Everything posted by செம்பாட்டான்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
லோரா நடத்தி விட்டா. நாடீன் முடிச்சு விட்டா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்றும் அதே போல்தான். யார் அடிப்பார். யார் உருட்டுவார் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருக்கு. ஆனால் என்ன கடைசியில் ஒருவர் போட்டு பிளந்துவிடுகிறார். இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்றைய போட்டியைப் பார்த்தா, அவுஸ்ரேலியா மயிரிலையில் தப்பியுள்ளது போல் உள்ளது. பெத் மூனி தான் ஒரு ராணி என்று இன்று காட்டியிருக்கிறா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான் நினைத்தேன் பாக்கிஸ்தானுக்காகத்தான் இலங்கையில் போட்டிகள் வைத்தார்கள். மழைகாலம் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியேல, போட்டி வைக்கிற அன்று சரியாகப் பெய்யும்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
69தான் குறைந்த ஓட்டமாக இருக்கப்போகுது போல. நான் தெரிவு செய்த மைதானத்தில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதுசரி. எங்க உங்கட பெயரைக் காணவில்லை. நீங்களும் பங்குபற்றி இருக்கவேணும். நடத்துகின்றேன் என்று உங்கள் நேரத்தை தியாகம் பண்ணத் தேவையில்லையே.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
என்ன சொல்கிறீர்கள். தேவையான ஓய்வை எடுங்கள். யாழ் களம் இங்கேயே இருக்கும். இந்தப் போட்டியெல்லாம் சும்மா முசுப்பாத்திக்குத் தானே. உங்கள் நலம்தான் முக்கியம். இங்கு வருவது உங்கள் மனதுக்கு ஆறுதல் என்றால் மகிழ்ச்சி. ஆனால் சிரமமாக இருந்தால், தேவையான ஓய்வை எடுத்து முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வாருங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்த இருநாடுகளும் விளையாடுவதே பெரிய விடயம். முஸ்லிம் நாடுகளில் பெண்களின் நிலைமை தெரியும்தானே. இங்கு யார் வென்றாலும், அது வெற்றியே. ஆப்கானிஸ்தான் அணி தொடக்கவிழாவுக்கு வந்திருந்தார்கள். இந்தியா இலங்கை போட்டியைக் கண்டுகளித்தார்கள். வீராங்கனைகள் எல்லாம் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவிலும் கனடாவிலும் வாழ்கிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை அவர்களை அங்கீகரிக்கவில்லை.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சேர்ந்தே பார்ப்பம். போட்டி ஏதாவது பார்த்தீர்களா.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரே நாளில் இரு சதங்கள். ஆராவது 200 அடிப்பார்களா என்று பார்க்க ஆவல். இம்முறை நடக்க சாத்தியம் உண்டு.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டிகளைப் பாருங்கள். அசந்து போவீர்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து பெண்கள் எல்லாம் நெருப்பு. தொடர்ந்து கதைப்பம். இப்பிடியும் பம்பரம் விடலாம். பார்ப்போம். ஏதாவது ஒரு போட்டியை என்றாலும் முழுதாகப் பாருங்கள். பிறகு தொடர்ந்து பார்ப்பீர்கள். எல்லாப் பிள்ளைகளையும் இந்தப் போட்டித் தொடரில் அறிந்து கொள்வோம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை மிக நீளம். முதல் 6 விக்கட்டும் 126 ஓட்டங்களுக்கே விழுந்துவிட்டது - 27வது பந்துப் பரிமாற்றத்தில். அதே நிலையில், இலங்கை, 5 விக்கட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவைப் போல் துடுப்பர்கள் அவர்களிடம் இல்லை. டீப்தியும் அமன்ஜோத்தும் இன்றைய நாயகிகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
41வது கேள்விக்கு இல்லை என்றும் பதில் வந்துள்ளதா. வடிவேலு சொல்வது போல் "சாக்காயிட்டன்". 😁
-
ஒரு பயணமும் சில கதைகளும்
கொஞ்சம் சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்கிறீர்களா. ஜயகோ. நீங்கள் சொல்லும் விடயங்களை வைத்துக் கணக்குப் போட்டால் சோம்பலுக்கும் உங்களுக்கும் காததூரம் என்பது என்முடிவு. விளையாட்டுகளோடேயே நின்று கொள்ளுவம் என்று பார்க்கிறேன். இங்கு எழுதப்படும் விடயங்களை, அளிக்கப்படும் எதிர்வினைகளைப் பார்த்துப் பார்த்து, தள்ளியே இருப்பதே மேல் என்று நினைக்கிறேன். வேறு இடங்களில் எழுதுவதற்கு உண்மையிலேயே பயமாக்கிடக்கு. ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
42வது கேள்வியும் கூட. ஆராவது 100 அடிப்பினமா என்பது கூட, வேடிக்கையாக இருந்தது. உங்கள் வருத்தம் புரிகிறது. நாமதான் இன்னும் கொஞ்சம் மேலே பார்க்கவேண்டும். பெண்கள் இப்போ எங்கேயே போய்விட்டார்கள். சமீபத்தில் நடந்த உலக தடகளப் போட்டிகள் பார்த்தீர்களோ தெரியாது. எல்லா ஓட்டப் போட்டிகளும் நெருப்பா இருந்தது. மிகவும் இரசித்தேன்.
-
ஒரு பயணமும் சில கதைகளும்
இது கதையா பயண அனுபவமா. தலைப்பிலேயே கதை என்று இருப்பதால், கதை என்றே எடுத்துக் கொள்ளவேணுமோ. இப்படி பல விடயங்களை கோர்த்து எழுதும் போது வாசிப்பில் ஒரு உற்சாகம். அடுத்து என்ன கதை சொல்லப் போகிறார் என்று. சும்மா அங்கே போனேன் இங்கே போனேன் என்று சொல்லாமல், தங்கள் பழைய அனுபவங்களையும் கோர்த்து எழுதவது மிக நன்றாகவே இருந்தது. அந்த வாசிகசாலைக்குப் போகவேண்டும் என்று மிக ஆவலாக உள்ளது. எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். விமானத்தில் படம் பார்க்காமல் எப்பிடி. எப்படி பயணம் செய்கிறீர்கள். இப்படி எழுதுபவர்களின் மனநிலயே வேறை போல. அதுதான் அவர்களால் எழுத முடிகிறது. நாம இரசிக்க மட்டும்தான் போல. நான் எப்போதும் யோசிப்பதுண்டு. எப்படி இவர்களின் கண்களில் மட்டும் இப்பிடியான விடயங்கள் விழுகிறது. இப்பிடியான அனுபவங்கள் எப்படி அவர்களுக்கு மட்டும் வாய்க்கிறது. நாமும்தான் பயணம் போறம்.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
41வது கேள்வி. 400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை. அவுஸ் 412 - இந்தியா 369
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நம்மளையும் சேர்த்துக்குங்க 1) இலங்கை - சாமரி அத்தப்பத்துவுக்காக ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இந்தியா 3) நியூசிலாந்து 4)பாகிஸ்தான் 5)இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா 7)இந்தியா 8)நியூசிலாந்து 9)இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா 11)இந்தியா 12)நியூசிலாந்து 13)இலங்கை 14)இந்தியா 15)தென்னாபிரிக்கா 16)இலங்கை 17)இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா 19)தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து 21)இங்கிலாந்து 22)இலங்கை 23)தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா 25)இந்தியா 26)இலங்கை 27)அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து 29)இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா நியூசிலாந்து அவுஸ்திரேலியா இங்கிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கௌகாத்தி 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? நியூசிலாந்து 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஓம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஓம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
நீங்களாகவே தெரிவு செய்தபடி, அந்தப் பலரில் நானில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு. உலகக் கோப்பைக்கு அணிகள் தெரிவாக வேண்டும். எல்லா உலகக் கோப்பையிலும் நடக்கிறதுதான். எட்டு அணிகள்தான் இம்முறையும்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியை நடாத்தும் எண்ணம் இல்லைங்க. உங்களின் முயற்சி திருவினையாகட்டும்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதல்நாளே சொன்னேன் கிருபன்தான் தலை என்று. அவர் பின்னால் திரண்டு ஒன்றாக நின்றோம். பூச்சியத்துடன் உன் வாழ்க்கை முடியாதடா என்டு காட்டிவிட்டனர் தென்னாபிரிக்கவினர். மிகவும் பிடித்த போட்டி பிடித்த மாதிரியே நடந்து முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி கோசான் இந்த சிறிய போட்டிக்கு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டுமே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொண்டு.
- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.