Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்றாவதும் போட்டுதா. என்ன நடக்குது அங்கே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாவ். என்ன ஒரு ஆரம்பம். பாண்டியா விக்கட்டும் எடுத்து, ஓட்டம் எதுவும் குடுக்காமல். பும்ரா வந்து தன்னுடைய மாயாயாளம் காட்டி ஒரு விக்கட். இதைவிட சிறந்த ஆரம்பம் கிடைக்காது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் சுழளர்கள் இநதியாவை 175க்கு அமத்தியாச்சு. இனி இந்திய சுழளர்கள் என்ன செய்யப் போகினம் என்பதில்தான் வெற்றி தோல்வி அமையும். இனி பந்து கையை விட்டு அதிகமா வழுக்கும். எவ்வளவுக்கு சுற்ற முடியுமோ தெரியவில்லை. விறுவிறுப்பான போட்டி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிவம் துபே சுழல் பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக ஆறு அடிப்பார் என்று சொல்லுவாங்களே. எங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாயும் அயுப்பின் கடைசிப் பந்துப் பரிமாற்றம் ஆபாரம். இரண்டு விக்கட்டுகள். மூன்றாவது, ஹாட்டரிக் விக்கட்டும் மட்டுமட்டாக தப்பிவிட்டது. முக்கியமாக பந்து நல்லா திரும்பியது. இந்தியா 200 அடிப்பதை தடுத்து விட்டாரா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 200க்கு மேல அடிக்குமா. இரண்டாவதா பந்து வீசுவது கடினம். இந்த மைதானத்தில் ஈரலிப்பு பிரச்சினை குடுக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள். அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஊக்குவிப்புக்கு நன்றி. அவர்கள் எவ்வாறு இலங்கையின் சுழல்பந்தைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் தெரியும். சுழல் பந்திற்கு தடுமாறுவார்கள் என்றே நினைக்கிறேன். இலங்கை வெல்லும் என்றுதான் நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள். அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள். உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சரியாச் சொன்னியல். எதுக்கும் பாத்து சூதானமா இருந்துக்குங்க. 😁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உலகக்கிண்ணம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோதரன் படிக்காத பிள்ளை எல்லோ. இப்போ படிக்கத் தொடங்கீட்டார் போல. 🤑
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தரமான கேள்வி. பிடிக்காத பெண்டாட்டி, கால் பட்டா குத்தம். கை பட்டா குத்தம். 😉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாட்லி வான் சால்விக் - இன்றும் 3 விக்கட். மொத்தமாக 11 விக்கட் இந்த உலகக்கோப்பையில்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்கள் அவையடக்கம் பிடிக்கும். குயிலப் பிடிச்சு கூட்டுக்க வைத்தாலும்......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவின் வெற்றி உறுதியாகிக் கொண்டு இருக்கிறது சாட்லிதான் இதுவரை அதிக விக்கட்டுகள் பெற்றிருக்கிறார். கடந்த இரு போட்டிகளில் நாலு நாலு விக்கட்டுடன், இதுவரை ஒன்று இப்போது, மொத்தம் 9 விக்கட்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நிலாமதியுடன் கூட்டுச் சேர்ந்தபடியால் இன்று எனக்கும் புள்ளிகள் கிடைக்கும் போல தான் கிடக்கிறது. இன்று அவவின் நாள். 😁 அமெரிக்கா 196 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவின் சாய்தேஜா, 18 வயதில் அணிக்குள் வந்தார். இள வயதில், ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த துடுப்பாட்டக்காரன். இன்று சிறப்பான ஆட்டம். 79 ஓட்டங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது நடந்து விட்டது. மிகப் பெரிய வெற்றி சிம்பாப்வேக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்கு அதுதானோ. 😜
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன... 3 பேர் சத்தமில்லாம போட்டினம். அது நடந்திடுமோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாப்வே ஒரு விக்கட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் தாண்டியாச்சு. இன்னும் 7 பந்துப் பரிமாற்றங்கள் உள்ளன. ஒரு 180 அடிப்பார்களா.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவைதான் 😁 IPLல் பணம்தான் பிரதானம். மற்றவை எல்லாம் பின்னாடி என்று புரிந்தால், பிறகு கனக்க யோசிக்கத் தேவையில்லை. IPLக்கும், நாடுகளுக்கு இடையிலான போட்டிகளுக்கும் நிறைய வித்தியாசம். IPLல வைத்து இந்தப் போட்டிகளை எடைபோட முடியாது. கூடாது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றில், 41 போட்டியில் 19 போட்டிகள்தான் முடிவடைந்திருக்கின்றன. இன்னும் எவ்வளவோ பாக்க கிடக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 209. இதுவரை, இலங்கையின் 225தான் அதிகூடிய ஓட்டம்.