Everything posted by செம்பாட்டான்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்பிடியா. வரலாறு முக்கியம் அமைச்சரே என்று சொல்வது இதுதானோ. ஒரு பந்தில 24 ஓட்டங்கள் என்றால் ரத்தம் வராம..... உண்மையிலேயே துரதிஷ்டசாலிகள் என்றால் அவர்கள்தான். எத்தனை தடவை. அவ்வளவு இலகுவாக இருக்காது. சென்ற உலகக்கிண்ணத்தில நடந்தது தெரியும்தானே. மெக்ஸ்வல் என்ட ஒருத்தன் தனியாளா செய்த செய்கை அப்பிடி. ஆப்கானிஸ்தான் ஓரளவு அதே அணிதான் இம்முறையும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு Bயில் அவுஸ்திரேலியா நிலைமை தான் கவலைக்கிடம். அவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்றாக வேண்டும். அந்தப் போட்டி ஒரு கால் இறுதிப் போட்டி போல் அமையப்போகின்றது. அல்லது மழை வந்து தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். தென்னாபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிராக, படுமோசமாக தோக்காவிடில், அவர்கள் அடுத்த சுற்றுக்கு இலகுவாக சென்றுவிடுவர். அவர்களிடம் கனதியான ஓட்ட விகிதம் உள்ளது. இந்த முறை மழையோ ஓட்ட விகிதமோ அவர்களை தடுக்க முடியாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜோ ரூட் உங்களுக்காகத்தான் தனி ஒருவனாக இன்று விளையாடினார். தனி ஒருவன்! அது அடைக்கோழியாக்கும். முட்டை போடாது. 🥚
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர்கள் ரண்டு பேரும் பெரும் ஆட்டக்காரர் தானே. என்ன, நாம கடைசியில தூக்குவம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாவம் ரூட். தனித்துப் போனார். ஒருவரும் நின்று நிதானித்து ஆடவில்லை. நியுசிலாந்து வென்றால், யாழ் களம் அல்லோல கல்லோலப்படும்.நல்ல முசுப்பாத்தியாய் இருக்கும். கிருபன் பாடுதான் திண்டாட்டமாய் இருக்கும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
களத்தின் தெரிவு. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி மற்றும் எத்தனை பேர் அவ்வணிகளைத் தேர்வு செய்தார்கள் TEAM NUMBER OF YARL PLAYERS IND 10 AUS 8 SA 3 PAK 2 ENG 1
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்கள் பத்துப் பேர் இந்தியாவைத் தெரிவு செய்து வைத்திருக்கிறோம். நீங்கள் என்ன இப்பிடி ஆசைப் படுகிறீர்கள். உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவுஸ்ரேலியாவ எட்டுப் பேர் தெரிவு செய்திருக்கினம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்புறம் என்ன. பாகிஸ்தானைத் தெரிவு செய்த இருவரையும் இங்கிலாந்தைத் தெரிவு செய்த ஒருவரையும் தூக்கியாச்சு. இன்னும் 20 பேர் இருக்கினம். மெதுவாச் செய்வம். 🤑
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னா ஒரு ஆட்டம். இன்னும் ஒருத்தன் நின்று ஆடியிருந்தா, கதையே வேறு. இனி என்ன ஆர்ச்சரின் அதிரடியா. விட்டத பிடிச்சுக் கொடுப்பாரா
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தனி ஒருவன்: ஜோ ரூட் அவன் காணும் முடிச்சு வைக்க தனி ஒருவன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்ப என்ன, இங்கிலாந்து கதை முடிஞ்சுதா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சறுக்குவதா காரணம். நான் நினைத்தேன், விரிப்பின் மெதுமை பந்தை எழும்ப விடாது என்று. எவ்வளவு குத்திப் போட்டாலும் விரிப்பு கொஞ்ச சக்தியை எடுத்துவிடும், பந்து அவ்வளவு எழும்பாது. சுழல் பந்துக்கு எப்பிடி. சுழல் எடுபடுமா.
-
விதியற்றவர்
விதி யாரைவிட்டது. அது நிழல் போல, எப்பொழுதும் எங்கள் பின்னாலேயே வந்தபடி. விதியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றோம்.
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
அந்த மூன்றாவது கோழிக்குஞ்சு யார். தொலைந்து போன அந்தக் கோழிக்குஞ்சு யார். ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.😀 பெண்களுடன் படிக்கவே இல்லை என்று சொல்லும் பொழுதே புரிகிறது.😉 நந்தன் எப்போதும் பூடகமாகவே பதில் அளிப்பார். 😃
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சிங்கம் என்று சொல்லி மானத்தைக் காப்பாற்றி விட்டியல். 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு இங்கிலாந்து வென்றால்தான் அடுத்த கட்டத்துக்குப் போக முடியும். ஆனால் நான் தெரிவு செய்தது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து அடுத்த கட்டத்திற்குப் போகும் என்றும் நான் தெரிவு செய்துள்ளேன். ஐயகோ என் செய்வேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அல்வாயன் காட்டிலை மழை. அதிர்ஷ்டக்காரன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பா அப்பாதான் இல்லையா. நீங்கள் குடுத்து வைத்தவர். அந்த வயதிலேயே, உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். அது ஒரு பாக்கியம். நான் பிடித்த பிடிவாதம் ஒன்றுக்கு, ஒருநாள் விட்டார் அடி. அடி என்டா அப்பிடி ஒரு அடி. அப்போ ஒரு பத்து வயது இருக்கும் என்று நினைக்கின்றேன். அதன்பின், ஒருதடவை கூட குரலை உயர்த்தியே ஏசியதில்லை. நானும் கரைச்சல் குடுத்ததில்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தப் பாட்டுத்தான் ஞாபகம் வருகிறது. "இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன் ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பானே" டில்கார பெனான்டோ 6 அடிக்கு மேலே. மிகவேகப் பந்து வீச்சாளர். நீங்கள் 6 அடி என்று சொன்னவுடன் அவர்தான் ஞாபகம் வந்தார். அப்ப, கோசானும் பந்துடன் ஓடிவரும்போது, டில்கார போலவே இருத்திருப்பாரே என்று கற்பனை பறக்குது. நீங்கள் ஓடுவது கண்முன்னே விரிகிறது. அதுசரி, நீங்களும் வேகப்பந்து வீச்சாளர்தானே. உயரத்தைவைத்து அப்பிடித்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டேன். சுரேனின் மகள் இப்போது இங்கிலாந்து அணியில் விளையாடுகின்றா. தெரியும் தானே.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்பிடி நடந்தால் ... என்னுடைய தெரிவுகள் சரியாகும். அவுஸ்ரேலியா வெளியே போகும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்தப் பாறைமேலே, பேச்சுவார்த்தை எப்பிடிப் போயிருக்கும் என்று என்னால் முழுதாக கற்பனை பண்ண முடிகின்றது. நம்பெற்றோர்களுக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். நாம எல்லோரும் அப்பிடித்தான் போல. கொஞ்சமெண்டாலும் வாசியடா என்று என்னுடைய பெரியப்பா ஏசுவார். இப்போதும் விளையாடுகிறீர்களா. உங்களைப் போல் திறமையாளர்கள் வெளிவராமலே போயிருக்கிறார்கள். இன்றைய சூழலில் நிறைய சந்தர்ப்பங்கள். அன்றைய சூழலில் ஒன்றுமே இருக்கவில்லை. அதுவும் தமிழர்களுக்கு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மகிழ்ச்சி. அவர்கள் எப்போதுமே உள்ளூரில் விளையாடுவதை விட்டதே இல்லை. ரஸல் ஆரன்லட் டெனிஸ் பந்துல விளையாட வந்திடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கும் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. மறக்க முடியாத தருணங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேட்பதற்கு சந்தோசம் கோசான். பிறகு நீங்கள் தொடர்ந்து விளையாடவில்லையா. விடயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதும் மகிழ்ச்சிதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ அப்பிடி வேறை இருக்கோ. இப்போ செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், எல்லாப் படமும் வடிவா செய்யலாம்தானே. அதையும் நம்பலாமோ தெர்யாது 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காயம் காரணமாக, அவர்கள் பந்துவீச்சு சுமார்தான். ஆனால் அவர்கள் துடுப்பாட்டத்தில் அதனை ஈடுசெய்ய முடியும். இங்கிலாந்தை வைச்சு செய்தாங்களே. எந்தப் பந்து வீச்சையும் துவம்சம் செய்யக்கூடிய இருவர் இருக்கினம். ஆனா.... ரபடா இருக்கான், எல்லாருக்கும் சேர்த்து.