Everything posted by சுண்டல்
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
தனது அருமை மாணவன் சுமந்திரனுக்குத் தமிழ்த் தேசியப் பற்று இல்லை விக்னேஸ்வரன்/// ஆசிரியருக்கே இல்லையாம் மாணவனுக்கு எப்பிடி வருமாம்?
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள்
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன. இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும். அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வேண்டும். உலக வரலாற்றில் மரணத்தின் பின் தண்டனையாக பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமைக்கு உதாரணமாக இங்கிலாந்தின் ஒலிவர் குரோம்வெல் , இத்தாலியின் முசோலினி போன்றவர்களை முதன்மை உதாரணங்களாக குறிப்பிடலாம். அவ்வாறே இலங்கையில் பீல் மாஷல் சரத் பொன்சேக்காவுக்கு பதவி, பட்டங்கள் பறிக்கப்பட்டமையும் அதன் பின்னர் பதவி பட்டங்கள் மீள கொடுக்கப்பட்டு மேலும் பட்டங்கள் கொடுக்கப்பட்டமையும் இங்கே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இங்கிலாந்துக்கு வெற்றி ஒலிவர் குரொம்வெல் (Oliver Cromwell 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் வீரம்மிகு முன்னணி இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த செயல் வீரர். அத்தகையவர் பின்னாளில் முதலாம் சால்ஸ் மன்னனின் கொலையுடன் (30 ஜனவரி 1649) முடியாட்சியை வீழ்த்தி குடியாட்சியின் பெயரால் 19 மே 1649ல் ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் தன்னை மன்னனாக்கிப் புரட்சிக்குத் துரோகம் இழைத்தார். 1658 ல் அவர் இறந்ததன் பின்னர் மீண்டும் மன்னன் சால்ஸின் மகன் இரண்டாம் சால்ஸ் 1661இல் தம் வம்ச ஆட்சியை மீட்டெடுத்த பின்னர் 1662ல் குரோம்வெல் மீதான குற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் போது அவருடைய புதைக்கப்பட்ட உடல் தோண்டப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, டைபர்னில் உள்ள புகழ்பெற்ற தூக்கு மேடையில் அவருடைய எலும்புக்கூடு தூக்கிலிடப்பட்டது. அத்தோடு நின்றுவிடாமல் அந்த எலும்புக்கூட்டின் தலை வெட்டப்பட்டது. மன்னரின் அதிகாரத்தைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு , குரோம்வெல்லின் தலை வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தின் கூரையில் முப்பது ஆண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இங்கே மரணத்தின் பின்னும் ஒலிவர் குரொம்வெல்க்கு தண்டனை அளிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய பட்டங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்ட ஒரு வரலாற்றை காணமுடிகிறது. உலக வரலாற்றில் இத்தாலியின் பசிஸ்ட் முசோலினி என்று அழைக்கப்படும் பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஜுலை 29, 1883 – ஏப்ரல் 28, 1945) இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி நாட்டுக்கு (1922–1943) தலைமை வகித்தவர். ஏதேச்சதிகார ஆட்சி இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏதேச்சதிகார ஆட்சியை நடத்தியவர். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், அறிஞர்களையும் திறமையானவர்களையும், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்றார். ஏப்ரல் 1945 இல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடலை மிலானுக்கு எடுத்துச் சென்ற இத்தாலிய மக்கள் அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் அவரது உடல் கயிற்றினால் பிணைக்கப்பட்டு மிகவும் அவமானகரமான முறையில் தலைகீழாகக் தொங்கவிடப்பட்டு பார்வைக்காக விட்டிருந்தார்கள். இங்கே ஒரு மக்கள் தலைவனுக்கு மக்கள் அளித்த தண்டனை மிகக் கொடூரமானது என்பதை இங்கு கவனத்திற் கொள்ளவேண்டும். அவ்வாறே இலங்கையின் இனப் பிரச்சனையின் உச்ச காலகட்டத்தில் பணியாற்றி தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக இறுதிப் போரில் இலங்கைப் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேக்கா பின்னாளில் ராஜபக்சக்களுக்கு எதிராக செயற்பட்டார். அரசதுரோகம் செய்தார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளால் அவருடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கட்டை காற்சட்டையுடன் உணவுக்காக வரிசையில் உணவு தட்டை ஏந்தி நின்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தமையும் தெரிந்ததே. ஆனால் அதே பொன்சேக்காவிற்கு பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்று நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்ரமசிங்காவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், பௌத்த மகா சங்கமும் இணைந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதோடு, நாட்டை ஒன்றுபடுத்திய பெரும் யுத்தத்தில் படைகளுக்கு தலைமை தாங்கி இலங்கை அரசை பாதுகாத்தார் என்ற அடிப்படையில் அவருக்கு பீல் மாஷல் பட்டத்தையும் வழங்கியது. இங்கே உலகளாவிய வரலாற்றில் ஒரு ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது பெரும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும். உலக நியதி அவ்வாறு வழங்கப்படுகின்ற போது அந்த இராணுவ தளபதி பல நாடுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கினாலோ அல்லது எதிரி நாடு ஒன்றின் மீது படையெடுத்து வெற்றி பெற்றமைக்காகத்தான் வழங்கப்படும். இதுவே பொதுவான உலக இராணுவ நியதியாக இருந்து வந்துள்ளது. ஆனால் இலங்கையில் தனது சொந்த நாட்டின் ஓர் இனத்தின் ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்து பெறப்பட்ட வெற்றிக்காக சரத் பொன்சேக்காவுக்கு பில் மாஷல் பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு நாட்டினுடைய ராணுவ தளபதிக்கு பீல் மாஷல் பட்டம் வழங்குவது என்பது அந்த நாட்டினுடைய தேசிய கௌரவமாகவும், கீர்த்தியாகவும் கருதப்படும். அவ்வாறு வழங்குகின்ற பட்டத்துக்கு அந்த நாட்டினுடைய நாடாளுமன்றத்தின் அனைவரும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது ஆதரவளிக்கின்ற பட்சத்திலேயே வழங்கப்படுவதுதான் உலக நியதியாகவும் இருந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இலங்கையில் பீல்மாஷல் பட்டம் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்படுகின்றபோது இலங்கையின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா சம்பந்தன் அவர்களே இருந்தார். சம்பந்தன் தலைமையில் இயங்கிய அதுவும் எதிர்க் கட்சி தலைமை என்ற அந்தஸ்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த பீல் மாஷல் பட்டம் வழங்குவதற்கு எதிராக எதையும் செய்யாமல் பெரிதும் ஆதரவாகச் சசெயற்பட்டது. குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்டி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதன் மூலம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை பற்றி அவர்கள் எந்த கரிசனையும் இன்றி இருந்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல தங்கள் சொந்த மக்களின் அழிவைப் பற்றி அவர்கள் எந்த கவலையும் அற்று இலங்கை இனவழிப்பு அரசாங்கத்துக்கு அனுசரணையாகவும், ஆதரவாகவும்; கூட்டுப் பங்காளிகளாகவும் இருந்தார்கள் என்றுதான் தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது. தீர்வு தரப்போவதாகக் கூறி தமிழ் மக்களின் ஆதரவை வளங்கி அரசாங்கத்தை அமைக்கு காரணமான சம்பந்தன் தீர்வைப் பெறாதது மட்டுமல்ல அதற்கப்பால் இனப்படுகொலைத் தளபதிக்கு பீல்ட் மாஷல் பட்டம் வளங்க உறுதுணையாய் நின்றார். தமிழ் மக்களின் கடந்த நூறு ஆண்டு அரசியல் வரலாற்றில் ராமநாதன், பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் இந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் கடந்த 20 ஆண்டுகள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்றொரு பங்கும், பாத்திரமும், பொறுப்பும், வரலாற்று கடமையும் இருந்தது. உரிய பொறுப்பு ஆனால் தனது மக்களுக்கு உரிய பொறுப்பையும் கடமையையும் செய்யத் தவறிய தலைவராகவே சம்பந்தன் இறக்கும்போது தமிழ் மக்களால் கருதப்பட்டார். அது மாத்திரமல்ல தான் தலைமை தாங்கி நிர்வாகித்த கட்சியின் சிதைவையும் உடைவையும் அவருடைய அந்திமக் காலத்தில் தன் கண்களால் பார்த்த வாறே அவர் மரணத்தையும் தழுவினார் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். இரா சம்பந்தன் அவர்களுடைய தலைமைத்துவம் என்பது தமிழ் மக்களுக்கு எந்த ஒரு வெற்றியையும் பெற்றுத் தரவில்லை. அவர் வாழும்போதும் தோல்வியடைந்த தலைவராக அனைத்து சிங்களத் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்ட தலைவராக அனைத்து சிங்கள தலைவர்களிடமும் ஏமாந்த தலைவராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார் . இந்த நிலையில் அவர் தலைமை தாங்கிய கட்சி இரண்டாக உடைந்து சண்டையிடும் நிலைக்கு இவரே பொறுப்பானவர் என்ற கருத்தும் தமிழ் மக்களிடம் உண்டு. இந்த நிலையிற்தான் அவருடைய மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்து பின்னர் இந்திய அரசியல் தரப்பினர் இரங்கல் செய்தி வெளியிடுகின்ற போது தமிழ் தேசிய மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தனர். ஆனால் இவருடைய தமிழரசு கட்சியின் பேச்சாளர் தன்னுடைய குறிப்பில் தமிழ் சிறுபான்மை மக்களின் தலைவர் என்று குறிப்பிட்டதிலிருந்தே இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தனர். அதேநேரத்தில் சம்பந்தன் அவருடைய மரணத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருந்துமடிக்கணினி அவருக்கு எதிரான காட்டமான கருத்துக்களே வெளிவந்தன. பொதுவாக தமிழர் பண்பாட்டில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய நல்ல விடயங்களை மாத்திரமே பேசுகின்ற நினைவுபடுத்துகின்ற ஒரு பண்பு தமிழ் மக்களிடம் உண்டு. ஒருவருடைய மரணத்தின் பின்னர் அவருடைய தவறான அல்லது பாதகமான எந்த ஒரு பண்பையும் தமிழ் மக்கள் பேசுவதில்லை. மரணத்தின் பின் இறைவனடி சேர்ந்தார் காலமானார் என இழிவுபடுத்தாமல் மேன்மைப்படுத்துகின்ற பண்பையே கொண்டிருக்கின்றனர். இதுவே தமிழ் மக்களின் உயரிய விழுமியமாக இருந்து வருகின்றது. ஆனாலும் "உரைசார் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுதலும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற சிலப்பதிகாரத்தின் சொல்லோவியத்தில் வருகின்ற அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுவது மாத்திரமல்ல அரசியல் பிழைத்தோர்க்கு மரணமே தண்டனை மாத்திரமல்ல உயிரற்ற உடலுக்கும் தண்டனை வழங்கப்படும் என்பதை சம்பந்தரின் மரண ஊர்வலம் வழிகாட்டி நிற்கிறது. இங்கே மரணம் அடைந்த சம்பந்தன் அவர்களை இகழ்வதோ தூற்றுவதோ இப்பந்தியின் நோக்கம் அல்ல. ஆனால் தமிழ் சமூகத்தின் நிலை என்ன என்பதை வெளிக்காட்டுவதே இப்பந்தியின் நோக்கமாகிறது. தமிழ் தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே இதன் கருவாகிறது. மக்களின் மனங்களை வெல்லாதவர்கள் மக்கள் தலைவர்களாக முடியாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது. சம்பந்தனுடைய உடல் அஞ்சலி இந்த நிலையிற்தான் சம்பந்தனுடைய உடல் இறுதி அஞ்சலிக்காக கொழும்பிலிருந்து வவுவுனியா, யாழ்ப்பாணம், திருவோணமலை வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அஞ்சலி செலுத்திய ஒட்டுமொத்த மக்களின் தொகை 3500-ஐ தாண்டவில்லை என்பதிலிருந்து மக்கள் இவருக்கு கொடுத்த கௌரவத்தையும் அல்லது முக்கியத்துவத்தை உணர முடிகிறது. யாழ்ப்பாணத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது காண்பிக்கப்பட்ட புகைப்படங்கள் ராணுவத்தினரால் காவி செல்லப்படும் காட்சி மக்களுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உண்மைதான். அதனால்த்தான் என்னவோ அரசு தரப்பில் இருந்து சம்பந்தனுடைய இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் செய்வதற்கு அரசு தரப்பு கேட்டிருந்தும் சம்பந்தனுடைய குடும்பத்தினர் அதற்கு மறுத்துவிட்டனர் போலும். எனினும் இறுதி திரைகளின் போது திருகோணமலைக்கான போக்குவரத்திற்கு மாகாண ஆளுநர் விசேட போக்குவரத்து ஒழுங்கினை செய்திருந்தார் என்பதும் இங்கே முக்கியமானது. அஞ்சலிக்காக உடல் யாழ் நகரத்த கூடாக செல்வநாயகம் மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது யாழ் நகரத்துக்குள் விளம்பர சேவையில் "மன்மதராசா மன்மத ராசா" என்ற குத்தாட்டப் பாடல் ஒளிபரப்பாகியது தற்செயலானதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குரியாது. அதே நேரத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்ட மண்டபத்தின் அதிலிருந்து பாடசாலைகளின் இரைச்சலானது மண்டபத்தில் இருந்தோருக்கு பெரும் கவனக் கலைப்பானாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது. மேலும் அஞ்சலிக்காக வந்தவர்களில் பெரும்பான்மையினர் இலங்கை அரசாங்க இயந்திரத்தின் ஊழியர்களாக அதாவது அரச இயந்திரத்தின் உதிரிப் பாகங்களாக இருந்ததையே அவதானிக்க முடிந்துள்ளது. அதுமட்டுமல்ல யாழ் நகரத்தில் இரண்டு இடங்களில் மாத்திரமே நினைவஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும் ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த சாந்தனின் உடல் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டி எங்கும் நினைவஞ்சலி பதாகைகள் ஆயிரத்துக்கு மேல் கட்டப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கே சாந்தனுக்கு அவ்வளவு தூரம் திரண்டு மக்கள் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். உலகின் பார்வையில் சாந்தன் ஒரு கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற மனிதர். ஆனால் சம்பந்தன் உலகின் பார்வையில் இலங்கைத் தமிழ் ராஜதந்திரி. ஆனால் தமிழர் தேசத்தில் இந்த இருவரிலும் சாந்தனுக்கு கிடைத்த மிகப்பெரிய அனுதாபமும் அஞ்சலியில் ஒரு பத்து விகிதம்தானும் தமிழரசு கட்சியினுடைய மூத்த தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு ஏதோ தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக சம்பந்தன் நடந்து கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழரசு கட்சி தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை வெறுப்புடனையே பார்த்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு அவர்கள் எதிராக பேசாவிட்டாலும் தமது கோபத்தை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விதத்தில் வெளிப்படுத்த தவற மாட்டார்கள். தமிழ் மக்களிடத்தில் நாட்டுவழக்கு கூற்று ஒன்று உண்டு அதை "வைச்சுச் செய்வது அல்லது வைச்சுச் சாதிப்பது" என்பார்கள். அதுதான் மரணத்தின் பின்னும் தமிழ் மக்கள் மன்னிக்க தயார் இல்லை என்ற செய்தி. நேற்று நிகழ்ந்த சம்பந்தன் அவர்களுக்கான தமிழ் மக்களின் "வைச்சு செய்தல்" என்பது எஞ்சி இருக்கும் மிதவாத தமிழ் அரசியல் வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதிற் சந்தேகமில்லை. இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
-
திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமையாய் நினைந்து பயனை எதிர்பாராமல் இக் கடிதத்தைப் பொது வெளியில் எழுதுகிறேன். வயதும், அனுபவமும் காலப்போக்கில் பலரையும் வலிமைப்படுத்தும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவை உங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக வக்கிரப்படுத்தி வருவதாகவே தோன்றுகிறது. அந்த எனது முடிவின் கடைசிச் சான்றாக, கடந்த 04.07.2024ஆம் திகதி உங்களது உதயன் பத்திரிகையில் வந்திருந்த தலைப்புச் செய்தி அமைந்து போயிற்று. அச் செய்தியைக் கண்டு மற்றைய தமிழர்களைப் போலவே நானும் பேரதிர்ச்சி அடைந்தேன். கடந்த தினங்களில் பயணம் ஒன்றில் இருந்ததால், உடன் எழுத நினைத்த கடிதத்தை, இப்பொழுதான் எழுத முடிகிறது. “செஞ்சொற்செல்வர்” கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களையும், அவர் நடாத்தி வரும் மகளிர் இல்லத்தினையும், இழிவு செய்யும் நோக்கத்தோடு அச் செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆறு.திருமுருகன் அவர்களைப் பற்றியும், அவரது சமய, சமூக, தமிழ்ப் பணிகள் பற்றியும் நான் சொல்லித்தான் உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. தனி ஒரு மனிதாக நின்று, தன் சுயமுயற்சியால் அவர் செய்து வரும் அளப்பெரும் பணிகளை எடுத்துரைப்பதானால், இக் கட்டுரை பல பக்கங்களாக நீண்டுவிடும் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த அந்த விடயங்களை இங்கு மீளவும் வரிசைப்படுத்தாமல் விட்டுவிடுகிறேன். சுருங்கச் சொல்வதானால், பாராளுமன்ற உறுப்பினர்களாய் இருந்த உங்களைப் போன்றவர்கள், அரச நிதியில் சமூகத்திற்காகச் செய்த பணிகளைவிடப் பலமடங்கு பணிகளை ஆறு.திருமுருகன் நம்மினத்திற்காகச் செய்திருக்கிறார். தெல்லிப்பழை துர்க்கையம்மன்ஆலயத்தில் தொடங்கிய அவரது பணிகள், பின்னர் யாழ்ப்பாணம் அளவாய் விரிந்து, இன்று இலங்கை பூராகவும் பரவியிருக்கிறது. இந்த உண்மையைச் சாதாரண ஒரு தமிழ்ப் பாமரனும் அறிந்துள்ள நிலையில், பத்திரிகைத் துறை சார்ந்த உங்களுக்கு அவரது பெருமை தெரியாமல்ப் போனது ஆச்சரியம் தருகிறது. ஆறு.திருமுருகனின் பெயரை வலிந்து இணைத்தும், அவரது தனி ஒழுக்கம் பற்றி மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படும் வகையிலும், மிகக் கொடூரமான வக்கிரத்துடன், உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்றை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிட்டிருந்தீர்கள். சமூகத்தின் முக்கியமான ஒருவர் பற்றிய, உறுதிப்படுத்தப்படாத செய்தியை, தலைப்புச் செய்தியாக இடுமளவிற்குத்தான், உங்களது பத்திரிகைத்துறை அனுபவம் இருக்கிறதா? என நினைந்து ஆச்சரியப்படுகிறேன். பத்திரிகையை நீங்கள் சமூக வளர்ச்சிக்காக அன்றி உங்களின் வளர்ச்சிக்காகவே நடாத்தி வருகிறீர்கள். சமூகமா?, வீடா? என்ற ஓர் நிலை வந்தால் சமூகத்தைத் தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு வீட்டை வளர்க்கத் துணிபவர் நீங்கள். உங்களின் இந்தச் சுய உருவம் இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நீங்கள் வெளியிட்ட ஆறு.திருமுருகன் பற்றிய வக்கிரச் செய்திக்குப் பின்னாலும் கூட, வீட்டை வளர்க்கும் உங்களது சுயநலம் பதிவாகியிருப்பதை நான் அறிவேன். போர்க் காலத்தில், டாக்டர் யோகு பசுபதி அவர்களின் பலகோடி பெறுமதியான இல்லத்தை, இயக்கங்களிடம் இருந்து காப்பாற்றித் தருகிறேன் எனக் கூறி, வாடகைக்கு எடுத்த நீங்கள், போர் முடிந்த பின்பு அவரது வாரிசுகள் அவ் வீட்டு உரிமையை மீளக் கேட்டபோது, அதனை அவர்களிடம் கொடுக்காமல் அச் சொத்தை “விழுங்கிவிட” முற்பட்டீர்கள். ஒன்றும் செய்ய முடியாத அக்குடும்பத்தினர், அந்த வீட்டை அறப்பணிகளுக்கு எனத் திருமுருகனின் “சிவபூமி” அறக்கட்டளைக்கென எழுதிக் கொடுத்துவிட, அச் சொத்தை விழுங்கிவிட நினைத்த உங்களது எண்ணம் கனவாயிற்று. அதன் பின்பும் அச் சொத்தைச் தரமாட்டேன் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்க, அண்மையில்த்தான் திருமுருகன் உங்களுக்குத் தனது சட்டத்தரணி மூலம் “நோட்டீஸ்” அனுப்பியிருந்தாராம். உங்களது “சுத்துமாத்து” வேலைகளுக்கு அஞ்சாமல் உறுதியாய் நின்ற திருமுருகன் மேல் உங்களுக்கு ஏற்பட்ட கோபமே, இப்போது உங்களது பத்திரிகையின் தலைப்புச் செய்தியாய் வெளிவந்திருக்கிறது. நண்பரே! உங்கள் பத்திரிகையின் ஊடாக மட்டுமே மக்கள் உலகத்தைப் பார்த்து வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இணையத்தளங்களில், நிமிட நேரங்களில் “சுடச்சுடச்” செய்திகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், பத்திரிகைகள் எல்லாம் தேவையற்ற விடயங்களாய் அன்றாடம் மாறிவரும் உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். அதனால்த்தான் அரசியற் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், நிறுவனத் தலைவர்கள், பொது நிறுவனங்கள், அறிஞர்கள் எனப் பலதரப்பட்டோரையும் உங்கள் பத்திரிகையின் பொய்ச் செய்திகளால் மிரட்டி, அடிபணிய வைத்துக் “கோலோச்சிய” காலம் முடிந்துவிட்டதை இன்னும் உணராமல் இருக்கிறீர்கள். கடந்த காலங்களில், பழிவாங்கும் பொய்மைச் செய்திகளால் மற்றவர்களை வீழ்த்திக் காரியம் சாதித்துப் பழக்கப்பட்ட உங்களுக்கு, ஊடகங்கள் மக்கள் வயப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இனி அது நடக்காத காரியம் எனும் உண்மை புரியவில்லை. அது புரியாத காரணத்தால்த்தான், “காலாவதி” ஆகிவிட்ட அதே பழைய அஸ்திரத்தை இன்னும் உங்களது எதிரிகள் மேல் ஏவ முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊகத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத ஓர் செய்தியைத் தலைப்புச் செய்தியாய் இட்ட நீங்கள், வேண்டுமானால் பலராலும் பேசப்படும் பின்வரும் செய்திகளைக் கூட உங்கள் பத்திரிகையின் தலைப்புச் செய்திகள் ஆக்கலாமே!. உங்களுக்காக அச்செய்திகளைச் சுருக்கித் தருகிறேன். • “ஷப்றா” நிதிநிறுவனம் என்ற ஒன்றை ஆரம்பித்து, ஏழை மக்களின் பணத்தை “ஏப்பம்” விட்டு, சரவணபவன் வாழ்ந்து வருகிறார் என்பது அச்செய்தியில் ஒன்று. • தங்களது பெண்பிள்ளைகளின் கல்யாணத்துக்காகச் சிறுகச்சிறுகச் சேர்த்த பணத்தை “ஷப்றா” நிறுவனத்தில் இட்ட பலர் அது தொலைந்துபோக, துயரம் தாழாமல் தூக்கிட்டுக் கொண்டார்கள் என்பது மற்றொன்று. • சரவணபவன், மக்களை ஏமாற்றியதோடு அல்லாமல், “ஷப்றா” நிதிநிறுவனத்தை ஆரம்பித்துத் தன்னிடம் ஒப்படைத்த, மைத்துனரைக் கூட ஏமாற்றி “மொட்டை” அடித்து ஊரை விட்டு ஓடச் செய்தார் என்பது இன்னொன்று. • சரவணபவன், ‘உதயன்’ என்கின்ற பத்திரிகையை ஆரம்பித்ததன் மூலம், ஊடக அதிகாhரத்தைக் கையில் வைத்து, பலரது வாய்களையும் அடைத்து, தன்னைப் பற்றிய இரகசியங்கள் வெளிவராமால் பார்த்துக் கொண்டார் என்பது வேறொன்று. • சரவணபவன், பத்திரிகைத் துறையில் அனுபவமும், ஆற்றலும் கொண்டிருந்த வி;த்தியாதரனை, ஆபத்து வரும் போதெல்லாம் தனக்குக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார் என்பது மற்றொன்று. • தன்னை விட்டு வித்தியாதரன் விலகி விடமால் இருப்பதற்காகவும், அவர் ஆற்றலை முழுமையாய் உறிஞ்சிக் கொள்வதற்காகவும், மிகக் கெட்டித்தனமாக அவரது தங்கையையே திருமணம் செய்து, உறவுச் சங்கிலியால் அவரையும் கட்டிப் போட்டார் என்பது இன்னொன்று. • போர்க்காலத்தில் எல்லாம் வித்தியாதரனை முன் தள்ளிவிட்டுப் போர் முடிந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைச் சரவணபவன் தான் அபகரித்துக் கொண்டார் என்பது வேறொன்று. • இனத் துரோகிகள் பலர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்;டிருந்த அவ் வேளையில், வி;த்தியாதரனது உறவைப் பயன்படுத்திப் புலிகளை வளைத்துப் போட்டு, சரவணபவன் தப்பித்துக் கொண்டார் என்பது பிறிதொன்று. • நிதிநிறுவனத்தை மூடிய சரவணபவனுக்கு புதிய பத்திரிகை நிறுவனத்தைத் தொடங்கப் பணம் கிடைத்ததன் மர்மம் என்ன? அப் பணத்தை நிதிநிறுவனத்தால் நஷ்டப்பட்டவர்களுக்கு அவர் ஏன் பகிர்ந்தளிக்கவில்லை? இப்படிப்பட்ட துரோகிகளை புலிகள் மன்னித்தது எப்படி? என்பது வேறொன்று. • புலிகளின் தலைவர் பிரபாகரனையே உதயன் பத்திரிகைக்கான விளம்பரதாரியாகவும் பயன்படுத்திய மர்மத்தின் பின்னணி என்ன? என்பது மற்றொன்று. • யாழில் வெளிவந்து கொண்டிருந்த வேறுசில தமிழ்ப் பத்திரிகைகளின் மூடு விழாவிற்கு சரவணபவனே காரணராய் இருந்தார் என்பது இன்னொன்று. • போர் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்பு நடந்த தேர்தலில், தனது பத்திரிகைப் பலத்தைக் காட்டித்தான் கூட்டமைப்புக்குள் தனக்கான ஓர் “சீற்” றையும் சரவணபவன் பெற்றுக் கொண்டார் என்பது வேறொன்று. • அக் கட்சிக்கும் சரவணபவன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, தனக்குப் பிடிக்காத, தன் அணி சார்ந்த மற்றவர்களைக் கூடத் தோற்கடிப்பதற்குத் தனது பத்திரிகையை அவர் பகிரங்கமாகப் பயன்படுத்தினார் என்பது பிறிதொன்று. • சிங்களத் தலைவர்களுடனான தொடர்பு சிரச்சேதத்திற்கு உரிய குற்றம் என்னுமாற்போல் எழுதியும், பேசியும் வந்த சரவணபவன், சிங்கள ஐனாதிபதியை அழைத்து, யாழ்ப்பாணத்தில் தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வைத்தார் என்பது மற்றொன்று. இப்படியாக ஊகத்தின் அடிப்படையில் இடக்கூடிய இன்னும் பல தலைப்புச் செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. உங்களைச் சந்திக்க வருகிறவர்களிடம் பத்திரிகைத் தர்மம் பற்றி வகுப்பெடுக்கும் உங்களது பத்திரிகைத் தர்மம், எப்படியானது என்பதை எடுத்தக்காட்ட இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடவேண்டி உள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் செல்லாமல் விடுவதற்காக, அவர்களை ஏமாற்ற நினைத்து நீங்கள், புரட்டாதிச் சனிக்கு எள் எரிக்கக் கோயிலுக்குப் போகும்படி வெளியிட்ட பத்திரிகைச் செய்தி இன்றும் இளைஞர்களால் நையாண்டியாகப் பேசப்பட்டு வருகிறது. இவ்வளவும் ஏன்? உங்களை எமது நண்பராக நினைத்திருந்த எங்களுக்குக்கூட நீங்கள் வஞ்சனை செய்யத் தவறவில்லை. கொழும்பில் நாங்கள் ஆலயம் கட்டியபோது அதற்கென நிதியுதவி வழங்க வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வருகையைப் பயன்படு;த்தி, அவருக்கு நாங்கள் விலைபோய் விட்டதாகச் செய்திகள் வெளியிட்டு, எங்களை இனத் துரோகிகளாக அடையாளப்படுத்த முயன்றீர்கள். அந் நிகழ்வின் உச்சகட்டமாக, “டக்ளஸ்” அவர்கள் எங்களின் இடத்திற்கு வருகை தந்திருந்த புகைப்படங்களை, உங்கள் பத்திரிகையில்; ஒரு பக்கம் நிறைய வெளியிட்டு, அவருக்கு நாங்கள் வாழ்த்துச் சொல்வதாக ஓர் பொய்யான விளம்பரத்தைத் தயாரித்து, அதனை நாங்கள் தான் வெளியிட்டோம் என மக்களை நினைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அதன்கீழ் “கம்பன் குடும்பத்தார்” எனப் பெயரிட்டு நீங்கள் செய்த வக்கிர வேலைக்கு நிகரான ஓர் செயலை வேறு எந்தப் பத்திரிகையும் செய்திருக்குமா? என்று தெரியவில்லை. இப்படி வஞ்சகமாக நீங்கள் செய்த திருவிளையாடல்களை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களைப் பொறுத்தவரை ஆற்றலாளர்கள் எவரானாலும் அவர்கள் உங்கள் கால்களை “நக்கிக்” கொண்டு உங்களிற்கு கீழேதான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வப்போது பிச்சையாக இட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்களை மீறி அவர்கள் செயல்ப்படத் தலைப்பட்டால் பின்னர் எந்த வகையிலேனும் அவர்களை “வேரறுக்கத்” தயங்க மாட்டீர்கள். இதுதான் உங்களது பாணி. நண்பரே! ஒன்றை மறந்து போகாதீர்கள்! சிலரைச் சில பேர் சில காலம் ஏமாற்றலாம். பலரைப் பலபேர் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எக்காலத்திலும் எவராலும் ஏமாற்றிவிட முடியாது!. இவ்வுண்மையை வெகுவிரைவில் நீங்கள் உணரப் போகிறீர்கள். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்” என்றும் “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்றும் நம் தமிழ்ப்புலவர்கள் சும்மா சொல்லி விட்டுப் போகவில்லை. திருமுருகன் மீதான உங்களது பழிவாங்கும் படலத்தில் பொது மக்களுக்குப் பல ஐயங்கள் எழுந்துள்ளன. இரண்டு நிறுவனங்களை மூடும்படி “கவர்னர்” உத்தரவிட்டதாய் நீங்கள் வெளியிட்ட செய்தியில், திருமுருகனது பெயரையும் அவரது நிறுவனத்தினது பெயரையும் வலிந்து சேர்த்திருக்கும் நீங்கள், மற்றைய நிறுவனத்தின் பெயரையோ, அதை நடத்துபவர்களின் பெயரையோ வெளியிடாமல் விட்டிருப்பது ஏன்? என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். இல்லங்களை மூடும் படி கவர்னர் உத்தரவிட்டதாக நீங்கள் வெளியிட்ட செய்தியினை, மறுநாளே “கவர்னர்” மறுத்திருக்கிறார். அதிலிருந்து அச்செய்தி பொய்ச் செய்தி எனத் தெரியவருகிறது. முக்கிய பிரமுகர் ஒருவரை இழிவுபடுத்தும் உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, தலைப்புச் செய்தியாக இட்டிருக்கும் உதயன் பத்திரிகையின் மீது இலங்கையின் ஊடக நிறுவனம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அறிய மக்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். தான் சொன்னதாக ஓர் பொய்ச் செய்தியை வெளியிட்ட “உதயன்” பத்திரிகை மீது “கவர்னர்” இதுவரை எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கமாலிருப்பது ஏன்? மக்கள் கேட்டு நிற்கிறார்கள். ஒரு வேளை பலரும் சொல்லுமாற்போல் மதம் சார்ந்த ஒரு அரசியலுக்குள் கவர்னர் அகப்பட்டிருக்கிறார் என்பது நிஐம்தானா? இது மக்களின் அடுத்த கேள்வியாய் இருக்கிறது. திருமுருகனிடம் பல வகையிலும் பயன் பெற்ற பலரும், இன்று அவர்மேல் வீண்பழி சூட்டப்பட்டிருக்கும் நிலையில் மௌனம் காத்து நிற்பது வேதனை தருகிறது. நம் தமிழ்ச் சமூகம் யார் எதைச் செய்தாலும், “வீரமிலா நாய்களாய் நெட்டை மரங்கள் என நின்று புலம்பும் பெட்டைப் புலம்பல்” செய்வதை விட வேறெதுவும் செய்ய மாட்டார்கள் என்று நீங்கள் நினைத்து விட்டீர்கள் போல. மக்களின் அமைதி, புயலுக்கு முன் வரும் அமைதி. அதைக் கண்டு நீங்கள் சந்தோசப்படாதீர்கள்.! பின்னால் வரப்போகும் புயலை நீங்கள் தாங்க மாட்டீர்கள். இன்று நீங்கள் பத்திரிகை நிறுவனத் தலைவர், சிறந்த வியாபாரி என்ற நிலைகளைத் கடந்து விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் பிரதிநிதியாகவும் மாறியிருக்கிறீர்கள். அதை நினைந்து நீங்கள் நடப்பதாய்த் தெரியவில்லை. உங்களது கேவலமான செயல்கள் உங்கள் கட்சியையும் பாதிக்கப் போவது நிச்சயம். நிறைவாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன். திருமுருகனை வீழ்த்தவென நீங்கள் போட்ட சுருக்குக் கயிற்றில் இப்போது உங்களது கால்களே மாட்டிக் கொண்டிருக்கிறன. அண்மைக் காலமாக “வலம்புரி” யினது எழுச்சியையும், “உதயனது” வீழ்ச்சியையும் மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் உங்களது இழி செயல்களால் நீங்கள் தொடங்கிய “உதயனுக்"கு நீங்களே சமாதி கட்டி விடாதீர்கள்! எனக் கேட்டுக் கொள்கிறேன். இக்கடிதம் உங்களை நிறையக் காயப்படுத்தும் என்பது நிச்சயம். இதிலி ருக்கும் “செவிகைக்கும் சொற்களை” ஏற்றுத் திருந்தினால் அது உங்களுக்கு நல்லது. அதைவிடுத்து ஜெயராஜு க்கு எதிராக அடுத்த என்ன சூழ்ச்சி செய்யலாம்? என நினைக்கத் தொடங்குவீர்களே ஆனால், தர்மத்தின் சாட்டையடிக்கு விரைவில் ஆளாவீர்கள் என்பது மட்டும் நிச்சயம். அன்பன், கம்பவாரிதி இ.ஜெயராஜ் (Facebook)
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நான் கேட்டதுக்கும் உங்க பதிலுக்கும் என்னய்யா சம்மந்தம் 😊
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
ஆமாம் எல்லாருக்கும் ஓய்வென்ற ஒன்றிருக்கு இந்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அம்மையாருக்கு அது இல்லையா ? இவளவு வருடங்களா எவ்ளவு அரசாங்க பதவிகளை அனுபவித்து விட்டார் ? அவர் வந்ததில் இருந்தே ஏற்கனவே தலைகீழா போய்க்கொண்டிருந்த வட மாகாணம் இன்னும் வேகமா தலைகீழா போகுது.…
-
பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தமா ? - ஒரு போதும் ஏற்கோம் என்கிறது இலங்கைத் தமிழரசுக்கட்சி
அதுவும் அவன் கொடுக்க போறது இல்லை எதுக்கு சவுண்டு விடுறாங்க
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இராமநாதன் ஐயா தமிழீழக் காவல்துறை பயிற்றுனர். 2009 இல் காணாமலாக்கப்பட்டார்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
https://tamil.oneindia.com/news/tamilnadu/k-s-radhakrishnan-shares-about-cbi-raid-held-1982-283071.html இப்போ காசு பணத்துக்காக சிபிஐ ரெய்டு… ஆனால் அப்போ… "தம்பி பிரபாகரன்" வீட்டில் தங்கியதால் ரெய்டு! வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததால் இப்போது சிபிஐ ரெய்டு நடக்கிறது. ஆனால் 1982ல் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கி இருந்ததால் ரெய்டு நடந்தது. AmudhavalliUpdated: Thursday, May 18, 2017, 12:57 [IST] அதாவது அரசியலில் பழிவாங்கும் போக்கிலோ, நாட்டு விரோதிகளோ என சூழல்களை சொல்லிக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிலர் வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாடிக்கை 1991ல் இருந்து நடந்து கொண்டு வருகிறது. எம்ஜிஆர் காலத்தில்… கடந்த 22-05-1982 அன்று திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மோகன்தாஸ் மேற்பார்வையில் காவல் துறையின் ரெய்டு நடத்தப்பட்டது. ஏனெனில் என்னுடன் விடுதலைப்புலிகள் பிரபாகரனும், அவருடைய சகாக்களும் தங்கியிருந்தனர். மயிலாப்பூரில் தங்கியிருந்த போது இந்த நிகழ்வு நடந்தேறியது. நெஞ்சை நிமிர்த்தி 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரம் பெற்றதில் இருந்து அதுவரை இதுபோல காவல்துறையின் சோதனைகள் அதிகம் நடந்தது இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலங்களில் ஓரிரு இடங்களில் நடந்தது. அப்படி காவல் துறையினர் சோதனை நடத்திய போது நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றோமே தவிர முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு செல்லவில்லை. பிரபாகரனுடன்.. இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தம்பி பிரபாகரன் பற்றி பதிவு செய்யவும் இந்த ரெய்டுகள் உதவியாக இருக்கின்றன. அன்று 1982ல் என் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவெனில் தம்பி பிரபாகரனும் அவரது ஆரம்பக்கால சகாக்களான பேபி சுப்ரமணியன், நேசன், செல்லக்கிளி ஆகியோர் என் வீட்டில் தங்கியிருந்தனர் என்பது தான். என்னிடம் அது குறித்து விசாரித்தார்கள். ஆம், தங்குவதற்கு இடம் அளித்தேன். என் இனப் போராளிக்கு, தமிழின விடுதலைப் போராளிகள் தங்குவதற்கு இடம் அளித்தேன் என்பதை பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தேன். வழக்கு அந்த வழக்கில், நானே சாட்சியாகவும், வழக்கறிஞராகவும் ஆஜரானேன். பிற்காலத்தில் இந்த வழக்கு பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வராததால் 23-11-2012ல் சென்னை மாநகர் 7வது கூடுதல் நீதிமன்றத்தில் (வழக்கு எண். எஸ்.சி.8/1983) தள்ளுபடியானது. திரும்பவும் பழைய செய்திக்கு வருகின்றேன். அள்ளிச் சென்ற பொக்கிஷம் அந்த சோதனையில் ஆயுதங்களோ, பணக்கட்டுகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றை எல்லாம் விட விலை மதிப்பிடமுடியாத புத்தகங்கள், சில நினைவுகளின் அடையாளங்களை காவல் துறையினர் அள்ளிச் சென்றனர். காமராஜரிடம் அறிமுகமாகி, மாணவர் அரசியல் இயக்கங்களில் பணியாற்றியதெல்லாம் நெஞ்சத்தை தணிக்கும் பழைய நினைவுகள் தாங்கிய கருப்புவெள்ளைப் படங்கள், பிரதமர் இந்திரா காந்தி, மொராஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் யாவும் காவல் துறை எவ்வித மனித நேயமில்லாமல் எடுத்து சென்றுவிட்டது. பிரபாகரனின் உடைமைகள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் - முகுந்தன் இடையே சென்னைபாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காரணம் காட்டி பிரபாகரன் தங்கியிருந்த இடம் என கூறி காவல் துறை சோதனை நடத்தியது. உடன் தங்கியிருந்த பிரபாகரனின் உடைமைகளையும் என் மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஐ.ஜி. மோகன்தாஸ் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடத்தி அனைத்து உடைமைகளையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். பிரபாகரனின் புகைப்படம் இந்த சோதனை, பாண்டிபஜார் சம்பவத்திற்கு பின்னர் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் என்றொரு இயக்கமும் அதன் தலைவராக பிரபாகரன் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது என்றால் அது மிகையாகாது. தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரனின் படம் முதன்முறையாக தமிழக பத்திரிக்கைகளில் அன்று தான் வெளியானது. அதுவரை ஈழத்தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோர்களை மட்டுமே ஈழத்தமிழர்களின் தலைவர்களாக உலகம் அறிந்திருந்தது. எதிர்க் கேள்வி தலைவர்களோடு நான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஐ.ஜி மோகன்தாஸை கடற்கறை சாலையில் உள்ள காவல் துறை இயக்குநரகத்தில் சென்று சந்தித்தேன். 'என் கட்சிக்காரர்களுக்காக வழக்கு நடத்தும் கேஸ்கட்டுகளை கொண்டு சென்று விட்டீர்கள், நான் எப்படி அந்த வழக்குகளை நடத்த முடியும்' என அவரிடம் கேள்வி எழுப்பினேன். டைப்ரைட்டிங் மிஷின் எம்.ஜி.ஆரின் அரசாங்கத்தில் அதிகார பலம் வாய்ந்த ஒருவர் என்ற அதிகார போதையில் கிண்டலும் கேலியாகவும் பதில் அளித்தார் மோகன்தாஸ். கோபத்தில் உச்சத்திற்கு சென்ற நான் 'போயா, நான் முடிந்ததை பார்க்கின்றேன்' என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் அன்றைய உள்துறை செயலாளர் டி.வி.வெங்கட்ராமனை சென்று பார்க்கும்படி கூறினார். அந்த சோதனையில் மேசை, நாற்காலி, கட்டில், மெத்தை, துணிகள், சமையல் பாத்திரங்கள் தவிர அனைத்து பொருட்களையும், பிரபாகரன் பயன்படுத்திய சில உடமைகளை அள்ளிச் சென்றனர். வெங்கட்ராமனை சந்தித்த போது அவரும் பார்க்கிறேன் என்றார். தலைமைச் செயலகத்துக்கும், கடற்கரை எதிரே உள்ள காவல்துறை தலைமையகத்திற்கும் அலைந்து அலைந்து என் காலணிகளே தேய்ந்தது. தம்பி பிரபாகரன் அவர் பயன்படுத்தி வந்த ரெமிங்டன் டைப்ரைட்டிங் மிஷினை மட்டும் மீட்டுத் தரும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேன். சிறையில் பிரபாகரன் இதற்கிடையில் தினமும் சென்னை மத்திய சிறைச்சாலைக்கு சென்று பிரபாகரன், முகுந்தனை சந்திப்பது வாடிக்கை. பிரபாகரனை இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடாது என்று பழ.நெடுமாறன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் 29-06-1982ல் நடைபெற்றது. பிரபாகரனுக்கு பிணை பிரபாகரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்க 05-08-1982ல் நான் மனு தாக்கல் செய்து அவருக்கு பிணை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அவர் சிறையில் இருந்து 06-08-1982 மாலை விடுவிக்கப்பட்டு மதுரையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வெளியே வந்தார். நெடுமாறன் முயற்சி பின்னர் பிரபாகரன், முகுந்தன், சபாரத்தினம், சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் உள்ளிட்டோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தையை நெடுமாறன் ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த முயற்சி பலன் தரவில்லை. பின்னர் மதுரையில் நெடுமாறன் வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். முகுந்தன் சென்னையில் தங்கியிருந்தார். 1985-ல் பிரபாகரன் இந்த வழக்கு விசாரணைக்காக வருவார் என காத்திருந்த தருணத்தில் இலங்கைக்கு சென்றுவிட்ட தகவல் கிடைத்தது. பின்னர் 1986-87 கால கட்டத்தில் மீண்டும் தமிழகம் வந்தார் பிரபாகரன். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
உதயன் மீடியா மாபியா எதை எழுதினாலும் நம்பும் காலம் மலையேறி போச்சு உண்மை ஜெயித்தது
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அண்மையில் வடக்கு பகுதியில் ஒரு மருத்துவ பணிப்பாளர் வாகன விபத்தொன்றில் இறந்திருந்தார் அவர் இன்னுமொரு மாவட்டத்துக்கு மருத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று செல்ல காத்திருக்கையில் இந்த விபத்து இடம்பெற்று கொல்லப்பட்டதாகவும் அவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவருடைய உள்வட்டத்தில் பேசப்பட்டது ….. இப்பலாம் வடக்கு பகுதியை இந்தியா மாதிரி கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள் பிடிக்கலையா அடிச்சு தூக்கு என்று.…..அண்மைக்காலம் யாழில் நடைபெறும் மருத்துவ நிகழ்வுகள் அனைத்தும் ரமணா திரைப்படைத்தையே நினைவு படுத்துகிறது என்ன இது இந்தியாவில் பழசு யாழ்ப்பாணத்துக்கு புதுசு
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
ராதா கிருஷ்ணன் யாரென்று தெரியாட்டி மன்னிக்கவும் உங்களுக்கு ஈழ போராட்டங்கள் தொடர்பான அறிவும் இல்லையென்றே அர்த்தம்
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடல். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல் அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில் சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், “யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கைவிமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது. ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது. உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கைபடையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்.. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது. தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது. சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/sampanthan-s-funeral-1720186250
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
உங்களை மாதிரி ஒருத்தன் பூட்டிட்டு இல்லது பூட்டவைச்சு சதி செய்திட்டு பாவம் அந்தாள சாட்டினா …..
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு யாருக்கு பொருந்திதோ இல்லையோ ஆறு திருமுருகன் ஐயா விடயத்தில் பொருந்தும் தேசியத்தில் உறுதியா நிற்பவர்களைம் சைவ தொண்டு ஆற்றுபவர்களையும் எல்லாவற்றையும் காசாக்க நினைப்பவர்களுக்கு இடையூறா இருக்கும் தொண்டாற்றுபவர்களையும் வடக்கு ஆளுநர் கிறிஸ்தவ பெண்மணி அம்மையார் திருமதி சார்ள்ஸ் அவர்களை வைத்து முடக்க நினைக்கிறார்கள் எல்லாவற்றையும் வென்று அந்த துர்கை அம்மன் துணையுடன் மீண்டெழுவார் ஐயா ஆறு திருமுருகன்
-
சம்பந்தர் காலமானார்
இறுதி யுத்தம் நடந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராய் இருந்தும் எங்கே கொழும்பில் இருந்தால் புலிகள் தொடர்பெடுத்து அரசியல் ரீதியான உதவிகளை கேட்டுவிடுவார்களோ என்று பயந்து தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் யாரும் தொடர்பு கொள்ளாதபடி இந்தியா பக்கம் போய் ஓடி ஒழித்துக்கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடைசி வரை ஏக்கத்தோடு நின்று மடிந்து போன அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்கட்டும்
-
சம்பந்தர் காலமானார்
சுமந்திரன் விக்னேஸ்வரன் என்று கொழும்பு தமிழர்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை சிங்கள அரசின் ரகசிய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை மழுங்கடித்த பெருமையோடு போய் வாருங்கள் ஐயா
-
சம்பந்தர் காலமானார்
91 வயது வரை வாழ்ந்து ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி அந்த மக்களின் அரசியல் தீர்வுக்காய் சந்தர்ப்பங்கள் பல வந்தும் எதுவும் செய்யாமல் கடைசி வரை சிங்களத்தின் கைப்பாவையாக மட்டுமே இருந்து ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியா சம்மந்தர் விடைபெற்றியிருக்கிறார் ஒரு சக மனிதனாக அஞ்சலிகள் தமிழனாக அல்ல
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
நன்றிகள் மீண்டும் எல்லாருக்கும் குமாராசாமி அண்ணா நன்றிகள் பழசை கிளறி எடுத்ததுக்கு …. கிருபன் அண்ணா எல்லாம் உங்களை பாத்து கத்திக்கிட்டது தான் 😁
-
விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன்
ஆக எங்கும் எதிலும் எல்லாத்துக்கும் யாழ்ப்பாண மையவாதம் தான் …. கனவிலையும் யாழ்ப்பாண மையவாதம் தான் அலறவிட்டிட்டு இருக்கு முடியல்ல
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
தந்தால் நல்லம் 😊
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
தந்தால் நல்லம் 😊
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
உங்களையும்
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
நன்றி ப்ரோ
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மீண்டும் பல ஆண்டுகளுக்கு பிறகு பழை மற்றும் புதிய உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி 😁 பழைய பெயரை தோண்டியெடுக்க முடியவில்லை 😞