை செலுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியை நிர்வாகிக்கும் பொறுப்பு அரசனிடம் விடப்பட்டது. எனினும் அவரின் வேலை பலு காரணமாக, எல்லா வழக்குகளையும் அவரால் கேட்க முடியவில்லை. ஆகவே நீதிபதி குழு ஒன்றிற்கு தனது அதிகாரத்தை ஒப்படைத்து அவர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட வழக்கை கையாண்டார். என்றாலும் அங்கு ஒரு நடுவர் குழு [juries] வீற்றிருக்கவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும் போது, அதில் ஈடு படும் இரண்டு பகுதியினரும் முதலில் உண்மை மட்டுமே சொல்வதாக சத்திய பிரமாணம் எடுக்க வேண்டும். அதன் பின் தமது வாதங்களை / நியாயத்தை நீதிபதிகளின் முன் எடுத்து வைக்க வேண்டும். அத்துடன் அதற்கான ஆதாரங்களையும், சாட்சிகளையும் சமர்பிக்க வேண்டும். அவர்களின் சம்பவம் பற்றிய கதையில் மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்துக்கள் காணப்படின், குற்றம் சாட்டப்பட்ட கட்சி பொய் சொல்வதாக அங்கு கருதப் படுகிறது. ஆகவே அங்கு ஒரு கடும் சோதனை செய்து [trial by ordeal] அதில் தெய்வீக வழிகாட்டல் [divine guidance] நாடப்படுகிறது. உதாரணமாக குற்றம் சுமத்தப் பட்டவரை ஆற்றில் எறிகிறார்கள். அவர் அதில் இருந்து உயிர் பிழைத்தால், அவர் அப்பாவி என முடிவு எடுக்கிறார்கள். தீர்ப்பு நியாயமானது இல்லை என எந்த கட்சியும் நம்பினால் அவர்கள் நேரடியாக அரசனுக்கு முறை இடலாம். இந்த முறையிடும் வழக்கம் இன்னும் , குறிப்பாக ஆங்கிலோ - சாக்சன் சட்டத்தில் [Anglo-Saxon law.], இருப்பதை காண்க. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  19. "ஏமாற்றம்" நாம் எதிர் பார்த்தது போல ஒன்று நடைபெறவில்லை என்றால் எமக்கு ஒரு ஏமாற்ற உணர்வு தானாக தோன்றி விடுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதரிலும் எதோ ஒரு வேளையில் இப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. என்றாலும் அதன் வலிமை தாக்கம் வேறு படுகிறது. சில பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவை விரைவில் மறந்து விடப் படுகின்றன. ஆனால் சில, வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் கவலையையும் கோபத்தையும் கொடுத்தவாறே இருக்கிறது. நான் இந்த இரண்டையும் கண்டவன். "தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்!" நான் பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டு இருக்கும் காலம் அது. நான் பல வேலை நிறுவனங்களுக்கு மனுப்போட்டு நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன். படிக்கும் காலத்தில் நான் ஓரளவு சராசரி மாணவன். எனது மறுமொழியும் பரவாயில்லாமல் இருந்தது. ஆகவே நான் விரைவில் வேலையில் சேர்ந்து, எம் குடும்ப நிலையை உயர்த்துவேன் என திடமாக நம்பினேன். 'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்று யாரோ பாடியது காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் எந்த நேர்முகத் தேர்வுக்கும் இதுவரை வரவில்லை. அது என்னுள் எதோ ஒரு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. நானும் விடாமல் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் மிக நேர்த்தியாக உடையணிந்து, மகிழ்வாக நேரத்துடன் அங்கு சென்றேன். எனது முறை வர, மிக நிதானமாக புன்னகை தவழ அங்கு உள்ளே சென்றேன். நிறுவனத்தின் மேலாளர் எனக்கு வாழ்த்து கூறி கதிரையில் அமரும்படி பணிவாக வேண்டினார். நானும் பதிலுக்கு அவருக்கு வணக்கம் கூறி பணிவுடன் அமர்ந்தேன். அதன் பின் அவர் எனது படிப்பு சம்பந்தமான சான்றுகளை பார்த்துவிட்டு, வேலையுடன் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்டார். எல்லாவற்றுக்கும் நான் உடன் உடன் பதில் கொடுத்தேன். என்றாலும் இறுதியில் அவர் தனது தலையை ஆட்டியபடி, உனக்கு செய்முறை அறிவு பத்தாது, ஆகவே இந்த வேலைக்கு இம்முறை உன்னை பரிசீலிக்க முடியாது என்று ஆறுதலாக, அமைதியாக கூறி கைவிரித்து விட்டார். எனக்கு மிகவும் கோபமாகவும் கவலையாகவும் ஏமாற்றமாகவும் இருந்தாலும், அதை வெளியே காட்டாமல், அந்த அறையில் இருந்து வெளியேறினேன். எப்படியாகினும், ஒரு மாதத்தின் பின் வந்த என் இரண்டாவது நேர்முகத் தேர்வில், அவர்கள் என்னை வேலைக்கு உடன் எடுத்ததுடன், முதல் ஆறு மாதம் பயிற்சி எந்திரவியலாளராக நியமித்து, எனக்கு தேவையான நடைமுறை அறிவு தந்து, என் துறையில் நான் உயரவும் வழிவகுத்தனர். அது மட்டும் அல்ல, மேலாதிக்கப் கடல் பொறியியல் பயிற்சிக்கு ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகம், ஜப்பானுக்கும் ஒரு ஆண்டு அனுப்பினார்கள். அதனால் முதல் ஏற்பட்ட ஏமாற்றம் தானாக மறைந்தே போய்விட்டது. "எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் உடன் பிறப்புகள்! ஒன்றை தொடர்ந்தே இன்னொன்று பயணிக்கும்!" ஜப்பான்னால் வந்தபின் எனக்கும் திருமணம் நடந்து, மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களாக மகிழ்வாக குடும்ப வாழ்வு நகர்ந்தது. நாமும் நாட்டின் சூழ்நிலையால், குடும்பத்துடன் லண்டன் போய், அங்கு நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்தோம். பிள்ளைகளும் நன்றாக படித்து, மூவரும் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். அந்த நேரத்தில் பெரும்பாலும் நாம் இருவருமே வீட்டில் இருந்தோம். மகன் வீட்டில் இருந்தே பல்கலைக்கழக படிப்பு தொடர்ந்தார். இரு மகளும் தூர இடத்தில் படிப்பதால், அங்கு விடுதியில் இருந்தனர். அப்படியான ஒரு நாளில் நானும் மனைவியும் கதைக்கும் பொழுது, அவர் பிள்ளைகள் ஓரளவு தமது உழைப்பில், வாழ்க்கையில் நிரந்தரம் ஆனதும், நாம் இருவரும் கொஞ்ச ஆண்டு, மீண்டும் யாழ்ப்பாணம் போய் இருக்கவேண்டும் என்று தன் ஆசையை கூறினார். அது எனக்கும் நல்லதாகவே பட்டது. நானும் ஆமோதித்து தலை ஆட்டினேன். அவரும் மிக மகிழ்வாக, இரவு சமையல் செய்ய எழுந்து போனார். அடுத்த நாள், வழமை போல் வேலைக்கு காரில் காலை போனார். அவர் பகுதி நேர வேலை. நான் முழுநேர வேலை, நானும் அவரைத் தொடர்ந்து வேலைக்கு போனேன். அன்று மதியம் திடீரென ஒரு அவசர அழைப்பு , என் வேலைத்தளத்துக்கு வந்தது. அதில் உங்க மனைவி மயக்கமுற்று, அவசரமாக மருத்துவ அவசர ஊர்தியில் வைத்திய சாலைக்கு கொண்டு போகிறோம் என அவரின் வேலைத்தளத்தில் இருந்து வந்தது. நானும் மகனும் உடனடியாக அங்கு போனோம். அவர்கள் தேவையான பரிசோதனைகளை செய்து, இனி அதன் மறுமொழிகள் வர, தேவையான சிகிச்சை அளிப்போம் என்றார்கள். ஆனால் அந்த மறுமொழிகள் வரும் முன்பே, சில மணித்தியாலத்தில் அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவர் கடைசி நேரத்தில் இரு மகளையும் கூட பார்க்கவில்லை. "ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதியதாய் இருக்கிறது. சில நேரம் நம்பிக்கையால் .. சில நேரம் அன்பால் .." அவரும் நானும் போட்ட திட்டம், கனவுகள் எல்லாம் எம் கண்ணீரில் கரைந்து ஒடத் தொடங்கின. எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்த அந்த உன்னத உள்ளத்தை, இறப்பு என்ற ஒன்று திடீரென வந்து அவளையும், எம்மையும் ஏமாற்றி விட்டது. அவர் இறந்த பின்பு தான், அவரின் பரிசோதனைகளின் மறுமொழி வந்தது. அது மூளையுறை அழற்சி (Meningitis) என்று தெரிய வந்தது. இத்தகு அழற்சி, தீ நுண்மங்களினாலோ, பாக்டீரியாக்களினாலோ, அல்லது பிற நுண்ணுயிரிகளினாலோ, அரிதாகச் சில மருந்துகளினாலோ உண்டாகலாம் என எமக்கு விளக்கம் தரப் பட்டது. மனைவியின், பிள்ளைகளின் தாயின் பிரிவு, எம்மையும் அவளையும் ஏமாற்றிய அந்த நுண்ணுயிரிகள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அது என்ன செய்யும்? இன்னும், 17 ஆண்டுகள் தாண்டியும் அந்த ஏமாற்றம் மறையவே இல்லை, அவளை நாம் எவருமே மறக்கவும் இல்லை. இப்ப பத்தாம் நினைவு ஆண்டில் பிறந்த பேத்தியின் பெயர், அவளின் பெயரே ! அவள் கனவுகள் இனி என்றுமே நிறைவேறப் போவதில்லை. ஆனால், அந்த அழகு பெயர் "ஜெயா", எம் உள்ளங்களில் என்றுமே எம்மை ஏமாற்றாமல் குடியிருக்கும்!! "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வைக் கொஞ்சம் நினைத்தேன் முட்டி மோதிய ஏமாற்றம் மறந்து காட்டாத வாழ்வைக் கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டிப் பொண்ணு புன்னகை சிந்தி பாட்டிக் கையை மெல்லப் பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டிப் படைத்த ஏமாற்றத்தை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து எட்டுத் திக்கும் துள்ளிக் குதித்தேன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. "என்றும் உன் நினைவில் வாழும்" "என்றும் உன் நினைவில் வாழும் ஒன்றும் அறியா குழந்தை இவன் இன்றும் உன் அணைப்பைத் தேடி நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்!" "கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும் குன்றுகளில் பள்ளங்களில் பயணம் செய்தாலும் வென்று தோற்று வாழ்வைக் கடந்தாலும் ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை!" "ஊன்று கோலாய் அவள் கட்டளைகள் சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள் மென்று தின்ற அவள் கொள்கைகள் இன்றும் என்றும் எம் இதயத்திலேயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. அன்பு நண்பர்களுக்கு: இவை நான் இதுவரை எழுதிய நீண்ட கட்டுரைகள். பல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும், ஆனால் வெவ்வேறாக உள்ளன. உங்களின் விருப்பம் தெரிவித்தால், அவையை நான் இங்கு பதிய முயலுவேன் அல்லது லிங்க் தருவேன். நீங்கள் வாசித்து உங்கள் கருத்துக்கள் பதியும் பொழுது நானும் அதனுடன் சேர்ந்து வளர்ச்சியடைவதுடன் கட்டுரைகளும் மேலும் திருத்தப்பட்டு அழகு பெறுகிறது! நன்றி தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / 82 parts [இந்த தமிழ் கட்டுரையை உடனடியாக அல்லது எல்லோருக்கும் தேவையற்ற ஆழமான விபரங்களைத் தவிர்த்து 36 பகுதிகளாக சுருக்கி பதிவிடவுள்ளேன்] Origins of Tamils? [Where are Tamil people from?] / 82 parts "Scientific Contributions [or glories] of Ancient Tamils" / 16 parts தமிழரின் உணவு பழக்கங்கள் / 27 parts FOOD HABITS OF TAMILS / 27 parts 'Story or History of writing' / 25 parts 'எழுத்தின் கதை அல்லது வரலாறு' / 25 parts An analysis of history of Tamil religion / 20 parts "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / 20 parts "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / 30 parts நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் சமுதாயம்] / 30 parts Superstitious Beliefs Of Tamils / 19 parts தமிழரின் நம்பிக்கைகள் [மூட நம்பிக்கைகள்] / 21 parts தை மாதம்{mid of January} ஒரு சிறப்பான மாதம்! / 04 parts Thai[mid of January]is a special month for Tamils! / 04 parts Jallikattu-An ancient Tamils bull taming sport / 02 parts ஜல்லிக்கட்டு-ஒரு வீரமிக்க பண்டைய தமிழர் விளையாட்டு! / 02 parts "பண்டைய தமிழ் பாடல்களில் விஞ்ஞானம்" / 06 parts "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / 04 parts Irrigation of Ancient Tamils, Mesopotamia to South India / 04 parts "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?" / 05 parts Do we need to celebrate Deepavali and Deify Rama as God? / 05 parts Heroes [Warriors] of Purananuru / 05 parts புறநானுற்று மா வீரர்கள் / Heroes [WARRIORS] of Purananuru / 05 parts FORGET GOD[RELIGION] FOR THE TIME BEING;AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” / 04 parts ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / 04 parts Is Saivism the same as Hinduism[vaidika-dharma ] or is it a different one? / 04 parts சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?அல்லது வேறா? / 04 parts இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / 12 parts Death & Its Beliefs of Tamils / 12 parts "தமிழ் புத்தாண்டு" / 02 parts "Tamil New Year" / 02 parts "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் / 02 parts "Crimes against humanity / 02 parts "முதுமையில் தனிமை" / 03 parts விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / 02 parts தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? / 02 parts கொரோனா வைரஸ் / வரலாறு தன்னை மீண்டும் கூறுகிறதா ? வரலாறு கற்பித்த பாடங்களை பின்பற்றுகிறோமா ? / 04 parts கடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து / 04 parts "ஒருபால் திருமணம்" / 04 parts "same-sex marriages" / 04 parts உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / 10 parts "முதல் மற்றும் இரண்டாவது கொரோனா வைரஸ் அலைகள்" / 04 parts அன்றும் இன்றும் / 04 parts "பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்" / 03 parts "புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! / 02 parts "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / 10 parts "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"/ பல பண்டைய பாடல்களின் வரிகள் ஊடாக ஆகஸ்ட் 07,2016 நட்பு தினத்தில் ஒரு நட்புடன் கூடிய காதலுக்காக எங்கும் ஒரு இளம் பெண்ணின் சிறு கதை/ 05 parts "தோஷமும் விரதமும்" / 2 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை [Human vision] / 2 parts "மிருகங்களில் இருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / 4 parts "புறநானூற்று மாவீரர்கள்" / 8 parts 'குடும்பங்கள் மற்றும் திருமணங்களின் பரிணாமம்' / 10 parts "தமிழர்களின் பண்டைய நான்கு கல்கள்" / 08 parts மொழியின் தோற்றம்: மொழி எப்போது தொடங்கியது? எவ்வாறு உருவானது? / 10 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts முதியோருடன் ஒரு அலசல்: மனித பார்வை / 02 parts முதியோருடன் ஒரு அலசல்: நினைவாற்றல் இழப்பு / 02 parts "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / சிந்தனை" / 03 parts "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / 05 parts "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. எஸ் போவின் மொழிபெயர்ப்பை கையாள்கிறீர்களா? இல்லை. மற்றது நான் மகாவம்சத்தின் மற்றும் தீபவம்சத்தின் முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்புகளை நேரடியாக வாசித்து, அது எங்கே உண்மை அல்லது பொய் என்பதற்கான சான்றுகளை வரலாற்று பதிவுகள், தொல்பொருள் ஆய்வுகள், பண்டைய இலக்கியங்கள் மற்றும் பயணக் குறிப்புகளில் தேடி எடுத்து அலசுகிறேன். இது நான் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் என் முகநூலிலும் என் வலைத்தளத்திலும் பதிவிட்டவையே. ஆங்கிலத்தில் இறுதியாக பதிவிடத்தால், அது உண்மையில் ஒரு ஒழுங்கில், வரிசையில் உள்ளது கீழே அதன் லிங்க் தருகிறேன் . தமிழில் பதிவிட தொடங்கியதால் அதன் லிங்க் தரவில்லை நன்றி ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9638876056187612/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9679551822120035/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9719732041435346/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/9756879647720585/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/9797984360276780/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/9840268999381649/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/9867390243336191/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/9902567736485108/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/9939135942828287/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/9959688194106395/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/10007944625947418/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 14 https://www.facebook.com/groups/978753388866632/posts/10047737095301504/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/23864680959847217/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/23884767157838597/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/23986856534296325/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 18 https://www.facebook.com/groups/978753388866632/posts/24027010520280926/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 19 https://www.facebook.com/groups/978753388866632/posts/24102926682689309/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 20 https://www.facebook.com/groups/978753388866632/posts/24148156724832971/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 21 https://www.facebook.com/groups/978753388866632/posts/24198246736490636/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 22 https://www.facebook.com/groups/978753388866632/posts/24241916592123650/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 23 https://www.facebook.com/groups/978753388866632/posts/24293753150273327/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 24 https://www.facebook.com/groups/978753388866632/posts/24340890602226248/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 25 https://www.facebook.com/groups/978753388866632/posts/24388637950784846/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 26 https://www.facebook.com/groups/978753388866632/posts/24433965519585422/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 27 https://www.facebook.com/groups/978753388866632/posts/24479740805007893/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 28 https://www.facebook.com/groups/978753388866632/posts/24521816720800301/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 29 https://www.facebook.com/groups/978753388866632/posts/24566341346347838/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 30 https://www.facebook.com/groups/978753388866632/posts/24610044775310828/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 31 https://www.facebook.com/groups/978753388866632/posts/24657589823889656/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 32 https://www.facebook.com/groups/978753388866632/posts/24708333482148623/?
  23. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 02 புத்தர் நிர்வாணம் அடைந்து ஒன்பது மாதத்தின் பின் காற்றினூடாக பறந்து இலங்கைக்கு வந்ததாகவும், அவரின் முக்கிய நோக்கம் அங்கு வாழும் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட மனிதர்களை [sub human] அகற்றி, இலங்கையை மனிதர்கள் வாழும் இடமாக மாற்றுவது என்கிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள், இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கிறது. உதாரணமாக, 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக இலங்கையிற் காணப்பட்ட உடற்கூற்றியல் அடிப்படையிற் நவீன மனித இனத்தினன்னாக [modern human] பலாங்கொடை மனிதன் இருக்கிறான். அவனுடைய எலும்புக்கூடு 1950 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் அல்ல, 2900 ஆண்டுகள் அளவில், இரும்பு கால பண்பாடு, உதாரணமாக, குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதை R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake] உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயி [‘First Farmers in Global Perspective’] என்ற ஆய்வு குறிப்பில் பதிந்துள்ளார். அவ்வாறே பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] விஜயனுக்கு முன் இலங்கையில் விவசாயம் இருந்ததை உறுதி படுத்துகிறார். மேலும் ஹோமோசேபியன் [Homo sapiens] தென் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, அவை பிரிக்கப் படும் முன் நடந்தே வந்திருப்பார்கள் என்கிறார். இவை இரண்டு பக்கமும் காணப்பட்ட தொல்பொருள் சான்றுகளில் இருந்து உறுதியாக நிறுவப்பட்டும் உள்ளது. அது மட்டும் அல்ல, R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தமது ஆய்வு மூலம் சிங்களவர்கள் தென் இந்திய தமிழர் மற்றும் கேரளத்தவர்களுடன் [‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’]. ஒத்து போகிறார்கள் என்கிறார். மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம், பாடல் 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். எனவே, ராணியையும் மற்றவர்களுக்கு மனைவிமார்களையும் பெற, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதை என இன்று சிங்களவர்களால் கருதப்படும் விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கும், மற்றும் விஜயனுடன் சேர்ந்த சிங்கள இனத்தின் முதல் மூதாதையர்களான அவனது எழுநூறு கூட்டாளிகளும் தமிழ் மதுரை பெண்களையே மணந்து, அவர்களினூடாகவே, அதாவது தமிழ் பெண்களுடாகவே, சிங்கள வம்சத்தை விருத்திசெய்தனர் என கூறிய மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நாம் நன்றி செலுத்த வேண்டும். உடலை மறைக்கும் உடை ஒன்று இல்லாமல் எவராலும் ஒரு நாகரிக மனிதனை சிந்திக்க முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக கருதப்படும் விஜயன் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, வட இலங்கையை நாகர் மன்னர்கள் ஆட்சி செய்கிறார்கள், குவேனி என்ற இலங்கை பெண் ஒருத்தி நூல் நூற்றுக்கொண்டு அவனை வரவேற்கிறாள். அதாவது, மகாவம்சம் மூலமே, விஜயன் வருவதற்கு முன்பே, சிங்கள இனம் என்ற ஒன்று உலகில் தோன்ற முன்பே, இலங்கை ஒரு மன்னன் ஆட்சி என்ற கட்டமைப்புக்குள் நாகரிகம் அடைந்து விட்டது என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் அந்த நாகரிகத்தின் சூத்திரக்காரர்கள் யார் என்ற கேள்வி தானாகவே எழுகிறது ? இன்னும் ஒன்றையும் நான் இந்த அறிமுகத்தில் தெளிவு படுத்தவேண்டும். புத்தரின் முதல் இரண்டு இலங்கை வருகையிலும் அவர், தன்னுடைய கருணை, இரக்கம், அன்பு என்ற மனித தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு பயங்கரவாதி போல், இலங்கையின் பூர்வீக குடிகளின் மேல் தாக்கம் செய்ததை காண்கிறோம். அதிலும் முதலாவது வருகையில், பூர்வீக குடிகளை பயமுறுத்தி, அங்கிருந்து திரும்பி வராதபடி அகற்றி, விஜயனும் அவனது கூட்டாளிகளும் இலங்கையில் இலகுவாக குடியேற வழிவகுத்தார் என்கிறது. புத்தர் பிறந்து வளர்ந்த இந்தியாவில் புத்தரின் எந்த வரலாற்றிலும் இப்படியான குறிப்பு இல்லை என்பதுடன், அவரின் மேலான குணநலனும் முரணாக உள்ளது. இப்படியான கதையின் விளைவுகள் தான் இன்று இலங்கையில் தமிழர் படும் பல நெருக்கடிகளுக்கும் காரணமாகும். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு பெரும்பான்மை அல்லது வல்லமையுள்ள இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படு கின்றன. இதை மனதில் பதித்து, மிக விரைவில் 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' என்ற எனது இந்த தொடர் கட்டுரையை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன். இது இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே இது அதில் புதைந்துள்ள உண்மைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே ஆகும். அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் முற்றுப்பெற்றது , இனி பகுதி: 01 தொடரும்
  24. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.