Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும் தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை. சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?" என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக" "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து" அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட் பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள். இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும். சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "அனுராத புரத்தில் தமிழர்" கி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை "திஸ " என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவன் அவ் மதத்தில் கவரப் பட்டு, தனது மக்களுடன் மதம் மாறினான். அத்துடன் தனது பெயரையும் "தேவ நம்பிய திஸ " [King Devanampiya Tissa/307-267 BC ] என்று மாற்றினான். இவ் மன்னன் இறந்த சில ஆண்டுகளின் பின்பு, கி.மு 237 ஆம் ஆண்டு அளவில், சேன [ஈழசேனன் / சேனன்],குத்தக [நாககுத்தன் / குத்திகன்] [Sena and Guththika/ 237-215 BC] என்ற இரு தமிழ் மன்னர்கள் மொத்தம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் அனுராத புரத்தில் இருந்து ஆட்சி செய்தனர். இவ்விரு தமிழ் மன்னர்களின் பின் சில காலம் கழித்து, எல்லாளன் [Elara] என்ற தமிழ் மன்னன் கி மு 205–161 ஆண்டு அளவில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான். இவன் துட்ட காமினி [Dutthagamani] யால் தோற்கடிக்கப் பட்டான். மீண்டும் கி மு 103 ஆண்டு அளவில், ஐந்து தமிழ் மன்னர்களால் [அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என அழைக்கப்பட்ட புலஹத்தன், பாகியன், பணயமாறன், பிலயமாறன் மற்றும் தத்திகன் ஆகும்] கி மு 89 ஆண்டு வரை ஆளப்பட்டது. இப்படி தமிழ் மன்னர்களால் நீண்ட காலம் அனுராத புரம் ஆளப்பட்டதை பாளி நூலில் கூறப் பட்டுள்ளது. மேலும் சிங்கள மொழி எந்த ஒரு நாட்டிலும் முன்பு பேசப் படவில்லை. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைய தொடங்கியது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை. ஆனால் கி மு 300 ஆண்டு அல்லது அதற்கு முன்பே தமிழ் ஓர் இலக்கிய மொழியாக, இன்று உள்ளது போலவே வளர்ச்சி பெற்றிருப்பதை காண்கிறோம். அதே போல, மகிந்தன் அல்லது மகிந்தரின் வருகைக்கு முன்பு [கி.மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி] பௌத்த மதம் இலங்கையில் கட்டாயம் இருந்து இருக்காது. ஆகவே அதற்கு முன்பு இலங்கை மக்கள் என்ன மதத்தினராக இருந்தனர் என்பது அவர்களின் இன அடையாளத்தை ஓரளவு காட்டும். கி மு 247 இல் முடி சூடிய மன்னன் தேவ நம்பிய திஸவின் தந்தையின் பெயர் பாளி நூல்களில் மூதசிவன் [மூத்தசிவன் / Mutasiva] எனக் குறிக்கப் பட்டுள்ளது. இவன் கி மு 367 தொடக்கம் கி மு 307 வரை அனுராத புர அரசனாக இருந்துள்ளான். மேலும் மகாசிவன் [Mahasiva] என்பவனும் கி மு 257-247 காலப் பகுதியில் அனுராதபுர அரசனாக இருந்துள்ளான். இங்கு சிவன் என்ற பெயர் வழக்கில் இருந்தமை அக் காலத்தில் சிவ வழிபாடு இருந்ததை உறுதிப் படுத்துகிறது. அதாவது சைவ சமயம் அனுராதபுரத்தில் இருந்தமை எமக்கு இதனால் தெரிய வருகிறது. சைவ மதம், தமிழ் பண்பாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை நிலவும் பாரம் பரியமாகும். இதற்கு மேலும் எடுத்துக் காட்டாக, வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயனின் [Walagamba ] ஆட்சியின் போது [கி மு 103 -கி மு 89], பிராமணர்களின் குடியிருப்புக்களையும் வேதம் ஓதும் மண்டபங்களையும் யாக சாலைகளையும் அவன் அமைத்தான் என மகாவம்சத்தில் இருந்து அறிய முடிகிறது. இதுவும் தமிழர்கள் அனுராத புரத்தில் அன்று வாழ்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது போல, மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலிலும் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனான கல்லாட நாகன், மற்றும் சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன் போன்ற மன்னர்களையும் காண்கிறோம். நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து ஆகும். இந்த நாகர்கள் [Naga people ], மற்றும் இயக்கர்கள் [ Yaksha ], வேடர்கள் [Veddas] ஆதிதிராவிட இனமக்கள் [Adi-Dravida people] என்பதும் அவர்கள் சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.[.According to the mahavansa, yakkhas confined to the center of the Island and Naga dominated the northern and western parts in sixth century B.C.]. ராணி அனுலா [Queen Anula], சிவா 1 [Siva I]என்ற அரண்மனை இரவுக்காவலாளி [doorman], பின் வடுகன் [Vatuka] என்ற தமிழ்த் தச்சன், அதன் பின் நிலிய [Niliya] என்ற தமிழ்ப் பிராமணப் பூசாரியையும் திருமணம் செய்தார். இதனால் தமிழ் மன்னர்கள் அக் காலப்பகுதியில் அனுராத புரத்தில் ஆட்சி செய்தார்கள் எனவும் அறிய வருகிறது. அது மட்டும் அல்ல அக்காலத்தில் அரண்மனையில் தமிழர்கள் கடமை புரிந்ததும் தெரிய வருகிறது. இவை நடை பெற்ற காலம் கி மு 47 -42 ஆகும். அத்தோடு, அப் பிரதேசத்தில் பெருமளவு தமிழ் மக்களும் செல்வாக்குடன் வாழ்ந்து இருக்க வேண்டும். அல்லாவிடில் தமிழ் மன்னர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. மேலும் அங்கு பல சிற்றரசுகள் இருந்ததும் தெரிய வருகிறது. அவைகளில் கட்டாயம் சில தமிழ் அரசுகளும் இருந்து இருக்கலாம். மேலும் பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியதும் குறிப்பிடத் தக்கது [993–1077]. இவை எல்லாம் அநுராத புரத்தில் ஆதி காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை காட்டுகிறது. அத்தோடு, கி பி 1658 இல் இருந்து ஆட்சி செய்த ஒல்லாந்தர் [Dutch] காலத்தில் நடை பெற்ற சம்பவம் அக் காலம் வரை தமிழர் அங்கு வாழ்ந்ததை மிகத் தெளிவாக வரலாற்று உண்மையை நிருவிப்பதாக உள்ளது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயன் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று. இதனை இவர் Historical Relation of Ceylon என்ற தனது நூலில் இப்படி எழுதி உள்ளான்- "To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV / page 322-323] இவை எல்லாம் தமிழர்கள் பெருமளவு அனுராத புரத்தில் வாழந்ததையும், மற்றும் ஆட்சி செய்ததையும் எந்த வித ஐயத்திற்கும் இடம் இன்றி எடுத்துக் காட்டு கின்றன. என்றாலும் இன்று நிலைமை முற்றிலும் மாற்றம் அடைந்து விட்டது. இன ஒற்றுமையும் உருக் குலைந்து விட்டது. இவை வருத்தத்திற்கு உரியனவே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  4. "என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உண்மை நேர்மை உன்னில் இருக்கட்டும்!" "ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே!" "எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்!" "ஏழை பணக்காரன் தற்காலிக நிலையே ஏற்றம் இறக்கம் வாழ்வில் பொதுவே ஏமாற்றம் தடுமாற்றம் நிறைந்த வாழ்வில் ஏணை பழக்கம் சுடுகாடு வரைக்குமே!" "ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு!" "ஒடுங்கி அடங்கி வாழ்வது வாழ்வல்ல ஒல்லார் நாண உன்னை உயர்த்து ஒளியார் முன் ஒள்ளியர் ஆகு ஒற்றுமை கொண்ட இனமாய் வாழு!" "ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "என்னைப் பற்றி மனதில் பட்டவை" "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" "உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன்!" "ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் பதவி ஆசை பிரித்து விளையாடுது பணம் தேடி வியாபாரம் செய்யுது!" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் மதம் கடந்து பிரதேசம் கடந்து ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!" "ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்!" "நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!" "ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான் அன்பை போதித்து சமயம் பிறந்தது வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!" "விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.